என் மலர்

  நீங்கள் தேடியது "Adah Sharma"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சிம்பு மற்றும் பிரபுதேவா படங்களில் நடித்த நடிகை அடா சர்மா தற்போது பத்திரிகை ஒன்றுக்காக வித்தியாசமான போட்டோசூட் ஒன்றை எடுத்துள்ளார்.
  சிம்பு - நயன்தாரா நடிப்பில் வெளியான ‘இது நம்ம ஆளு’ படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடி தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை அடா சர்மா. இவர் கடைசியாக பிரபுதேவாவுடன் இணைந்து `சார்லி சாப்ளின்-2' படத்தில் நடித்திருந்தார்.

  மதுரையை பூர்வீகமாகக் கொண்ட இவர் மும்பையில் பிறந்து வளர்ந்தவர். இந்தி, தெலுங்கு, கன்னட மொழிப் படங்களில் நடித்து வருகிறார். இவர் அவ்வப்போது தனது கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவது வழக்கம்.   தற்போது இவர் பத்திரிகை ஒன்றுக்காக வித்தியாசமான போட்டோசூட் ஒன்றை எடுத்துள்ளார். அதை வீடியோவாக தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருக்கிறார் அதா சர்மா. ஒற்றை கையில் தலைகீழாக நிற்கும் அந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் வியந்து பாராட்டி வருகின்றனர். தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பிரபுதேவாவுடன் `சார்லி சாப்ளின்-2' படத்தில் நடித்த நடிகை அடா சர்மா இந்தியில் நடிக்கும் புதிய படத்திற்காக எடுத்துக் கொண்ட கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டிருக்கிறார்.
  சிம்பு - நயன்தாரா நடிப்பில் வெளியான ‘இது நம்ம ஆளு’ படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடி தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை அடா சர்மா. இவர் கடைசியாக பிரபுதேவாவுடன் இணைந்து `சார்லி சாப்ளின்-2' படத்தில் நடித்திருந்தார்.

  மதுரையை பூர்வீகமாகக் கொண்ட இவர் மும்பையில் பிறந்து வளர்ந்தவர். இந்தி, தெலுங்கு, கன்னட மொழிப் படங்களில் நடித்து வருகிறார். இவர் அவ்வப்போது தனது கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவது வழக்கம். அந்த வகையில், நேற்று அவர் வெளியிட்டுள்ள கவர்ச்சி புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.  அடா சர்மா தற்போது `மேன் டூ மேன்' படத்தில் பெண்ணாக இருந்து ஆணாக மாறும் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அந்த படத்திற்காக எடுக்கப்பட்ட தனது படத்தை தான் அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த புகைப்படத்திற்கு பார்த்த ரசிகர்கள் அவரது உடலமைப்பை பாராட்டியும், சிலர் திட்டியும் கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சிம்புவுடன் நடித்த நடிகை அதா சர்மா, தன்னைப் பற்றி வெளியான வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்து விளக்கம் அளித்துள்ளார். #Simbu #STR #AdahSharma
  சிம்பு நடித்த, ‘இது நம்ம ஆளு’ படத்தில் நடித்த அதா சர்மா, சமீபத்தில் வெளியான சார்லி சாப்ளின் 2 படத்தில் பிரபுதேவாவுக்கு ஜோடியாக நடித்தார். அடுத்து 3 இந்தி படங்களில் நடித்து வருகிறார்.

  இந்நிலையில் தெலுங்கில் நானி நடிக்கும் புதிய படமொன்றில் அதா சர்மா ஒரு பாடலுக்கு குத்தாட்டம் ஆட உள்ளதாக தகவல் வெளியானது. முதலில் இந்த தகவலை கண்டுகொள்ளாத அதா சர்மா அதிக சம்பளத்துக்கு கவர்ச்சி ஆட்டம் ஆடுவதாக அடுத்தடுத்து செய்திகள் வந்ததால் பதில் அளித்துள்ளார்.

  ‘ரசிகர்களே, என்னைப் பற்றி வரும் தகவலில் உண்மை இல்லை. நம்பாதீங்க. இதுபோன்ற தவறான தகவல்களை நான் கண்டுகொள்வதில்லை. அது தன்னால் அடங்கிவிடும் என்று விட்டுவிடுவேன்.  ஆனால் தற்போது தொடர்ச்சியாக இதுபற்றி எனக்கு செய்தி வந்துகொண்டே இருப்பதால் அதற்கு விளக்கம் அளிக்க எண்ணினேன். தற்போது எந்த ஒரு படத்திற்கும் ஒரு பாட்டுக்கு குத்தாட்டம் ஆடவில்லை. அதிக சம்பளமும் பெறவில்லை. அதுபோல் உண்மையில் நடந்தால் நானே எனது அதிகாரபூர்வ வலை பக்கத்தில் பகிர்வேன்’ என்று விளக்கம் அளித்துள்ளார்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சக்தி சிதம்பரம் இயக்கத்தில் பிரபுதேவா - நிக்கி கல்ராணி நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘சார்லி சாப்ளின் 2’ படத்தின் விமர்சனம். #CharlieChaplin2 #Prabhudeva #NikkiGalrani #CharlieChaplin2Review
  மேட்ரிமோனி நடத்தி வரும் பிரபுதேவா, தனக்கு ஏற்ற பெண்ணையும் தேடி வருகிறார். அரவிந்த் ஆகாஷ், சந்தனா இருவரும் இவரின் நண்பர்கள். கையில் ஏற்பட்ட சிறிய காயம் காரணமாக மருத்துவரான பிரபுவை சந்திக்க செல்லும் இவருக்கு, நிக்கி கல்ராணி 15 நாளில் இறந்து விடுவார் என்று தெரிய வருகிறது.

  இதையடுத்து நிக்கி கல்ராணியை திருமணம் செய்வதற்கான முயற்சியில் பிரபுதேவா இறங்க, ஒரு கட்டத்தில் நிக்கி கல்ராணிக்கு ஒன்றும் இல்லை என்பது தெரியவருகிறது. அத்துடன் நிக்கி கல்ராணி பிரபுவின் மகள் என்பதையும் அறிந்து கொள்கிறார். இதையடுத்து இரு குடும்பத்தாரும் பேசி இவர்களது திருமணத்தை நடத்த திட்டமிடுகிறார்கள்.  இதற்கிடையே நிக்கி கல்ராணி வேறு ஒருவருடன் நெருக்கமாக இருக்கும் வீடியோ ஒன்றை பார்த்து அதிர்ச்சியடையும் பிரபுதேவா, நிக்கியை கேவலமாக திட்டி வாட்ஸ்அப்பில் வீடியோ ஒன்றை அனுப்பிவிடுகிறார். பின்னர், நிக்கி மீது தவறில்லை என்பது அறிந்த பிரபுதேவா, அந்த வீடியோவை நிக்கி கல்ராணி பார்த்தவிடுதற்கு முன்பாக அதை அழிக்க நினைக்கிறார்.

  கடைசியில் நிக்கி அந்த வீடியோவை பார்த்தாரா? பிரபுதேவா - நிக்கி கல்ராணி திருமணம் நடந்ததா? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.  பிரபுதேவா தனது வழக்கமான கலகலப்பான நடிப்பால் கவர்கிறார். நிக்கி கல்ராணியை, அந்த வீடியோவை பார்க்க விடாமல் பண்ண பிரபுதேவா எடுக்கும் முயற்சிகள் பழைய பிரபுதேவாவை நினைவுபடுத்துகின்றன. நிக்கி கல்ராணி படம் முழுக்க மாடர்னான குடும்ப பெண்ணாக வருகிறார். அடா சர்மா, அரவிந்த் ஆகாஷ், சந்தனா உள்ளிட்டோரும் அவர்களது கதாபாத்திரங்களை மெருகேற்றி இருக்கிறார்கள். பிரபு, டி.சிவா முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். விவேக் பிரசன்னா, அமித் பார்கவ், சமீர் கோச்சார் கொடுத்த கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

  சார்லி சாப்ளின் என்ற முழுநீள காமெடி படத்தை கொடுத்த சக்தி சிதம்பரம், சார்லி சாப்ளின் 2 படத்தில் ரசிகர்களை திருப்திபடுத்தவில்லை என்று தான் சொல்ல வேண்டும். சக்தி சிதம்பரம் இயக்கிய படமா இது என்று யோசிக்கும்படி படம் இருக்கிறது. திரைக்கதை ஓரளவுக்கு வேகமாக நகர்ந்தாலும், அது படத்திற்கு பலமாக அமையவில்லை. குறிப்பாக காமெடி காட்சிகளில் சிரிக்க முடியவில்லை. ஜி.சசிகுமாரின் படத்தொகுப்பு ஓரளவுக்கு படத்திற்கு கைகொடுத்திருக்கிறது.  அம்ரிஷ் கணேஷ் இசையில் சின்ன மச்சான் பாடலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. மற்ற பாடல்களும் கேட்கும் ரகம் தான். செளந்தர்ராஜன் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக வந்துள்ளன.

  மொத்தத்தில் `சார்லி சாப்ளின் 2' ஏமாற்றம். #CharlieChaplin2 #Prabhudeva #NikkiGalrani #CharlieChaplin2Review

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  அம்மா கிரியேஷன்ஸ் தயாரிப்பில் பிரபுதேவா, நிக்கி கல்ராணி நடிப்பில் உருவாகி இருக்கும் ‘சார்லி சாப்ளின் 2’ படக்குழுவினரின் முக்கிய அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. #CharlieChaplin2
  அம்மா கிரியேஷன்ஸ் பட நிறுவனம் அதிக பொருட்செலவில் தயாரித்துள்ள படம் ‘சார்லி சாப்ளின் 2’. இந்த படத்தின் முதல் பாகமான சார்லி சாப்ளின் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி மற்றும் பெங்காலி மற்றும் ஒரியா உட்பட இந்திய மொழிகள் பலவற்றில் ரீமேக் செய்யப்பட்டு வசூல் சாதனை புரிந்தது அனைவரும் அறிந்ததே.

  முதல் பாகத்தின் ஹீரோவான பிரபுதேவாவே இதன் இரண்டாம் பாகத்தில் நாயகனாக நடித்திருக்கிறார். கதாநாயகிகளாக நிக்கி கல்ராணி, அதா சர்மா நடித்திருக்கிறார்கள். முக்கிய கதாபாத்திரத்தில் பிரபு, சந்தனா, அரவிந்த் ஆகாஷ், விவேக் பிரசன்னா, ரவிமரியா, டி.சிவா ஆகியோருடன் வில்லன்களாக தேவ்கில், சமீர் கோச்சார் நடித்திருக்கிறார்கள்.  கதை திரைக்கதை வசனம் எழுதி ஷக்தி சிதம்பரம் இயக்கி இருக்கிறார். அம்ரிஷ் இசையமைத்திருக்கிறார். இப்படத்தை வரும் ஜனவரி 25ம் தேதி வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

  பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நேற்று இப்படத்தின் டிரைலர் வெளியானது. முன்னதாக சின்ன மச்சான் பாடல் யூடியூப்பில் 7 கோடிக்கு மேல் பார்வையாளர்களால் பார்க்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சிம்பு நடிப்பில் வெளியான இது நம்ம ஆளு படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடிய நடிகை அடா சர்மா, காய்கறி விற்கும் தோற்றத்தில் இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. #AdahSharma
  சிம்பு - நயன்தாரா நடிப்பில் வெளியான ‘இது நம்ம ஆளு’ படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடி தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை அடா சர்மா. இவர் தற்போது பிரபுதேவாவுடன் `சார்லி சாப்ளின்-2' படத்தில் நடித்து முடித்திருக்கிறார்.

  மதுரையை பூர்வீகமாகக் கொண்ட இவர் மும்பையில் பிறந்து வளர்ந்தார். இந்தி, தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிப் படங்களில் நடித்து வருகிறார். அடுத்ததாக ஹாலிவுட் படமொன்றில் நடிக்க இருக்கிறார். ஹாலிவுட் படத்தில் அவரது கதாபாத்திரம் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான பரிசோதனை காட்சிகளை படம்பிடித்தனர். அதில் காய்கறி விற்கும் பெண்ணாக அடாசர்மா நடித்தார். அந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன.   மாடர்ன் உடைகளுடன் கவர்ச்சியாக வலம் வந்த அடா சர்மா காய்கறி விற்கும் தோற்றத்தில், ஆளே மாறி இருந்ததாக ரசிகர்கள் பாராட்டுகிறார்கள். அடா சர்மா புதிதாக தமிழ் படமொன்றில் நடிக்கவும் ஒப்பந்தமாகி உள்ளார். #AdahSharma

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஷக்தி சிதம்பரம் இயக்கத்தில் பிரபுதேவா - நிக்கி கல்ராணி, அதா‌ ஷர்மா நடிப்பில் உருவாகி வரும் ‘சார்லி சாப்ளின்-2’ படத்தின் முன்னோட்டம். #CharlieChaplin2 #Prabhudeva
  டி.சிவாவின் அம்மா கிரியேசன்ஸ் தயாரித்துள்ள படம் ‘சார்லி சாப்ளின்- 2’.

  இதில் பிரபுதேவா நாயகனாக நடிக்கிறார். முக்கிய வேடத்தில் பிரபு நடிக்கிறார். நாயகிகளாக நிக்கி கல்ராணி, அதா‌ ஷர்மா நடிக்கிறார்கள். இந்தி, தெலுங்கு நடிகையான அதா‌ஷர்மா தமிழில் அறிமுகமாகும் முதல் படம் இது. இவர்களுடன் ரவிமரியா, செந்தில், ஆகாஷ், மகதீரா வில்லன் தேவ்கில், மும்பை வில்லன் சமீர் கோச், கோமல் சர்மா, வைபவ் உள்பட பலர் நடிக்கிறார்கள்.

  ஒளிப்பதிவு - சவுந்தர்ராஜன், இசை - அம்ரீஷ், பாடல்கள் - யுகபாரதி, பிரபுதேவா, கலை - ஆர்.கே.விஜய் முருகன், நடனம் - ஜானி, எடிட்டிங் - பென்னி, வசனம் - ‌ஷக்தி சிதம்பரம், ஸ்டண்ட் - கனல் கண்ணன், தயாரிப்பு - டி.சிவா, கதை, திரைக்கதை, இயக்கம் - ‌ஷக்தி சிதம்பரம்.‘சார்லி சாப்ளின்’ முதல் பாகத்தையும் இவர் தான் இயக்கினார். அவரிடம் படம் பற்றி கேட்ட போது....  “பிரபு தேவா நிக்கி கல்ராணி இருவருக்கும் திருப்பதியில் திரு மணம் நடக்க இருக்கிறது. அதற்காக இரண்டு பேரின் குடும்பத்தினரும் திருப்பதிக்கு போகிறார்கள். அப்போது நடக்கும் சம்பவங் களின் கலகலப்பான தொகுப்பே ‘சார்லி சாப்ளின்-2’ திருப்பதிக்கு போனால் திருப்பம் வரும் என்பார்கள். அது என்ன திருப்பம் என்பது படத்தின் சஸ்பென்ஸ்” என்றார்.

  படம் விரைவில் ரிலீசாக இருக்கிறது. #CharlieChaplin2 #Prabhudeva

  ×