search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தியாகதுருகம் அருகே  புறம்போக்கு ஆக்கிரமிப்பு அகற்றம் ஒத்திவைப்புபொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட முயற்சி
    X

    தியாகதுருகம் அருகே விருகாவூரில் சாலை மறியலில் ஈடுபட முயன்ற பொதுமக்களிடம் துணை போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ் பேச்சு வார்த்தை நடத்தினார்.

    தியாகதுருகம் அருகே புறம்போக்கு ஆக்கிரமிப்பு அகற்றம் ஒத்திவைப்புபொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட முயற்சி

    • 40-க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஆக்கிரமித்து உள்ளதாக கூறப்படுகிறது.
    • நிர்வாக காரணங்களால் மீண்டும் ஆக்கிரமிப்பு ஒத்திவைக்கப்பட்டது.

    கள்ளக்குறிச்சி:

    தியாகதுருகம் அருகே எஸ்.ஒகையூர் கிராமத்தில் திரவுபதி அம்மன் கோவில் அருகே வாரி புறம்போக்கு உள்ளது. இந்த இடத்தை அதே பகுதியைச் சேர்ந்த 40-க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஆக்கிரமித்து உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் மழைக்காலங்களில் அந்த வாரியின் வழியாக தண்ணீர் செல்ல முடியாமல் விளைநிலங்களுக்குள் தண்ணீர் புகுந்து செல்கின்றன. இந்நிலையில் வாரி புறம்போக்கில் உள்ள ஆக்கிரமி ப்புகளை அகற்ற கோரி தனிநபர் மற்றும் அப்பகுதி பொது மக்கள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு வழக்கு தொடர்ந்தனர்.

    இந்த வழக்கில் நீதிமன்றம் 6 வாரங்களுக்குள் ஆக்கிரமிப்பை அகற்ற உத்தரவிட்டுள்ளது. ஆனால் நிர்வாக காரணங்களால் ஒத்தி வைக்கப்பட்டதாக கூறப்ப டுகிறது. இதைத்தொடர்ந்து நேற்று ஆக்கிரமிப்பு அகற்றம் செய்வதாக கூறப்பட்டது. ஆனால் நிர்வாக காரணங்களால் மீண்டும் ஆக்கிரமிப்பு ஒத்திவைக்கப்பட்டது. இதனால் ஆத்திரமுற்ற எஸ்.ஒகையூர் பகுதியைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கள்ளக்குறிச்சி-கூத்தக்குடி சாலையில் விருகாவூர் பஸ் நிறுத்தம் அருகே சாலை மறியலில் ஈடுபட முயற்சி செய்தனர்.

    தகவல் அறிந்து விரைந்து வந்த கள்ளக்குறிச்சி துணை போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ், தாசில்தார் (பொறுப்பு) பாலகுரு ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்பொழுது பொதுமக்கள் ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும் என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதற்கு அதிகாரிகள் வருகிற 28- ந் தேதி வாரி ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என உறுதி அளித்தனர். இதனை ஏற்று பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டர் சுமதி, போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் குணசேகரன், வருவாய் ஆய்வாளர் வெங்கடேசன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் புவனேஸ்வரி, தனிப்பிரிவு போலீசார் கொளஞ்சி ஆகியோர் உடன் இருந்தனர்.

    Next Story
    ×