search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தினகரனை ஆதரிக்கும் 3 எம்எல்ஏ-க்களிடம் விளக்கம் கேட்க அரசு கொறடா சபாநாயகருக்கு பரிந்துரை
    X

    தினகரனை ஆதரிக்கும் 3 எம்எல்ஏ-க்களிடம் விளக்கம் கேட்க அரசு கொறடா சபாநாயகருக்கு பரிந்துரை

    டிடிவி தினகரனை ஆதரிக்கும் எம்எல்ஏ-க்கள் ரத்தினசபாபதி, கலைச்செல்வன், பிரபு ஆகியோரிடம் விளக்கம் கேட்க அரசு கொறடா ராஜேந்திரன் சபாநாயகருக்கு பரிந்துரை செய்துள்ளார். #ADMK
    சென்னை:

    முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை எதிர்த்து கவர்னரிடம் மனு கொடுத்த 18 அதிமுக எம்எல்ஏ-க்களை சபாநாயகர் தனபால் தகுதி நீக்கம் செய்து நடவடிக்கை எடுத்தார். இந்த தகுதி நீக்க நடவடிக்கை சரியானதுதான் என்று சென்னை ஐகோர்ட் தீர்ப்பளித்தது. இதனால் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை எதிர்த்து, டிடிவி தினகரனை ஆதரித்த 18 எம்எல்ஏ-க்களும் பதவியை இழந்துள்ளனர்.

    இந்த சூழ்நிலையில் அதிமுக எம்எல்ஏ-க்கள் ரத்தினசபாபதி, பிரபு, கலைச்செல்வன் மூன்று பேரும் டிடிவி தினகரனுக்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவித்துள்ளனர். அது மட்டுமின்றி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் இருவரையும் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். அதிமுகவில் இருந்து கொண்டே அதிமுக அரசை ஊழல் அரசு என்று குற்றம் சாட்டினார்கள்.



    இதனால் அவர்கள் பதவியை பறிக்க அதிமுக மூத்த தலைவர்கள் தீவிரமாக உள்ளனர். அந்த மூன்று எம்எல்ஏ-க்களையும் சமரசம் செய்ய சில மூத்த அதிமுக தலைவர்கள் முயன்றனர். ஆனால் மூன்று எம்எல்ஏ-க்களும் டிடிவி தினகரனுக்கு ஆதரவு தெரிவிக்கும் நிலையில் இருந்து பின் வாங்கவில்லை. எனவே அவர்கள் மூன்று பேரையும் அரசியல் ரீதியாக முழுமையாக ஓரம் கட்டும் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன. 3 எம்எல்ஏ-க்கள் மீதும் எந்த நேரத்திலும் தகுதி நீக்கம் நடவடிக்கை பாயும் என்று கூறப்பட்டது.

    இந்நிலையில் 3 எம்எல்ஏ- க்கள் ரத்தினசபாபதி, கலைச்செல்வன், பிரபு ஆகியோரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப அரசு கொறடா ராஜேந்திரன் சபாநாயகருக்கு பரிந்துரை செய்துள்ளார். அதில் ‘‘கட்சித்தாவல் தடை சட்டத்தின்கீழ் ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது என விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப வேண்டும்’’ என்று குறிப்பிட்டுள்ளார். #ADMK #Karunas #Kalaiselvan #Prabhu #RathinaSabapathy
    Next Story
    ×