என் மலர்

  சினிமா

  படத்திற்காக கவர்ச்சி அவதாரமெடுத்த அடா சர்மா
  X

  படத்திற்காக கவர்ச்சி அவதாரமெடுத்த அடா சர்மா

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பிரபுதேவாவுடன் `சார்லி சாப்ளின்-2' படத்தில் நடித்த நடிகை அடா சர்மா இந்தியில் நடிக்கும் புதிய படத்திற்காக எடுத்துக் கொண்ட கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டிருக்கிறார்.
  சிம்பு - நயன்தாரா நடிப்பில் வெளியான ‘இது நம்ம ஆளு’ படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடி தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை அடா சர்மா. இவர் கடைசியாக பிரபுதேவாவுடன் இணைந்து `சார்லி சாப்ளின்-2' படத்தில் நடித்திருந்தார்.

  மதுரையை பூர்வீகமாகக் கொண்ட இவர் மும்பையில் பிறந்து வளர்ந்தவர். இந்தி, தெலுங்கு, கன்னட மொழிப் படங்களில் நடித்து வருகிறார். இவர் அவ்வப்போது தனது கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவது வழக்கம். அந்த வகையில், நேற்று அவர் வெளியிட்டுள்ள கவர்ச்சி புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.  அடா சர்மா தற்போது `மேன் டூ மேன்' படத்தில் பெண்ணாக இருந்து ஆணாக மாறும் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அந்த படத்திற்காக எடுக்கப்பட்ட தனது படத்தை தான் அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த புகைப்படத்திற்கு பார்த்த ரசிகர்கள் அவரது உடலமைப்பை பாராட்டியும், சிலர் திட்டியும் கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர்.

  Next Story
  ×