search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Nirav Modi"

    பல்லாயிரம் கோடி ரூபாய் மோசடி வழக்கில் சிக்கியுள்ள வைர வியாபாரி நிரவ் மோடியின் சொகுசு கார்களையும், 173 ஓவியங்களையும் ஏலத்தில் விற்பனை செய்வதற்கு வருமான வரித்துறை நடவடிக்கை எடுத்தது. #NiravModi #ArtCollection #Auction #PNBFraud
    புதுடெல்லி:

    பல்லாயிரம் கோடி ரூபாய் மோசடி வழக்கில் சிக்கியுள்ள வைர வியாபாரி நிரவ் மோடியின் சொகுசு கார்களையும், 173 ஓவியங்களையும் ஏலத்தில் விற்பனை செய்வதற்கு வருமான வரித்துறை நடவடிக்கை எடுத்தது. இதற்கான அனுமதியை மும்பை தனிக்கோர்ட்டு வழங்கியது.



    இதையடுத்து அவற்றை அடுத்த சில தினங்களில் மத்திய அமலாக்கத்துறையும், வருமான வரித்துறையும் ஏலத்தில் விற்பனை செய்ய உள்ளன. ஓவியங்கள் மட்டுமே ரூ.57 கோடியே 72 லட்சம் மதிப்புடையவை என தகவல்கள் கூறுகின்றன. ரோல்ஸ் ராய்ஸ், போர்ஸ், மெர்சிடஸ், டயோட்டா பார்ஜூனர் என 11 சொகுசு கார்களும் ஏலத்தில் விற்பனை செய்யப்பட உள்ளன. இவற்றின் விற்பனை தொகை, அரசு கருவூலத்தில் டெபாசிட் செய்யப்படும்.    #NiravModi #ArtCollection #Auction #PNBFraud
    லண்டன் நீதிமன்றத்தில் நிரவ் மோடியின் ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டதால், எச்.எம். ஜெயில் கொண்டு செல்லப்பட்டுள்ளார். #NiravModi
    லண்டன்:

    இந்தியாவின் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த பிரபல வைர வியாபாரி நிரவ் மோடியும் (வயது 48), அவருடைய நெருங்கிய உறவினரான மெகுல் சோக்‌ஷியும் பஞ்சாப் நே‌ஷனல் வங்கியில் ரூ.13,000 கோடிக்கு மேல் கடன் பெற்று மோசடி செய்துவிட்டு வெளிநாட்டுக்கு தப்பி விட்டனர். இந்த மோசடி தொடர்பாக சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

    தப்பி ஓடிய நிரவ் மோடி பிரிட்டனில் இருப்பது தெரியவந்தது. அவரை நாடு கடத்தி கொண்டு வருவது தொடர்பான நடவடிக்கைகளை இந்திய அரசு மேற்கொண்டது. இது தொடர்பாக அமலாக்கத்துறை சார்பில் பிரிட்டன் உள்துறை அமைச்சகத்திடம் மனு அளிக்கப்பட்டது. இந்த மனுவில் சமீபத்தில் உள்துறை அமைச்சகம் கையெழுத்திட்டு, லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றத்திற்கு அனுப்பியது. இவ்வழக்கை விசாரணைக்கு ஏற்ற நீதிமன்றம், நிரவ் மோடியை கைது செய்ய வாரண்ட் பிறப்பித்தது.

    இதையடுத்து நிரவ் மோடியை லண்டன் போலீசார் இன்று கைது செய்தனர். அவரை இன்று வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார்கள். அப்போது இந்திய மதிப்பில் ரூ.4.50 கோடி பிணைத்தொகை செலுத்த தயாராக இருப்பதாக நிரவ் மோடி தரப்பு வாதத்தை முன்வைத்தது.

    நிரவ் மோடி சார்பில் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து மார்ச் 29 வரை காவலில் வைக்க லண்டன் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால் நிரவ் மோடி வாண்ட்ஸ்வொர்த்தில் உள்ள எச்.எம். ஜெயிலுக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் தனி அறையில் அடைக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. #NiravModiExtradition #LondonCourt
    இந்தியாவில் பண மோசடியில் ஈடுபட்டு பிரிட்டனுக்கு தப்பிச் சென்ற தொழிலதிபர் நிரவ் மோடி லண்டனில் கைது செய்யப்பட்டுள்ளார். #NiravModiExtradition #LondonCourt
    லண்டன்:

    இந்தியாவின் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த பிரபல வைர வியாபாரி நிரவ் மோடியும் (வயது 48), அவருடைய நெருங்கிய உறவினரான மெகுல் சோக்‌ஷியும் பஞ்சாப் நே‌ஷனல் வங்கியில் ரூ.13,000 கோடிக்கு மேல் கடன் பெற்று மோசடி செய்துவிட்டு வெளிநாட்டுக்கு தப்பி விட்டனர். இந்த மோசடி தொடர்பாக சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

    தப்பி ஓடிய நிரவ் மோடி பிரிட்டனில் இருப்பது தெரியவந்தது. அவரை நாடு கடத்தி கொண்டு வருவது தொடர்பான நடவடிக்கைகளை இந்திய அரசு மேற்கொண்டது. இது தொடர்பாக அமலாக்கத்துறை சார்பில் பிரிட்டன் உள்துறை அமைச்சகத்திடம் மனு அளிக்கப்பட்டது. இந்த மனுவில் சமீபத்தில் உள்துறை அமைச்சகம் கையெழுத்திட்டு, லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றத்திற்கு அனுப்பியது. இவ்வழக்கை விசாரணைக்கு ஏற்ற நீதிமன்றம், நிரவ் மோடியை கைது செய்ய வாரண்ட் பிறப்பித்தது.



    இதையடுத்து நிரவ் மோடியை லண்டன் போலீசார் இன்று கைது செய்தனர். அவரை இன்று வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவார்கள் என்றும் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. நீதிமன்றத்தில் நிரவ் மோடியின் மீதான பண மோசடி குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், அவரை நாடு கடத்த பிரிட்டன் அரசு உத்தரவிடும்.  #NiravModiExtradition #LondonCourt
    பணமோசடி வழக்கில் இந்திய அரசால் தேடப்படும் தொழிலதிபர் நிரவ் மோடி மீதான குற்றச்சாட்டை ஆய்வு செய்த லண்டன் நீதிமன்றம், அவரை கைது செய்ய வாரண்ட் பிறப்பித்துள்ளது. #NiravModiExtradition #LondonCourt
    லண்டன்:

    இந்தியாவின் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த பிரபல வைர வியாபாரி நிரவ் மோடியும் (வயது 48), அவருடைய நெருங்கிய உறவினரான மெகுல் சோக்‌ஷியும் பஞ்சாப் நே‌ஷனல் வங்கியில் ரூ.13,000 கோடிக்கு மேல் கடன் பெற்று மோசடி செய்துவிட்டு வெளிநாட்டுக்கு தப்பி விட்டனர். இந்த மோசடி தொடர்பாக சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

    தப்பி ஓடிய நிரவ் மோடியை இந்தியாவுக்கு கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், அவர் எந்த நாட்டில் இருக்கிறார் என்பது தொடர்பாக மாறுபட்ட தகவல்கள் வெளியாகின. பின்னர் நிரவ் மோடி பிரிட்டனில் இருப்பதாக தெரியவந்தது. அவரை இந்தியாவிற்கு கொண்டு வருவது தொடர்பாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக மத்திய அரசு பாராளுமன்றத்தில் தெரிவித்தது.

    அத்துடன் நிரவ் மோடியை நாடு கடத்துவது தொடர்பாக அமலாக்கத்துறை சார்பில் பிரிட்டன் உள்துறை அமைச்சகத்திடம் மனு அளிக்கப்பட்டது. இந்த மனுவில் உள்துறை அமைச்சகம் கையெழுத்திட்டு, அமலாக்கத்துறையின் கோரிக்கையை லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றத்திற்கு அனுப்பியது. இவ்வழக்கை விசாரணைக்கு ஏற்ற நீதிமன்றம், நிரவ் மோடியை கைது செய்ய வாரண்ட் பிறப்பித்திருப்பதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.



    இதையடுத்து நிரவ் மோடி விரைவில் கைது செய்யப்படலாம் என தெரிகிறது. அவரை கைது செய்தபிறகு, வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றத்தில் அவர் மீதான வழக்கின் விசாரணை தொடங்கும். நீதிமன்றத்தில் நிரவ் மோடியின் மீதான பண மோசடி குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், அவரை நாடு கடத்த பிரிட்டன் அரசு உத்தரவிடும்.  #NiravModiExtradition #LondonCourt
    வைர வியாபாரி நிரவ் மோடியின் மனைவி ஆமி மோடிக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்டை பிறப்பித்து உத்தரவிட்டனர். #PNBFraud #NiravModi
    மும்பை:

    வைர வியாபாரி நிரவ் மோடி மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியில் கடன் வாங்கி மோசடியில் ஈடுபட்டு தற்போது லண்டனில் தலைமறைவாக உள்ளார். அவருக்கு எதிராக அமலாக்கத் துறையினர் சமீபத்தில் குற்றப்பத்திரிகையை மும்பை சிறப்பு கோர்ட்டில் தாக்கல் செய்தனர். மேலும் நிரவ் மோடி மோசடி செய்த பணத்தில் அவரது மனைவி ஆமி மோடி நியூயார்க்கில் உள்ள சென்டரல் பார்க் பகுதியில் சொத்து வாங்கி இருப்பது அமலாக்கத் துறையினர் நடத்திய விசாரணையில் தெரியவந்தது.

    இதையடுத்து அவருக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்டு பிறப்பிக்க கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்த கோர்ட்டு நிரவ் மோடியின் மனைவி ஆமி மோடிக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்டை பிறப்பித்து உத்தரவிட்டனர். #PNBFraud #NiravModi 
    நிரவ்மோடி ரூ.16 கோடியில் தொழில் முதலீடு செய்து பிரிட்டனில் தங்குவதற்கு கோல்டன் விசாவை பெற்றுள்ளார். #NiravModi #GoldenVisa
    லண்டன்:

    மும்பையை சேர்ந்த பிரபல வைர வியாபாரி நிரவ்மோடி, அவரது உறவனர் மெகுல்கோக்சி ஆகியோர் பஞ்சாப் நே‌ஷனல் வங்கியில் ரூ.13 ஆயிரம் கோடி மோசடி செய்தனர்.

    பின்னர் அவர்கள் இருவரும் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் வெளிநாட்டுக்கு தப்பி ஓடிவிட்டனர். அவர்கள் மீது அமலாக்கப்பிரிவு மற்றும் சி.பி.ஐ. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இருவரின் பாஸ்போர்ட்டும் ரத்து செய்யப்பட்டது.

    அவர்களை வெளிநாட்டில் இருந்து இந்தியாவுக்கு கொண்டு வருவதற்காக சர்வதேச போலீசின் உதவியும் நாடப்பட்டது. அதற்கான சட்ட நடைமுறைகளை மேற்கொண்டு வந்தனர்.

    அதே நேரத்தில் அவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்பதும் தெரியாமல் இருந்தது. இதில் நிரவ்மோடி அமெரிக்காவில் நியூயார்க்கில் இருந்ததாகவும், பின்னர் ஹாங்ஹாங்கில் இருந்ததாகவும் அவரை பற்றி தகவல்கள் வெளிவந்தன. ஆனாலும் அதை உறுதிப்படுத்த முடியவில்லை.

    இந்த நிலையில் நிரவ்மோடி லண்டனில் வீடு எடுத்து தங்கி இருப்பது இப்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் லண்டனில் உள்ள ஆக்ஸ்போர்டு தெருவில் 33 மாடி குடியிருப்பில் 3 படுக்கை கொண்ட வீட்டை வாங்கி தங்கி இருப்பது தெரியவந்தது.

    அங்கு தனது வைர வியாபார தொழில் அலுவலகம் செயல்படுவதாக குறிப்பிட்டுள்ளார். இந்த தகவலை பிரிட்டன் பத்திரிகை ஒன்று படத்துடன் வெளியிட்டது.

    இதற்கு முன்பு நிரவ்மோடி மீசை இல்லாமல் இருந்து வந்தார். தற்போது தன்னை அடையாளம் காணக்கூடாது என்பதற்காக மீசை வளர்த்திருந்தார். அவர் நாய் ஒன்றுடன் அந்த பகுதியில் வாக்கிங் செல்வதை படம் பிடித்து அந்த பத்திரிகை செய்து வெளியிட்டு இருந்தது.

    அவர் லண்டனுக்கு எப்படி வந்தார். லண்டனில் தங்குவதற்கு எப்படி அனுமதி கிடைத்தது என்பது போன்ற விவரங்கள் இப்போது கிடைத்துள்ளது.

    லண்டனில் தொழில் செய்வதற்கும், படிப்பதற்கும், வேலை பார்ப்பதற்கும் சிறப்பு விசா வழங்கப்படுகிறது. இதில் தொழில் செய்வதற்கான விசாவை நிரவ்மோடி பெற்றுள்ளார்.

    அதாவது ஒரு நபர் ரூ.16 கோடி அளவிற்கு பிரிட்டனில் தொழில் முதலீடு செய்வதாக இருந்தால் அவருக்கு கோல்டன் விசா என்ற தங்கும் அனுமதி விசா வழங்கப்படும். அதன்படி ரூ.16 கோடியில் முதலீடு செய்து நிரவ்மோடி இந்த விசாவை பெற்றுள்ளார்.

    கைக்கடிகாரம் மற்றும் நகைகள் விற்பனை செய்வதாக கூறி இந்த முதலீடை செய்திருக்கிறார். அதற்கான வர்த்தக கடையை தொடங்குவதற்கு கல்லூரி சாலை, ஸ்காட்டிஸ் பிராவிடன்ட் கல்ஸ் என்ற இடத்தில் கடை முகவரியையும் வழங்கி உள்ளார். அங்கு கடந்த ஆண்டு மே மாதம் கடை தொடங்கப்பட்டுள்ளது.

    இந்த விசா எப்போது பெறப்பட்டது என்ற விவரம் தெரியவில்லை. ஆனால் அவர் இந்தியாவில் இருந்து தப்பி ஓடுவதற்கு முன்பே இந்த விசாவை பெற்றிருக்கிறார். இதன்படி அவர் 5 ஆண்டுகள் லண்டனில் தங்கி இருக்க முடியும். முதலீட்டை மேலும் அதிகரித்தால் அவர் நிரந்தரமாக தங்குவதற்கு விசா வழங்கப்படும்.

    நிரவ்மோடியின் பாஸ்போர்ட் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ரத்து செய்யப்பட்டது. ஆனாலும் நவம்பர் மாதம் தான் இந்தியா முறைப்படி சர்வதேச போலீசுக்கு தகவல் அனுப்பி ரெட் கார்னர் நோட்டீஸ் வெளியிட்டது.

    எனவே அதுவரை இந்திய பாஸ்போர்ட்டிலேயே பல இடங்களுக்கும் சென்று வந்துள்ளார். கடந்த நவம்பர் மாதம் பெல்ஜியம் நாட்டில் தங்குவதற்கு அடைக்கலம் கேட்டு விண்ணப்பமும் வழங்கி இருக்கிறார்.

    பிரிட்டனில் பெற்ற கோல்டன் விசா அவருடைய பாஸ்போர்ட் முடக்கப்படுவதற்கு முன்பே பெற்றதாகும். எனவே அவர் 5 ஆண்டு லண்டனில் தங்குவதற்கு எந்த சிக்கலும் ஏற்படாது. அதே நேரத்தில் அவர் லண்டனில் இருந்து வேறு நாடுகளுக்கு சட்ட ரீதியாக பயணம் செய்ய முடியாது.

    ஆனாலும் பிரிட்டன் சட்டத்தின்படி இந்தியா அணுகி அவரை இந்தியா கொண்டுவருவதற்கு வாய்ப்புகள் உள்ளன. எனவே அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #NiravModi #GoldenVisa

    வங்கி கடன் மோசடி வழக்கில் சிக்கி இந்தியாவை விட்டு தப்பிச் சென்ற தொழிலதிபர் நிரவ் மோடி, தனது வங்கிக் கணக்கில் இருந்து ரூ.934 கோடியை வேறு வங்கி கணக்குகளுக்கு மாற்றம் செய்திருப்பதாக குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #NiravModi #PNBFraudCase #MoneyTransferred
    மும்பை:

    இந்தியாவின் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த பிரபல வைர வியாபாரி நிரவ் மோடியும் (வயது 48), அவருடைய நெருங்கிய உறவினரான மெகுல் சோக்‌ஷியும் பஞ்சாப் நே‌ஷனல் வங்கியில் ரூ.13,000 கோடிக்கு மேல் கடன் பெற்று மோசடி செய்துவிட்டு வெளிநாட்டுக்கு தப்பி விட்டனர். இந்த மோசடி தொடர்பாக சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. பிரிட்டனில் உள்ள நிரவ் மோடியை இந்தியாவிற்கு கொண்டு வரும் நடவடிக்கையை மத்திய அரசு துரிதப்படுத்தி உள்ளது.

    இந்நிலையில், சமீபத்தில் நிரவ் மோடி உள்ளிட்டோருக்கு எதிராக அமலாக்கத்துறை மும்பை கோர்ட்டில் கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. அதில், நிரவ் மோடியின் மனைவி அமி, பணத்தை கையாண்ட விதம் குறித்தும், புதிய ஆதாரங்கள் குறித்தும் தலைமறைவு பொருளாதார குற்றவாளிகள் சட்டத்தின் கீழ் புதிய குற்றச்சாட்டுகளையும் அமலாக்கத்துறை பதிவு செய்துள்ளது.



    இதில் நிரவ் மோடி, தனது வங்கிக்கணக்கில் இருந்த ரூ.934 கோடியினை, வெளிநாட்டில் இருந்து பராமரிக்கப்படும் மற்ற வங்கிக் கணக்குகளுக்கு மாற்றியுள்ளார் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ரூ.934 கோடியில், ரூ.560 கோடி நிரவ் மோடியின் மற்றொரு வங்கிக்கணக்கிற்கும், ரூ.174 கோடியை அவரது தந்தை தீபக் மோடியின் கணக்கிலும், ரூ.200 கோடியை மனைவி அமியின் வங்கிக்கணக்கிலும் போட்டுள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #NiravModi #PNBFraudCase #MoneyTransferred
    வங்கி மோசடி வழக்கில் நிரவ் மோடி உள்ளிட்டோருக்கு எதிராக அமலாக்கத்துறை மும்பை கோர்ட்டில் கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. #NiravModi #PNBScam
    மும்பை:

    பஞ்சாப் நேஷனல் வங்கியை ரூ.13 ஆயிரம் கோடி அளவுக்கு மோசடி செய்து விட்டு வெளிநாட்டுக்கு தப்பி ஓடிய வைர வியாபாரி நிரவ் மோடி உள்ளிட்டோர் மீது அமலாக்கத்துறை வழக்கு தொடர்ந்துள்ளது. இவ்வழக்கில், கடந்த ஆண்டு மே மாதம் மும்பை தனிக்கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

    இந்நிலையில், நிரவ் மோடி உள்ளிட்டோருக்கு எதிராக அமலாக்கத்துறை மும்பை கோர்ட்டில் கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. அதில், நிரவ் மோடியின் மனைவி அமி, பணத்தை கையாண்ட விதம் குறித்து கூறப்பட்டுள்ளது. புதிய ஆதாரங்களையும், தலைமறைவு பொருளாதார குற்றவாளிகள் சட்டத்தின் கீழ் புதிய குற்றச்சாட்டுகளையும் அமலாக்கத்துறை கூறியுள்ளது.  #NiravModi #PNBScam 
    பணமோசடி வழக்கில் தேடப்படும் தொழிலதிபர் நிரவ் மோடியை பிரிட்டனில் இருந்து நாடு கடத்துவது தொடர்பான இந்தியாவின் கோரிக்கை நீதிமன்றத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. #NiravModi #NiravModiExtradition
    லண்டன்:

    இந்தியாவின் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த பிரபல வைர வியாபாரி நிரவ் மோடியும் (வயது 48), அவருடைய நெருங்கிய உறவினரான மெகுல் சோக்‌ஷியும் பஞ்சாப் நே‌ஷனல் வங்கியில் ரூ.13,000 கோடிக்கு மேல் கடன் பெற்று மோசடி செய்துவிட்டு வெளிநாட்டுக்கு தப்பி விட்டனர். இந்த மோசடி தொடர்பாக சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

    தப்பி ஓடிய நிரவ் மோடியை இந்தியாவுக்கு கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், அவர் எந்த நாட்டில் இருக்கிறார் என்பது தொடர்பாக மாறுபட்ட தகவல்கள் வெளியாகின. பின்னர் நிரவ் மோடி பிரிட்டனில் இருப்பதாக தெரியவந்தது. அவரை இந்தியாவிற்கு கொண்டு வருவது தொடர்பாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக மத்திய அரசு பாராளுமன்றத்தில் தெரிவித்தது.

    இந்நிலையில், நிரவ் மோடியை நாடு கடத்துவது தொடர்பான இந்தியாவின் கோரிக்கையை, பிரிட்டன் உள்துறை அமைச்சகம், லண்டன் நீதிமன்றத்திற்கு அனுப்பி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த வழக்கு லண்டன் நீதிமன்றத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு அனுப்பப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக தகவல் வந்திருப்பதாக அமலாக்கத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.



    இதையடுத்து நிரவ் மோடியை நாடு கடத்துவது தொடர்பான சட்ட நடைமுறை விரைவில் தொடங்க உள்ளது. இந்தியாவில் இருந்து அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ அதிகாரிகள் விரைவில் லண்டன் சென்று, வழக்கறிஞர்களை நியமித்து நிரவ் மோடிக்கு எதிரான ஆதாரங்களுடன் வழக்கை நடத்த உள்ளனர்.

    நிரவ் மோடி தற்போது லண்டனில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் தங்கியிருப்பதாகவும், வைர வியாபாரம் செய்து வருவதாகவும் பிரிட்டன் நாளிதழ் ஆதாரத்துடன் செய்தி வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. #NiravModiExtradition
    மும்பை மற்றும் சூரத்தில் உள்ள நிரவ் மோடிக்கு சொந்தமான ரூ.147 கோடியே 72 லட்சம் மதிப்புள்ள அசையும், அசையா சொத்துகளை நேற்று அமலாக்கத்துறை முடக்கியது. #PunjabNationalBank #NiravModi #EnforcementDirectorate
    மும்பை:

    பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13 ஆயிரம் கோடி மோசடி செய்து விட்டு வெளிநாட்டுக்கு தப்பி ஓடியவர் மும்பையை சேர்ந்த வைர வியாபாரி நிரவ் மோடி. இவர் மீது அமலாக்கப்பிரிவு மற்றும் சி.பி.ஐ. அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



    இந்த நிலையில் மும்பை மற்றும் சூரத்தில் உள்ள நிரவ் மோடிக்கு சொந்தமான ரூ.147 கோடியே 72 லட்சம் மதிப்புள்ள அசையும், அசையா சொத்துகளை நேற்று அமலாக்கத்துறை முடக்கியது. இதில் கட்டிடங்கள், 8 கார்கள், நகைகள், ஓவியங்களும் அடங்கும். பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாக அமலாக்கத்துறை தெரிவித்து உள்ளது.  #PunjabNationalBank #NiravModi #EnforcementDirectorate
    கிறிஸ்டியன் மைக்கேல் போல் நிரவ் மோடி, மல்லையா, சோக்சியும் இந்தியா கொண்டு வரப்படுவார்கள் என மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். #PrakashJavadekar #NiravModi #Mallya #Choksi
    ஜெய்ப்பூர்:

    மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் ஜெய்ப்பூரில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:-

    முந்தைய காங்கிரஸ் ஆட்சி காலத்தில் வங்கிகளில் கடன் வாங்கி விட்டு அதை திருப்பி செலுத்தாமல் தொழில் அதிபர்கள் விஜய் மல்லையா, நிரவ் மோடி, மெகுல் சோக்சி ஆகியோர் சுதந்திரமாக செயல்பட்டனர். அப்போது அவர்கள் வெளிநாடுகளுக்கு தப்ப முயற்சி செய்யவில்லை. ஆனால் பா.ஜனதா ஆட்சிக்கு வந்ததும் வேறுவழியின்றி அவர்கள் இந்தியாவை விட்டு வெளிநாடுகளுக்கு தப்பி ஓடி விட்டனர்.



    இந்தியாவில் உள்ள அவர்களின் சொத்துகளை முடக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதேபோல் வெளிநாடுகளில் உள்ள அவர்களின் சொத்துகளும் முடக்கப்படும்.

    ஹெலிகாப்டர் ஊழல் வழக்கில் இடைத்தரகராக செயல்பட்ட கிறிஸ்டியன் மைக்கேல் வெளிநாட்டில் இருந்து இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டு கைது செய்யப்பட்டார். அதே போல் வெளிநாடுகளில் தஞ்சம் புகுந்துள்ள நிரவ் மோடி, விஜய் மல்லையா, மெகுல் சோக்சி ஆகியோரும் இந்தியா கொண்டு வரப்படுவார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார். #PrakashJavadekar #NiravModi #Mallya #Choksi
    விமானத்தில் பயணிக்கும் அளவுக்கு மெகுல் சோக்சியின் உடல்நிலை தகுதியாக இருந்தால், அவர் கோர்ட்டில் ஆஜராவார் என்று மும்பை கோர்ட்டில் வக்கீல் தெரிவித்தார். #MehulChoksi #PunjabBankFraud #PNBFraud
    மும்பை:

    பஞ்சாப் நேஷனல் வங்கியை ஏமாற்றி ரூ.13 ஆயிரத்து 400 கோடி மோசடி செய்ததாக பிரபல வைர வியாபாரிகள் நிரவ் மோடி, மெகுல் சோக்சி ஆகியோர் மீது சி.பி.ஐ.யும், அமலாக்கத்துறையும் வழக்கு பதிவு செய்துள்ளன. இருவரும் வெளிநாடுகளுக்கு தப்பிஓடி விட்டனர்.

    மெகுல் சோக்சி விசாரணைக்கு ஆஜராகாததால், அவரை ‘தலைமறைவு பொருளாதார குற்றவாளிகள்’ சட்டப்படி தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என்றும், அவரது சொத்துகளை பறிமுதல் செய்ய வேண்டும் என்றும் கோரி, மும்பையில் உள்ள சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்குகளை விசாரிக்கும் தனிக்கோர்ட்டில் அமலாக்கத்துறை மனு தாக்கல் செய்துள்ளது.



    இதற்கு கடந்த மாதம் 30-ந் தேதி பதில் மனு தாக்கல் செய்த மெகுல் சோக்சி, தான் மூளையில் ரத்தக்கசிவு உள்ளிட்ட பிரச்சினைகளில் சிக்கித் தவிப்பதாகவும், எனவே, 41 மணி நேரம் விமானத்தில் பயணம் செய்து வர முடியாது என்றும் கூறி இருந்தார்.

    இந்நிலையில், அமலாக்கத்துறையின் மனு, மும்பை கோர்ட்டில் நீதிபதி எம்.எஸ்.ஆஸ்மி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

    அப்போது, மெகுல் சோக்சி சார்பில் அவரது வக்கீல் சஞ்சய் அப்போட் ஆஜரானார். அவர் கோர்ட்டில் கூறியதாவது:-

    மெகுல் சோக்சியின் உடல்நிலை, விமான பயணத்துக்கு தகுதியானதாக இல்லை. எனவே, வீடியோ கான்பரன்சிங் மூலமாகவோ அல்லது அமலாக்கத்துறை அதிகாரிகள் ஆன்டிகுவா நாட்டுக்கு நேரில் சென்றோ அவரிடம் விசாரணை நடத்தி, வாக்குமூலம் பதிவு செய்யலாம். இல்லாவிட்டால், 3 மாதங்கள் காத்திருங்கள். மெகுல் சோக்சி உடல்நிலை முன்னேறினால், அவர் இந்தியாவுக்கு நேரில் வந்து ஆஜராவார்.

    இவ்வாறு அவர் கூறினார். #MehulChoksi #PunjabBankFraud #PNBFraud
    ×