search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நெடுஞ்சாலைத் துறை"

    • சாலையை அகலப்படுத்தாமல் அன்பளிப்பு பெற்றுக் கொண்டு ஒருதலைப் பட்சமாக செயல்படுகின்றனர்.
    • நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளை கண்டித்து கண்டன கோஷம் எழுப்பி சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    கடலூர்:

    கடலூர் கோண்டூரிலிருந்து மடப்பட்டு வரை ரூ.230 கோடி செலவில் சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகின்றது. நெல்லிக்குப்பம் பகுதியில் நடக்கும் சாலைப் பணிகளில் சரியான முறையில் அளவீடு செய்யவில்லை. இதனால் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவில்லை. சாலையை அகலப்படுத்தாமல் அன்பளிப்பு பெற்றுக் கொண்டு ஒருதலைப் பட்சமாக செயல்பட்டு வரும் அதிகாரிகளை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் இன்று காலை சாலை மறியல் நடைபெற்றது.

    மாநில வக்கீல் பிரிவு துணை செயலாளர் குருமூர்த்தி தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கடலூர் நெல்லிக்குப்பம் சாலையில் அண்ணா சிலை முன்பு திரண்டனர். நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளை கண்டித்து கண்டன கோஷம் எழுப்பி சாலை மறியலில் ஈடுபட்டனர். ்தகவல் அறிந்த நெல்லிக்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது சாலை விரிவாக்க பணிகளையும், ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணியும் சரியான முறையில் செய்யவில்லை என்றால் எங்கள் போராட்டம் தொடரும் என திட்டவட்டமாக தெரிவித்தனர். பின்னர் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் கடலூர் - நெல்லிக்குப்பம் சாலையில் சுமார் 20 நிமிடம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    • நெடுஞ்சாலைத் துறை மூலம் ஓமலூரிலிருந்து சங்ககிரி, திருச்செங்கோடு, பரமத்திவேலூர் வரை 4 வழிச்சாலை விரிவாக்கப் பணி நடைபெற்று வருகிறது.
    • மாநில நெடுஞ்சாலைத் துறை தலைமை திட்ட இயக்குனர் பிரபாகர் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

    சங்ககிரி:

    ஆசிய வளர்ச்சி வங்கியின் 50 சதவீத நிதி உதவியுடன் சென்னை- கன்னியாகுமரி தொழிற்தடத் திட்டம், நெடுஞ்சாலைத் துறை மூலம் ஓமலூரிலிருந்து சங்ககிரி, திருச்செங்கோடு, பரமத்திவேலூர் வரை 4 வழிச்சாலை விரிவாக்கப் பணி நடைபெற்று வருகிறது.

    இந்தப் பணியை மாநில நெடுஞ்சாலைத் துறை தலைமை திட்ட இயக்குனர் பிரபாகர் நேரில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது ஒப்பந்ததாரர்களிடம் சாலை பணிகளை விரைவாகவும், தரமாகவும் முடிக்க அறிவுரை வழங்கினார்.

    இந்த ஆய்வின்போது தலைமை பொறியாளர் செல்வன், கோட்டப் பொறியாளர் சசிகுமார், தனி மாவட்ட வருவாய் அலுவலர் லதா, உதவி கோட்ட பொறியாளர், உதவி பொறியாளர் மற்றும் சாலைப் பணியின் ஒப்பந்ததாரர்கள், மேற்பார்வை ஆலோசகர்களும் உடன் இருந்தனர்.

    ×