search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தொழிலாளர்கள்"

    • 50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    • போலீசார் அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    சங்கராபுரம் அருகே கொசப்பாடி கிராமத்தில் தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் வேலை பார்த்து வரும் 50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தங்களுக்கு சரியான முறையில் வேலை வழங்கக்கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த சங்கராபுரம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி அங்கிருந்து அனுப்பி வைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • பிற மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக சமூக ஊடகங்களில் வதந்தி பரவியதால், இந்த தொழி லாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் வகையில் ஆய்வு நடத்திட காவல்துறை யினருக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
    • அயோத்தியாப்பட்டணம் மற்றும் காரிப்பட்டி பகுதி யில் பிற மாநில தொழிலாளர்கள் பணிபுரியும் தனியார் தொழிற்சாலைகள், அரிசி ஆலைகளில் வாழப்பாடி போலீசார் நேற்று ஆய்வு செய்தனர்.

    வாழப்பாடி:

    தமிழகத்தில் பணிபுரியும் பிற மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக சமூக ஊடகங்களில் வதந்தி பரவியதால், இந்த தொழி லாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் வகையில் ஆய்வு நடத்திட காவல்துறை யினருக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து, அயோத்தியாப்பட்டணம் மற்றும் காரிப்பட்டி பகுதி யில் பிற மாநில தொழிலா ளர்கள் பணிபுரியும் தனியார் தொழிற்சாலைகள், அரிசி ஆலைகளில் வாழப்பாடி போலீஸ் டி.எஸ்.பி. ஹரிசங்கரி தலை மையில், இன்ஸ்பெக்டர் லட்சுமணதாஸ் உள்ளிட்ட போலீசார் நேற்று ஆய்வு செய்தனர்.

    பிற மாநில தொழிலா ளர்களின் பாதுகாப்பை உறுதி செய்த போலீஸார், சமூக ஊடகங்களில் பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம் என அறிவுரை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். எவ்வித அச்சுறுத்தலும் பயமுமின்றி பணிபுரிந்து வருவதாக தொழிலாளர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.

    • தொழிற்சாலைகளில் குழந்தைகள், வளரிளம் பருவ தொழிலாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனரா? என்பது குறித்து ஆய்வு செய்ய சேலம் தொழிலாளர் இணை ஆணையர் ரமேஷ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
    • அப்போது, 18 வயதுக்கு உட்பட்ட 2 குழந்தை தொழி லாளர்கள் பணிபுரிவது கண்டறியப்பட்டு அவர்களை அதிகாரிகள் மீட்டனர்.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் வெள்ளி கொலுசுகள் மற்றும் இதர வெள்ளி பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகளில் குழந்தைகள், வளரிளம் பருவ தொழிலாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனரா? என்பது குறித்து ஆய்வு செய்ய சேலம் தொழிலாளர் இணை ஆணையர் ரமேஷ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

    அதன்பேரில் சேலம் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) கிருஷ்ணவேணி தலைமையில் குழந்தை தொழிலாளர் தடுப்பு படையினர், தொழிலக பாதுகாப்பு சுகாதா இயக்க அதிகாரிகள் ஆகியோர் நேற்று சேலம் சிவதாபுரம், பனங்காடு பகுதிகளில் உள்ள வெள்ளி கொலுசுகள் தயாரிக்கும் பட்டறைகளில் ஆய்வு செய்தனர்.

    அப்போது, 18 வயதுக்கு

    உட்பட்ட 2 குழந்தை தொழி லாளர்கள் பணிபுரிவது கண்டறியப்பட்டு அவர்களை அதிகாரிகள் மீட்டனர். இதையடுத்து குழந்தை தொழிலாளர்களை பணிக்கு அமர்த்திய சம்பந்தப்பட்ட 2 நிறுவனங்கள் மீது வழக்குப்பதிவு செய்து சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ள தாக தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.இந்த ஆய்வின்போது, தொழிலாளர் துணை ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், சைல்டு லைன் மற்றும் தொழிலக பாதுகாப்பு சுகாதார இயக்க அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    சேலம் மாவட்டத்தில் குழந்தை தொழிலாளர் சட்டத்தின் கீழ் குழந்தைகள் மற்றும் வளரிளம் பருவ தொழிலாளர்களை பணியில் அமர்த்தக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அதை தவறும் பட்சத்தில் நீதிமன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும், அதன்மூலமாக குறைந்தபட்ச 6 மாதம் முதல் 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அல்லது ரூ.20 ஆயிரம் முதல் ரூ.50 வரை அபராதம் அல்லது 2 தண்டனைகளும் சேர்ந்து அனுபவிக்க நேரிடும் என்று சேலம் தொழிலாளர் உதவி ஆணையர் கிருஷ்ணவேணி தெரிவித்துள்ளார்.

    • ராஜபாளையத்தில் வடமாநில தொழிலாளியின் கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் சென்னைக்கு விரைந்துள்ளனர்.
    • பின்னர் உடலை மாடியின் மேல் மறைவான இடத்தில் மறைத்து வைத்து விட்டு 2 பேரும் அங்கிருந்து தப்பியுள்ளனர்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் அருகே உள்ள ஸ்ரீரங்கபா ளையத்தைச் சேர்ந்தவர் விஷ்ணுசங்கர். இவர் சொக்கலிங்கபுரம் பகுதியில் பிளாஸ்டிக் குழாய் தயாரிக்கும் ஆலை நடத்தி வருகிறார்.

    இங்கு வடமாநிலத்தைச் சேர்ந்த ஏராளமானோர் அங்கேயே தங்கி வேலை பார்த்து வருகின்றனர். இந்த நிலையில் அங்கு வேலை பார்க்கும் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த சஞ்சீத்மான்ஜி (வயது 45) என்பவர் அரிவாளால் வெட்டிக்கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த ராஜபாளையம் டி.எஸ்.பி. பிரீத்தி, தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் மன்னவன் மற்றும் போலீ சார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். தொடர்ந்து சஞ்சீத்மான்ஜி யின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோ தனைக்காக அரசு ஆஸ்பத்தி ரிக்கு அனுப்பி வைத்தனர்.

    சம்பவத்தன்று சஞ்சீத்மான்ஜியுடன் தங்கியிருந்த பீகாரைச் சேர்ந்த சகோதரர்கள் திரோபான்ஜி, வினோ த்பானியா ஆகியோர் மது குடித்ததாக தெரிகிறது. அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு ஆத்திரமடைந்த சகோத ரர்கள் சஞ்சீத்மான்ஜியை வெட்டிக்கொலை செய்துள்ளனர்.

    பின்னர் உடலை மாடியின் மேல் மறைவான இடத்தில் மறைத்து வைத்து விட்டு 2 பேரும் அங்கிருந்து தப்பி யுள்ளனர். மேற்கண்ட தகவல் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

    சஞ்சீத்மான்ஜியை கொலை செய்த 2 பேரும் சொந்த ஊருக்கு செல்ல திட்டமிட்டு சென்னைக்கு சென்றிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் தனிப்படை அமைக்கப்பட்டு அவர்களை பிடிக்க ராஜபாளையம் போலீசார் சென்னைக்கு விரைந்துள்ளனர்.

    • தீபாவளி பண்டிகைக்கு ஒரு வாரத்துக்கு முன்பே பணியாளர்களுக்கும், சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கும் போனஸ் வழங்க வேண்டும்.
    • கொள்முதல் பணியாளர்களுக்கு குறைந்தபட்சம் ரூ. 21,000 மாத சம்பளம் வழங்க வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக தொழிலாளர் சங்கம் மற்றும் சுமை தூக்கும் தொழிலாளர் சங்க மாநில நிர்வாக குழு கூட்டம் சுமை சங்க மாநிலத் தலைவர் சாமிக்கண்ணு, தொழிலாளர்கள் சங்க மாநிலத் துணைத் தலைவர் சிவானந்தம் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

    மாநில பொதுச் செயலாளர் சந்திரகுமார், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் எடுத்து வரும் தனியார் மயமாக்க நடவடிக்கைகள் குறித்தும், அனைத்து தொழிற்சங்கங்களின் ஒன்றுபட்ட போராட்டம் குறிக்கும் விளக்கிப் பேசினார்.

    இந்த கூட்டத்தில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் நெல் கொள்முதலில் நிலவும் குளறுபடிகளை களைய வேண்டும், தீபாவளி பண்டிகைக்கு ஒரு வாரத்துக்கு முன்பே பணியாளர்களுக்கும், சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கும் போனஸ் வழங்க வேண்டும். 2012 ஆம் ஆண்டு வரை பணியில் சேர்ந்த கொள்முதல் பணியாளர்கள் நிரந்தரப்படுத்துவதில் மிகுந்த கால தாமதப்படுத்துகிறது. உடனே இவர்களை நிரந்தரபடுத்த வேண்டும், கொள்முதல் பணியாளர்கள் ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்த வேண்டும், கொள்முதல் பணியாளர்களுக்கு குறைந்தபட்சம் ரூ. 21,000 மாத சம்பளம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    இதில் மாநில பொருளாளர் கோவிந்தராஜன், செயலாளர்கள் கிருஷ்ணன், சுப்பிரமணியன், முருகேசன், கலியபெருமாள், ராஜேந்திரன், திருவாரூர் மாவட்ட செயலாளர் செல்வம், சுமை சங்க மாவட்ட செயலாளர்புஸ்பநாதன், தஞ்சாவூர் மாவட்ட செயலாளர் ராஜேந்திரன், நாகை மாவட்ட செயலாளர்ஆனந்தன், மயிலாடுதுறை மாவட்ட அமைப்பாளர் சிவகுருநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    ×