தச்சநல்லூர் பகுதியில் சாலை அமைத்து தர வேண்டும்- மேயரிடம் காங்கிரசார் மனு

தச்சநல்லூர் தளவாய்புரம் கெங்கையம்மன் கோவில் தெற்கு தெருவின் முகப்பில் இருந்து வாய்க்கால் பாலம் வரை சாலை மிகவும் மோசமாக உள்ளது. சாலையில் நடுவே உள்ள 2 மின்கம்பத்தை அப்புறப்படுத்த வேண்டும் என மனுவில் கூறப்பட்டிருந்தது.
மேயர் சரவணனிடம் மனு அளித்த காங்கிரசார்.
மேயர் சரவணனிடம் மனு அளித்த காங்கிரசார்.
Published on

நெல்லை:

நெல்லை மாநகராட்சி வாரந்திர மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் இன்று மேயர் சரவணன் தலைமையில் நடைபெற்றது. துணை மேயர் ராஜு முன்னிலை வகித்தார்.

நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் சங்கர பாண்டியன் தலைமையில் தச்சை மண்டல தலைவர் கெங்கராஜ் மற்றும் நிர்வாகிகள் திரண்டு வந்து அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

தச்சநல்லூர் தளவாய்புரம் கெங்கையம்மன் கோவில் தெற்கு தெருவின் முகப்பில் இருந்து வாய்க்கால் பாலம் வரை சாலை மிகவும் மோசமாக உள்ளது. அந்த சாலையை சீரமைத்து தர வேண்டும். அந்த பகுதியில் குறுகிய தெருவாக இருப்பதால் கட்டுமான பணிகள் நடைபெறும் போது வாகனங்கள் உள்ளே வருவதற்கு வசதி இல்லாமல் இருக்கிறது.

மேலும் இந்த தெருவில் 2 மின்கம்பம் சாலையில் நடுவே உள்ளது. அதனை அப்புறப்படுத்த வேண்டும். இது தொடர்பாக கவுன்சிலரிடம் தெரிவி க்கும்போது அவர் ஒருதலை பட்சமாக நடந்து கொள்கிறார். பொதுப்பாதை அமைந்துள்ள இடத்தில் அரசு கட்டிடத்தை கொண்டு வர கவுன்சிலர் முயற்சி செய்கிறார். எனவே அதனை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு கூறியுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com