என் மலர்

  சினிமா

  புதிய பரிமாணத்தில் வெளியாகும் வசந்த மாளிகை
  X

  புதிய பரிமாணத்தில் வெளியாகும் வசந்த மாளிகை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சிவாஜி, வாணி ஸ்ரீ, பாலாஜி, சிஐடி சகுந்தலா நடிப்பில் வெளியான ‘வசந்த மாளிகை’ திரைப்படம் மீண்டும் புதிய பரிமாணத்தில் வெளியாக இருக்கிறது. #Sivaji #VasanthaMaligai
  சிவாஜி கணேசன், வாணிஸ்ரீ ஜோடியாக நடித்த காலத்தால் அழியாத காதல் காவியம் ‘வசந்த மாளிகை’ திரைப்படம். பாலாஜி, சி.ஐ.டி.சகுந்தலா ஆகியோர் இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். அன்றைய கால கட்டத்தில் கலரில் வந்து வெள்ளி விழா கொண்டாடிய படமிது.

  இதில் கே.வி.மகாதேவன் இசையில், கவியரசு கண்ணதாசன் எழுதிய, மயக்கம் என்ன..., கலைமகள் கைபொருளே..., இரண்டு மனம் வேண்டும்..., ஏன் ஏன் ஏன்... ஆகிய பாடல்களை டி.எம்.சௌந்தரராஜன், பி.சுசீலா, எல்.ஆர்.ஈஸ்வரி ஆகியோர் பாடி இன்றளவும் சூப்பர் ஹிட்டாக வலம் வந்து கொண்டே இருக்கிறது.  இந்த படத்தை அன்று டி.ராமாநாயுடு தயாரிக்க பிரகாஷ்ராவ் இயக்கி இருந்தார். இப்படம் வி.சி.குகநாதன் மேற்பார்வையில் டிஜிட்டல், ஒலி, ஒளி அமைப்புகளை சீராக்கி, கலர் சரிபார்த்து, புதிய பரிமாணத்தில் தயாராகி உள்ளது. இந்த படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் அதிக திரையரங்குகளில் வெளியிட உள்ளது.
  Next Story
  ×