search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கொள்முதல் பணியாளர்கள் ஓய்வு பெறும் வயதை 60-ஆக உயர்த்த வேண்டும்
    X

    கொள்முதல் பணியாளர்கள் ஓய்வு பெறும் வயதை 60-ஆக உயர்த்த வேண்டும்

    • தீபாவளி பண்டிகைக்கு ஒரு வாரத்துக்கு முன்பே பணியாளர்களுக்கும், சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கும் போனஸ் வழங்க வேண்டும்.
    • கொள்முதல் பணியாளர்களுக்கு குறைந்தபட்சம் ரூ. 21,000 மாத சம்பளம் வழங்க வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக தொழிலாளர் சங்கம் மற்றும் சுமை தூக்கும் தொழிலாளர் சங்க மாநில நிர்வாக குழு கூட்டம் சுமை சங்க மாநிலத் தலைவர் சாமிக்கண்ணு, தொழிலாளர்கள் சங்க மாநிலத் துணைத் தலைவர் சிவானந்தம் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

    மாநில பொதுச் செயலாளர் சந்திரகுமார், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் எடுத்து வரும் தனியார் மயமாக்க நடவடிக்கைகள் குறித்தும், அனைத்து தொழிற்சங்கங்களின் ஒன்றுபட்ட போராட்டம் குறிக்கும் விளக்கிப் பேசினார்.

    இந்த கூட்டத்தில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் நெல் கொள்முதலில் நிலவும் குளறுபடிகளை களைய வேண்டும், தீபாவளி பண்டிகைக்கு ஒரு வாரத்துக்கு முன்பே பணியாளர்களுக்கும், சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கும் போனஸ் வழங்க வேண்டும். 2012 ஆம் ஆண்டு வரை பணியில் சேர்ந்த கொள்முதல் பணியாளர்கள் நிரந்தரப்படுத்துவதில் மிகுந்த கால தாமதப்படுத்துகிறது. உடனே இவர்களை நிரந்தரபடுத்த வேண்டும், கொள்முதல் பணியாளர்கள் ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்த வேண்டும், கொள்முதல் பணியாளர்களுக்கு குறைந்தபட்சம் ரூ. 21,000 மாத சம்பளம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    இதில் மாநில பொருளாளர் கோவிந்தராஜன், செயலாளர்கள் கிருஷ்ணன், சுப்பிரமணியன், முருகேசன், கலியபெருமாள், ராஜேந்திரன், திருவாரூர் மாவட்ட செயலாளர் செல்வம், சுமை சங்க மாவட்ட செயலாளர்புஸ்பநாதன், தஞ்சாவூர் மாவட்ட செயலாளர் ராஜேந்திரன், நாகை மாவட்ட செயலாளர்ஆனந்தன், மயிலாடுதுறை மாவட்ட அமைப்பாளர் சிவகுருநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×