search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "procession"

    • ராஜபாளையத்தில் கருணாநிதி நினைவுநாள் ஊர்வலம் நடந்தது.
    • ஊர்வலத்தில் தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.

    ராஜபாளையம்

    முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 5-வது நினைவு நாளை முன்னிட்டு ராஜபாளையத்தில் நினைவு நாள் ஊர்வலம் நடந்தது. தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. தலைமையில் முகவூர் காமராஜர் சிலை முதல் செட்டியார்பட்டி, தெற்கு மாரியம்மன் கோவில் வரை தி.மு.க.வினர் அமைதி ஊர்வலம் சென்றனர். அங்கு வைக்கப்பட்டிருந்த கருணாநிதியின் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

    இந்த நிகழ்ச்சியில் மாவட்ட துணை செய லாளர் ராசாஅருண்மொழி, ஒன்றிய சேர்மன் சிங்கராஜ், நகர சேர்மன் பவித்ரா ஷியாம், நகர செயலாளர்கள் ராமமூர்த்தி, மணிகண்டராஜா, பொதுக்குழு உறுப்பினர் கனகராஜ், பேரூராட்சி சேர்மன் ஜெயமுருகன், பாலசுப்ரமணியன், மாவட்ட மீனவரணி அமைப்பாளர் நவமணி, மாவட்ட மகளிரணி அமைப்பாளர் சுமதி, மாவட்ட மாணவரணி அமைப்பாளர் வேல் முருகன், பேரூர் கழக செயலாளர்கள் இளங்கோவன், சிங்கம்புலி அண்ணாவி, மாவட்ட கவுன்சிலர் முத்துச்செல்வி ஒன்றிய, நகர, பேரூர், துணை சேர்மன்கள் துரை கற்பகராஜ், கல்பனா, விநாயகமூர்த்தி காளிஸ்வரி மாரிச்செல்வம், கவுன்சிலர்கள் மற்றும் மாவட்ட ஒன்றிய, நகர, அணிகளின் அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள், வார்டு, கிளை செய லாளர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் உள்பட ஆயிரக்கணக் கானோர் கலந்து கொண்டனர்.

    • கருணாநிதி படத்துக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
    • கருப்பு பேட்ஜ் அணிந்து மூவலூரில் இருந்து சித்தர்காடு அண்ணா சிலை வரை மவுன ஊர்வலம் சென்றனர்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை திமுக மேற்கு ஒன்றிய செயலாளர் மூவலூர் மூர்த்தி தலைமை யில் மூவலூர் கடைத்தெருவில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநி தியின் 5-ம் ஆண்டு நினைவு அஞ்சலி முன்னிட்டு அவருடைய படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    இதனைத் தொடர்ந்து கருப்பு பேஜ் அணிந்து அமைதி பேரணையாக மூவலூரில் இருந்து புறப்பட்டு சித்தர்காடு அண்ணா சிலை வரை மவுன ஊர்வலம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் முன்னால் எம்.எல்.ஏ. பாலஅருட்ச்செல்வன், வழக்கறிஞ்சர் அணி சேசோன், ஒன்றிய அவைத் தலைவர் வழக்கறிஞர் பாலு, ஒன்றிய குழு தலைவர் காமாட்சி மூர்த்தி, ஒன்றிய கவுன்சிலர்கள் மாப்படுகை சிவக்குமார், வில்லியநல்லூர் காமராஜ், நீடூர் ஏ.கே .எஸ். பதர்நிஷா நஜிம், கங்கனபுத்தூர் மும்தாஜ் இப்ராஹிம்,அருள்மொழி தேவன் ஊராட்சி மன்ற தலைவர் கோமதி தமிழரசன், சித்தர்காடு ஊராட்சி மன்ற தலைவர் ரத்தினவேல், உள்ளீட்ட ஏராளமான திமுக வினர் கலந்து கொண்டனர்.

    • 34-ம் ஆண்டு கஞ்சிக்கலய ஊர்வலம் நடந்தது.
    • கஞ்சிக்கலய ஊர்வலத்தை அமைச்சர் பெரியகருப்பன் தொடங்கி வைத்தார்.

    தேவகோட்டை

    தேவகோட்டை நகரில் மேல் மருவத்தூர் ஆதிபரா சக்தி சித்தர் சக்தி பீடத்தின் 34-ம் ஆண்டு ஆடி பெரு விழா நடைபெற்றது. முன்ன தாக கொடி யேற்றத்துடன் விழா தொடங்கியது. 108 பெண்கள் கலந்து அக்னி சட்டி நடைபெற்றது. இன்று காலை கருதாவூரணியில் மலைக்கோவில் அருகில் இருந்து 5,004 பெண்கள் கலந்து கொண்ட கஞ்சிக் கலையம் எடுக்கும் நிகழ்ச்சி யை அமைச்சர் பெரியகருப் பன் தொடங்கி வைத்தார்.

    உடன் நகர் மன்ற உறுப்பி னர் பாலமுருகன் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்த னர். இந்த கஞ்சிக்கலையம் சிவன் கோவில், பேருந்து நிலையம், திருப்பத்தூர் ரோடு வழியாக கோவில் சென்றடைந்தது. அதனைத் தொடர்ந்து யூனியன் அலுவ லகம் அருகே உள்ள ஜெயம கொண்ட விநாயகர் கோவி லில் இருந்து மகளிர் பால் குடம் எடுத்து வந்தனர்.

    தேவகோட்டை ஆதிபரா சக்தி அம்மன் கோவிலில் சிறப்பு அபிஷேகம் அலங்காரம் தீபாராதனை நடை பெற்று அனைவருக்கும் பிரசாதமும் அன்னதானம் வழங்கப்பட்டது.

    • வீரமாகாளியம்மன் கோவில் முளைப்பாரி விழா நடந்தது.
    • பெண்கள் முளைப்பாரிகளை தலையில் சுமந்து ஊர்வலமாக வந்து கிராமத்திலுள்ள ஊரணியில் கரைத்தனர்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே மாரநாடு கிராமத்தில் உள்ள வீரமாகாளியம்மன் கோவிலில் முளைப்பாரி விழா நடந்தது. இதையொட்டி ஏராளமானோர் காப்புக்கட்டி ஒரு வாரமாக விரதம் இருந்து வந்தனர். கிராமத்தில் உள்ள அனைவரது வீடுகளிலும் முளைப்பாரி வளர்க்கப்பட்டது. விழா நாட்களில் தினமும் முளைப்பாரிகளுக்கு தீபாராதனை காட்டப்பட்டு பெண்கள் கும்மிப்பாடல்களை பாடினர்.

    முளைப்பாரி கரைப்பு நாளன்று வீடுகளில் இருந்து முளைப்பாரிகள் முளைக்கொட்டு திண்ணைக்கு கொண்டு வரப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்டது. முன்னதாக வீரமாகாளிக்கும் பூஜைகள் நடந்தது. அதன்பின் பெண்கள் முளைப்பாரிகளை தலையில் சுமந்து ஊர்வலமாக வந்து கிராமத்திலுள்ள ஊரணியில் கரைத்தனர்.

    • அரியலூரில் படை பத்து மாரியம்மன் கோயில் பால்குட திருவிழா நடைபெற்றது
    • ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பக்தி பரவசம்

    அரியலூர், 

    அரியலூர் மேலத்தெருவில் உள்ள படைபத்து மாரியம்மன் கோயிலில், ஆடிபால்குட விழா நடைபெற்றது. விழாவையொட்டி, அரியலூர் பேருந்து நிலையம்அருகேயுள்ள செட்டிஏரி விநாயகர் கோயிலிலிருந்து பால்குடம், அக்னி சட்டிஎடுத்த வந்த பக்தர்கள், முக்கிய வீதிகளின் வழியாக வலம் வந்து கோயிலைஅடைந்தனர். அங்கு பக்தர்கள் கொண்டு வந்த பாலைக் கொண்டு அம்மனுக்குஅபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து, தீபாராதனை காண்பிக்கப்பட்டுபக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதில், நூற்றுக்கணக்கான பக்தர்கள்பங்கேற்று பால்குடம் எடுத்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.

    • சிம்மக்கல் நாடார் உறவின்முறை சார்பில் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுகிறது.
    • பொதுமக்கள் திரண்டு வருமாறு சிம்மக்கல் நாடார் உறவின்முறை சங்கத்தினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.

    மதுரை

    கல்விக்கண் திறந்த கர்ம வீரர் காமராஜரின் 121-வது பிறந்த நாள் விழா மதுரை சிம்மக்கல் நாடார் உறவின் முறை சார்பில் வருகிற 15ந் தேதி காமராஜர் பிறந்தநாள் விழா விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது. அதன்படி அன்று காலை மதுரை காமராஜர் சாலை விளக்குத்தூணில் உள்ள காமராஜர் சிலைக்கு காலை 10 மணிக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுகிறது.

    முன்னதாக சிம்மக்கல் தமிழ் சங்கம் ரோட்டில் இருந்து நாடார் உறவின் முறை நிர்வாகிகள் பெண்கள், பொதுமக்கள் என நூற்றுக்கணக்கானோர் முளைப்பாரி, பால்குடம் எடுத்து ஊர்வலமாக வருகின்றனர்.

    இந்த நிகழ்ச்சிக்கு சிம்மக்கல் நாடார் உறவின்முறை தலைவர் திலகர், பொருளாளர் வள்ளிராஜன் முன்னிலை வகிக்கின்றனர். துணை செயலாளர் செல்வராஜன், துணை தலைவர்கள் தங்கையா, செல்வ மோகன் மற்றும் ஓம்.சேர்ம பிரபு, ஜோசப் வாசுதேவன், பெருந்தலைவர் மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் ஆத்திகுளம் கார்த்திக், ச.ம.க. கிழக்கு மாவட்ட செயலாளர் புறா மோகன், ராஜசேகர்.

    மதன், பாண்டியன், பசுமலை பள்ளி தலைமையாசிரியர் ஜான் கிறிஸ்டோபர், காமராஜ், பாலமேடு கார்த்திக், தாழை கண்ணன் ஆகியோர் வரவேற்கி றார்கள்.

    சிம்மக்கல் நாடார் உறவின்முறை செயலாளர் ஆர்.வி.டி.ஆர்.வினோத் பிரகாஷ் தலைமை தாங்குகிறார்.

    பெனிட் கரன், பி.டி.ஆர்.குழும சேர்மன் தானியல் தங்கராஜ், அதிமுக மாவட்ட துணை செயலாளர் ஜெ.ராஜா, அப்பாசுவாமி, ராணி, வஞ்சிகோ, டாக்டர் அருண் மார்டின், அகஸ்டின், பாலமுருகன், பால்பாண்டி, விஞ்ஞானி சிவசுப்பி ரமணியம், செல்வராஜ், ராஜவேல், பெரியசாமி, கந்தசாமி, மணிகண்டன், வையாபுரி, மாயாண்டி, வெற்றி ராஜன் ஆகியோர் நிகழ்ச்சியை தொடங்கி வைக்கிறார்கள்.

    காமராஜர் சிலைக்கு பால், பன்னீர் அபிஷேகத்தை முன்னாள் நாடார் மகாஜன சங்க தலைவர் முத்துச்சாமி, நாடார் முன்னேற்ற சங்க செயலாளர் பெரிஷ் மகேந்திரவேல், தெட்சண மாற நாடார் சங்க செயலாளர் ராஜகுமார் ஆகியோர் செய்கிறார்கள். துணை செயலாளர் மாரிக்கனி நன்றி கூறுகிறார். இதில் சங்க செயற்குழு உறுப்பினர்கள் அசோக் குமார், மனோகர பாண்டி யன், சண்முகக்கனி, காமாட்சி பாண்டியன், நாகராஜன், ஜெயக்குமார், பாண்டி, அண்ணாதுரை, பிரான்சிஸ், தனபாண்டி, ரமேஷ், பாஸ்கர், மீனாட்சி சுந்தரம், திருச்செந்தில், சபரி செல்வம், பாலகிருஷ்ணன், பாஸ்கர் உள்பட ஆயிரக் கணக்கானோர் கலந்து கொள்கின்றனர்.

    காமராஜர் பிறந்த நாள் விழாவுக்கு நாடார் உறவின் முறை நிர்வாகிகள், பொதுமக்கள் திரண்டு வருமாறு சிம்மக்கல் நாடார் உறவின்முறை சங்கத்தினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.

    • ஊர்வலத்தை பங்குதந்தை அலாய்சியஸ் ஜெபம் செய்து தொடங்கி வைத்தார்.
    • சிறுவர்- சிறுமியர், பெண்கள் உள்பட திரளானோர் ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.

    ஆறுமுகநேரி:

    மணிப்பூர் மாநிலத்தில் அமைதி நிலவ வேண்டி ஆறுமுகநேரியில் கிறிஸ்தவர்கள் இன்று ஊர்வலம் நடத்தினர். ஆறுமுகநேரி மடத்துவிளை புனித சவேரியார் ஆலயத்தின் சார்பில் நடந்த இந்த ஊர்வலத்தை பங்குதந்தை அலாய்சியஸ் ஜெபம் செய்து தொடங்கி வைத்தார். ஊர் தலைவர் செல்வன் முன்னிலை வகித்தார். சிறுவர்- சிறுமியர், பெண்கள் உள்பட திரளானோர் ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். கத்தோலிக்க கோவில் தெரு மேட்டுவிளை, மேல தெரு உள்பட முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலம் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகள் மடத்துவிளை பங்குமக்கள் சார்பில் செய்யப்பட்டிருந்தது.

    • சேவகபெருமாள் கோவில் பிரமோற்சவ விழா விநாயகர் ஊர்வலத்துடன் தொடங்கியது.
    • விழா ஏற்பாடுகளை சிங்கம்புணரி நாட்டார்கள் செய்திருந்தனர்.

    சிங்கம்புணரி

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி சேவகப் பெருமாள் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். வருடந்தோறும் நடைபெறும் பிரமோற்சவ விழா இந்த வருடம் ஆனி மாதத்தில் நடைபெற கிராமத்தார்க ளால் முடிவு செய்யப்பட்டது.

    இதைத்தொடர்ந்து பிரமோற்சவ விழாவின் துவக்க விழாவான நேற்று இரவு விநாயகர் சந்துவீரன் கூடம் எழுந்தருளல் நிகழ்வு நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சியில் 1000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு விநாயகரை சந்திவீரன் கூடத்திற்கு ஊர்வலமாக எடுத்துச் சென்றனர்.

    மல்லிகை மலர்களால் அலங்கரிப்பட்ட சப்பரத்தில் விநாயகர் எழுந்தருளினார். பாரம்பரிய வழக்கப்படி மாடுகள் பூட்டப்பட்ட ரதத்தில் ஊர்வலம் சந்தி வீரன் கூடம் நோக்கி புறப்பட்டது. நள்ளிரவு நேரத்திலும் வழி நெடுகிலும் பக்தர்கள் மாக்கோலமிட்டு விநாயகரை வரவேற்றனர். வீடுகள் தோறும் அர்ச்சனை செய்வதற்கு நள்ளிரவில் பொதுமக்கள் விநாயகரை எதிர்பார்த்து காத்திருந்தனர்.

    வருகிற 25-ந்தேதி பிரமோற்சவ விழா காப்புகட்டுதலுடன் தொடங்கி அடுத்த மாதம் (ஜூலை) 3-ந் தேதி 9-ம் திருவிழா திருத்தேரோட்ட மும், 4-ந் தேதி லட்சம் மலர்களால் அலங்க ரிக்கப்பட்ட பூப்பல்லுக்கும் நடைபெற உள்ளது.

    மேற்கண்ட சிவகங்கை தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர். விழா ஏற்பாடுகளை சிங்கம்புணரி நாட்டார்கள் செய்திருந்தனர்.

    • குழுமியானந்த சுவாமி கோவிலுக்கு காவிரியில் இருந்து புனித நீர் ஊர்வலம் நடைபெற்றது
    • 123-வது குருபூஜை விழாவையொட்டி நடைபெற்றது

    திருச்சி, 

    திருச்சி வரகனேரியில் பிரசித்தி பெற்ற பிரம்மரிஷி ஸ்ரீகுழுமியானந்த சுவாமிகள் கோவில் அமைந்துள்ளது. ஆண்டுதோறும் இந்த கோவிலில் குருபூஜை விழா வெகு விமரிசையாக நடை–பெறுவது வழக்கம். அந்த வகையில் தற்போது 123-வது குருபூஜை விழா இன்று (8-ந்தேதி, வியாழக்கிழமை) வெகு விமரிசையாக நடை–பெற்றது.விழாவையொட்டி இன்று காலை 6 மணிக்கு காவிரியில் இருந்து திருமஞ்ச–னம் கொண்டு வருதல் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் குடங்களில் புனிதநீர் எடுத்து ஊர்வல–மாக வநதனர்.9 மணிக்கு ஸ்ரீ குழுமி–யானந்த சுவாமிகள் வார வழிபாட்டு குழுவினர் நிகழ்த்திய பன்னிரு திரு–முறை, திருப்புகழ், திரு–அருட்பா பாராயணமும், 11 மணிக்கு அபிஷேகம், மகா தீபாராதனை, 12 மணிய–ளவில் மகா அன்னதானமும் நடைபெற்றது. இதில் திர–ளான பக்தர்கள் கலந்து–கொண்டனர்.நாளை (9-ந்தேதி, வெள் ளிக்கிழமை) காலை 9 மணிக்கு சுந்தரர் தேவாரம் முற்றோதுதல், மதியம் 12 மணிக்கு மகா அன்னதானம், 10-ந்தேதி காலை 9 மணிக்கு திருவாசகம் முற்றோதுதல், 12 மணிக்கு மகா அன்ன–தானம் நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடு–களை கோவில் நிர்வாக கமிட்டியாளர்கள், குரு பக் தர்கள் சிறப்பாக செய்திருந் தனர்.

    • காட்டூர் பகுதியில் பிரசித்தி பெற்ற பாலதண்டாயுதபாணி சாமி கோவில் அமைந்துள்ளது.
    • இக்கோவிலின், கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு இன்று காலை தீர்த்தக் குடம் ஊர்வலம் நடைபெற்றது.

    எடப்பாடி:

    சேலம் மாவட்டம் எடப்பாடி நகராட்சி எல்லைக்கு உட்பட்ட ஆலச்சம்பாளையம், காட்டூர் பகுதியில் பிரசித்தி பெற்ற பாலதண்டாயுதபாணி சாமி கோவில் அமைந்துள்ளது. எடப்பாடி சுற்று வட்டார பகுதி மக்களின் முக்கிய வழிபாட்டுத் தலமான இக்கோவிலின், கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு இன்று காலை தீர்த்தக் குடம் ஊர்வலம் நடைபெற்றது.

    முன்னதாக கல்வடங்கம் பகுதியில் உள்ள காவிரி ஆற்றில் புனித நீராடிய திரளான முருக பக்தர்கள், கும்பாபிஷேக விழாவிற்காக குடங்களில் புனித நீர் எடுத்து ஊர்வலமாக வந்தனர்.

    நகரின் பல்வேறு முக்கிய வீதிகள் வழியாக மேள தாளம் முழங்க நடைபெற்ற தீர்த்தக்குட ஊர்வலம், பால தண்டாயுதபாணி சாமி கோவில் வளாகத்தில் நிறைவுற்றது. தொடர்ந்து புனித நீர் அடங்கிய தீர்த்த குடங்களுக்கு யாக பூஜைகள் நடைபெற்று வரும் நிலையில், நாளை மறுநாள் காலை, இக்கோவிலின் கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது.

    இதற்கான முன்னேற்பாடுகளை பால தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் விழா குழுவினர் செய்து வருகின்றனர்.

    • பெரம்பலூரில் உலக சுற்றுச்சூழல் தின விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது
    • ஏராளமான மாணவ, மாணவிகள் பங்கேற்பு

    பெரம்பலூர்,

    பெரம்பலூரில் உள்ள கிறிஸ்டியன் கல்விக்குழுமத்தினர், நகராட்சி நிர்வாகத்துடன் இணைந்து உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பிளாஸ்டிக் இல்லாத பெரம்பலூரை உருவாக்குவது, பிளாஸ்டிக் பைகள்-பிளாஸ்டிக் பொருட்களை மறுசுழற்சி செய்வது குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் மற்றும் கையெழுத்து பிரச்சார இயக்கத்தை நேற்று நடத்தினர். நிகழ்ச்சிக்கு கிறிஸ்டியன் கல்விக்குழுமத்தின் தலைவர் டாக்டர் கிறிஸ்டோபர் தலைமை தாங்கி, ஊர்வலத்தை தொடங்கி வைத்து பேசுகையில், பிளாஸ்டிக் பயன்பாட்டை வெகுவாக குறைத்து அடுத்த தலைமுறையினருக்கு தூய்மையான சுற்றுச்சூழல் அமையும் வகையிலான புதிய சமுதாயத்தை உருவாக்க வேண்டியது நமது தலையாய கடமை என்று தெரிவித்தார்.இந்தநிகழ்ச்சியில் கிறிஸ்டியன் கல்விக்குழும செயலாளர் மித்ரா முன்னிலை வகித்தார். இதில் பெரம்பலூர் நகராட்சி ஆணையர் ராதா, நகர்மன்ற தலைவர் அம்பிகா ராஜேந்திரன், இந்திய செஞ்சிலுவை சங்க மாவட்ட பொறுப்பாளர் ஜெயராமன் மற்றும் நகர்மன்ற கவுன்சிலர்கள், கல்லூரி விரிவுரையாளர்கள், ஆசிரியர்கள், செவிலியர், கல்வியியல் பயிலும் மாணவிகள் கலந்து கொண்டனர். சிறப்பு விருந்தினர்களுக்கு மூலிகை தாவரம்-மரக்கன்றுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டனர். விழிப்புணர்வு ஊர்வலம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து தொடங்கி, பாலக்கரை ரவுண்டானா வரை நடந்தது.

    தாரமங்கலத்தில் நகராட்சி தூய்மை பணி குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
    தாரமங்கலம்:

    தாரமங்கலம் நகராட்சியில் நகரத்தூய்மை பணி குறித்த விழிப்புணர்வு கூட்டமும், அதனை தொடர்ந்து விழிப்புணர்வு ஊர்வலமும் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு நகராட்சி தலைவர் குப்பு என்கிற குணசேகரன் தலைமை தாங்கினார். ஆணையாளர் மங்கையர்கரசன் முன்னிலை வகித்தார்.

    கூட்டத்தில் நகரை எவ்வாறு தூய்மையாக வைத்துக்கொள்வது,  தூய்மை பணிக்காக நேரம் ஒதுக்குவது, பொது இடங்களில் குப்பை கொட்டாமல் இருப்பது, குப்பையை வீட்டிலேயே தரம் பிரித்து கொடுப்பது போன்ற நடவடிக்கைகளை கடைபிடிக்க வேண்டும் என்று ஆலோசனை வழங்கப்பட்டது. 

    பின்னர் பதாகை ஏந்தி விழிப்புணர் ஊர்வலம் நடத்தப்பட்டு பேரூந்துநிலையம் மற்றும் அதனை சுற்றிய பொது இடங்களை தூய்மை பணியாளர்கள் சுத்தம் செய்தனர் .இந்தநிகழ்ச்சியில் நகரமன்ற உறுப்பினர்கள் நகராட்சி பணியாளர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
    ×