search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிறப்பு மருத்துவ முகாமில் கால்நடைகளுக்கு சிகிச்சை மற்றும் ஆலோசனைகள் பெறலாம்
    X

    புதூர் கிராமத்தில் சிறப்பு கால்நடை சிகிச்சை மற்றும் விழிப்புணர்வு முகாமை கலெக்டர் விஷ்ணுசந்திரன் தொடங்கிவைத்து, சிறந்த பராமரிப்பாளர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார். அருகில் காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. மற்றும் பலர் உள்ளனர்.

    சிறப்பு மருத்துவ முகாமில் கால்நடைகளுக்கு சிகிச்சை மற்றும் ஆலோசனைகள் பெறலாம்

    • சிறப்பு மருத்துவ முகாமில் கால்நடைகளுக்கு சிகிச்சை மற்றும் ஆலோசனைகள் பெறலாம்.
    • கறவை மாடு மற்றும் கன்றுகள் பராமரித்து வரும் நபர்களுக்கு பாராட்டுச் சான்று மற்றும் பரிசுப் பொருட்களை கலெக்டர் வழங்கினார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியம் வண்ணாங்குண்டு ஊராட்சி புதூர் கிராமத்தில் கால்நடை பராமரிப்புத்துறை மற்றும் பால்வளத்துறை சார்பில் சிறப்பு கால்நடை மருத்துவ முகாம் நடைபெற் றது. ராமநாதபுரம் சட்ட மன்ற உறுப்பினர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் முன்னிலை வகித்தார். கலெக்டர் விஷ்ணு சந்திரன் தலைமை தாங்கி கால்நடை களுக்கான சிறப்பு மருத்துவ முகாமை துவக்கி வைத்தார். பின்னர் அவர் கூறியதா வது:-

    தமிழ்நாடு அரசின் ஆணைக்கிணங்க கால்நடை களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் 3 மாதத்திற்கு ஒரு முறை நடைபெற்று வருகி றது. அதனடிப்படையில் தற்போது நான்காம் கட்ட சிறப்பு மருத்துவ முகாம் நேற்று துவங்கி 21 நாட்கள் நடைபெறுகிறது. இதில் விடு பட்ட கால்நடைகளுக்கு 10.12.2023 அன்று சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

    ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்திற்கும் 20 சிறப்பு மருத்துவ முகாம்கள் வீதம் 120 முகாம்கள் நடைபெறுகி ன்றன. தங்கள் பகுதிகளில் நடைபெறும் கால்நடைகளுக் கான மருத்துவ முகாமில் கால்நடை வளர்ப்போர்கள் தவறாமல் கால்நடைகளை அழைத்து வந்து உரிய பரி சோதனை மற்றும் மருத்துவ ஆலோசனைகளை பெற்றுக் கொள்ள வேண்டும்.

    தற்பொழுது நடைபெறும் மருத்துவ முகாம்களில் கால் நடைகளை தாக்கி வரும் கொடிய வைரஸ்களை கண் டறிந்து உரிய சிகிச்சை வழங்குதல் மற்றும் கறவை மாடுகளின் சினைப்பிடிப்பு தடைபடுதல், இளங்கன்று கள் இறப்பு போன்றவற்றை தடுத்திடும் வகையில் தேவை யான முன்னேற்பாடு சிகிச்சை வழங்குதல் அதிகள வில் பாதிப்பை ஏற்படுத்தும் கால்காணை மற்றும் வாய் காணை நோய்க்கான தடுப் பூசி மருந்துகள் வழங்குதல், அதேபோல் வீடுகளில் வளர்க்கக்கூடிய கோழி, நாய் போன்றவற்றிற்கும் மருத்துவ சிகிச்சை வழங்கப் படுகின்றன. எனவே மாடு, ஆடு வளர்த்து வரும் பொது மக்கள் தங்கள் கால்நடை களை கட்டாயம் மருத்துவ முகாமிற்கு அழைத்து வந்து உரிய மருத்துவ பரிசோதனை செய்து கொண்டு சிறந்த முறையில் பராமரித்து பயன்பெற்றிட வேண்டும் என்றார்.

    பின்னர் சிறப்பாக கறவை மாடு மற்றும் கன்றுகள் பராமரித்து வரும் நபர்களுக்கு பாராட்டுச் சான்று மற்றும் பரிசுப் பொருட்களை கலெக்டர் வழங்கினார்.

    நிகழ்ச்சியில் கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் இளங் கோவன், பால்வளத்துறை துணை பதிவாளர் புஷ்ப லதா, கால்நடை பராமரிப் புத்துறை உதவி இயக்குநர் செங்குட்டுவன், திருப்புல் லணி ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் புல்லாணி, கால்நடை பராமரிப்பு துறை மருத்துவர்கள் ரவிச்சந்திரன், சுந்தரமூர்த்தி, முருகராஜன், ஜெபிரகாஷ், ரஜினி, பால் வளத்துறை முதுநிலை ஆய் வாளர் அண்ணாமலை, கால்நடை பராமரிப்புத்துறை ஆய்வாளர் இளமதி, வண் ணாங்குண்டு ஊராட்சி மன் றத்தலைவர் தியாகராஜன் மற்றும் அரசு அலுவ லர்கள் உட்பட பலர் கலந்து கொண் டனர்.

    Next Story
    ×