ரஜினியை சந்தித்த இயக்குனர் சங்கர்.. காரணம் தெரியுமா?

இயக்குனர் சங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வெளியான திரைப்படம் சிவாஜி. இப்படம் 2007-ஆம் ஆண்டின் பிளாக் பஸ்டர் திரைப்படமாக அமைந்தது.
ரஜினியை சந்தித்த இயக்குனர் சங்கர்.. காரணம் தெரியுமா?
Published on

இயக்குனர் சங்கரின் பிரம்மாண்ட இயக்கத்தில் ரஜினிகாந்த், ஸ்ரேயா சரண், விவேக் உள்ளிட்ட பலர் நடித்து கடந்த 2007-ஆம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் 'சிவாஜி'. இந்த படம் அந்த ஆண்டின் பிளாக் பஸ்டர் திரைப்படங்களில் ஒன்றாக அமைந்தது.

ஏ.வி.எம் புரொடக்‌ஷன் நிறுவனம் தயாரித்த 'சிவாஜி' திரைப்படம் வெளியாகி இன்றுடன் 15 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதை கொண்டாடும் விதமாக ஏ.வி.எம். புரொடக்‌ஷன் கடந்த 13-ஆம் தேதி முதல் சமூக வலைதளப்பக்கத்தில் 'சிவாஜி' திரைப்படத்தின் சுவாரஸ்யமான பல புகைப்படங்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறது.

 இந்நிலையில், 15 ஆண்டுகள் நிறைவை கொண்டாடும் விதமாக இயக்குனர் சங்கர் இன்று நடிகர் ரஜினிகாந்தை சந்தித்துள்ளார். மேலும், சந்திப்பின் போது எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படமானது இணையத்தில் வைரலாகி வருகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com