search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sivaji"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பாம்பு பைப்லைனுக்குள் புகுந்து கொண்டதால் மக்கள், அதனுள் நீரை செலுத்தினர்
    • பாம்பின் வாய் மீது தன் வாயை வைத்து அதுல் பலமாக ஊதினார்

    மத்திய பிரதேச மாநிலத்தின் நர்மதா நதிக்கரையை அடுத்து உள்ள நகரம் நர்மதாபுரம்.

    நர்மதாபுரத்தில் உள்ள குடியிருப்பு பகுதி ஒன்றில் ஒரு பாம்பு நுழைந்தது. அது அப்பகுதியில் உள்ள பைப்லைன் ஒன்றில் நுழைந்து விட்டதால், அதனை விரட்ட அங்குள்ள குடியிருப்புவாசிகள் முயன்றனர். ஆனால், உள்ளே சென்ற பாம்பு வெளியே வராததால், பூச்சிகொல்லி மருந்தை நீரில் கலந்து அந்த பைப்லைனில் உள்ளே செலுத்தினர்.

    இதில் மயங்கிய அந்த பாம்பு உள்ளேயே சுருண்டு கிடந்தது. இதை கண்டு செய்வதறியாது திகைத்த மக்கள் அப்பகுதியில் உள்ள காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

    அதுல் சர்மா (Atul Sharma) எனும் கான்ஸ்டபிள் அங்கு விரைந்து வந்தார். அவர் அந்த பாம்பின் நிலையை சிறிது நேரம் கூர்ந்து கவனித்தார்.

    பிறகு மெதுவாக அதை கையில் பிடித்து அதன் வாயில் தன் வாயை வைத்து வேகமாக ஊதினார். அவ்வப்போது நீரையும் அதன் மேல் தெளித்தார். சுற்றி நின்று அவரது நடவடிக்கைகளை மக்கள் பார்த்து கொண்டிருக்கும் போதே அந்த பாம்பு மெதுவாக நகர ஆரம்பித்தது. விஷத்தன்மையற்றதாக கூறப்படும் அந்த பாம்பு, சிறிது நேரத்தில் அங்கிருந்து ஊர்ந்து சென்றது.

    இதை கண்ட அப்பகுதி மக்கள் அதுல் சர்மாவை மிகவும் பாராட்டினர்.

    இது குறித்து பேசும் போது, இந்த வித்தையை "டிஸ்கவரி" சேனலை பார்த்து கற்று கொண்டதாகவும், இது போல் எண்ணற்ற பாம்புகளை தாம் காப்பாற்றியுள்ளதாகவும், அதுல் தெரிவித்தார்.

    அதுல் இவ்வாறு கூறினாலும், கால்நடை மருத்துவர்கள் அவர் கடைபிடித்த "சிபிஆர்" (Cardiopulmonary Resucitation) எனப்படும் இந்த முறையில் பாம்பை உயிர் பெற செய்ய முடியாது என்றும் இச்சம்பவத்தில் அப்பாம்பிற்கு தானாகவே நினைவு திரும்பியிருக்கலாம் என்றும் தெரிவித்தனர்.

    தமிழ் திரையுலக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து 2007ல் வெளிவந்த "சிவாஜி" திரைப்படத்தில் இந்த சிகிச்சை முறையை கையாண்டு நடிகர் ரகுவரன் உயிர் மீட்கும் காட்சிகள் பிரபலமாக பேசப்பட்டது. சில நாட்களுக்கு முன் ஒரு குரங்கு இதே முறையில் காப்பாற்றப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகின.

    தற்போது அதுலின் இந்த நடவடிக்கை அங்குள்ளவர்களால் படமாக்கப்பட்டு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • இயக்குனர் சங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வெளியான திரைப்படம் சிவாஜி.
    • இப்படம் 2007-ஆம் ஆண்டின் பிளாக் பஸ்டர் திரைப்படமாக அமைந்தது.

    இயக்குனர் சங்கரின் பிரம்மாண்ட இயக்கத்தில் ரஜினிகாந்த், ஸ்ரேயா சரண், விவேக் உள்ளிட்ட பலர் நடித்து கடந்த 2007-ஆம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் 'சிவாஜி'. இந்த படம் அந்த ஆண்டின் பிளாக் பஸ்டர் திரைப்படங்களில் ஒன்றாக அமைந்தது.

    ஏ.வி.எம் புரொடக்‌ஷன் நிறுவனம் தயாரித்த 'சிவாஜி' திரைப்படம் வெளியாகி இன்றுடன் 15 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதை கொண்டாடும் விதமாக ஏ.வி.எம். புரொடக்‌ஷன் கடந்த 13-ஆம் தேதி முதல் சமூக வலைதளப்பக்கத்தில் 'சிவாஜி' திரைப்படத்தின் சுவாரஸ்யமான பல புகைப்படங்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறது.

     இந்நிலையில், 15 ஆண்டுகள் நிறைவை கொண்டாடும் விதமாக இயக்குனர் சங்கர் இன்று நடிகர் ரஜினிகாந்தை சந்தித்துள்ளார். மேலும், சந்திப்பின் போது எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படமானது இணையத்தில் வைரலாகி வருகிறது.

    சிவாஜியின் பேரனும் நடிகருமான விக்ரம் பிரபு, சிவாஜியுடன் என்னை ஒப்பிடாதீர்கள் என்று கூறியிருக்கிறார். #VikramPrabhu #Sivaji
    60 வயது மாநிறம் படத்தின் வெற்றிக்கு பிறகு அதிரடி போலீசாக விக்ரம் பிரபு நடிக்கும் படம் துப்பாக்கி முனை. இதில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக ஹன்சிகா நடித்துள்ளார்.

    கலைப்புலி எஸ்.தாணு தயாரித்திருக்கும் இந்த படத்தை தினேஷ் செல்வராஜ் இயக்கி உள்ளார். பொதுவாகவே வாரிசாக சினிமாவுக்குள் நுழைபவர்களுக்கு சினிமாவில் அழுத்தம் அதிகமாக இருக்கும்.

    சிவாஜி குடும்பத்தில் இருந்து வந்திருப்பதால் விக்ரம் பிரபுவுக்கு அதிகமாகவே இருக்கிறதாம். இதுபற்றி அவர் கூறும்போது, ‘எனக்கான பாதையை நானே உருவாக்கிக் கொண்டு இருக்கிறேன். அதுவே எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு. 



    ஏன்னா, எது பண்ணாலும் இப்போலாம் கம்பேர் பண்றாங்க. ‘துப்பாக்கி முனை’ படத்துக்கும் ‘தங்கப்பதக்கம்‘ படத்துக்கும் ஏதாவது ஒற்றுமை இருக்கான்னு என்கிட்டயே கேட்குறாங்க. சிவாஜியோட நடிப்பை யாராலும் கொண்டு வரமுடியாது. அவர் வேற, நான் வேற’ என்று கூறி இருக்கிறார்.
    சிவாஜி, வாணி ஸ்ரீ, பாலாஜி, சிஐடி சகுந்தலா நடிப்பில் வெளியான ‘வசந்த மாளிகை’ திரைப்படம் மீண்டும் புதிய பரிமாணத்தில் வெளியாக இருக்கிறது. #Sivaji #VasanthaMaligai
    சிவாஜி கணேசன், வாணிஸ்ரீ ஜோடியாக நடித்த காலத்தால் அழியாத காதல் காவியம் ‘வசந்த மாளிகை’ திரைப்படம். பாலாஜி, சி.ஐ.டி.சகுந்தலா ஆகியோர் இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். அன்றைய கால கட்டத்தில் கலரில் வந்து வெள்ளி விழா கொண்டாடிய படமிது.

    இதில் கே.வி.மகாதேவன் இசையில், கவியரசு கண்ணதாசன் எழுதிய, மயக்கம் என்ன..., கலைமகள் கைபொருளே..., இரண்டு மனம் வேண்டும்..., ஏன் ஏன் ஏன்... ஆகிய பாடல்களை டி.எம்.சௌந்தரராஜன், பி.சுசீலா, எல்.ஆர்.ஈஸ்வரி ஆகியோர் பாடி இன்றளவும் சூப்பர் ஹிட்டாக வலம் வந்து கொண்டே இருக்கிறது.



    இந்த படத்தை அன்று டி.ராமாநாயுடு தயாரிக்க பிரகாஷ்ராவ் இயக்கி இருந்தார். இப்படம் வி.சி.குகநாதன் மேற்பார்வையில் டிஜிட்டல், ஒலி, ஒளி அமைப்புகளை சீராக்கி, கலர் சரிபார்த்து, புதிய பரிமாணத்தில் தயாராகி உள்ளது. இந்த படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் அதிக திரையரங்குகளில் வெளியிட உள்ளது.
    சிவாஜியின் பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளதற்கு நடிகர் பிரபு, நடிகர் சங்க பொதுச்செயலாளர் விஷால் நன்றி தெரிவித்து உள்ளனர். #SivajiGanesan
    எங்கள் குடும்பத்தின் கோரிக்கை என்பதைவிட தமிழக மக்களின் நீண்ட நாள் கோரிக்கை இது. தமிழர்களின் வீடுகளில் ஒரு அப்பாவாக, ஒரு தாத்தாவாக, ஒரு அண்ணனாக குடும்பத்தில் ஒருவராக வாழ்ந்துகொண்டு இருக்க கூடியவர் எங்கள் தந்தை.

    அந்த வகையில் தமிழக ரசிகர்கள் சார்பாக இந்த அறிவிப்புக்கு முதல் அமைச்சர், துணை முதல் அமைச்சர், செய்தித்துறை அமைச்சர் கட்ம்பூர்ராஜு உள்ளிட்ட அனைவருக்கும் எங்கள் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் என்றார் பிரபு.

    தமிழ் சினிமாவின் அடையாளங்களில் முக்கியமானவர் சிவாஜி அவர்கள். காலத்தால் அவரது புகழ் மறைந்துவிடக்கூடாது என்பதற்காக அவரது பிறந்த நாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று தமிழக அரசு அறிவித்து இருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.

    இதற்காக முயற்சி எடுத்த தமிழக முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சர், செய்தித்துறை அமைச்சர் உள்ளிட்ட அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என்று விஷால் கூறியுள்ளார்.
    நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மற்றும் முன்னாள் அமைச்சர் ராமசாமி படையாச்சியின் பிறந்தநாளை அரசு விழாவாக கொண்டாடப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். #TNAssembly
    சென்னை:

    தமிழக சட்டசபையில் விதி எண் 110-ன் கீழ் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று சில அறிவிப்புகளை வெளியிட்டார். அதன்படி, தமிழ் சினிமாவில் நடிப்பின் களஞ்சியமாக போற்றப்பட்டு வரும் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பிறந்தநாளான அக்டோபர் 1-ம் தேதி அரசு விழாவாக கொண்டாடப்படும் என தெரிவித்துள்ளார்.



    மேலும், பழம்பெரும் அரசியல்வாதியான ராமசாமி படையாச்சியின் பிறந்தநாளான செப்டம்பர் 16-ம் தேதியும் அரசு விழாவாக கொண்டாடப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

    ராமசாமி படையாச்சி, தமிழகத்தில் உள்துறை அமைச்சராக இருந்தவர் என்பதும், திண்டிவனம் மக்களவை தொகுதியில் வென்று நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. #TNAssembly
    ×