search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "President Ramnath kovind"

    வியட்நாமில் இருந்து தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்ட ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், கஜா புயல் பாதிப்பு குறித்து கேட்டறிந்தார். #GajaCyclone #RamnathGovind #EdapapdiPalaniswami
    சென்னை:

    ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வியட்நாம்  மற்றும் ஆஸ்திரேலியா நாடுகளில் ஆறு நாட்கள் அரசுமுறை சுற்றுப்பயணம் மேற்கொண்டுளார். அவருடன் மத்திய அரசின் உயரதிகாரிகள் குழுவும் சென்றுள்ளது.

    இன்று வியட்நாம் நாட்டில் உள்ள கடலோர நகரமான டா நாங் நகரில் அவரது விமானம் தரையிறங்கியது. அவருக்கு சிவப்பு கம்பளம் விரித்து சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.



    இந்நிலையில் வியட்நாமில் இருந்து தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்ட ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், கஜா புயல் பாதிப்பு குறித்து கேட்டறிந்தார்.

    முன்னதாக கஜா புயல் பாதிப்பு குறித்து பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோரும் முதலமைச்சரிடம் கேட்டறிந்தனர். #GajaCyclone #RamnathGovind #EdapapdiPalaniswami
    ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் முன்னிலையில் இந்தியா - தஜிகிஸ்தான் இடையே இன்று புதிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையொப்பமானது. #Tajikistan #RamNathKovind
    துஷான்பே:

    ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மூன்று நாள் அரசுமுறை பயணமாக தஜிகிஸ்தான் நாட்டுக்கு சென்றுள்ளார். துஷான்பே நகர விமான நிலையத்தில் அந்நாட்டு துணை பிரதமர் தலைமையில் நேற்று சிகப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.

    தஜிகிஸ்தான் அதிபர் எமோமாலி ரஹ்மோன் - ராம்நாத் கோவிந்த் ஆகியோர் இன்று சந்தித்து இருநாடுகளுக்கு இடையிலான நட்புறவுகளை பலப்படுத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்தினர்.


    இந்த ஆலோசனைக்கு பின்னர் இந்தியா - தஜிகிஸ்தான் இடையே புதிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையொப்பமானது.

    அரசியல் உறவு, ஆராய்ச்சி, வேளாண்மை, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, பாரம்பரிய மருத்துவம், விண்வெளி தொழில்நுட்பம், இளைஞர் நலத்துறை மற்றும் பேரிடர் மேலாண்மை ஆகிய துறைகளில் புதிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இன்று கையொப்பமாகின. #RamNathKovind #Tajikistan #EmomaliRahmon #TajikistanIndiaMOU
    கேரளாவின் வெள்ள பாதிப்பால் பலியானவர்களுக்கு ரஷிய அதிபர் புடின் இரங்கல் தெரிவித்து, ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார். #KeralaFloods #KeralaRain #KeralaReliefFund #ViladimirPutin
    புதுடெல்லி :

    கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை கொட்டி தீர்த்து வருகிறது. இந்த மழையால் பல்வேறு மாவட்டங்கள் நீரில் மூழ்கி, சூனியமாக காட்சியளிக்கிறது.  மழை மற்றும் நிலச்சரிவு போன்ற சம்பவங்களால் கேரளாவில் உயிரிழக்கும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    கடந்த நூறாண்டுகளில் இல்லாத மிகப்பெரும் இயற்கை பேரழிவை கேரளா சந்தித்துள்ளது. மழை பாதிப்பால் இதுவரை 373 பேர் உயிரிழந்துள்ளனர்.

    இயற்கை சீற்றத்தால் ஏற்பட்டுள்ள பெரும் பேரழிவில் இருந்து கேரளாவை  மீட்டெடுக்க பல்வேறு மாநிலங்களும் கேரள மாநிலத்துக்கு உதவிக்கரம் நீட்டி வருகின்றன.

    இந்நிலையில், கேரளாவில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்பு சேதங்களில் பங்கு கொள்வதாக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் மோடிக்கு ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் கடிதம் எழுதியுள்ளார்.

    அந்த கடிதத்தில், தோழமையுள்ள ரஷ்யா இந்திய மக்களின் துக்கத்தில் பங்குகொள்கிறது. இந்த இயற்கைப் பேரிடரில் காயம் அடைந்தவர்களும் விரைவில் நலமடைவார்கள் என நம்புகிறோம் என்று எழுதியுள்ளார். 

    இதுதொடர்பாக, இந்தியாவுக்கான ரஷிய தூதர் நிகோலய் குடசேவ் வெளியிட்டுள்ள அறிக்கையில், கேரளா மாநிலத்தின் வெள்ளப் பெருக்கால் ஏற்பட்ட பெருத்த சேதத்துக்கு பலர் பலியாகியுள்ளனர். கேரளா துயரத்தில் நாங்களும் பங்கு கொள்கிறோம் என தெரிவித்துள்ளார். #KeralaFloods #KeralaRain #KeralaReliefFund #ViladimirPutin
    டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் மரணமடைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். #AtalBihariVajpayee #AIIMS #RIPVajpayee #RamnathKovind #PMModi
    புதுடெல்லி:

    முன்னாள் பிரதமர் வாஜ்பாய் (93) உடல்நலக்குறைவு காரணமாக கடந்த ஜூன் மாதம் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலையை அவ்வப்போது, பிரதமர் மோடி, மூத்த மந்திரிகள் நேரில் சென்று விசாரித்து வந்தனர்.

    இதற்கிடையே, இன்று காலை முதல் வாஜ்பாய் உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது. ஆனால், சிகிச்சை பலனின்றி இன்று மாலை 5.05 மணிக்கு அவர் மரணமடைந்ததாக எய்ம்ஸ் மருத்துவமனை தெரிவித்தது.

    இந்நிலையில், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் மரணமடைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.



    இதுதொடர்பாக ராம்நாத் கோவிந்த் டுவிட்டரில் கூறுகையில், முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மரணமடைந்தது அறிந்து மிகவும் வருத்தமடைகிறேன் என இரங்கல் தெரிவித்துள்ளார்.

    இதேபோல், பிரதமர் மோடி கூறுகையில், வாஜ்பாய் அளித்த உத்வேகம், வழிகாட்டல் ஒவ்வொரு இந்தியருக்கும், பாஜகவினருக்கும் இருக்கும் என தெரிவித்துள்ளார். #AtalBihariVajpayee #AIIMS #RIPVajpayee #RamnathKovind #PMModi
    கேரள சட்டசபையின் வைரவிழா ஆண்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், அம்மாநிலத்தில் நடந்து வரும் அரசியல் படுகொலைகள் குறித்து கவலை தெரிவித்துள்ளார். #Kerala #PresidentKovind
    திருவனந்தபுரம்:

    கேரள சட்டசபையின் வைரவிழா நிகழ்ச்சியை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று தொடங்கி வைத்தார். ‘ஜனநாயக திருவிழா’ என்ற பெயரில் நடக்கும் இந்த நிகழ்ச்சி சில நாட்களுக்கு நடக்க உள்ளது. தொடக்க நிகழ்ச்சியில் உரையாற்றிய ஜனாதிபதி, அம்மாநிலத்தில் நடக்கும் அரசியல் கொலைகள் குறித்து வேதனை தெரிவித்தார்.

    ‘விவாதங்கள், பரஸ்பர மரியாதை, மற்றவர்களின் கருத்துக்கு மதிப்பளிக்கும் குணம் ஆகியவை கேரள சமூகத்தின் அடையாளம் ஆகும். ஆயினும் கூட, கேரளாவின் சில பகுதிகளில் நடக்கும் அரசியல் வன்முறை முரண்பாடாக உள்ளது. இந்த அரசியல் வன்முறைகள் துரதிர்ஷ்டவசமானது. நம்முடைய அரசியல் சாசனத்தில் வன்முறைகளுக்கு இடமில்லை’ என அவர் தனது உரையில் குறிப்பிட்டார்.

    இந்த நிகழ்ச்சியில், மாநில ஆளுநர் சதாசிவம், முதல்வர் பினராயி விஜயன், எதிர்கட்சி தலைவர் ரமேஷ் சென்னிதாலா ஆகியோர் பங்கேற்று பேசினர். 
    கேரளா வந்துள்ள ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை கொல்ல போவதாக மிரட்டல் விடுத்த கோவில் பூசாரி கைது செய்யப்பட்டார்.
    கொழிஞ்சாம்பாறை:

    கேரளாவுக்கு 3 நாள் பயணமாக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நேற்று சென்றார். அவரை கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் வரவேற்றார். கேரளாவில் பல்வேறு அரசு விழாவில் ஜனாதிபதி பேசி வருகிறார்.

    நாளை திருச்சூரில் நடக்கும் விழாவில் உரையாற்ற உள்ளார். இந்நிலையில் நேற்று இரவு திருச்சூர் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு ஒரு மர்ம போன் வந்தது. அதில் பேசிய நபர் திருச்சூர் வரும் ஜனாதிபதி கொலை செய்யப்படுவார் என்று கூறி இணைப்பை துண்டித்து விட்டார். உஷாரான உயர் அதிகாரிகள் கொலை மிரட்டல் விடுத்த நபரை தேடினர். குன்னங்குளம் உதவி கமி‌ஷனர் சைபர் செல் போலீசார் உதவியுடன் செல்போன் எண்ணை வைத்து தேடினர்.

    தீவிர தேடுதல் வேட்டையில் மிரட்டல் விடுத்தது திருச்சூர் விரைக்கல்லில் உள்ள பகவதியம்மன் கோவில் பூசாரி ஜெயராமன் என்பது தெரியவந்தது. இதனையடுத்து அவரை கைது செய்த போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நலம் குறித்து அறிவதற்காக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நாளை மறுதினம் சென்னை வருகிறார். #Karunanidhi #DMK #RamnathKovind
    சென்னை:

    திமுக தலைவர் கருணாநிதி உடல் நலக்குறைவு காரணமாக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் கடந்த 27-ம் தேதி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். 

    தொடக்கத்தில் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்ட நிலையில், மருத்துவர்களின் தொடர் சிகிச்சைக்கு பிறகு கருணாநிதியின் உடல்நிலை நன்றாக தேறி வருகிறது என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். மருத்துவ சிகிச்சைகளுக்கு அவர் முழு ஒத்துழைப்பு அளித்து வருவதாகவும், வயது முதிர்வு, உடல்நிலை காரணமாக அவர் மேலும் சில நாட்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற வேண்டும் என்றும் மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது.



    இதற்கிடையே, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கருணாநிதியின் உடல் நிலை தொடர்பாக, பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், தமிழக சினிமா பிரபலங்கள், பல்வேறு மாநில முதல் மந்திரிகள் உள்பட பலரும் திமுக செயல் தலைவர் ஸ்டாலினை நேரில் சந்தித்து வருகின்றனர்.

    இந்நிலையில், திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நலம் குறித்து அறிவதற்காக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நாளை மறுதினம் (ஆகஸ்ட் 5-ம் தேதி)  சென்னை வருகிறார்என தகவல்கள் வெளியாகியுள்ளன. #Karunanidhi #DMK #RamnathKovind
    சிறந்த பாராளுமன்ற எம்.பி.க்களுக்கான விருதுகளை தலைநகர் டெல்லியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று வழங்கினார். #OutstandingParliamentariansAward #RamnathKovind
    புதுடெல்லி:

    சிறந்த முறையில் பணியாற்றியதற்காக எம்.பி.க்களுக்கு விருது வழங்கும் விழா பாராளுமன்றத்தின் மத்திய ஹாலில் இன்று நடைபெற்றது.

    இந்த விழாவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கலந்து கொண்டார். அவர் சிறந்த எம்.பி.க்களுக்கான விருதை வழங்கினார். இந்த விருதுக்கு தேர்வானவர்களின் விவரம் வருமாறு:



    நஜ்மா ஹெப்துல்லாவுக்கு 2013-ம் ஆண்டுக்கான விருதும்,  ஹுக்குன் டியோ நரேன் யாதவுக்கு 2014ம் ஆண்டுக்கான விருதும், குலாம் நபி ஆசாத்துக்கு 2015-ம் ஆண்டுக்கான விருதும், திர்னேஷ் திரிவேதிக்கு 2016-ம் ஆண்டுக்கான விருதும், பார்த்ருஹரி மஹ்தாப்புக்கு 2017ம் ஆண்டுக்கான விருதும் வழங்கப்பட்டது. 

    இந்த விழாவில் மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி உள்பட பலர் கலந்து கொண்டனர். #OutstandingParliamentariansAward #RamnathKovind
    டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், வங்கிகளில் கடன் பெற்று தலைமறைவாக வாழ்வது நாட்டுக்கு செய்யும் துரோகம் என தெரிவித்துள்ளார். #ICAI #RamnathKovind
    புதுடெல்லி:

    இந்திய பட்டய கணக்காளர்கள் அமைப்பான ஐ.சி.ஏ.ஐ.யின் 70-வது ஆண்டு விழா நிகழ்ச்சி டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது: 

    சில தொழிலதிபர்கள் வங்கிகளில் பெரிய அளவில் கடன் வாங்குகின்றனர். ஆனால் அவற்றை திருப்பிச் செலுத்தாமல் ஏமாற்றி வருகின்றனர். அவ்வாறு செய்யும் தொழிலதிபர்கள் அவர்களது நம்பிக்கையை மட்டும் தகர்க்கவில்லை, அதற்கு மாறாக, நாட்டு மக்களையும், ஒட்டுமொத்த அமைப்புகளையும் ஏமாற்றுவதற்கு சமம்.

    மேலும், அடுத்த 10 ஆண்டுகளில் இந்தியாவின் வளர்ச்சி பிரமிக்கத்தக்க வைக்கும் வகையில் இருக்கும் என குறிப்பிட்டுள்ளார். #ICAI #RamnathKovind
    மத்திய அமெரிக்க நாடுகளில் சுற்றுப்பயணம் செய்து வரும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஹவானாவில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். #PresidentKovind
    ஹவானா:

    ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தற்போது வெளிநாட்டு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். கிரீஸ், சுரினாம் நாட்டு பயணத்தை முடித்துக்கொண்டு நேற்று கியூபா சென்றடைந்தார். ஹவானா விமான நிலையத்தில் வந்திறங்கிய அவரை அந்நாட்டு மந்திரி மற்றும் உயரதிகாரிகள் வரவேற்றனர்.

    இதையடுத்து, முன்னாள் அதிபர் பிடல் காஸ்ட்ரோ நினைவிடத்துக்கு சென்ற ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், அங்கு அஞ்சலி செலுத்தி மரியாதை செய்தார்.

    அதைத்தொடர்ந்து, ஹவானாவில் அமைந்துள்ள மகாத்மா காந்தி சிலைக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மற்றும் அவரது மனைவி சவிதா கோவிந்த் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். அவருடன் இந்திய தூதரக அதிகாரிகள் உடனிருந்தனர். மேலும், பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் அவர், கியூபா அதிபரை சந்தித்து இருநாட்டு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார். #RamnathKovind #Havana
    ராஜீவ் கொலையாளிகளை விடுவிப்பது ஆபத்தான முன்னுதாரணமாகி விடும் என்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் விளக்கம் அளித்துள்ளார். #RamNathKovind #RajivgandhiAssassinationcase

    புதுடெல்லி:

    முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி 1991-ம் ஆண்டு மே மாதம் 21-ந் தேதி ஸ்ரீபெரும்புதூரில் மனித வெடிகுண்டு தாக்குதலில் கொல்லப்பட்டார்.

    இது தொடர்பாக பலர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோருக்கு மரண தண்டனையும், நளினி, சாந்தன், ரவிச்சந்திரன், ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார் ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது. பலர் விடுதலை செய்யப்பட்டனர்.

    பின்னர் மரண தண்டனை விதிக்கப்பட்ட 3 பேருக்கும் ஆயுள் தண்டனையாக குறைத்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

    ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 7 பேரும் ஜெயிலில் 27 ஆண்டுகளாக இருந்து வருகிறார்கள். ஆயுள் தண்டனை கைதிகள் 14 ஆண்டுகளுக்கு மேல் ஜெயிலில் இருந்தால் அவர்களை விடுவிப்பது வழக்கமானதாக இருக்கிறது.

    இவர்கள் 7 பேரும் 20 ஆண்டுகளுக்கு மேல் ஜெயிலில் இருந்து விட்டதால் விடுதலை செய்வது என்று தமிழக அரசு முடிவு செய்தது. ஆனால், இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு மனுதாக்கல் செய்தது.

    இதனால் விடுதலைக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது. இது தொடர்பாக தமிழக அரசு சார்பில் மறுசீராய்வு மனு சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது.

    இது சம்பந்தமாக சுப்ரீம் கோர்ட்டு மத்திய உள்துறையின் விளக்கத்தை கேட்டு இருந்தது. பின்னர் மத்திய அரசு 7 பேரின் உடல்நிலை, குடும்ப சூழ்நிலை, பொருளாதார பின்னணி உள்ளிட்ட 8 விவரங்களை கேட்டு தமிழக அரசுக்கு கடிதம் அனுப்பியது.


    அதற்கு தமிழக அரசு விளக்கம் அளித்தது. மேலும் மத்திய உள்துறை 7 பேரையும் விடுவிப்பது தொடர்பாக ஜனாதிபதியின் கருத்தையும் கேட்டது. தமிழக அரசின் பதில்களும், ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    இதை பரிசீலித்த ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், ராஜீவ் கொலையாளிகள் 7 பேரையும் விடுவிக்க முடியாது என்று கூறிவிட்டார்.

    இதுபற்றிய தகவல் தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஜனாதிபதி தனது உத்தரவில் என்ன கூறி இருக்கிறார்? என்ற விவரங்கள் இப்போது கிடைத்துள்ளன. அதில் ஜனாதிபதி கூறியிருப்பதாவது:-

    ராஜீவ்காந்தி கொலையில் சம்பந்தப்பட்ட வெளி நாட்டினர் 4 பேர் மற்றும் இந்த கொலையில் உடந்தையாக இருந்த இந்தியர்கள் 3 பேர் என 7 பேரையும் விடுவிப்பது என்பது ஒரு ஆபத்தான முன்னுதாரணமாகிவிடும். மேலும் இது, சர்வதேச அளவிலும் பிரச்சினைகளை ஏற்படுத்தும்.

    நாட்டின் முன்னாள் பிரதமரை கொலை செய்து ஈடு இணையற்ற தவறுகளை செய்திருக்கிறார்கள். சரித்திர கிரிமினல் குற்றத்தை இந்த நாட்டில் செய்திருக்கிறார்கள். அவர்களுடைய செயல்பாடுகள் மிகவும் ஒழுக்கக் கேடானதாகும்.

    வெளிநாட்டை சேர்ந்த பயங்கரவாத அமைப்பு மிகவும் திட்டமிட்டு ஒருங்கிணைத்து கொடூரமான இந்த செயலில் ஈடுபட்டுள்ளது. அதில், 9 போலீஸ் அதிகாரிகள் உள்பட 16 பேர் உயிரிழந்துள்ளனர்.

    நாட்டின் ஜனநாயகத்தையே சீர்குலைத்து முடக்கி உள்ளனர். இந்த கொலையாளிகளுக்கு விசாரணை கோர்ட்டு மரண தண்டனை விதித்துள்ளது. பெண் மனித வெடிகுண்டை பயன்படுத்தி கொடூர சதித்திட்டத்தின் மூலம் ஏராளமானோருடைய உயிரை பறித்து இருக்கிறார்கள் என்பதால் இந்த தண்டனை வழங்கப்பட்டு இருக்கிறது.

    இதை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு 3 பேர் கொண்ட பெஞ்சும் இதில் உள்ள சதி திட்டங்களை உறுதி செய்து அவர்கள் மோசமான குற்றம் செய்ததை சுட்டிக்காட்டி அரிதிலும் அரிதான வழக்கு என்று கூறி இருக்கிறது.

    விடுதலைப்புலிகள் மற்றும் அவர்களது ஆதரவாளர்கள் மூலம் இந்த கொலை திட்டம் நிறைவேற்றப்பட்டு இந்திய ஜனநாயகத்துக்கு ஆபத்தை ஏற்படுத்தி இருக்கிறார்கள். எனவே, அவர்களை விடுவிக்க முடியாது.

    இவ்வாறு ஜனாதிபதி தனது உத்தரவில் கூறி இருக்கிறார். #RamNathKovind #RajivgandhiAssassinationcase

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் கவர்னர் ஆட்சியை அமல்படுத்த அனுமதிக்குமாறு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு கவர்னர் வோரா இன்று கடிதம் அனுப்பியுள்ளார். #KashmirPresidentRule #NNVohra
    ஜம்மு:

    காஷ்மீர் முன்னாள் முதல் மந்திரி முப்தி முகம்மது சயீத் மறைவுக்கு பின்னர் அவரது மகள், மெகபூபா முப்தி தலைமையில் அம்மாநிலத்தில் பிடிபி - பாஜக கூட்டணி ஆட்சி நடந்து வந்தது. சமீபகாலமாக ஆளும் கூட்டணி கட்சிகளுக்குள் கருத்து மோதல் இருந்து வந்ததாக தெரிகிறது.

    இந்நிலையில், காஷ்மீர் மாநில சட்டசபையில் இடம்பெற்றுள்ள பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் அனைவரையும் டெல்லி வரும்படி பா.ஜ.க. தலைவர் அழைப்பு விடுத்தார். இன்று எம்.எல்.ஏ.க்களுடன் ஆலோசனை நடத்திய பின்னர் மெகபூபா முப்தி தலைமையிலான கூட்டணி அரசில் இருந்து விலகுவதாக பா.ஜ.க. இன்று அறிவித்தது.

    தேசிய அரசியலில் பெரும் திருப்புமுனையாக கருதப்படும் இந்த அறிவிப்புக்கு பின்னர் தனது முதல் மந்திரி பதவியை மெகபூபா முப்தி இன்று மாலை ராஜினாமா செய்தார்.

    இந்நிலையில், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் கவர்னர் ஆட்சியை அமல்படுத்த அனுமதிக்குமாறு ஜனாதிபதி மாளிகைக்கு கவர்னர் வோரா கடிதம் அனுப்பியுள்ளார். தற்போது, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வெளிநாட்டில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். #KashmirPresidentRule #NNVohra
    ×