என் மலர்

  சினிமா

  சார்லி சாப்ளின் - 2 படக்குழுவினரின் முக்கிய அறிவிப்பு
  X

  சார்லி சாப்ளின் - 2 படக்குழுவினரின் முக்கிய அறிவிப்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  அம்மா கிரியேஷன்ஸ் தயாரிப்பில் பிரபுதேவா, நிக்கி கல்ராணி நடிப்பில் உருவாகி இருக்கும் ‘சார்லி சாப்ளின் 2’ படக்குழுவினரின் முக்கிய அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. #CharlieChaplin2
  அம்மா கிரியேஷன்ஸ் பட நிறுவனம் அதிக பொருட்செலவில் தயாரித்துள்ள படம் ‘சார்லி சாப்ளின் 2’. இந்த படத்தின் முதல் பாகமான சார்லி சாப்ளின் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி மற்றும் பெங்காலி மற்றும் ஒரியா உட்பட இந்திய மொழிகள் பலவற்றில் ரீமேக் செய்யப்பட்டு வசூல் சாதனை புரிந்தது அனைவரும் அறிந்ததே.

  முதல் பாகத்தின் ஹீரோவான பிரபுதேவாவே இதன் இரண்டாம் பாகத்தில் நாயகனாக நடித்திருக்கிறார். கதாநாயகிகளாக நிக்கி கல்ராணி, அதா சர்மா நடித்திருக்கிறார்கள். முக்கிய கதாபாத்திரத்தில் பிரபு, சந்தனா, அரவிந்த் ஆகாஷ், விவேக் பிரசன்னா, ரவிமரியா, டி.சிவா ஆகியோருடன் வில்லன்களாக தேவ்கில், சமீர் கோச்சார் நடித்திருக்கிறார்கள்.  கதை திரைக்கதை வசனம் எழுதி ஷக்தி சிதம்பரம் இயக்கி இருக்கிறார். அம்ரிஷ் இசையமைத்திருக்கிறார். இப்படத்தை வரும் ஜனவரி 25ம் தேதி வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

  பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நேற்று இப்படத்தின் டிரைலர் வெளியானது. முன்னதாக சின்ன மச்சான் பாடல் யூடியூப்பில் 7 கோடிக்கு மேல் பார்வையாளர்களால் பார்க்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
  Next Story
  ×