என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    4 வழிச்சாலை விரிவாக்க பணிகளை மாநில நெடுஞ்சாலைத் துறை அதிகாரி ஆய்வு
    X

    4 வழிச்சாலை விரிவாக்க பணியை மாநில நெடுஞ்சாலைத் துறை தலைமை திட்ட இயக்குனர் பிரபாகர் ஆய்வு செய்தபோது எடுத்தப் படம்.

    4 வழிச்சாலை விரிவாக்க பணிகளை மாநில நெடுஞ்சாலைத் துறை அதிகாரி ஆய்வு

    • நெடுஞ்சாலைத் துறை மூலம் ஓமலூரிலிருந்து சங்ககிரி, திருச்செங்கோடு, பரமத்திவேலூர் வரை 4 வழிச்சாலை விரிவாக்கப் பணி நடைபெற்று வருகிறது.
    • மாநில நெடுஞ்சாலைத் துறை தலைமை திட்ட இயக்குனர் பிரபாகர் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

    சங்ககிரி:

    ஆசிய வளர்ச்சி வங்கியின் 50 சதவீத நிதி உதவியுடன் சென்னை- கன்னியாகுமரி தொழிற்தடத் திட்டம், நெடுஞ்சாலைத் துறை மூலம் ஓமலூரிலிருந்து சங்ககிரி, திருச்செங்கோடு, பரமத்திவேலூர் வரை 4 வழிச்சாலை விரிவாக்கப் பணி நடைபெற்று வருகிறது.

    இந்தப் பணியை மாநில நெடுஞ்சாலைத் துறை தலைமை திட்ட இயக்குனர் பிரபாகர் நேரில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது ஒப்பந்ததாரர்களிடம் சாலை பணிகளை விரைவாகவும், தரமாகவும் முடிக்க அறிவுரை வழங்கினார்.

    இந்த ஆய்வின்போது தலைமை பொறியாளர் செல்வன், கோட்டப் பொறியாளர் சசிகுமார், தனி மாவட்ட வருவாய் அலுவலர் லதா, உதவி கோட்ட பொறியாளர், உதவி பொறியாளர் மற்றும் சாலைப் பணியின் ஒப்பந்ததாரர்கள், மேற்பார்வை ஆலோசகர்களும் உடன் இருந்தனர்.

    Next Story
    ×