என் மலர்
உள்ளூர் செய்திகள்

சேவகபெருமாள் கோவில் பிரமோற்சவ விழா தொடக்கம்
- சேவகபெருமாள் கோவில் பிரமோற்சவ விழா விநாயகர் ஊர்வலத்துடன் தொடங்கியது.
- விழா ஏற்பாடுகளை சிங்கம்புணரி நாட்டார்கள் செய்திருந்தனர்.
சிங்கம்புணரி
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி சேவகப் பெருமாள் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். வருடந்தோறும் நடைபெறும் பிரமோற்சவ விழா இந்த வருடம் ஆனி மாதத்தில் நடைபெற கிராமத்தார்க ளால் முடிவு செய்யப்பட்டது.
இதைத்தொடர்ந்து பிரமோற்சவ விழாவின் துவக்க விழாவான நேற்று இரவு விநாயகர் சந்துவீரன் கூடம் எழுந்தருளல் நிகழ்வு நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் 1000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு விநாயகரை சந்திவீரன் கூடத்திற்கு ஊர்வலமாக எடுத்துச் சென்றனர்.
மல்லிகை மலர்களால் அலங்கரிப்பட்ட சப்பரத்தில் விநாயகர் எழுந்தருளினார். பாரம்பரிய வழக்கப்படி மாடுகள் பூட்டப்பட்ட ரதத்தில் ஊர்வலம் சந்தி வீரன் கூடம் நோக்கி புறப்பட்டது. நள்ளிரவு நேரத்திலும் வழி நெடுகிலும் பக்தர்கள் மாக்கோலமிட்டு விநாயகரை வரவேற்றனர். வீடுகள் தோறும் அர்ச்சனை செய்வதற்கு நள்ளிரவில் பொதுமக்கள் விநாயகரை எதிர்பார்த்து காத்திருந்தனர்.
வருகிற 25-ந்தேதி பிரமோற்சவ விழா காப்புகட்டுதலுடன் தொடங்கி அடுத்த மாதம் (ஜூலை) 3-ந் தேதி 9-ம் திருவிழா திருத்தேரோட்ட மும், 4-ந் தேதி லட்சம் மலர்களால் அலங்க ரிக்கப்பட்ட பூப்பல்லுக்கும் நடைபெற உள்ளது.
மேற்கண்ட சிவகங்கை தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர். விழா ஏற்பாடுகளை சிங்கம்புணரி நாட்டார்கள் செய்திருந்தனர்.






