search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Prabhu"

    ஆசிப் குரைஷி இயக்கத்தில் உதயா அழகப்பன் - பிரியங்கா நடிப்பில் வெளியாகி இருக்கும் `உத்தரவு மகாராஜா' படத்தின் விமர்சனம். #UtharavuMaharajaReview #Udhaya #Priyanka
    உதயா ஒரு டிராவல் ஏஜென்சி நடத்தி வருகிறார். நண்பர்களிடம் பொய்கள் கூறி தன்னை பற்றி பில்டப் தருவதை வழக்கமாக வைத்திருக்கிறார். திடீரென்று காணாமல் போகும் உதயா ஒரு மாதம் கழித்து மீண்டும் திரும்புகிறார். ஆனால் அவருக்கு தான் காணாமல் போனதும், ஒரு மாதம் எங்கே இருந்தோம் என்பதும் தெரியவில்லை.

    அந்த நினைவுகனை முழுமையாக அவரால் கொண்டுவர முடியவில்லை. இதற்கிடையே உதயாவுக்கு திடீரென்று வித்தியாசமான குரல்கள் கேட்க தொடங்குகின்றன. இதனால் நிம்மதியை இழக்கிறார். உதயாவை மனநோயாளியாக மாற்றும் அந்த குரல்கள் யாருடையது? உதயா நல்லவரா? கெட்டவரா? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.



    உதயா மன நோயாளி உள்ளிட்ட பல வேடங்களில் நடித்து இருக்கிறார். படம் முழுக்க ஆக்கிரமிக்கும் வேடம் என்பதை உணர்ந்து நடித்து இருக்கிறார். நிம்மதி இழந்து அவர் தவிக்கும் காட்சிகளில் பரிதாபத்தை ஏற்படுத்துகிறார். உதயாவை ஆட்டுவிக்கும் டாக்டராக பிரபு. படம் சற்று தொய்வடையும்போது எல்லாம் பிரபு நுழைந்து நிமிர வைக்கிறார். நடிப்பில் வழக்கமான கம்பீரம்.

    கதாநாயகிகள் பிரியங்கா, சேரா இருவரும் தங்கள் பங்களிப்பை சரியாக கொடுத்து இருக்கிறார்கள். கோவை சரளா, ஸ்ரீமன், மனோபாலா, ஆடம்ஸ், எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோர் சிரிக்க வைத்திருக்கிறார்கள். மனோபாலாவின் அடியாட்களாக மனோஜ்குமார், ஹரிகிருஷ்ணன், கண்ணன் ஆகியோரும் நிறைவான நடிப்பு.



    அறிமுக இயக்குனர் ஆசிப் குரேசி குழப்பமான திரைக்கதையை 2 ஆம் பாதியில் புரிய வைத்ததன் மூலம் கவனிக்க வைக்கிறார். ஒரு சைக்கோ திரில்லரில் எமோ‌ஷனல், காதல், காமெடி, செண்டிமெண்ட் கலந்து கொடுத்திருக்கிறார்கள். படத்தின் நீளத்தை குறைத்து, வேகத்தை அதிகரித்திருக்கலாம்.

    நரேன் இசையும், பாலாஜி ரங்கா ஒளிப்பதிவும் சைக்கோ திரில்லருக்கு ஏற்றபடி சிறப்பாக வந்துள்ளன.

    மொத்தத்தில் `உத்தரவு மகாராஜா' கவனிக்க வைக்கிறான். #UtharavuMaharajaReview #Udhaya #Priyanka

    ஆஸிப் குரைஷி இயக்கத்தில் உதயா - பிரபுவுடன் நடிகர் சங்க பிரபலங்கள் பலரது நடிப்பில் உருவாகி இருக்கும் ‘உத்தரவு மகாராஜா’ படத்தின் முன்னோட்டம்.
    ஜே‌ஷன் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவாகும் படம் ‘உத்தரவு மகாராஜா’. 

    இதில் உதயாவுடன் பிரபு இணைகிறார். பிரியங்கா, சேரா, நிஷா என மூன்று கதாநாயகிகள் நடிக்கிறார்கள். இவர்களுடன் நாசர், கோவைசரளா, ஸ்ரீமன், மனோபாலா, எம்.எஸ்.பாஸ்கர், சரவணன், தனஞ்செயன், தளபதி தினேஷ், சோனியா போஸ், பிரேம் நடிக்கிறார். நீண்ட இடைவெளிக்குப் பின் குட்டிபத்மினி நடிக்கிறார். தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவர், நிர்வாகிகளுடன் முக்கிய நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். 

    ஒளிப்பதிவு - பாலாஜி ரங்கா. இவர் தமிழில் ‘ஓநாயும் ஆட்டுக் குட்டியும்’ மற்றும் பல இந்தி படங்களில் ஒளிப்பதிவாளராகப் பணிபுரிந்தவர். 



    இசை - நரேன் பாலகுமாரன், படத்தொகுப்பு - சத்ய நாராயணன், நடனம் - சாண்டி, இயக்கம் - ஆஸிப் குரைஷி. 

    `உத்தரவு மகாராஜா’ படத்தின் திரைக்கதையில் ஒரு புதிய முயற்சியை இயக்குனர் கையாண்டிருக்கிறார். இது முற்றிலும் மாறுபட்ட நகைச்சுவை, ஆக்‌ஷன் கலந்த சைக்கோ திரில்லர் கதை. இயக்குனராக ஆஸிப் குரைஷி அறிமுகமாகிறார். இவர் தமிழ், இந்தி மற்றும் பெங்காலி படங்களில் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர்.

    இந்த படம் வருகிற வெள்ளிக்கிழமை நவம்பர் 16-ஆம் தேதி திரைக்கு வருகிறது.

    டிடிவி தினகரனை ஆதரிக்கும் எம்எல்ஏ-க்கள் ரத்தினசபாபதி, கலைச்செல்வன், பிரபு ஆகியோரிடம் விளக்கம் கேட்க அரசு கொறடா ராஜேந்திரன் சபாநாயகருக்கு பரிந்துரை செய்துள்ளார். #ADMK
    சென்னை:

    முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை எதிர்த்து கவர்னரிடம் மனு கொடுத்த 18 அதிமுக எம்எல்ஏ-க்களை சபாநாயகர் தனபால் தகுதி நீக்கம் செய்து நடவடிக்கை எடுத்தார். இந்த தகுதி நீக்க நடவடிக்கை சரியானதுதான் என்று சென்னை ஐகோர்ட் தீர்ப்பளித்தது. இதனால் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை எதிர்த்து, டிடிவி தினகரனை ஆதரித்த 18 எம்எல்ஏ-க்களும் பதவியை இழந்துள்ளனர்.

    இந்த சூழ்நிலையில் அதிமுக எம்எல்ஏ-க்கள் ரத்தினசபாபதி, பிரபு, கலைச்செல்வன் மூன்று பேரும் டிடிவி தினகரனுக்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவித்துள்ளனர். அது மட்டுமின்றி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் இருவரையும் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். அதிமுகவில் இருந்து கொண்டே அதிமுக அரசை ஊழல் அரசு என்று குற்றம் சாட்டினார்கள்.



    இதனால் அவர்கள் பதவியை பறிக்க அதிமுக மூத்த தலைவர்கள் தீவிரமாக உள்ளனர். அந்த மூன்று எம்எல்ஏ-க்களையும் சமரசம் செய்ய சில மூத்த அதிமுக தலைவர்கள் முயன்றனர். ஆனால் மூன்று எம்எல்ஏ-க்களும் டிடிவி தினகரனுக்கு ஆதரவு தெரிவிக்கும் நிலையில் இருந்து பின் வாங்கவில்லை. எனவே அவர்கள் மூன்று பேரையும் அரசியல் ரீதியாக முழுமையாக ஓரம் கட்டும் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன. 3 எம்எல்ஏ-க்கள் மீதும் எந்த நேரத்திலும் தகுதி நீக்கம் நடவடிக்கை பாயும் என்று கூறப்பட்டது.

    இந்நிலையில் 3 எம்எல்ஏ- க்கள் ரத்தினசபாபதி, கலைச்செல்வன், பிரபு ஆகியோரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப அரசு கொறடா ராஜேந்திரன் சபாநாயகருக்கு பரிந்துரை செய்துள்ளார். அதில் ‘‘கட்சித்தாவல் தடை சட்டத்தின்கீழ் ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது என விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப வேண்டும்’’ என்று குறிப்பிட்டுள்ளார். #ADMK #Karunas #Kalaiselvan #Prabhu #RathinaSabapathy
    டி.டி.வி. தினகரனை ஆதரிக்கும் கருணாஸ் உள்பட மேலும் 4 எம்.எல்.ஏ.க்களை நீக்குவது குறித்து விளக்கம் கேட்டு நோட்டீசு அனுப்பப்பட உள்ளது. #ADMK #Karunas #Kalaiselvan #Prabhu #RathinaSabapathy
    சென்னை:

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை எதிர்த்து கவர்னரிடம் மனு கொடுத்த 18 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை சபாநாயகர் தனபால் தகுதி நீக்கம் செய்து நடவடிக்கை எடுத்தார்.

    இந்த தகுதி நீக்க நடவடிக்கை சரியானதுதான் என்று சென்னை ஐகோர்ட்டு நேற்று தீர்ப்பளித்தது. இதனால் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை எதிர்த்து, டி.டி.வி.திகரனை ஆதரித்த 18 எம்.எல்.ஏ.க்களும் பதவியை இழந்துள்ளனர்.

    தமிழக சட்டசபையில் ஏற்கனவே கருணாநிதி மரணம் காரணமாக திருவாரூர் தொகுதியும், ஏ.கே.போஸ் மரணம் காரணமாக திருப்பரங்குன்றம் தொகுதியும் காலியாக உள்ளன. நேற்று 18 எம்.எல்.ஏ.க்களின் பதவி பறிக்கப்பட்டு விட்டதால் மொத்தம் 20 தொகுதிகள் காலி இடங்களாக உள்ளன.

    இந்த 20 தொகுதிகளுக்கும் அரசியலமைப்பு சட்டப்படி அடுத்த 6 மாதத்துக்குள் இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும். அந்த 20 தொகுதிகளின் தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும்? அதன் தொடர்ச்சியாக தமிழக அரசியலில் அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் எழுந்துள்ளது.

    குறிப்பாக 20 தொகுதி தேர்தல் எப்போது நடத்தப்படும் என்ற கேள்வி மக்கள் மனதில் எழுந்துள்ளது. இந்த பரபரப்பான சூழ்நிலையில் டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவாக உள்ள மேலும் 4 எம்.எல்.ஏ.க்களின் பதவியை பறிக்க அ.தி.மு.க. மூத்த தலைவர்கள் தீவிரமாக உள்ளனர்.

    அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ரத்தினசபாபதி, பிரபு, கலைச்செல்வன் மற்றும் கருணாஸ் ஆகியோரே அந்த 4 எம்.எல்.ஏ.க்கள் ஆவார்கள். முக்குலத்தோர் புலிப்படை தலைவரான கருணாஸ் கடந்த சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. சின்னமான இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றதால், அ.தி.மு.க. கட்சி விதிகளுக்கு உட்பட்டு நடக்க வேண்டியவராக உள்ளார். எனவே அவர் மீது கட்சி விதி மீறல்படி நடவடிக்கை எடுக்க முடியும்.

    அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ரத்தினசபாபதி, பிரபு, கலைச்செல்வன் மூன்று பேரும் டி.டி.வி.தினகரனுக்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவித்துள்ளனர். அது மட்டுமின்றி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இருவரையும் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். அ.தி.மு.க.வில் இருந்து கொண்டே அ.தி.மு.க. அரசை ஊழல் அரசு என்று குற்றம் சாட்டினார்கள்.

    அந்த மூன்று எம்.எல்.ஏ.க்களையும் சமரசம் செய்ய சில மூத்த அ.தி.மு.க. தலைவர்கள் முயன்றனர். ஆனால் மூன்று எம்.எல்.ஏ.க்களும் டி.டி.வி. தினகரனுக்கு ஆதரவு தெரிவிக்கும் நிலையில் இருந்து பின் வாங்கவில்லை. எனவே அவர்கள் மூன்று பேரையும் அரசியல் ரீதியாக முழுமையாக ஓரம் கட்டும் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன.

    அதுபோல “இரட்டை இலை” சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற நடிகர் கருணாசும் வெளிப்படையாக டி.டி.வி. தினகரனை ஆதரித்து வருகிறார். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் டி.டி.வி. தினகரன், கவர்னரை சந்தித்து நம்பிக்கையில்லா தீர்மானம் நடத்த வேண்டும் என்று மனு கொடுக்க சென்றபோது, நடிகர் கருணாசும் உடன் சென்றிருந்தார்.


    கடந்த மாதம் அவர் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்துப் பேசினார். மேலும் அ.தி.மு.க. அரசை விமர்சித்து பேசி வருகிறார். இவையெல்லாம் கட்சி விதி மீறல்களாக உள்ளன.

    அ.தி.மு.க. கட்சி விதிகளை நடிகர் கருணாஸ் மீறியதற்கான வலுவான ஆதாரங்கள் உள்ளன. எனவே இரட்டை இலை தயவால் வெற்றி பெற்ற கருணாசின் எம்.எல்.ஏ. பதவியை சபாநாயகரால் மிக, மிக எளிதாக பறிக்க முடியும்.

    கருணாஸ், ரத்தினசபாபதி, பிரபு, கலைச்செல்வன் ஆகிய 4 பேர் மீதும் தகுதி நீக்கம் நடவடிக்கை எடுக்க தயாராகி வருவதாக அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் 2 வாரங்களுக்கு முன்பு சூசகமாக தெரிவித்தார். எனவே டி.டி.வி.தினகரனை ஆதரிக்கும் இந்த 4 எம்.எல்.ஏ.க்கள் மீதும் எந்த நேரத்திலும் தகுதி நீக்கம் நடவடிக்கை பாயும் என்று கூறப்படுகிறது.

    இது தொடர்பாக அ.தி.மு.க. மூத்த தலைவர் ஒருவர் கூறியதாவது:-

    4 எம்.எல்.ஏ.க்களும் அ.தி.மு..க. கட்சி விதிகளை முழுமையாக மீறியுள்ளனர். அரசை தொடர்ந்து அவர்கள் விமர்சித்து வருகிறார்கள்.

    எனவே “உங்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது?” என்று விளக்கம் கேட்டு நோட்டீசு அனுப்பப்பட உள்ளது. அதன் பிறகு 4 எம்.எல்.ஏ.க்கள் மீதும் தகுதி நீக்கம் நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அந்த அ.தி.மு.க. மூத்த தலைவர் கூறினார்.

    இந்த நிலையில் கலைச்செல்வன், பிரபு, ரத்தின சபாபதி மூவரும் தொடர்ந்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கருத்துக்கள் கூறி வருகிறார்கள். கலைச்செல்வன் எம்.எல்.ஏ. கூறுகையில், “அ.தி.மு.க. ஆட்சியை கவிழ்க்க வேண்டும் என்பது எங்கள் நோக்கம் அல்ல. துரோகிகளை நீக்குவதே எங்கள் நோக்கம்” என்றார்.

    பிரபு எம்.எல்.ஏ. கூறுகையில், “என் மீது நடவடிக்கை எடுத்தால் சட்ட ரீதியாக சந்திக்க தயார்” என்று கூறியுள்ளார். டி.டி.வி.தினகரனை ஆதரிக்கும் 4 எம்.எல்.ஏ.க்களும் தொடர்ந்து விமர்சித்து வருவதால், அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை அ.தி.மு.க.வில் வலுத்து வருகிறது.

    இதற்கிடையே நடிகர் கருணாஸ் உள்பட 4 எம்.எல்.ஏ.க்களின் பதவியை பறித்தால் அது அ.தி.மு.க. அரசுக்கு சாதகமான அம்சமாக மாறும் என்று தெரிய வந்துள்ளது. சட்டசபையில் அ.தி.மு.க. அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவதற்கான தடை நீக்கப்பட்டுள்ளது. எனவே எந்த நேரத்திலும் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்படலாம்.

    தற்போது சட்டசபையில் 214 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க 108 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தேவை. அ.தி.மு.க.வுக்கு 110 எம்.எல்.ஏ.க்களின் உறுதியான ஆதரவு உள்ளது. எனவே அ.தி.மு.க. ஆட்சிக்கு எந்த விதத்திலும் ஆபத்து இல்லை.

    என்றாலும் சட்டசபையில் கூடுதல் பலமுடன் இருக்க வேண்டும் என்பதில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உறுதியாக உள்ளார். அதன்படி கருணாஸ் உள்பட 4 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டால் சட்டசபையில் எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை 210 ஆக குறையும்.

    அந்த நிலையில் அ.தி.மு.க., தனக்கு இருக்கும் மெஜாரிட்டியை நிரூபித்து காட்ட 106 எம்.எல்.ஏக்கள் இருந்தாலே போதும். எடப்பாடி பழனிசாமியை 110 எம்.எல்.ஏ.க்கள் ஆதரிப்பதால் சற்று அதிக பெரும்பான்மையுடன் அவர் ஆட்சியை நடத்த முடியும். எனவே நடிகர் கருணாஸ் உள்பட 4 பேரின் எம்.எல்.ஏ. பதவி பறிக்கப்படுவது உறுதியாகி உள்ளது.

    அந்த 4 எம்.எல்.ஏ.க்களும் தகுதி நீக்கம் செய்யப்பட்டால், திருவாடானை, அறந்தாங்கி, விருத்தாசலம், கள்ளக்குறிச்சி ஆகிய 4 தொகுதிகளும் காலி இடங்களாக அறிவிக்கப்படும். அந்த 4 தொகுதிகளுக்கு தனியாக இடைத்தேர்தல் நடத்தப்படும். #ADMK #Karunas #Kalaiselvan #Prabhu #RathinaSabapathy
    மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மக்களுக்கு நடிகர்கள் பிரபு, ஜெயம் ரவி, நடிகை கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நிதியுதவி வழங்கியுள்ளனர். #KeralaRain #KeralaFlood #KeralaFloodRelief
    கேரளாவில் தொடர்ந்து பெய்து வரும் தொடர் கனமழையால் அம்மாநிலம் வெள்ளத்தாலும், நிலச்சரிவாலும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. வரலாறு காணாத இந்த இயற்கை சீற்றத்துக்கு இதுவரை 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 

    கேரள மக்களுக்கு பல்வேறு அமைப்புகளும், பொதுசேவை நிறுவனங்களும், தமிழ் திரையுலகினரும் நிதியுதவி மற்றும் பொருளுதவி அளித்து வருகின்றனர். தற்போது நடிகர் ஜெயம் ரவி 10 லட்சமும், நடிகர் பிரபு 10 லட்சமும், நடிகை கீர்த்தி சுரேஷ் 10 லட்சமும் வழங்கியுள்ளார்கள்.



    முன்னதாக நடிகர்கள் கமல், சூர்யா, கார்த்தி, விஷால், தனுஷ், விஜய்சேதுபதி, உதயநிதி, சிவகார்த்திகேயன், விக்ரம், இயக்குனர்கள் சங்கர், ஏ.ஆர்.முருகதாஸ், நடிகை ரோஹினி, நயன்தாரா உள்ளிட்டோர் கேரளாவுக்கு நிதி உதவி அளித்துள்ளனர். #KeralaRain #KeralaFlood #KeralaFloodRelief 
    நடிகர் சிவாஜி கணேசனின் 17-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. அதனை ஒட்டி அடையாறில் அமைந்திருக்கும் அவரது நினைவு மணிமண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. #SivajiGanesan
    சென்னை:

    நடிகர் சிவாஜி கணேசனின் 17-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. அதனை ஒட்டி அடையாறில் அமைந்திருக்கும் அவரது நினைவு மணிமண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு சிவாஜியின் மகனும் நடிகருமான பிரபு, நடிகர் சங்க தலைவர் நாசர், சிவாஜியின் மூத்த மகன் ராம்குமார், விக்ரம் பிரபு, நடிகர் மனோபாலா ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்தினார்கள்.

    விழாவில் நடிகர் பிரபு பேசும்போது கூறியதாவது:-

    ‘நடிகர் சங்கம் சார்பாக அப்பாவுக்கு மரியாதை செலுத்தினார்கள். அவர்களை பார்க்கும்போது எங்களுக்கு எங்கள் தந்தை நினைவு வருகிறது. அவர்களுக்கு எங்களை பார்க்கும்போது எங்கள் தந்தை நினைவுக்கு வருகிறார்.

    நாசர் என் தந்தையை அண்ணன் என்று அழைப்பார். நியாயமாக பார்த்தால் சித்தப்பா என்று அழைக்க வேண்டும். சிவாஜி எல்லோர் வீடுகளிலும் அப்பாவாக, தாத்தாவாக வாழ்ந்துகொண்டிருக்கிறார்.

    உங்கள் அனைவரையும் பார்க்கும்போது என் தந்தையே நேரில் வந்தது போல் இருக்கிறது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ரசிகர்களுக்கும், பத்திரிகையாளர்களுக்கும் நன்றிகள்’ என்று கூறினார்.


    நடிகர் சங்க தலைவர் நாசர் பேசும்போது ‘நேற்று இன்று என்று இல்லை எப்போதுமே சிவாஜி நம்முடன் ஏதோ ஒரு கதாபாத்திரத்தில் வாழ்ந்துகொண்டு இருக்கிறார். அவர் போட்ட தடத்தில் பயணித்துக் கொண்டு இருக்கிறோம். அவர் பயணித்த அளவுக்கு நாங்கள் பயணிக்க முடியாது. சினிமா நடிகர்கள் மட்டும் அல்ல நாடக நடிகர்கள் சார்பாகவும் சிவாஜி பிறந்த தினத்தை அரசு நிகழ்ச்சியாக அறிவித்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். சிவாஜி விமர்சனத்துக்கும் அரசியலுக்கும் அப்பாற்பட்டவர். கலைக்காகவே வாழ்ந்தவர்’

    இவ்வறு அவர் கூறினார்.  #NadigarThilagam #SivajiGanesan
    சிவாஜியின் பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளதற்கு நடிகர் பிரபு, நடிகர் சங்க பொதுச்செயலாளர் விஷால் நன்றி தெரிவித்து உள்ளனர். #SivajiGanesan
    எங்கள் குடும்பத்தின் கோரிக்கை என்பதைவிட தமிழக மக்களின் நீண்ட நாள் கோரிக்கை இது. தமிழர்களின் வீடுகளில் ஒரு அப்பாவாக, ஒரு தாத்தாவாக, ஒரு அண்ணனாக குடும்பத்தில் ஒருவராக வாழ்ந்துகொண்டு இருக்க கூடியவர் எங்கள் தந்தை.

    அந்த வகையில் தமிழக ரசிகர்கள் சார்பாக இந்த அறிவிப்புக்கு முதல் அமைச்சர், துணை முதல் அமைச்சர், செய்தித்துறை அமைச்சர் கட்ம்பூர்ராஜு உள்ளிட்ட அனைவருக்கும் எங்கள் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் என்றார் பிரபு.

    தமிழ் சினிமாவின் அடையாளங்களில் முக்கியமானவர் சிவாஜி அவர்கள். காலத்தால் அவரது புகழ் மறைந்துவிடக்கூடாது என்பதற்காக அவரது பிறந்த நாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று தமிழக அரசு அறிவித்து இருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.

    இதற்காக முயற்சி எடுத்த தமிழக முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சர், செய்தித்துறை அமைச்சர் உள்ளிட்ட அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என்று விஷால் கூறியுள்ளார்.
    ஷக்தி சிதம்பரம் இயக்கத்தில் பிரபுதேவா - நிக்கி கல்ராணி, அதா‌ ஷர்மா நடிப்பில் உருவாகி வரும் ‘சார்லி சாப்ளின்-2’ படத்தின் முன்னோட்டம். #CharlieChaplin2 #Prabhudeva
    டி.சிவாவின் அம்மா கிரியேசன்ஸ் தயாரித்துள்ள படம் ‘சார்லி சாப்ளின்- 2’.

    இதில் பிரபுதேவா நாயகனாக நடிக்கிறார். முக்கிய வேடத்தில் பிரபு நடிக்கிறார். நாயகிகளாக நிக்கி கல்ராணி, அதா‌ ஷர்மா நடிக்கிறார்கள். இந்தி, தெலுங்கு நடிகையான அதா‌ஷர்மா தமிழில் அறிமுகமாகும் முதல் படம் இது. இவர்களுடன் ரவிமரியா, செந்தில், ஆகாஷ், மகதீரா வில்லன் தேவ்கில், மும்பை வில்லன் சமீர் கோச், கோமல் சர்மா, வைபவ் உள்பட பலர் நடிக்கிறார்கள்.

    ஒளிப்பதிவு - சவுந்தர்ராஜன், இசை - அம்ரீஷ், பாடல்கள் - யுகபாரதி, பிரபுதேவா, கலை - ஆர்.கே.விஜய் முருகன், நடனம் - ஜானி, எடிட்டிங் - பென்னி, வசனம் - ‌ஷக்தி சிதம்பரம், ஸ்டண்ட் - கனல் கண்ணன், தயாரிப்பு - டி.சிவா, கதை, திரைக்கதை, இயக்கம் - ‌ஷக்தி சிதம்பரம்.‘சார்லி சாப்ளின்’ முதல் பாகத்தையும் இவர் தான் இயக்கினார். அவரிடம் படம் பற்றி கேட்ட போது....



    “பிரபு தேவா நிக்கி கல்ராணி இருவருக்கும் திருப்பதியில் திரு மணம் நடக்க இருக்கிறது. அதற்காக இரண்டு பேரின் குடும்பத்தினரும் திருப்பதிக்கு போகிறார்கள். அப்போது நடக்கும் சம்பவங் களின் கலகலப்பான தொகுப்பே ‘சார்லி சாப்ளின்-2’ திருப்பதிக்கு போனால் திருப்பம் வரும் என்பார்கள். அது என்ன திருப்பம் என்பது படத்தின் சஸ்பென்ஸ்” என்றார்.

    படம் விரைவில் ரிலீசாக இருக்கிறது. #CharlieChaplin2 #Prabhudeva

    ×