சாலையில் சுற்றித்திரிந்த 80 பன்றிகள் பிடிக்கப்பட்டன

சாலைகளில் குறுக்கே ஓடும் பன்றிகளால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.இடையூறாக உள்ள பன்றிகளை பிடித்து அப்புறப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை.
போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றித்திருந்த பன்றிகள் பிடிக்கப்பட்டு வாகனத்தில் ஏற்றப்பட்டன.
போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றித்திருந்த பன்றிகள் பிடிக்கப்பட்டு வாகனத்தில் ஏற்றப்பட்டன.
Published on

சீர்காழி:

சீர்காழி நகரில் பல்வேறு பகுதிகளில் பன்றிகள் அதிகளவு சுற்றி திரிந்து வந்தது.

இதனால் பெரும் சுகாதாரசீர்கேடு ஏற்பட்டத்தோடு, சாலைகளில் குறுக்கே ஓடும் பன்றிகளால் போக்குவரத்துபாதிப்பு, விபத்தும் ஏற்பட்டது.

இதைத் தொடர்ந்து இடையூறாக உள்ள பன்றிகளை பிடித்து அப்புறப்படுத்திட பொது மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

பொது மக்களின் கோரிக்கையை ஏற்று கலெக்டரின் அறிவுறுத்தலின்படி, நகர்மன்ற தலைவர் துர்காராஜசேகரன், ஆணையர் ஹேமலதா ஆகியோர் மேற்பார்வையில் சுகாதார ஆய்வாளர் டேவிட் பாஸ்கரராஜ் முன்னிலையில் பரப்புரையாளர்கள் அலெக்ஸ்பாண்டியன் உள்ளிட்டோர் நகரில் சுற்றிதிரிந்த 80 பன்றிகளை பிடித்து அப்புறப்படுத்தினர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com