search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எம்.எஸ்.பாஸ்கர்"

    • தம்பிக்கோட்டை, மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன படங்களை இயக்கிய ராகேஷ் இயக்கும் 'சாமானியன்' படத்தின் கதாநாயகனாக ராமராஜன் நடிக்கிறார்.
    • இப்படத்தில் ராமராஜனுடன் இணைந்து ராதாரவி மற்றும் எம்.எஸ்.பாஸ்கர் நடிக்கின்றனர்.

    தமிழ் திரையுலகின் முன்னணி கதாநாயகனாக திகழ்ந்த ராமராஜன் தற்போது நீண்ட இடைவேளைக்கு பிறகு மீண்டும் கதாநாயகனாக சாமானியன் என்ற படத்தில் நடிக்கிறார். இப்படத்தை தம்பிக்கோட்டை, மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன ஆகிய படங்களை இயக்கிய ராகேஷ் இயக்குகிறார். இதனை எட்செட்ரா என்டர்டெயின்மென்ட் சார்பில் வி.மதியழகன் தயாரிக்கிறார்.

    சாமானியன்

    சாமானியன்

     

    இதன் கதாநாயகியாக நக்சா சரண் நடிக்கிறார். மேலும் முக்கிய வேடங்களில் ராதாரவி, எம்.எஸ்.பாஸ்கர், ராஜாராணி பாண்டியன், மைம் கோபி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இப்படம் தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகள் மற்றும் இந்தியிலும் என ஐந்து மொழிகளில் தயாராகிறது.

    எம்.எஸ்.பாஸ்கர் 

    எம்.எஸ்.பாஸ்கர் 

     

    இப்படத்தின் டைட்டில் போஸ்டர் சமீபத்தில் வெளியான நிலையில் இந்த படத்தின் டீசர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழு உள்ளிட்ட பலரும் கலந்துக் கொண்டனர். இவ்விழாவில் எம்.எஸ்.பாஸ்கர் பேசும்போது, 'பாண்டவர்கள் 12 வருடம் வனவாசம் சென்றார்கள். ராமாயணத்தில் ராமன் 14 ஆண்டுகள் காட்டுக்கு சென்றான். அதேபோல இந்த ராமராஜன் பத்து ஆண்டுகள் கழித்து மீண்டும் வந்திருக்கிறார். அப்படி வனவாசம் சென்று வந்தவர்கள் அனைவருமே அரசாண்டதுபோல, இவரும் நிச்சயமாக அரசாள்வார்.

     

    எம்.எஸ்.பாஸ்கர் 

    எம்.எஸ்.பாஸ்கர் 

    இவர் நடித்த சோலை புஷ்பங்கள் படத்திலேயே நான் டப்பிங் கலைஞராக பணியாற்றி உள்ளேன். ஆனால் இப்போதுதான் முதன்முறையாக இவருடன் இணைந்து நடிக்கிறேன். இவர் எல்லாம் எதற்கு திரும்பவும் நடிக்க வருகிறார் என்று ராமராஜனை பார்த்து பலர் மீம்ஸ் போடுவதாக இங்கே சொன்னார்கள். நீங்கள் ஏன் சுவாசிக்க வேண்டும் என்று ஒருவரை பார்த்து கேள்வி கேட்பது எவ்வளவு அநாகரீகமான கேள்வியோ, ராமராஜனை பார்த்து இப்படி ஒரு கேள்வியை கேட்பதும் அதுபோலத்தான்" என்றார்.

    தமிழ் சினிமாவின் பிரபல குணச்சித்திர நடிகரான எம்.எஸ்.பாஸ்கர், குற்றவாளிகளுக்கு உச்சபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
    ராமேஸ்வரம் அருகே உள்ள வடகாடு கடலோர பகுதியில் மீனவர்கள் கடல் பாசி எடுக்க செல்வது வழக்கம். மீனவ பெண் ஒருவர் கடல் பாசி எடுக்க சென்ற போது கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

    இந்த செயலானது அப்பகுதியில் உள்ள இறால் கம்பெனியில் வேலை செய்யும் வட இந்தியர்களால் தான் நடந்துள்ளது என்று கூறப்படும் நிலையில் போலீஸார் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த கொலை சம்பவத்திற்கு பல தரப்பில் இருந்து கண்டனங்கள் எழுந்து வருகின்றன. 

    எம்.எஸ்.பாஸ்கர்
    எம்.எஸ்.பாஸ்கர்

    இந்நிலையில் பிரபல குணசித்தர மற்றும் நகைச்சுவை நடிகருமான எம்.எஸ்.பாஸ்கர் இந்த கொலை சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இவர் சமுக பிரச்சினைகளுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வருபவர். அவர் கூறுகையில், “போனில் ஏமாற்றுவது.. வங்கிக்கொள்ளை, எடிஎம் இயந்திரத்தை உடைப்பது, கற்பழிப்பு, கொலை போன்ற சகல குற்றங்களிலும் வட இந்தியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். தீர விசாரித்து குற்றவாளிகள் யாராயினும், எத்தனை பேராயினும் உச்சபட்ச தண்டனை வழங்க வேண்டுமென்று அரசாங்கத்தை கேட்டுக்கொள்கிறேன்” என்று கூறினார்.
    பிரபல காமெடி நடிகர் எம்.எஸ்.பாஸ்கர், பள்ளிகளில் நடக்கும் பாலியல் தொல்லை குறித்து ஆவேசமாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
    கோவையில் பாலியல் தொல்லையால் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலரும் வற்புறுத்தி வருகிறார்கள்.

    பாலியல் தொல்லை சம்பவங்களை பிரபல குணசித்திர மற்றும் நகைச்சுவை நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் கண்டித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இதற்கு முன்பு சென்னையில் ஆன்லைன் வகுப்பில் மாணவிகளுக்கு ஆசிரியரால் பாலியல் தொல்லை. மற்றுமொரு தனியார் பள்ளியில் சின்னஞ்சிறு மழலைகளை ஒரு ஆசிரியர் மிருகத்தனமாக தாக்கும் வீடியோ. தற்போது கோவையில் பள்ளி ஆசிரியரின் பாலியல் தொல்லையால் அந்த மாணவி தாள முடியாத மன உளைச்சலால் தூக்கிட்டு தற்கொலை. என்ன நடக்கிறது பள்ளிகளில்? குழந்தைகள் படிப்பதா இல்லையா?

    எம்.எஸ்.பாஸ்கர்

    சட்டம் தன் கடமையை செய்யும் என்பதை விட செய்தே ஆக வேண்டிய கட்டாயம் தற்போகடுமையான தண்டனை வழங்கப்பட்டே ஆகவேண்டும்து ஏற்பட்டிருக்கிறது. இப்படிப்பட்ட கயவர்களுக்காக எந்த வழக்கறிஞரும் ஆஜராகக்கூடாது. அந்த வக்கிரபுத்தி கொண்டவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட்டே ஆகவேண்டும். அதுவும் விரைவாக. இதுவே என் வேண்டுகோள்” என்று கூறி உள்ளார்.
    ×