என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "100 days of work"

    • முதுகுளத்தூரில் 100 நாள் வேலை வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • அரசு வேலை வழங்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

    முதுகுளத்தூர்

    அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் முதுகுளத்தூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. குழுத்தலைவர் சண்முகையா தலைமை தாங்கினார். மாநில பொதுச் செயலாளர் எஸ்.சங்கர், மாவட்டச் செயலாளர் கே.கணேசன், மாவட்டத் தலைவர் என்.கலையரசன், தாலுகா செயலாளர் பி.அங்குதான், தாலுகா பொருளாளர் வி.முருகேசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தாலுகா குழு செயலாளர் வி.முருகன் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    முதுகுளத்தூர் பேரூராட்சியில் ஏராளமான பொதுமக்கள் வேலையின்றி பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கியுள்ளனர். அடிப்படை வசதிக்கே கஷ்டப்படும் அவர்களுக்கு அரசு 100 நாள் வேலை திட்டத்தின்கீழ் அரசு வேலை வழங்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. மாநில செயலாளர் சங்கர் தலைமையில் துணை வட்டாட்சியரிடமும், பேரூராட்சி அலுவலகத்திலும் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

    • 100 நாள் வேலை திட்டத்தில் பெண்கள் வேலை செய்து வருகின்றனர்.
    • 50-க்கும் மேற்பட்ட பெண்கள் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்

    கடலூர்:

    கடலூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பாதிரிக்குப்பம் ஊராட்சியில் 100 நாள் வேலை திட்டத்தில் பெண்கள் வேலை செய்து வருகின்றனர். அங்கு வேலை செய்யும் பெண்களுக்கு சரியாக வேலை வழங்கப்படவில்லை. சம்பளம் சரியாக தரவில்லை என பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்து வந்தன. இந்தநிலையில் பாதிக்குப்பம் ஊராட்சியில் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் பணி புரியும் பெண்களை ஆட்குறைப்பு செய்யப் போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலை கடலூர் - பாலூர் சாலையில் பாதிரிக்குப்பம் பகுதியில் சுமார் 50-க்கும் மேற்பட்ட பெண்கள் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இத்தகவல் அறிந்த கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள் கூறுகையில்,

    ஏற்கனவே எங்களுக்கு வேலையும், சம்பளமும் சரியாக வழங்கப்படுவதில்லை. இந்த நிலையில் ஆட்குறைப்பு செய்யப் போவதாக தகவல் வந்துள்ளது. இதனால் எங்கள் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படும். மேலும் வசதியானவர்களுக்கு வேலை கொடுத்துவிட்டு, ஏழை எளிய மக்களின் வேலையை பறிக்கிறார்கள்.இதனை கண்டித்து நாங்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளோம். எனவே எங்களுக்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்த வேண்டும் என ஆக்ரோஷமாக கூறினார்கள்.

    இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உத்தரவாதம் அளித்தனர். இதனை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதன் காரணமாக கடலூர் பாலூர் சாலையில் அரை மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பாக காணப்பட்டது.

    • 100 நாள் வேலை சம்பளத்தை வழங்க வலியுறுத்தி நடைபயண போராட்டம் வருகிற 19-ந்தேதி தொடங்குகிறது.
    • சம்பளம் வழங்கப்படாதது குறித்து பொதுமக்களிடம் எடுத்து கூறி மத்திய அரசு சம்பளத்தை உடனே வழங்க வலியுறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டத்தில் 100 நாள் வேலை திட்டத்தில் பணிபுரிபவர்களுக்கு 14 மாதங்களாக சம்பளம் வழங்கப்படாமல் உள்ளது. இந்த வகையில் ரூ.87 கோடி அளவிற்கு சம்பள பாக்கி உள்ளது. இந்த நிலையில் சம்பளத்தை வழங்க வலியுறுத்தி விருதுநகர் மாணிக்கம் தாகூர் எம்.பி. தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

    மேலும் பிரதமர், நிதிய மைச்சருக்கு மாணிக்கம் தாகூர் எம்.பி. கடிதம் எழுதினார். ஆனால் இந்த விவகாரத்தில் எந்த நடவ டிக்கையும் எடுக்காமல் உள்ளதால் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விருதுநகருக்கு வரும்போது மாவட்ட காங்கிரஸ் சார்பில் கருப்புக்கொடி காட்டப்படும் எனவும் மாணிக்கம் தாகூர் கூறியிருந்தார்.

    இந்த நிலையில் 100 நாள் பணியாளர்களுக்கு சம்பளம் வழங்க வலியுறுத்தி வருகிற 19-ந்தேதி மாவட்ட காங்கிரஸ் சார்பில் செய்தி தொடர்பாளர் மீனாட்சி சுந்தரம் தலைமையில் நடைபயண போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடைபயணம் செங்க மல நாச்சியார்புரத்தில் தொடங்குகிறது. சுமார் 100 கிராமங்களுக்கு நடந்து சென்று 100 நாள் பணியாளர்களுக்கு சம்பளம் வழங்கப்படாதது குறித்து பொதுமக்களிடம் எடுத்து கூறி மத்திய அரசு சம்பளத்தை உடனே வழங்க வலியுறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×