என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சின்னசேலம் அருகே குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியல்
    X

    காலிக் குடங்களை சாலையில் வைத்து மறியலில் ஈடுபட்ட பொதுமக்களை படத்தில் காணலாம்.

    சின்னசேலம் அருகே குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியல்

    • கிராமத்தில் உள்ள ஏரி அருகே 2 குடிநீர் கிணறுகள் உள்ளன.
    • கடந்த 10 நாட்களுக்கு மேலாக குடிநீர் சரிவர வழங்கவில்லை.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள உலகியநல்லூர் கிராமத்தில் 700-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் உள்ள ஏரி அருகே 2 குடிநீர் கிணறுகள் உள்ளன. இதில் ஒரு கிணற்றில் ஊற்று தண்ணீர் இல்லை. மற்றொரு கிணற்றில் உள்ள குடிநீர் மூலம் மட்டுமே ஊர் பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் குடிநீர் பற்றாகுறை ஏற்பட்டு வந்தது.

    இந்நிலையில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக குடிநீர் சரிவர வழங்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் இன்று ஈடுபட்டனர். தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு போலீசார் மற்றும் ஊராட்சி நிர்வாகத்தினர் வந்தனர். மறியலில் ஈடுபட்ட பொது மக்களிடையே பேச்சுவார்த்தை நடத்தி குடிநீர் தினமும் கிடைப்பதற்கு ஏற்பாடு செய்து தருகிறோம் என உறுதி அளித்தனர். அதன் பேரில் கிராம மக்கள் சாலை மறியலை கைவிட்டனர். இந்த சாலை மறியலால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    Next Story
    ×