தி கேரளா ஸ்டோரி பட நடிகை திடீரென மருத்துவமனையில் அனுமதி.. அதிர்ச்சியில் ரசிகர்கள்

நடிகை அதா சர்மா சமீபத்தில் 'தி கேரளா ஸ்டோரி' திரைப்படத்தில் நடித்திருந்தார்.இப்படம் சர்ச்சையை கிளப்பியதோடு வசூலையும் குவித்தது.
அதா சர்மா
அதா சர்மா
Published on

சிம்பு - நயன்தாரா நடிப்பில் வெளியான 'இது நம்ம ஆளு' படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடி தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை அதா சர்மா. இந்தி, தெலுங்கு, கன்னட மொழிப் படங்களில் நடித்து வரும் இவர் பிரபுதேவாவுடன் இணைந்து `சார்லி சாப்ளின்-2' படத்திலும் நடித்திருந்தார்.

சமீபத்தில் விபுல்ஷா தயாரிப்பில் இயக்குனர் சுதிப்டோ சென் இயக்கத்தில் அதா சர்மா நடித்த 'தி கேரளா ஸ்டோரி' திரைப்படம் சர்ச்சையை ஏற்படுத்தியது அதுமட்டுமல்லாமல் ரூ. 100 கோடிக்கு மேல் வசூலையும் குவித்தது. மேலும், இப்படத்தில் நடித்ததற்காக நடிகை அதா சர்மாவிற்கு மிரட்டல்கள் வந்ததாக அவர் கூறியிருந்தார்.

இந்நிலையில், நடிகை அதா சர்மா அவரது அடுத்த படத்திற்கான புரோமோஷன் நிகழ்ச்சியின் போது திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் மருத்துமவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு கடுமையான வயிற்று போக்கு, உணவு அலர்ஜி போன்ற பிரச்சினைகள் இருந்ததாகவும் இதையடுத்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com