search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Request"

    • தச்சநல்லூர் தளவாய்புரம் கெங்கையம்மன் கோவில் தெற்கு தெருவின் முகப்பில் இருந்து வாய்க்கால் பாலம் வரை சாலை மிகவும் மோசமாக உள்ளது.
    • சாலையில் நடுவே உள்ள 2 மின்கம்பத்தை அப்புறப்படுத்த வேண்டும் என மனுவில் கூறப்பட்டிருந்தது.

    நெல்லை:

    நெல்லை மாநகராட்சி வாரந்திர மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் இன்று மேயர் சரவணன் தலைமையில் நடைபெற்றது. துணை மேயர் ராஜு முன்னிலை வகித்தார்.

    நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் சங்கர பாண்டியன் தலைமையில் தச்சை மண்டல தலைவர் கெங்கராஜ் மற்றும் நிர்வாகிகள் திரண்டு வந்து அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    தச்சநல்லூர் தளவாய்புரம் கெங்கையம்மன் கோவில் தெற்கு தெருவின் முகப்பில் இருந்து வாய்க்கால் பாலம் வரை சாலை மிகவும் மோசமாக உள்ளது. அந்த சாலையை சீரமைத்து தர வேண்டும். அந்த பகுதியில் குறுகிய தெருவாக இருப்பதால் கட்டுமான பணிகள் நடைபெறும் போது வாகனங்கள் உள்ளே வருவதற்கு வசதி இல்லாமல் இருக்கிறது.

    மேலும் இந்த தெருவில் 2 மின்கம்பம் சாலையில் நடுவே உள்ளது. அதனை அப்புறப்படுத்த வேண்டும். இது தொடர்பாக கவுன்சிலரிடம் தெரிவி க்கும்போது அவர் ஒருதலை பட்சமாக நடந்து கொள்கிறார். பொதுப்பாதை அமைந்துள்ள இடத்தில் அரசு கட்டிடத்தை கொண்டு வர கவுன்சிலர் முயற்சி செய்கிறார். எனவே அதனை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு கூறியுள்ளனர்.

    • அரியலூரில் ஆக்கிரமிப்புகளை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை
    • மாவட்ட கலெக்டருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    அரியலூர், 

    ஆங்கிலேயர்ஆட்சி காலத்தில் அரியலூர் மிகப்பெரிய சமஸ்தானமாக இருந்து வந்தது, ஜமீன் ஆட்சி நடைபெற்றது, இந்திராகாந்தி ஆட்சி காலத்தில் மன்னர்ஆட்சி ஒழிக்கப்பட்டது. அப்போது ஜமீன் மன்னர்கள் அனைத்து ஆவணங்களையும் அரசிடம் ஒப்படைத்தனர், அப்போது இருந்த அரசு நிலங்கள் எல்லாம் தனி நபர்பட்டா போட்டுள்ளனர்.அரியலூர்நகரில் உள்ள பிரதான சாலைகள் தேரோடும் தெருவீதிகள் எல்லாம் ஆக்கிரமிப்புகள் அதிகமாகி தற்போது நடை பாதையாக மாறிவிட்டது, கூட்ட நேரத்தில் சாலை விபத்துக்கள் அதிகரித்து கொண்டே போகிறது. எங்கு பார்த்தாலும் சாலை ஓரத்தில் கடைகள், வேன், கார், ஆட்டோக்களை நிறுத்திக்கொண்டிருக்கி றார்கள். சாலை ஓரத்தில் அனுமதியில்லாத விளம்பர தட்டிகள் அமைக்கப்பட்டு உள்ளது. கூட்ட நெரிசலில் இருந்தும், சாலை விபத்துகளிலிருந்தும் பொதுமக்களை காப்பாற்ற அண்ணாசிலை, தேரடி, எம்.ஜி.ஆர். சிலை, பெருமாள் கோவில் தெரு, சத்திரம், சின்ன கடை தெரு, பெரியகடைதெரு பகுதியிலுள்ள ஆக்கிர மிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும் என சமூக ஆர்வலர்வக்கில் சுகுமார்உட்பட ஏராளமான பொதுமக்கள் மாவட்ட கலெக்டருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • விராலிமலை புதிய பேருந்து நிலையத்துக்குள் பஸ் வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை மனு அனுப்பப்பட்டு உள்ளது
    • முதல்வரின் தனிப்பிரிவுக்கு மாவட்ட கவுன்சிலர் சிவசாமி மனு அனுப்பி உள்ளார்

    விராலிமலை,

     விராலிமலையில் ரூ. 3.18 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் திறக்கப்பட்டு 7 ஆண்டுகள் கடந்து விட்டன. ஆனால் சில பேருந்துகள் தவிர மற்ற எந்த பேருந்து களும் நிலையத்திற்குள் வந்து செல்வதில்லை. அனைத்து பேருந்துகளும் வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். காவல் நிலையத்தில் காவ லர்களை அதிகப்படுத்த வேண்டும். மற்றும் தீய ணைப்பு நிலையம் உடன டியாக அமைத்து தர வேண் டும்.

    இவ்வாறு விராலிமலை மேற்கு மாவட்ட கவுன்சிலர் ஆர். கே. சிவசாமி, தமிழக முதல் வர் மு.க. ஸ்டாலின் தனிப்பி ரிவு மற்றும் அனைத்து துறை செயலர்களுக்கும் பொதுமக்கள் சார்பில் மனு அனுப்பி உள்ளார்

    • சிறப்பு மருத்துவ முகாமில் கால்நடைகளுக்கு சிகிச்சை மற்றும் ஆலோசனைகள் பெறலாம்.
    • கறவை மாடு மற்றும் கன்றுகள் பராமரித்து வரும் நபர்களுக்கு பாராட்டுச் சான்று மற்றும் பரிசுப் பொருட்களை கலெக்டர் வழங்கினார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியம் வண்ணாங்குண்டு ஊராட்சி புதூர் கிராமத்தில் கால்நடை பராமரிப்புத்துறை மற்றும் பால்வளத்துறை சார்பில் சிறப்பு கால்நடை மருத்துவ முகாம் நடைபெற் றது. ராமநாதபுரம் சட்ட மன்ற உறுப்பினர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் முன்னிலை வகித்தார். கலெக்டர் விஷ்ணு சந்திரன் தலைமை தாங்கி கால்நடை களுக்கான சிறப்பு மருத்துவ முகாமை துவக்கி வைத்தார். பின்னர் அவர் கூறியதா வது:-

    தமிழ்நாடு அரசின் ஆணைக்கிணங்க கால்நடை களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் 3 மாதத்திற்கு ஒரு முறை நடைபெற்று வருகி றது. அதனடிப்படையில் தற்போது நான்காம் கட்ட சிறப்பு மருத்துவ முகாம் நேற்று துவங்கி 21 நாட்கள் நடைபெறுகிறது. இதில் விடு பட்ட கால்நடைகளுக்கு 10.12.2023 அன்று சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

    ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்திற்கும் 20 சிறப்பு மருத்துவ முகாம்கள் வீதம் 120 முகாம்கள் நடைபெறுகி ன்றன. தங்கள் பகுதிகளில் நடைபெறும் கால்நடைகளுக் கான மருத்துவ முகாமில் கால்நடை வளர்ப்போர்கள் தவறாமல் கால்நடைகளை அழைத்து வந்து உரிய பரி சோதனை மற்றும் மருத்துவ ஆலோசனைகளை பெற்றுக் கொள்ள வேண்டும்.

    தற்பொழுது நடைபெறும் மருத்துவ முகாம்களில் கால் நடைகளை தாக்கி வரும் கொடிய வைரஸ்களை கண் டறிந்து உரிய சிகிச்சை வழங்குதல் மற்றும் கறவை மாடுகளின் சினைப்பிடிப்பு தடைபடுதல், இளங்கன்று கள் இறப்பு போன்றவற்றை தடுத்திடும் வகையில் தேவை யான முன்னேற்பாடு சிகிச்சை வழங்குதல் அதிகள வில் பாதிப்பை ஏற்படுத்தும் கால்காணை மற்றும் வாய் காணை நோய்க்கான தடுப் பூசி மருந்துகள் வழங்குதல், அதேபோல் வீடுகளில் வளர்க்கக்கூடிய கோழி, நாய் போன்றவற்றிற்கும் மருத்துவ சிகிச்சை வழங்கப் படுகின்றன. எனவே மாடு, ஆடு வளர்த்து வரும் பொது மக்கள் தங்கள் கால்நடை களை கட்டாயம் மருத்துவ முகாமிற்கு அழைத்து வந்து உரிய மருத்துவ பரிசோதனை செய்து கொண்டு சிறந்த முறையில் பராமரித்து பயன்பெற்றிட வேண்டும் என்றார்.

    பின்னர் சிறப்பாக கறவை மாடு மற்றும் கன்றுகள் பராமரித்து வரும் நபர்களுக்கு பாராட்டுச் சான்று மற்றும் பரிசுப் பொருட்களை கலெக்டர் வழங்கினார்.

    நிகழ்ச்சியில் கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் இளங் கோவன், பால்வளத்துறை துணை பதிவாளர் புஷ்ப லதா, கால்நடை பராமரிப் புத்துறை உதவி இயக்குநர் செங்குட்டுவன், திருப்புல் லணி ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் புல்லாணி, கால்நடை பராமரிப்பு துறை மருத்துவர்கள் ரவிச்சந்திரன், சுந்தரமூர்த்தி, முருகராஜன், ஜெபிரகாஷ், ரஜினி, பால் வளத்துறை முதுநிலை ஆய் வாளர் அண்ணாமலை, கால்நடை பராமரிப்புத்துறை ஆய்வாளர் இளமதி, வண் ணாங்குண்டு ஊராட்சி மன் றத்தலைவர் தியாகராஜன் மற்றும் அரசு அலுவ லர்கள் உட்பட பலர் கலந்து கொண் டனர்.

    • பால் உற்பத்தியாளர்கள் சங்கம் கோரிக்கை
    • கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கத்தின் மூலம் 60 ஆயிரம் லிட்டர் கொள்முதல் செய்யப்படுகிறது.

    புதுச்சேரி:

    புதுச்சேரி மாநில பால் உற்பத்தியாளர் சங்க பொதுச்செயலாளர் பெருமாள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    புதுச்சேரி மாநிலத்திற்கு நாள் ஒன்றுக்கு ஒரு லட்சத்து50 ஆயிரம் லிட்டர் பால் தேவைப்படுகிறது. கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கத்தின் மூலம் 60 ஆயிரம் லிட்டர் கொள்முதல் செய்யப்படுகிறது.

    மீதம் உள்ள 90 ஆயிரம் லிட்டர் பால் அண்டை மாநிலங்களில் அதிக விலை கொடுத்து வாங்கப்படுகிறது.இந்த நிலையை மாற்றி நமது மாநிலத்திலேயே கொள்முதல் செய்ய வேண்டும் என்றால் பால் உற்பத்தியாளர்களை ஊக்கப்படுத்த வேண்டும்.

    பால் உற்பத்தி யாளர்களுக்கு பாண்லே மூலம் வழங்கப்பட்டு வந்த 75 சதவீத மானிய விலையில் தீவனம் மீண்டும் வழங்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    • சாலைகளில் குறுக்கே ஓடும் பன்றிகளால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
    • இடையூறாக உள்ள பன்றிகளை பிடித்து அப்புறப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை.

    சீர்காழி:

    சீர்காழி நகரில் பல்வேறு பகுதிகளில் பன்றிகள் அதிகளவு சுற்றி திரிந்து வந்தது.

    இதனால் பெரும் சுகாதாரசீர்கேடு ஏற்பட்டத்தோடு, சாலைகளில் குறுக்கே ஓடும் பன்றிகளால் போக்குவரத்துபாதிப்பு, விபத்தும் ஏற்பட்டது.

    இதைத் தொடர்ந்து இடையூறாக உள்ள பன்றிகளை பிடித்து அப்புறப்படுத்திட பொது மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    பொது மக்களின் கோரிக்கையை ஏற்று கலெக்டரின் அறிவுறுத்தலின்படி, நகர்மன்ற தலைவர் துர்காராஜசேகரன், ஆணையர் ஹேமலதா ஆகியோர் மேற்பார்வையில் சுகாதார ஆய்வாளர் டேவிட் பாஸ்கரராஜ் முன்னிலையில் பரப்புரையாளர்கள் அலெக்ஸ்பாண்டியன் உள்ளிட்டோர் நகரில் சுற்றிதிரிந்த 80 பன்றிகளை பிடித்து அப்புறப்படுத்தினர்.

    • பொங்கல் பண்டிகையின் போது மண் அடுப்பும், மண் பானையும் வைக்கப்பட்டு பொங்கல் வைப்பார்கள்.
    • மண்பாண்ட தொழிலாளர்களிடம் இருந்து கொள்முதல் செய்வதால் அவர்களது வாழ்வாதாரமும் உயரும்.

    நெல்லை:

    நெல்லை மாவட்ட மண்பாண்ட தொழிலாளர்கள் குலாலர் சங்கத்தினர் நெல்லை மாவட்ட தலைவர் முருகானந்தம், மாவட்ட பொதுச் செயலாளர் அய்யப்பன், மாவட்ட பொருளாளர் பிச்சாண்டி ஆகியோர் தலைமையில் நெல்லை கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    மண் அடுப்பு

    தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையின் போது மண் அடுப்பும், மண் பானையும் வைக்கப்பட்டு பொங்கல் வைப்பார்கள். இதற்காக ரேஷன் கடைக ளில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும்போது அரசு சார்பில் மண்பானை, மண் அடுப்பு வழங்க வேண்டும்.

    அவ்வாறு செய்யும்போது மண்பாண்ட தொழிலாளர்களிடம் இருந்து கொள்முதல் செய்வதால் அவர்களது வாழ்வாதாரமும் உயரும். இது தொடர்பாக கடந்த 5 ஆண்டுகளாக அரசுக்கு கோரிக்கை வைத்து வருகிறோம்.

    எனவே பொங்கல் தொகுப்புடன் மண்பானை மற்றும் மண் அடுப்பு வழங்க வேண்டும். மேலும் மண்பாண்ட தொழிலா ளர்களுக்கு மழைக்கால நிவாரணம் மற்றும் இலவச மின்விசை சக்கரம், கல்வி உதவித்தொகை, நலத்திட்ட உதவிகள், களிமண் எடுப்ப தற்கான ஆணை, தொழில் கடன் உள்ளிட்ட வழிவகை களை ஏற்பாடு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி இருந்தனர்.

    பாளையை சேர்ந்தவர் கிருஷ்ணவேணி. இவர் வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுனராக பணியாற்றி வருகிறார்.

    அவர் இன்று கலெக்டர் அலுவலகத்தில் அளித்த மனுவில், கடந்த 2021-ம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் வட்டார வள மையத்தில் ஆசிரியர் பயிற்றுனராக பணியில் சேர்ந்த நான் சுமார் ஒரு மாதம் மருத்துவ விடுப்பில் சென்றேன்.

    அதன் பின்னர் பணியில் சேர வந்தபோது கல்வித் துறை அதிகாரிகள் சிலர் வேண்டுமென்றே வருகை பதிவேட்டில் கையெழுத்து விடுவதற்கு சம்மதம் தெரிவிக்கவில்லை.

    இதுதொடர்பாக கோர்ட்டில் வழக்கு தொடர்ந்த நிலையில் வருகை பதிவேட்டில் கையெழுத்திட அனுமதிக்கு மாறு உத்தரவிட்டது. ஆனாலும் இதுவரை கல்வித் துறை அதிகாரிகள் அதற்கு செவி சாய்க்காமல் இருந்து வருகிறார்கள் என கூறி யுள்ளார்.

    மாணவ-மாணவிகள்

    மானூர் தாலுகா வாகை குளம் அருகே உள்ள செ.மருதபுரத்தை சேர்ந்த பள்ளி, கல்லூரி மாண வர்கள் அந்த பகுதியில் வசிக்கும் ஊர் பொதுமக்க ளுடன் வந்து அளித்த மனுவில், மருதபுரம் கிராமத்தில் அம்மா விளை யாட்டு மைதானம் அமைக் கப்பட்டுள்ளது.

    பள்ளி, கல்லூரி மாணவர்கள் கிரிக்கெட், டென்னிஸ், கால்பந்து போன்ற விளையாட்டுக்காக அவ்விடம் அமைக்கப் பட்டது. தற்போது அந்த இடத்தை பிரதம மந்திரி அவாஸ் திட்டத்தின் கீழ் 20 பயனாளிகளுக்கு வழங்கப் போவதாக அதிகாரிகள் தெரிவித்து அளவீடு செய்து வருகின்றனர்.

    இதனை மாவட்ட கலெக்டர் தடுத்து நிறுத்தி மீண்டும் விளையாட்டு மைதானமாக தொடர வழிவகை செய்ய வேண்டும் என்று கூறியிருந்தனர்.

    • கிழக்கு கடற்கரை சாலையில் விபத்து ஏற்படும் அபாயத்தில் கருவேல மரங்கள் வளர்ந்துள்ளன.
    • அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    திருவாடனை

    ராமநாதபுரம் மாவட்டம் தேவிப்பட்டினதில் இருந்து எஸ்.பி.பட்டினம் வரை கிழக்கு கடற்கரை சாலை உள்ளது. இந்த சாலையில் இருசக்கர வாகனம் மற்றும் பேருந்துகள் அதிக அளவில் செல்வது வழக்கம்.

    தேவிப்பட்டினத்தில் இருந்து எஸ்.பி. பட்டினம் வரை உள்ள இருபுறமும் சாலையில் காட்டு கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்து இருப்பதால் போக்கு வரத்துக்கு இடையூராக உள்ளது.

    இதனால் வாகன ஓட்டி கள் மிகுந்த அச்சத்தில் சாலையில் பயணிக் வேண்டி உள்ளது. மேலும் சாலையின் வளைவுகளில் எதிரில் வரும் வாகனம் தெரியாமல் அடிக்கடி விபத்துகளும் ஏற்படுகிறது.

    இதேபோல் இரண்டு சக்கர வாகனத்தில் செல் வோர் சாலையில் செல்லும் போது எதிரில் கனரக வாகனம் வந்தால் ஒதுங்கக் குட முடியாத சூழ்நிலை ஏற் படுகிறது. இதனால் வாகன யோட்டிகளுக்கு காயம் மற்றும் விபத்தும் ஏற்படுகிறது.

    இதனை நெடுஞ்சாலை துறையினரிடம் பல முறை புகார் தெரிவித்தும் கண்டு கொள்ளாமல் அலட்சிய மாக உள்ளனர்.

    இதனை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • அரியலூரில்பாதுகாப்பான நடை பயிற்சி சாலை அமைக்க கோரிக்கை எழுந்துள்ளது
    • ஏற்கனவே திட்டமிட்டுள்ள சாலை பாதுகாப்பற்றது என்று குற்றச்சாட்டு

    அரியலூர்,

    அரியலூர் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுதுறை சார்பில் நடப்போம் நலம்பெறுவோம் என்ற நடைபயிற்சி திட்டத்தினை போக்குவரத்துத்துறை அமைச்சர்சிவசங்கர் தொடங்கி வைத்தார்.

    மாவட்ட கலெக்டர் ஆனிமேரி ஸ்வர்ணா, எம்எல்ஏக்கள் சின்னப்பா, கண்ணன் உட்பட அரசு அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

    கல்லூரி சாலை, பள்ளேரி கரை, அரசு மருத்துவமனைசாலை, பென்னிகவுஸ் சாலை, முருகன் கோவில், சத்திரம், எம்ஜிஆர் சிலை, தேரடி, அண்ணாசிலை, செட்டிஏரிகரை, ஜெயங்கொண்டம் சாலை, பழைய கலெக்டர் அலுவலகம் சென்று – மீண்டும் வந்த வழியாக செல்லவேண்டும் என நடைபயிற்சி பாதை அமைக்கப்பட்டது.

    இந்த பாதை கரடு முரடான பாதை, சாலை விபத்துகளை ஏற்படுத்தும் பாதை, இந்த வழித்தடத்தில் பேருந்து, லாரி, கனரக வாகனங்கள், வேன், ஆட்டோ, கார், இருசக்கர வாகனங்கள் செல்லக்கூடிய முக்கிய சாலையாகும். இந்த பாதையில் நடைபயிற்சி மேற்கொள்வது ஆபத்தை உருவாக்கும். நடைபயிற்சி மேற்கொள்ள செட்டி ஏரிக்கரை, மாவட்ட விளையாட்டு அரங்கம், இருசுக்குட்டை, போன்ற இடங்களில் நான்கு பகுதி கரைகளையும் சீரமைத்து, மின்விளக்கு அமைத்து கொடுத்தால் ஆபத்து இல்லாமல் அமைதியாக பயமில்லாமல் நடைபயிற்சி மேற்கொள்ள வசதியாக இருக்கும். எனவே மாவட்ட கலெக்டர் மறுபரிசிலனை செய்து நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • அரியலூரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுமா? என்று பொதுமக்கள் எதிர்பார்ப்பாக உள்ளது
    • தீபாவளி பண்டிகை நெருங்குவதை தொடர்ந்து போக்குவரத்து நெரிசலை தவிர்க்க கோரிக்கை

    அரியலூர்,

    திருச்சிக்கு அடுத்தபடியாக அரியலூர் பெரிய வியாபார ஸ்தலமாகும். 40 கி.மீ சுற்றளவு பகுதியிலிருந்து சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர். பள்ளி, கல்லூரிகள், தொழில்நிறுவனங்கள், மளிகை, நகைகடை, ஜவுளிக்கடை ஆகியவை மிகவும் பிரபலமான நிறுவனங்கள் இங்கு உள்ளன.

    அரியலூர் பேருந்து நிலையம் கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதால், தற்காலிக பேருந்துநிலையம் புறவழிச்சாலையில் செயல்பட்டு வருகின்றது.

    இந்நிலையில் தற்போது தீபாவளி பண்டிகை நெருங்கி வருதையொட்டி கூட்ட நெரிசலை தவிர்க்க போக்குவரத்து மாற்றம் செய்யப்படவேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

    சென்னை, திருச்சி, தஞ்சாவூர் பகுதியிலிருந்து வரும் பேருந்துகள் புறவழிச்சாலை வழியாக வந்து செல்ல வேண்டும்.

    சேலம், ஆத்தூர், பெரம்பலூர், ஜெயங்கொண்டம், செந்துறை வழியாக வரும் பேருந்துகள் ரயில்வே மேம்பாலம் வழியாக தற்காலிக பேருந்து நிலையம் வந்து செல்லவேண்டும்.

    கும்பகோணம், ஜெயங்கொண்டம் வழியாக வரும் பேருந்துகள் கலெக்டர் அலுவலகம், புறவழிச்சாலை வழியாக தற்காலிக பேருந்து நிலையம் வந்து செல்ல வேண்டும்.

    பொதுமக்கள் நலனை முன்னிட்டு தற்காலிக பேருந்துநிலையத்திலிருந்து –நகரப்பகுதிக்குள் செல்ல நகரபேருந்துகளை இயக்கப்பட வேண்டும். மற்ற நாட்களில் லாரி, கனரக வாகனம், பேருந்து, கார். வேன், மினி லாரி சென்றுவர அனுமதிக்கக்கூடாது.பொதுமக்கள் நலன்கருதி கூட்டநெரிசல், சாலை விபத்தினை தடுக்க தீபாவளி பண்டிகையை முன்னிட்டு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட வேண்டும் என மாவட்ட கலெக்டருக்கும், மாவட்ட போலிஸ் சூப்பிரெண்டுக்கும், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • தமிழ்நாடு நகராட்சி துப்புரவு ஆய்வாளர் மற்றும் துப்புரவு அலுவலர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
    • துப்புரவு அலுவலர் பதவி என்பது துப்புரவு ஆய்வாளரின் பதவி உயர்வு பணியிடமாகும்.

    சென்னை:

    நகராட்சிகளின் பொது சுகாதார பிரிவில் ஒரே பணிகளை செய்வதற்கு வேறு வேறு துறைகளை சேர்ந்த இரு அதிகாரிகள் பணியிடங்கள் உள்ளது குறித்து நகராட்சி நிர்வாகத்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு நகராட்சி துப்புரவு ஆய்வாளர் மற்றும் துப்புரவு அலுவலர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

    இதுகுறித்து அந்த சங்கத்தின் தலைவர் ஆல்பர்ட் அருள்ராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    அனைத்து நகராட்சிகளிலும் தற்போது துப்புரவு அலுவலர் பணியிடங்கள் நிரப்பபட்டுள்ளது. இதற்காக மாநில சங்கம் நகராட்சி துறை அமைச்சர், துறை செயலாளர், நகராட்சி நிர்வாக இயக்குனர் அனைவருக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறது. இந்த நிலையில் சிறப்புநிலை மற்றும் தேர்வு நிலை நகராட்சிகளில் நகர்நல அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கு பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு துறை முயற்சி செய்து வருகிறது.

    இது குறித்து, தங்களது கருத்துகளை, எதிர்ப்பினை தமிழ்நாடு நகராட்சி துப்புரவு ஆய்வாளர் மற்றும் துப்புரவு அலுவலர் மாநில சங்கம் தனது கடிதத்தின் மூலம் பொது சுகாதாரத்துறை இயக்குனருக்கு தெரிவித்து உள்ளது. அக்கடிதத்தில் துப்புரவு அலுவலர் பதவி என்பது துப்புரவு ஆய்வாளரின் பதவி உயர்வு பணியிடமாகும். நோய் தடுப்பு பணி திடக்கழிவு மேலாண்மை திட்ட பணிகள், உரிமத் தொகை வசூலித்தல், பிறப்பு - இறப்பு பதிவு மற்றும் சான்றிதழ் வழங்கும் பணி அனைத்தையும் துப்புரவு அலுவலர், நகராட்சியின் பொது சுகாதார பிரிவிற்கு தலைமை யேற்று செய்து வருகிறார்.

    இந்நிலையில் துப்புரவு அலுவலர் செய்து வரும் அதே பணிகளை செய்திட பொது சுகாதாரத்துறை, தனது மருத்துவர்களை நகர்நல அலுவலர் என்ற பணியிடத்தில் நகராட்சிகளில் விரைவில் நிரப்பிட உள்ளது. ஒரு நகராட்சியில் ஒரு பணியினை செய்திட வேறு வேறு துறையினை சார்ந்த இரு அலுவலர்கள் எதற்கு என்றும், துப்புரவு ஆய்வாளர்களின் ஒரே ஒரு பதவி உயர்வு துப்புரவு அலுவலர் மட்டுமே. அதையும் நீர்த்து போக செய்யும் விதத்தில், பொது சுகாதாரத்துறை இயக்குனரின் இச்செயல் உள்ளது என்றும், பிறிதொரு துறையான பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு துறையிலிருந்து நகராட்சிகளில் நகர்நல அலுவலர் பணியிடங்களில் மருத்துவர்களை நியமித்திடுவதை தவிர்த்திடுமாறும் பொது சுகாதார இயக்குநருக்கு வழங்கப்பட்ட அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    மேலும் இது குறித்து மாநில சங்க தலைவர் கூறுகையில் பொது சுகாதார துறையில் உள்ள மருத்துவ அதிகாரிகள், பதவி உயர்வு பெறும் நோக்கத்தில் நகராட்சிகளில் காலியாக உள்ள நகர்நல அலுவலர் பணியிடங்களுக்கு வருகின்றனர் என்றும், இதனால் ஏற்கனவே அப்பணிகளை செய்து வரும் துப்புரவு அலுவலர்களின் நிலை தான் என்ன, அவர்களுக்குரிய பணி தான் என்ன என்பது குறித்தும் கேள்வி எழுகிறது. ஒரே பணி செய்ய இரு அலுவலர்கள் அதுவும் ஒரே நகராட்சியில், தற்போதைய நிதி நெருக்கடி சூழலில் தேவை இல்லை. எனவே துப்புரவு அலுவலர் பணியிடம் உள்ள நகராட்சிகளில் நகர்நல அலுவலர் பணியிடம் தேவை இல்லை என்ற முடிவு உடனடியாக எடுக்கப்பட வேண்டும்.

    பொது சுகாதாரத்துறை ஏற்படுத்தியுள்ள இப்பிரச்சினை குறித்து, நகராட்சி நிர்வாகத்துறை இதில் உடனடியாக தகுந்த நல்ல முடிவு எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    • 100 நாள் வேலை திட்ட ஊதியத்தை ரூ.600 ஆக வழங்க வேண்டும்.
    • ஒரத்தநாடு முழுவதும் 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

    திருவோணம்:

    100 நாள் வேலை திட்டத்தில் பணியாற்றிய விவசாய தொழிலாளர்களுக்கு 3 மாதங்களாக நிலுவையில் உள்ள சம்பளத்தை உடனடியாக வழங்க வேண்டும், 100 நாள் வேலை திட்டத்தில் பணியாற்ற கூடிய விவசாய தொழிலாளர்கள் ஜாப்காடு வைத்திருக்கும் அனைவருக்கும் வேலை வழங்க வேண்டும், 100 நாள் வேலை திட்டத்தை 200 நாட்களாக உயர்த்தி வழங்க வேண்டும், ஊதியத்தை ரூ.600 ஆக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர், 100 நாள் வேலை திட்ட பணியாளர்கள் ஒரத்தநாடு பஸ் நிலையத்தில் இருந்து பேரணியாக புறப்பட்டனர்.

    பின்னர், ஒரத்தநாடு கடைத்தெரு வழியாக ஊர்வலமாக வந்து ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போரா ட்டத்தில் ஈடுபட்டனர்.

    போராட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி மத்திய குழு உறுப்பினர் வாசுகி உள்பட சுமார் 1000-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

    அதனைத் தொடர்ந்து, பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை அதிகாரிகளிடம் அளித்தனர்.

    இதனை யொட்டி ஒரத்தநாடு முழுவதும் 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

    இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    ×