search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "road work"

    • செல்வநாயகபுரம் பகுதியில் புதிய வடிகால் மற்றும் சாலை அகலப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.
    • ஆய்வின்போது பணிகள் முறையாக மேற்கொள்ளப்பட்டுள்ளதா? என்பது குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாநகராட்சி ஸ்டேட் பேங்க் காலனி பிரதான சாலை, டீச்சர்ஸ் காலனி ஆகிய பகுதிகளில் புதிய சாலை பணிகள், செல்வநாயகபுரம் பகுதியில் புதிய வடிகால் மற்றும் சாலை அகலப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.

    மேயர் ஆய்வு

    இந்தப்பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு செய்தார். அப்போது பணிகள் முறையாக மேற்கொள்ள ப்பட்டுள்ளதா? என்பது குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

    ஆய்வின் போது தி.மு.க. வட்ட செயலாளரும், முன்னாள் கவுன்சிலருமான ரவீந்திரன், கவுன்சிலர் சந்திரபோஸ், வட்ட செயலாளர் முனியசாமி, மாநகராட்சி அதிகாரிகள், மேயரின் நேர்முக உதவியாளர் ரமேஷ், பிரபாகரன், ஜாஸ்பர் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

    மனிதாபிமான உதவி

    ஆய்வின்போது மேயருக்கு ஒரு செல்போன் அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர், பனிமய மாதா கோவில் திருவிழாவுக்கு ஊசி, பாசி விற்க வந்த நரிக்குறவர் இன முதியவர் செல்லப்பா (வயது80) என்பவர் ஜார்ஜ் ரோட்டில் திடீரென காலமானார். அவரது மனைவி இந்திரா தனது சொந்த ஊரான வள்ளியூருக்கு தன் கணவர் உடலை கொண்டு செல்வதற்கு அங்கு இருப்பவர்களிடம் உதவி கேட்டுக் கொண்டி ருப்பதாகவும், இதை பார்த்த தான் தகவலை தெரிவிப்பதாக கூறினார்.

    இதனைத் தொடர்ந்து மேயர் ஜெகன் பெரியசாமி அந்த முதியவரின் உடலை கொண்டு செல்ல நடவடிக்கை மே ற்கொண்டார். இதனையடுத்து மேயரின் சொந்த செலவில் தனியார் ஆம்புலன்ஸ் அழைக்கப்பட்டு அந்த முதியவரின் உடலை ஏற்றி வள்ளியூருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதைப் பார்த்த பொதுமக்கள் மேயருக்கு நன்றி தெரிவித்தனர்.

    • திருபுவனம் கடைவீதியில் பொக்லின் எந்திரம் மூலம் சாலை அகலப்படுத்தும் பணி நடந்தது.
    • சிலை தாலுகா அலுவலகத்தில் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டுள்ளது.

    கும்பகோணம்:

    கும்பகோணம்- மயிலாடுதுறை சாலையில் கும்பகோணம் அருகே கடந்த சில மாதங்களாக சாலை அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

    அதன்படி நேற்று மாலை திருபுவனம் கடைவீதியில் பொக்லின் எந்திரம் மூலம் சாலை அகலப்படுத்தும் பணிக்காக பள்ளம் தோண்டும் பணி நடந்தது.

    யானை சிலை கண்டெடுப்பு அப்போது அந்த பள்ளத்தில் யானை சிலை கிடைத்தது.

    கருங்கல்லினால் ஆன இந்த யானை சிலையை பார்த்ததும், அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அங்கு திரண்டு வந்து சிலையை பார்த்து சென்றனர்.

    இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    இதுகுறித்து தகவல் அறிந்த திருவிடைமருதூர் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அந்த யானை சிலையை பொக்லின் எந்திரம் மூலம் திருவிடைமருதூர் தாசில்தார் அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர்.

    பின்னர் அந்த யானை சிலையை தாசில்தார் சுசீலாவிடம் ஒப்படைத்தனர்.

    அந்த சிலை தாலுகா அலுவலகத்தில் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டுள்ளது.

    • பஞ்சாயத்து நிர்வாகம் சார்பில் நாங்குநேரி யூனியன் சேர்மன் சவுமியா ஆரோக்கிய எட்வினிடம் சாலை அமைக்க ஏற்பாடு செய்து தரக்கோரி கோரிக்கை வைக்கப்பட்டது.
    • இதையடுத்து அந்த பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான சிமெண்ட் சாலை அமைக்கும் பணிக்கு நேற்று பூமி பூஜை நடந்தது.

    நெல்லை:

    நாங்குநேரி யூனியன் பாப்பான்குளம் பஞ்சா யத்துக்கு உட்பட்ட பொத்தையடி கிராமத்தில் ஏராளமான தெருக்களில் சாலை வசதி இல்லாமல் இருந்துவந்தது. இதையடுத்து அந்த பஞ்சாயத்து நிர்வாகம் சார்பில் நாங்குநேரி யூனியன் சேர்மன் சவுமியா ஆரோக்கிய எட்வினிடம் சாலை அமைக்க ஏற்பாடு செய்து தரக்கோரி கோரிக்கை வைக்கப்பட்டது.

    உடனடியாக அந்த கிராமத்தில் ஆய்வு மேற்கொண்டு சாலை அமைக்க ஏற்பாடுகள் செய்தார். இதையடுத்து அந்த பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான சிமெண்ட் சாலை அமைக்கும் பணிக்கு நேற்று பூமி பூஜை நடந்தது. ரூ.10 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகளும் உடனடியாக தொடங்கப்பட்டது.

    இந்நிகழ்வில் நாங்குநேரி கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் ஆரோக்கிய எட்வின் கலந்து கொண்டு சாலை பணியை தொடங்கி வைத்தார். அப்போது பாப்பாங்குளம் ஊராட்சி மன்ற தலைவர் முருகன், கிளை செயலாளர் ஜெயக்குமார், மகளிர் அணி பாமா, ஜாய்ஸ் மேகலா, வரலட்சுமி, அரசு ஒப்பந்ததாரர் சிவனேஷ் மற்றும் பொதுமக்கள் உடன் இருந்தனர்.

    • படூர் வரை 50 சதவீத பணிகள் மட்டுமே நடைபெற்றுள்ளன.
    • தினமும் வாகன ஓட்டிகள் கேளம்பாக்கம் நகருக்குள் வந்து கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கும் நிலை உள்ளது.

    திருப்போரூர்:

    பழைய மாமல்லபுரம் சாலை திருப்போரூர் மற்றும் கேளம்பாக்கம் பகுதிகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையிலும், கிழக்கு கடற்கரை சாலைக்கு விரைவாக செல்லவும் தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவனம் சார்பில் கடந்த 2017 -ம் ஆண்டு சுமார் ரூ. 250 கோடி மதிப்பீட்டில் புறவழிச்சாலை அமைக்க திட்டமிடப்பட்டது. ஆலத்தூர் ஊராட்சி வெங்கலேரி கிராமத்தில் இருந்து காலவாக்கம் தனியார் கல்லூரி வரை சுமார் ஐந்து கிலோமீட்டர் தூரம் மற்றும் தையூர் ஊராட்சி செங்கன் மால் பகுதியில் இருந்து படூர் வரை சுமார் 2½ கிலோ மீட்டர் தூரம் என மொத்தம் 7½ கிலோமீட்டர் தூரத்திற்கு சாலை அமைக்க நிதி ஒதுக்கப்பட்டது.

    இதற்காக விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டன. கடந்த 2020-ம் ஆண்டு இச்சாலை பணிகள் முடிக்கப்பட வேண்டும். இடையில் கொரோனா காலகட்டம், ஆட்சி மாற்றம் ஆகியவற்றால் இந்தப் புறவழிச் சாலை பணிகள் மந்தகதியில் நடைபெற்று வந்தன. வெங்கலேரி முதல் காலவாக்கம் தனியார் கல்லூரி வரை 90 சதவீத பணிகள் நிறை வடைந்துள்ளன. இப்பணிகள் நிறைவு பெறும் முன்னே இச்சாலையில் வாகனங்கள் சென்று வருகின்றன. திருப்போரூர் நகரத்துக்குள் வராமல் இந்த புறவழிச் சாலையை வாகன ஓட்டிகள் பயன்படுத்துவதால் போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் பயண நேரம் குறைவதாக வாகன ஓட்டிகள் தெரிவிக்கின்றனர். ஆனால் தையூர் செங்கண்மால் பகுதியில் இருந்து படூர் வரை இரண்டரை கிலோ மீட்டர் தூரத்தில் அமைய உள்ள சாலையில் ஒரு மேம்பாலம் அமைகிறது.

    இதில் படூர் வரை 50 சதவீத பணிகள் மட்டுமே நடைபெற்றுள்ளன. மீதமுள்ள பாதி பணிகள் நடைபெறவில்லை. இதனால் தினமும் வாகன ஓட்டிகள் கேளம்பாக்கம் நகருக்குள் வந்து கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கும் நிலை உள்ளது. இந்த பணிகள் நிறைவடைந்தால் இப்பகுதியில் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்புவாசிகள், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் மற்றும் பணிக்கு குறித்த நேரத்தில் செல்லும் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைவர்.

    மந்தகதியில் நடைபெறும் திருப்போரூர், கேளம்பாக்கம் புறவழிச்சாலை பணிகளை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்காக விரைவில் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • களிமேடு பகுதியில் அதிகளவில் வணிக நிறுவனங்களும் உள்ளன.
    • சாலையை அகலப்படுத்தவும், சாக்கடையை சீரமைக்கவும் பணிகள் நடப்பதால் வாகனங்கள் செல்ல முடியவில்லை.

    காங்கேயம் :

    காங்கேயம் தாராபுரம் ரோட்டில் உள்ள களிமேடு பகுதியில் அதிகளவில் மக்கள் வசித்து வருகிறார்கள்.வணிக நிறுவனங்களும் உள்ளன. காங்கேயம் நகராட்சியின் 8 வது வார்டு ஆகும்.

    சாலை சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதால் இங்கு சி. எஸ் தேவாலயம் எதிரே செல்லும் கே. எஸ். ஆர் சந்து பகுதி கடந்த 4 மாதங்களாக துண்டிக்கப்பட்டுள்ளது. சாலையை அகலப்படுத்தவும், சாக்கடையை சீரமைக்கவும் பணிகள் நடப்பதால் இந்த பகுதியில் வாகனங்கள் செல்ல முடியவில்லை. பணிகள் தொடங்கப்பட்டு இத்தனை நாட்கள் ஆகியும் சரிவர பணிகள் நடக்கவில்லை. ஆமை வேகத்தில் பணிகள் நடக்கின்றன. இந்த பகுதியில் இருந்து தினந்தோறும் வேலைக்கு செல்பவர்கள், கல்லூரி, பள்ளிக்கு சென்று வரும் மாணவர்கள் உள்ளிட்ட பல தரப்பினர் அவதி அடைந்து வருகின்றனர். பணிகளை விரைந்து முடிக்க கோரி இந்த பகுதி மக்கள் நெடுஞ்சாலைத்துறை, மற்றும் நகராட்சி அதிகாரிகளிடம் புகார் மனுவும் அளித்துள்ளனர்.

    அதன் பிறகும் கூட எந்த நடவடிக்கையும் இல்லை. விரைந்து பணிகளை முடிக்கவில்லை என்றால் போராட்டத்தில் ஈடுபட போவதாக அந்த பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

    • 3,649 கோடி ரூபாய் மதிப்பில் புதிய நான்கு வழிச்சாலை அமைக்கப்படுகிறது.
    • 106.693 கி.மீ., புறவழிச்சாலையாக அமையும் வகையில் திட்ட வடிவமைப்பு உள்ளது.

     உடுமலை :

    மத்திய அரசின் பாரத் மாலா பிரயோஜனா திட்டத்தின் கீழ் பொள்ளாச்சி - திண்டுக்கல் கமலாபுரத்தை இணைக்கும் வகையில் நான்கு வழிச்சாலை திட்டம் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வாயிலாக மேற்கொள்ளப்படுகிறது.மத்திய அரசு 40 சதவீதம், தனியார் 60 சதவீதம் என்ற அடிப்படையில் 3,649 கோடி ரூபாய் மதிப்பில் புதிய நான்கு வழிச்சாலை அமைக்கப்படுகிறது.

    பொள்ளாச்சி - மடத்துக்குளம் 50.07 கி.மீ., மடத்துக்குளம் - ஒட்டன்சத்திரம் 45.38 கி.மீ., ஒட்டன்சத்திரம் - கமலாபுரம் 36.51 கி.மீ., என 131.96 கி.மீ., சாலை அமைக்கவும், இதில் 106.693 கி.மீ., 80 சதவீதம் புறவழிச்சாலையாக அமையும் வகையில் திட்ட வடிவமைப்பு உள்ளது.இத்திட்டத்தின் கீழ் மடத்துக்குளம் முதல் திண்டுக்கல் கமலாபுரம் வரை பெரும்பாலான பணிகள் நிறைவு பெற்று போக்குவரத்திற்கு தயாராக உள்ளது.

    அதே போல் பழநி சண்முகநதி, அமராவதி ஆறுகளின் குறுக்கேயும் இரண்டு ரெயில்வே பாலங்கள், 46 சிறு பாலங்கள், 490 மிகச்சிறு பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 47 கி.மீ.,க்கு அணுகுசாலை, 146 பஸ் ஸ்டாப்கள், நான்கு கனரக வாகன ஓய்விடங்கள் அமையும் வகையில் திட்ட வடிவமைப்பு உள்ளது.இத்திட்டத்தின்கீழ் பொள்ளாச்சி, உடுமலை பகுதிகளில் பணிகள் ஆமை வேகத்தில் நடக்கிறது. அதிலும் உடுமலை - தாராபுரம் ரோட்டை கடக்கும் வகையில் உள்ள பாலம் வழக்கு காரணமாக நிலுவையில் உள்ளது.

    ஏற்கனவே திட்ட பணிகள் நிறைவு பெறும் காலக்கெடு முடிந்துள்ள நிலையில் இன்னும் பணிகள் நிறைவு பெறாமல் இழுபறியாகி வருகிறது. அதிவிரைவு சாலை பணிகள் தாமதத்தால் பிரதான ரோடுகளில் போக்குவரத்து பாதிப்பு, விபத்துகள் ஏற்படுவதோடு விவசாய நிலங்கள், கிராமங்களுக்கு செல்வதிலும் தொடர்ந்து சிக்கல் நீடித்து வருகிறது.எனவே பொள்ளாச்சி, உடுமலை பகுதிகளிலும் நான்கு வழிச்சாலை பணிகளை விரைந்து முடிக்க தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • திப்பணம்பட்டியில் இருந்து அரியப்பபுரம் வரையிலான சாலை சீரமைப்புபணி தொடக்க விழா நடைபெற்றது.
    • தி.மு.க. மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன், பழனிநாடார் எம்.எல்.ஏ. ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    தென்காசி:

    கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியம், திப்பணம்பட்டியில் இருந்து அரியப்பபுரம் வரையிலான சாலை சீரமைப்பு பணிக்கு ரூ.4.41 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, பணி தொடக்க விழா நடைபெற்றது. பாவூர்சத்திரம் அருகே உள்ள திப்பணம்பட்டி- அரியப்பபுரம் சாலை சீரமைப்பு பணிகளை தி.மு.க. மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன், பழனிநாடார் எம்.எல்.ஏ. ஆகியோர் தொடங்கி வைத்தனர். யூனியன் சேர்மன் காவேரி தலைமை தாங்கினார்.

    நிகழ்ச்சியில் ஒன்றிய தி.மு.க. செயலாளர் சீனித்துரை, திப்பணம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் ஐவராஜா, அரியப்பபுரம் ஊராட்சி தலைவர் தினேஷ்குமார், உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்ற மாவட்ட துணை செயலாளர் சிவஅருணன், ஒப்பந்ததாரர் சண்முகவேலு, காங்கிரஸ் நிர்வாகிகள், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் வைகுண்ட ராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் .

    • பணிகளை விரைந்து முடிக்க உத்தரவு
    • அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் மாவட்டத்தில் நெடுஞ்சாலை துறைசார்பில் தரைப்பாலம் மேம்பாலங்க ளாகவும், புதிய தார் சாலை பணிகள் ரூ.50 கோடியில் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை நெடுஞ்சாலைத் துறை கண்காணிப்பு பொறி யாளர் பழனிவேல் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

    திருப்பத்தூர், வாணியம்பாடி, ஆம்பூர் பகுதிகளிலும் நாட்டறம்பள்ளியை அடுத்த பச்சூர், கொத்தூர் பகுதி களில் தரைப்பாலமாக இருந்த பாலங்கள் அனைத் தும் உயர்மட்ட பாலங்களாக மாற்றி அமைக்கப்பட்டு வரு கிறது. அந்த பணிகளையும் அவர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    அதேபோல், மல்லகுண்டா பகுதியில் விரிவாக்கம் செய்து 7 கி.மீ. சாலை அமைக்கும் பணியை அவர் பார்வை யிட்டு, பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார். மேலும் 16 அடி இடைநிலை சாலையாக மாற்றி அமைக் கும் பணிகளையும் அதனு டைய தரத்தையும் ஆய்வு செய்தார்.

    ஆம்பூர் பகுதியில் கைலாச கிரி, மிட்டாளம் பாலம் கட்டும் பணிகளை ஆய்வு செய்து அந்தப் பணிகளையும் விரை வில் டிக்க உத்தரவிட்டார். முடி மேலும் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் பணிகளை அவர் ஆய்வு செய்தார்.

    • மரங்கள் வெட்டி அகற்றம்
    • 1 கி.மீட்டருக்கு ரூ.3 கோடி முதல் ரூ.5 கோடி வரை செலவிடப்படுகிறது

    திருவண்ணாமலை:

    தண்டராம்பட்டு வழியாக திருவண்ணா மலையிலிருந்து அரூர் வரை செல்லும் நான்கு வழி சாலை பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

    திருவண்ணாமலைக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர்.

    பவுர்ணமி நாட்களிலும் திருவிழா காலங்களிலும் தமிழகம் மட்டுமல்லாது கர்நாடகா, கேரளா, ஆந்திரா மாநிலங்களிலிருந்தும் வெளி மாவட்டங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கார் வேன் பஸ்களில் திருவண்ணா மலைக்கு வருகின்றனர்.

    அதுபோன்ற நாட்களில் போக்குவரத்து அதிகம் இருக்கும். தண்டராம்பட்டு, தானிப்பாடி போன்ற பெரிய கிராமங்கள் வழியாக ஊருக்குள் வருகிற போது போக்குவரத்து இடையூறு ஏற்பட்டு வருகிறது.

    இதனை தவிர்க்க இந்த சாலையை பைபாஸ் சாலைகளுடன் கூடிய நான்கு வழி சாலையாக விரிவாக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    அதன்படி திருவண்ணா மலையில் இருந்து தண்ட ராம்பட்டு வழியாக அரூர் வரை நான்குவழிச்சாலை பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    இதற்காக திருவண்ணாமலையில் இருந்து தண்டராம்பட்டு வரை செல்லும் சாலையில் இருபுறமும் இருந்த புளிய மரங்கள் முற்றிலுமாக அகற்றப்பட்டு தரைப்பாலங்கள் அமைத்து நான்கு வழிச்சாலையாக விரிவுபடுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    ஆங்காங்கே ரோட்டின் குறுக்கே சாத்தனூர் அணையில் இருந்து வரும் குடிநீர் குழாய் இணைப்பு குழாய்கள் பழுது பார்க்கப்பட்டு தரைப்பாலங்கள் அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.

    இந்த பணிகளுக்காக ஒரு கிலோமீட்டர் தூரத்துக்கு ரூ.3 கோடி முதல் ரூ.5 கோடி ரூபாய் வரை செலவிடப்படுகிறது. இந்த சாலை விரிவாக்க பணியில் பணியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    • அதிகரித்து வரும் வாகனங்கள் காரணமாக அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
    • மாடம்பாக்கம் செல்லும் சாலையை ரூ.13.5 கோடி மதிப்பில் விரிவுப்படுத்த நெடுஞ்சாலைத் துறை திட்டமிட்டு உள்ளது.

    தாம்பரம்:

    வேளச்சேரி-தாம்பரம் சாலையில் ராஜகீழ்பாக்கம் சந்திப்பில் இருந்து மாடம்பாக்கம் செல்லும் சாலை மிகவும் குறுகலாக உள்ளது. இதனால் அதிகரித்து வரும் வாகனங்கள் காரணமாக அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

    இந்த சாலையை அகலப்படுத்த வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இந்நிலையில் ராஜகீழ்பாக்கம் சந்திப்பில் இருந்து மாடம்பாக்கம் செல்லும் சாலையை ரூ.13.5 கோடி மதிப்பில் விரிவுப்படுத்த நெடுஞ்சாலைத் துறை திட்டமிட்டு உள்ளது. இதற்கான பணிகள் விரைவில் தொடங்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

    இந்த சாலை தற்போது 7 மீட்டர் அகலத்தில் உள்ளது. இதனை 14 மீட்டருக்கு அகலப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் மழைநீர் வடிகால்வாயும் அமைக்கப்படுகிறது.

    இது குறித்து நெடுஞ்சாலை துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, ராஜ கீழ்ப்பாக்கம், மாடம் பாக்கம், கிழக்கு தாம்பரம் வழியாக ஜி.எஸ்.டி. ரோடு இணைக்கப்படும். மாடம்பாக்கம் சாலையை அகலப்படுத்தினால் வாகன ஓட்டிகள் ஜி.எஸ்.டி. சாலையை பயன்படுத்தி நெரிசல் இல்லாமல் தென் சென்னை பகுதிகளுக்கு செல்ல முடியும் என்றார்.

    • சாலை பணியை சபாநாயகர் ஏம்பலம்அ செல்வம் தொடங்கி வைத்தார்.
    • இப்பணியை தொகுதி எம்.எல்.ஏ.வும், சபாநாயகருமான ஏம்பலம் செல்வம் தொடங்கி வைத்தார்.

    புதுச்சேரி:

    மணவெளி தொகுதி அபிஷேகபாக்கத்தில் ரூ.1½ கோடி செலவில் சாலை பணியை சபாநாயகர் ஏம்பலம்அ செல்வம் தொடங்கி வைத்தார்.

     பிரதம மந்திரியின் கிராம சதக் யோஜனா திட்டத்தின் கீழ் மணவெளி தொகுதி அபிஷேக பாக்கம் கிராமத்தில் தெப்பக்குளம் விதி, வீரன் கோவில் வீதி, பழைய டி.என். பாளையம் ரோடு ஆகிய பகுதிகளில் சாலைகளை ரூ.1.44 கோடி மதிப்பில் தார் சாலையாக அமைக்கும் பணி நடைபெறுகிறது. இப்பணியை தொகுதி எம்.எல்.ஏ.வும், சபாநாயகருமான ஏம்பலம் செல்வம் தொடங்கி வைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில் அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ரமேஷ், உதவி பொறியாளர் கள் நாகராஜ், சரஸ்வதி, ரகுராமன் மற்றும் தொகுதி முக்கிய பிரமுகர்களான பா.ஜனதா மாநில விவசாய அணி பொறுப்பாளர் ராமு, பொதுச் செயலாளர் சக்திபாலன், கிருஷ்ணமூர்த்தி ரெட்டியார், மாயகிருஷ்ணன் ஹேமமாலினி, மாறன், முருகன், ஜானகிராமன், கதிரேசன், ராமகிருஷ்ணன், உமா, தவளக்குப்பம் வேளாண் கூட்டுறவு சங்க இயக்குனர் சக்திவேல் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • திருக்கனூர் பகுதியில் கடைவீதியில் ஒருபுறம் புதுவை திருக்கனூர் பகுதியும், மறுபுறம் தமிழகப் பகுதியான சித்தலம்பட்டு கடைவீதியும் உள்ளது.
    • நெடுஞ்சாலை துறை மூலமாக ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு சாலை அமைக்கும் பணி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    புதுச்சேரி:

    திருக்கனூர் பகுதியில் கடைவீதியில் ஒருபுறம் புதுவை திருக்கனூர் பகுதியும், மறுபுறம் தமிழகப் பகுதியான சித்தலம்பட்டு கடைவீதியும் உள்ளது.

    சித்தலம்பட்டு கடைவீதி மற்றும் அதனை ஒட்டிய தமிழக பகுதியான தி.புதுக்குப்பம் பகுதிகளில் சாலை விரிவாக்க பணிக்காக தமிழக அரசின் நெடுஞ்சாலை துறை மூலமாக ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு சாலை அமைக்கும் பணி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில் தி.புதுக்குப்பம் பகுதியில் அங்குள்ள அரசு மேல்நிலைப்பள்ளி அருகில் 100 ஆண்டு பழமை வாய்ந்த மிகப்பெரிய ஆலமரம் இருந்தது.

    சாலை விரிவாக்கப் பணிக்காக அகலப்படுத்தும் போது அந்த ஆலமரத்தினை எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் அந்த மரத்தினை வெட்டி அப்புறப்படுத்தினார்கள்.

    அந்த மரத்தை மீண்டும் உயிர்பிக்கும் முயற்சியாக தி.புதுக்குப்பம் கிராம பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும், புதுவை தனசுந்தராம்பாள் அறக்கட்டளை நிர்வாகி ஆனந்தன் ஆகியோரின் கூட்டு முயற்சியினால் 3 நாட்கள் போராடி வேருடன் அந்த ஆலமரம் பிடுங்கப்பட்டது.

    பிடுங்கப்பட்ட ஆலமரம் மீண்டும் அங்குள்ள பொம்மி ரெட்டி குளம் குளக்கரையில் கிராம மக்களின் முயற்சியினாலும், சமூக ஆர்வலர்களின் முயற்சியாலும் நடப்பட்டது.

    வெட்டி அகற்றப்பட்ட மரம் மீண்டும் குளக்கரையில் நடப்பட்டு உயிர்ப்பிக்கப்பட்டதால் அந்த கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். கிராம மக்கள் அந்த மரத்திற்கு பூஜை செய்து வழிபட்டனர்.

    100 ஆண்டு பழமை வாய்ந்த மரத்தினை காப்பாற்ற பொதுமக்கள் எடுத்த முயற்சி அப்பகுதியில் பெரும் பாராட்டை பெற்றுள்ளது.

    ×