search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Naam thamizhar katchi"

    • சென்னை பெருநகர காவல் துறையை தொடர்புப்படுத்தி தவறான செய்திகளை பரப்புவதை தவிர்க்க வேண்டும்.
    • தவறான தகவல் பரப்புபவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    சென்னை :

    நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் அவரது கட்சியின் முக்கிய நிர்வாகிகள் உள்பட மேலும் சிலரின் டுவிட்டர் பக்கங்கள் முடக்கப்பட்டன. இச்சம்பவத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில், சீமானின் டுவிட்டர் கணக்கு முடக்கப்பட்டது தொடர்பாக சென்னை பெருநகர காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. டுவிட்டர் பக்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது:-

    டுவிட்டர் கணக்கை முடக்குமாறு சென்னை பெருநகர காவல்துறை சார்பில் எவ்வித கோரிக்கையும் விடுக்கப்படவில்லை. இந்த விவகாரத்தில் சென்னை பெருநகர காவல் துறையை தொடர்புப்படுத்தி தவறான செய்திகளை பரப்புவதை தவிர்க்க வேண்டும்.

    தவறான தகவல் பரப்புபவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கூறப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கருத்துகளை கருத்துகளால் எதிர்கொள்வதே அறம். கழுத்தை நெரிப்பது அல்ல.
    • டுவிட்டர் முடக்கத்தை விலக்கி சமூக வலைத்தளத்தை அதற்கான தரத்துடன் செயல்பட அனுமதிக்க வேண்டும்.

    சென்னை :

    நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் அவரது கட்சியின் முக்கிய நிர்வாகிகள் உள்பட மேலும் சிலரின் டுவிட்டர் பக்கங்கள் முடக்கப்பட்டன.

    இதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். டுவிட்டரில் அவர் கூறியிருப்பதாவது:-

    நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி உள்ளிட்டோரது டுவிட்டர் கணக்குகள் இந்தியாவில் முடக்கப்பட்டிருப்பது கண்டனத்திற்குரியது.

    கருத்துகளை கருத்துகளால் எதிர்கொள்வதே அறம். கழுத்தை நெரிப்பது அல்ல.

    டுவிட்டர் முடக்கத்தை விலக்கி சமூக வலைத்தளத்தை அதற்கான தரத்துடன் செயல்பட அனுமதிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வெயில் தொடர்ந்து கடுமையாக நீடிப்பதால் பள்ளிகளுக்கான கோடை விடுமுறையை நீடிக்க வேண்டும்.
    • தூத்துக்குடியில் நேர்மையான கிராம நிர்வாக அதிகாரி கொலை செய்யப்பட்டதற்கும் 10 லட்சம். விஷ சாராயத்திற்கும் 10 லட்சம் என்பது என்ன நியாயம்?

    புதுச்சேரி:

    முத்தரையர் நினைவு நாளை முன்னிட்டு புதுவை-கடலூர் சாலை 100 அடி சாலை சந்திப்பில் அவரது உருவப்பட மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நாம் தமிழர் கட்சி சார்பில் நடந்தது.

    இதில் பங்கேற்ற கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் படத்திற்கு மரியாதை செலுத்தி கட்சி கொடியை ஏற்றினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    விஷ சாராய விவகாரத்தில் அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, செஞ்சி மஸ்தான் பதவி விலகி இருக்க வேண்டும். விஷ சாராயத்திற்கு அனைவரும் பதவி விலகி இருக்க வேண்டும். கொடநாடு கொலைக்கு எடப்பாடி பதவி விலகி இருக்க வேண்டும்.

    ஆனால் யாருக்கும் தார்மீக பொறுப்பு என்பது இல்லை. எடப்பாடி ஆட்சியில் கள்ளச்சாராயம் இருந்தது. ஆனால் மக்கள் சாகவில்லை. இப்போது சாராயத்துக்கு பலர் இறந்துள்ளனர். ஆட்சியாளர்களை தேர்வு செய்தது மக்கள். அவர்கள்தான் இனி முடிவு செய்வார்கள்.

    கவர்னரிடம் அ.தி.மு.க.வினர் கடிதம் கொடுக்கின்றனர். அப்படியென்றால் கொடநாடு கொலை விசாரணைக்கும் கடிதம் தரலாமா? தமிழக முதலமைச்சர் வெளிநாடுகளுக்கு ஏற்கனவே பலமுறை சென்றுள்ளார். அவர் சென்றதால் என்ன முதலீடு பெற்றார்?

    தொழில் வளர்ச்சி என்பது பசப்பு வார்த்தை. புதுவையில் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தை தொடங்குகின்றனர். இதில் நமது பாட்டனார் பற்றிய வரலாறு வருமா? தமிழ் இருக்கு என சொல்கிறார்கள். எங்கே இருக்கிறது? 12 ஆயிரம் மாணவர்கள் தமிழ் தேர்வு எழுத வரவில்லை. தமிழ், தமிழ் என கூறுகிறீர்கள். இரு தலைமுறை தாய்மொழியே இல்லாமல் வளர்ந்து விட்டது.

    தமிழ் எங்கு வாழ்கிறது? இதுதான் திராவிட மாடலா? நீண்ட காலமாக சூழ்ச்சி செய்து தமிழனை ஏமாற்றி விட்டார்கள். தமிழ் வாழ்க என மாநகராட்சியில் எழுதினால் போதுமா? கோப்பில் தமிழ் வேண்டாமா? கொஞ்ச நாளைக்கு இந்த கொடுமை போகும். பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தமிழைத்தேடி பயணம் செல்கிறார்.

    காலம் கடந்து விட்டது. ஒரு கடைத்தெருவில்கூட தமிழில் பெயர் பலகை இல்லை. ஒரு வானூர்தியில் ஓட்டுநர் தமிழில் அறிவிப்பு வெளியிட்டார் என அனைவரும் கைதட்டினார்கள். தமிழ் உணர்வு அனைவருக்கும் இருக்கு. டாக்டர் ராமதாஸ் 80 வயதிலும் தமிழை தேடி செல்கிறார், அவரை பாராட்டுகிறேன். அடுத்து வருபவர்கள் இதை தொடர வேண்டும்.

    வெயில் தொடர்ந்து கடுமையாக நீடிப்பதால் பள்ளிகளுக்கான கோடை விடுமுறையை நீடிக்க வேண்டும். மரணமடைந்த விவசாயிகள், இலங்கை தமிழர்கள் கொலை, பல கொடிய சம்பவங்களுக்கு தமிழக அரசு தொகை கொடுத்ததா?

    தூத்துக்குடியில் நேர்மையான கிராம நிர்வாக அதிகாரி கொலை செய்யப்பட்டதற்கும் 10 லட்சம். விஷ சாராயத்திற்கும் 10 லட்சம் என்பது என்ன நியாயம்? காய்ச்சுவதே அவர்கள் என்பதால் பணம் கொடுத்து மறைக்க பார்க்கிறார்கள். இனி மனமுடைந்தால் விஷம் குடிக்க தேவையில்லை. கள்ளசாராயம் குடித்தால் ரூ.10 லட்சம் கிடைக்கும்.

    ரூ.2 ஆயிரம் நோட்டை திரும்ப பெறுவது பைத்தியக்காரத்தனம். வேலையில்லா தையல்காரன் யானைக்கு டவுசர் தைத்த கதைதான் 2 ஆயிரம் ரூபாய் நோட்டு திரும்ப பெறுவது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • ஒவ்வொரு காலகட்டத்திலும் தேர்தல் வரும்போது காஷ்மீர் பைல்ஸ் உள்ளிட்ட சர்ச்சைக்குரிய படங்கள் வந்தன.
    • கர்நாடக தேர்தலின் போது ‘தி கேரளா ஸ்டோரி’ படம் வெளிப்படுத்தி இருக்கிறது.

    சென்னை:

    கேரளாவை சேர்ந்த 32 ஆயிரம் இந்து இளம் பெண்களை மூளைச் சலவை செய்து மதம் மாற்றி ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தில் சேர்த்ததாக சித்தரித்து எடுக்கப்பட்ட படம் 'தி கேரளா ஸ்டோரி.'

    இந்த படம் சென்னை உள்பட தமிழகத்தில் முக்கிய நகரங்களில் நேற்று வெளியானது. இந்த படத்துக்கு சில அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்ததால் அசம்பாவிதங்களை தவிர்க்க தியேட்டர்களில் பலத்த பாதுகாப்பும் போடப்பட்டு உள்ளது. இருப்பினும் நேற்று தென்மாநில எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் 4 இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். இதையடுத்து 342 பேர் கைது செய்யப்பட்டார்கள்.

    இந்த நிலையில் 2-வது நாளான இன்று இந்த படத்தை தடை செய்ய கோரியும், படத்தில் முஸ்லிம்கள் தவறாக சித்தரிக்கப்படுவதாக வரும் காட்சிகளை கண்டித்தும் நாம் தமிழர் கட்சி சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

    அமைந்தகரையில் உள்ள ஸ்கைவாக் தியேட்டர் முன்பு போராட்டம் நடத்த திட்டமிட்டு இருந்தார்கள். இதையடுத்து தியேட்டரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

    போராட்டம் நடத்துவதற்காக அண்ணா வளைவு முன்பு சீமான் தலைமையில் நாம் தமிழர் கட்சியினர் திரண்டனர்.

    ஒருங்கிணைப்பாளர் கதிர் ராஜேந்திரன், தமிழர் நல பேரவை தலைவர் களஞ்சியம், மருது மக்கள் இயக்க தலைவர் முத்துப்பாண்டி, தலைமை நிலையச் செய்தி தொடர்பாளர் பாக்கிய ராசன், தலைமை நிலையச் செயலாளர் ஹர்திப் குமார், வக்கீல் பாசறை செயலாளர் சங்கர், மண்டல செயலாளர் கோபு, இளைஞர் பாசறை செயலாளர் இடும்பவனம் கார்த்தி, மாவட்ட செயலாளர்கள் அய்யனார், சோழன் செல்வராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    திரைப்படத்தை தடை செய்ய கோரி கோஷங்களை எழுப்பினார்கள்.

    பின்னர் சீமான் நிருபர்களிடம் கூறியதாவது:-

    இந்தியா மதச்சார்பற்ற நாடு என்று தான் நாம் எல்லோரும் நம்பிக் கொண்டு இருக்கிறோம். தற்போது மதமே ஆட்சி செய்யும் போக்கை நாம் கண்கூடாக பார்க்கிறோம்.

    இந்தியாவில் பா.ஜனதா ஆட்சிக்கு வந்த 9 ஆண்டுகளில் கொடும் போக்கு நிலவுகிறது. இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்களுக்கு எதிரான கட்டமைப்பை உருவாக்கி வருகிறது.

    ஒவ்வொரு காலகட்டத்திலும் தேர்தல் வரும்போது காஷ்மீர் பைல்ஸ் உள்ளிட்ட சர்ச்சைக்குரிய படங்கள் வந்தன. கர்நாடக தேர்தலின் போது 'தி கேரளா ஸ்டோரி' படம் வெளிப்படுத்தி இருக்கிறது. பிரதமர் மோடி பொதுக்கூட்டத்தில் பேசும்போது தி கேரளா ஸ்டோரி படத்துக்கு தடை கேட்பவர்கள் நாட்டில் பயங்கரவாதத்தை ஊக்குவிப்பவர்கள் ஆவார்கள் என்று பேசுகிறார். இது போன்ற கொடுமை எங்காவது உண்டா?

    2024 பாராளுமன்ற தேர்தலுக்கும் ஒரு படம் தயாராகிக் கொண்டிருக்கிறது. 8 ஆயிரம் இந்துக் கோவிலை இடித்தவர், 27 தேவாலயங்களை இடித்தவர், 10 லட்சத்துக்கும் மேற்பட்ட இஸ்லாமிய மக்களை கொன்றவர், 2 ஆயிரம் பிராமணர்களை கொன்றவர் 'திப்பு' என்று ஒரு படம் தயாரிக்கப்பட்டு முன்னோட்டம் வந்துள்ளது. அந்த படம் பாராளுமன்ற தேர்தலையொட்டி வெளிவரும். அதற்கும் நாங்கள் போராட்டம் நடத்துவோம்.

    தி கேரளா ஸ்டோரி படம் உங்கள் மகள்களை பாதுகாத்துக் கொள்ளுங்கள் என்ற கருத்தை மையப்படுத்துகிறது. நீங்களும் உங்கள் மகள்களை இந்த படத்தை பார்க்கவிடாமல் தடுத்து பாதுகாத்துக் கொள்ளுங்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கான்கிரீட் தளம் அமைப்பது ஒப்பந்ததாரர்களுக்கு உதவுமே தவிர, விவசாயிகளுக்குச் சிறிதளவும் உதவாது என்றுகூறி கீழ்பவானி ஆற்றுப் பாசன கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் மீண்டும் போராட்டங்களை முன்னெடுத்தனர்.
    • அனைத்து கிராமசபைக் கூட்டங்களிலும் கான்கிரீட் தளத்திற்கு எதிராகத் தீர்மானங்களையும் நிறைவேற்றி உள்ளனர்.

    சென்னை:

    நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தி.மு.க. அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, கடைமடைப் பகுதிகளுக்குப் பாசன நீரினைக் கொண்டு சேர்ப்பதாகக் கூறி காவிரி ஆற்றின் கல்லணைக் கால்வாய், பவானிசாகர் அணையின் கீழ்பவானி வாய்க்கால் உள்ளிட்ட ஆறுகளிலிருந்து பாசன வசதி தரும் நீர்வழித் தடங்களை கான்கிரீட் தடங்களாக மாற்றும் தமிழ்நாடு அரசின் செயல் சூழலியல் அறிவியலுக்குப் புறம்பானதாகும். நீர்வழித் தடங்களை கான்கிரீட் தளங்களாக மாற்றுவதினால் இடைப்பட்ட பாசன கிராமங்களில் நிலத்தடி நீர்மட்டம் முற்றுமுழுதாக அற்றுப்போய் குடிநீர் பஞ்சம் ஏற்படுவதோடு நிலத்தடிநீர் பாசனமும் வற்றிப்போகும் பேராபத்து ஏற்படும்.

    ஏற்கனவே, பரம்பிக்குளம் ஆழியாறு வாய்க்காலில் கசிவுநீர் மூலம் இழப்பு ஏற்படுவதாகக் கூறி, நீர்வழித்தடம் கான்கிரீட் தளமாக மாற்றப்பட்டதினால் பாசனநீர் வேகமாக வெளியேறி, பெருமளவு நீர் இழப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக கடைமடைக்குக் கிடைத்து வந்த நீரும் அதன் பின் கிடைக்கப்பெறாமல் போய்விட்டது. அதனை உணர்ந்தே, கடந்த 2013-ம் ஆண்டு கீழ்பவானி வாய்க்கால் பகுதியில் கான்கிரீட் தளம் அமைப்பதற்கு அப்பகுதி விவசாயிகள் கடும் எதிர்ப்பினைத் தெரிவித்து, பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தனர். அதனையடுத்து, அன்றைய முதல்வர் ஜெயலலிதா கீழ்பவானி கான்கிரீட் திட்டத்தைக் கைவிட்டதும் குறிப்பிடத்தக்கது.

    ஆனால், தி.மு.க. அரசு அதனை மீண்டும் நிறைவேற்ற முயன்றபோது, கான்கிரீட் தளம் அமைப்பது ஒப்பந்ததாரர்களுக்கு உதவுமே தவிர, விவசாயிகளுக்குச் சிறிதளவும் உதவாது என்றுகூறி கீழ்பவானி ஆற்றுப் பாசன கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் மீண்டும் போராட்டங்களை முன்னெடுத்தனர். மேலும், அனைத்து கிராமசபைக் கூட்டங்களிலும் கான்கிரீட் தளத்திற்கு எதிராகத் தீர்மானங்களையும் நிறைவேற்றி உள்ளனர்.

    அதுமட்டுமின்றி, சுற்றுச்சூழலை நாசமாக்கும் இக்கொடும் திட்டத்தை எதிர்த்து கடந்த ஆண்டு ஜூலை மாதம் எனது தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை நாம் தமிழர் கட்சி திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் முன்னெடுத்து வேளாண் பெருங்குடி மக்களுக்கு ஆதரவாகத் துணைநின்றது. அதன் பிறகு இத்திட்டத்தை தற்காலிமாக கிடப்பில் போட்டிருந்த தி.மு.க. அரசு, தற்போது மீண்டும் அதனைச் செயல்படுத்த தீவிரம் காட்டிவருவது விவசாயிகளுக்குச் செய்கின்ற பச்சைத்துரோகமாகும்.

    கடைமடைகளுக்கு நீர் சென்று சேர்ப்பதில் தி.மு.க. அரசிற்கு உண்மையான அக்கறை இருக்குமாயின், பல ஆண்டுகளாகத் தூர்வாராமல் உள்ள வாய்க்கால்களையும், கால் வாய்களையும், ஓடைகளையும் முறையாகத் தூர்வாருவதும், கரைகளை வலுவாகப் பலப்படுத்துவதுமே சரியான நடவடிக்கையாக இருக்கும். அதனை விடுத்து, விவசாயிகளின் எதிர்ப்பினையும் மீறி மீண்டும் கான்கிரீட் தளம் அமைக்க தி.மு.க. அரசு முயன்றால், இக்கொடுந்திட்டத்தை முழுமையாகத் திரும்பப் பெறும்வரை நாம் தமிழர் கட்சி தொடர்ப் போராட்டத்தை முன்னெடுக்கும் என்றும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • 5-வது நாளாக தொடர்ந்து போராட்டம் நடத்தி வரும் மீனவர்களை நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் இன்று நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.
    • மீனவபெண்களிடம் பேசி அவர்களது கோரிக்கைகளை கேட்டு அறிந்த சீமான், மீனவர்களுக்கு நாம் தமிழர் கட்சி ஆதரவளிக்கும் என்று தெரிவித்தார்.

    சென்னை:

    கடந்த 12- ந்தேதி சென்னை கலங்கரை விளக்கம் முதல் பட்டினப்பாக்கம் வரை செல்லும் 'லூப்' சாலையை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ள மீன்கடைகளை போலீஸ் பாதுகாப்புடன் மாநகராட்சி அதிகாரிகள் அகற்றினார்கள். இதை கண்டித்து மீனவர்கள், மீனவப் பெண்கள் நடுரோட்டில் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினார்கள்.

    இன்று 5-வது நாளாக மீனவர்களின் போராட்டம் தொடர்ந்து நடந்து வருகிறது. நொச்சிக்குப்பம் முதல் பட்டினப்பாக்கம் வரையிலான 2 கிலோ மீட்டர் தூர லூப் சாலையில் மீன்பிடி படகுகளை நிறுத்தி வைத்து மீனவர்கள், மீனவ பெண்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இன்று 5-வது நாளாக போராட்டம் தொடர்ந்தது. சாலையில் கருப்பு கொடிகளை ஏற்றினார்கள். லூப் சாலையில் நடுரோட்டில் பந்தல்கள் அமைத்து அதில் அமர்ந்து மீனவர்கள் கூட்டம் கூட்டமாக போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

    5-வது நாளாக தொடர்ந்து போராட்டம் நடத்தி வரும் மீனவர்களை நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் இன்று நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார். மீனவபெண்களிடம் பேசி அவர்களது கோரிக்கைகளை கேட்டு அறிந்தார். மீனவர்களுக்கு நாம் தமிழர் கட்சி ஆதரவளிக்கும் என்று தெரிவித்தார்.

    நொச்சிக்குப்பம் முதல் பட்டினப்பாக்கம் வரை சாலையில் மீனவர்கள் கடைகள் அகற்றப்பட்டதற்கு நாம் தமிழர் கட்சி கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது. மீனவர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட வேண்டும். இந்த பகுதியில் கடந்த பல ஆண்டுகளுக்கு மேலாக மீனவர்கள் இங்கு மீன்களை விற்பனை செய்து வருகிறார்கள்.

    திடீரென மாநகராட்சி அதிகாரிகள் இந்த கடைகளை அகற்றியது கண்டனத்துக்குரியதாகும். மீனவர்கள் வாழ்வாதாரம் இதன் மூலம் பாதிக்கப்பட்டு வருகிறது.

    தொடர்ந்து சாலையில் போராடிவரும் மீனவர்களின் குறைகளை தீர்க்க அரசு செவி சாய்க்க வேண்டும். மீனவர்களுக்கு என்றும் நாம் தமிழர் கட்சி துணை நிற்கும். மீனவர்கள் போராட்டத்தை அரசு முடிவுக்கு கொண்டு வர வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் ஆணையத்தின் ஏற்பாடுகள் அனைத்தும் திருப்தியாக உள்ளது.
    • மக்கள் ஆர்வமாக வாக்களிப்பதை பார்க்கும்போது நாம் தமிழர் கட்சிக்கு வெற்றி வாய்ப்பு நன்றாக உள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு கிழக்கு தொகுதிக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. பொதுமக்கள் வரிசையில் நின்று வாக்குகளை செலுத்தி வருகின்றனர். இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் மேனகா இன்று தனது வாக்கினை பதிவு செய்தார்.

    அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:-

    * ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் ஆணையத்தின் ஏற்பாடுகள் அனைத்தும் திருப்தியாக உள்ளது.

    * மக்கள் ஆர்வமாக வாக்களிப்பதை பார்க்கும்போது நாம் தமிழர் கட்சிக்கு வெற்றி வாய்ப்பு நன்றாக உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்று கூறிக்கொண்டு வன்முறையை கட்டவிழ்த்து விடுவதற்கு பெயர்தான் திமுகவின் திராவிட மாடலா?
    • இதுதான் திமுகவின் அரசியல்பாதை என்றால் அதை எதிர்கொள்ளவும் நாம் தமிழர் கட்சி ஆயத்தமாகவே உள்ளது.

    சென்னை:

    நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    அதில் கூறியிருப்பதவாது:

    ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் களத்தில் மக்களைச் சந்தித்து அமைதி வழியில் பரப்புரை செய்து கொண்டிருந்த நாம் தமிழர் கட்சிப் பொறுப்பாளர்கள் மீதும், தம்பிகள் மீதும் கொலைவெறித் தாக்குதல் நடத்தியுள்ள திமுக ரௌடிகளின் வெறிச்செயல் வன்மையான கண்டனத்திற்குரியது. தோல்வி பயத்தில், அதிகாரத்திமிரில் திமுக மேற்கொள்ளும் இத்தகைய வன்முறை வெறியாட்டங்களால் நாம் தமிழர் கட்சியை ஒருபோதும் முடக்கிவிட முடியாது.

    நாம் தமிழர் கட்சியின் மாநில தொழிற்சங்கத் தலைவரும், முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்த்தேசிய அரசியலை தன் உயிர் மூச்சாகக் கொண்டு களமாடுபவரும், கட்சி தொடங்கப்பட்ட காலத்திலிருந்து என் தோளுக்குத் துணையாக நிற்பவருமான அன்புத்தென்னரசன் அவர்களின் மீது இரும்புக் கம்பியினைக் கொண்டு தாக்கி கொலை செய்ய முயன்ற திமுக ரௌடிகளை உடனடியாக கைது செய்து அவர்கள் மீது கொலைமுயற்சி வழக்குப் பதிவு செய்யத் தேர்தல் ஆணையம் உத்தரவிட வேண்டும். ஆளும் கட்சியினரின் இத்தகைய வன்முறை வெறியாட்டங்களை தேர்தல் ஆணையம் இனியும் கைகட்டி வேடிக்கை பார்ப்பது சனநாயகத்தின் மீதும், தேர்தல் ஆணையத்தின் மீதமுள்ள நம்பிக்கையை முற்றுமுழுதாக தகர்ப்பதாகவே அமையும்.

    இன்னும் வைக்காத பேனா சிலையை உடைப்பேன் என்று சொன்னதற்காக கோவப்பட்ட சனநாயகவாதிகள், திமுக ஆதரவாளர்கள் உயிருள்ள மனிதரின் மீது நடத்தியுள்ள இக்கொலைவெறித் தாக்குதலை கண்டிக்க வாய் திறப்பார்களா? கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்று கூறிக்கொண்டு வன்முறையை கட்டவிழ்த்து விடுவதற்கு பெயர்தான் திமுகவின் திராவிட மாடலா? இனி இதுதான் திமுகவின் அரசியல்பாதை என்றால் அதை எதிர்கொள்ளவும் நாம் தமிழர் கட்சி ஆயத்தமாகவே உள்ளது.

    ஆட்சி – அதிகார பலம், அதன் மூலம் கொள்ளையடித்த பணபலம், அதனைக் கொடுத்து திரட்டிய ரௌடிகள் பலம் ஆகியவற்றை மூலதனமாக கொண்டு, முறைகேடாக தேர்தலில் வெல்ல சனநாயகத்தைப் படுகொலை செய்யும் திமுகவின் வன்முறை வெறியாட்டங்களுக்கு, மாற்றத்தை விரும்பி நிற்கும் ஈரோடு கிழக்கு தொகுதி மக்கள் வரும் தேர்தலில் தக்க பாடம் புகட்டுவார்கள். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

    • நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் வருகிற 29-ந்தேதி ஈரோட்டில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் அறிவிக்கப்பட உள்ளார்.
    • தேர்தல் ஆணையத்தால் ஒரு மாநிலத்தில் ஒரே கட்டமாக கூட தேர்தல் நடத்த முடியவில்லை.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை பெருமாநாட்டில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக புதுக்கோட்டை, திருச்சி, கரூர், பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை மாவட்ட நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு பேசினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஈரோடு இடைத்தேர்தல் களம் எனக்கானது, இடைத்தேர்தலில் வெற்றி பெறுவது உறுதி. தேர்தல் ஆணையம் உள்ளதா என்பதை யாராவது கூற வேண்டும். தி.மு.க.வின் எதிர்மறை வாக்குகள் அதிகரித்து வருகிறது. இது எங்களுக்கு சாதகமாக இருக்கும்.

    எந்த தேர்தலிலும் நான் யாரிடமும் கூட்டணிக்காக நிற்கப் போவது கிடையாது, தனித்து தான் இருப்பேன். அதிகார பலம், பண பலத்தை ஈரோடு தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. காட்ட தொடங்கிவிட்டது. இடைத்தேர்தலில் தே.மு.தி.க. தனித்து போட்டியிடும் என்று கூறி வேட்பாளரை அறிவித்துள்ளது வரவேற்கத்தக்கது, துணிச்சலான முடிவு வாழ்த்துக்கள்.

    தேர்தலில் வெற்றி பெறுவது அரவிந்த் கெஜ்ரிவாலால் முடியும், சீமானால் முடியாதா? கமல்ஹாசன் கட்சி தொடங்கும் போது தனித்து தான் போட்டி என்று கூறினார். தற்போது அவர் காங்கிரஸ் பக்கம் சாய்வதாக தெரிகிறது. அதுபோன்று வரும் காலத்தில் நாங்கள் கூட்டணியில் இடம் பெறுவதற்கான வாய்ப்புகள் இல்லை.

    பணத்தை பாதுகாப்பதற்கு அ.தி.மு.க.விற்கு பாரதிய ஜனதா தேவைப்படுகிறது. ஆனால் தேர்தலில் வாக்குகள் விழாது என்பதால் பா.ஜ.க.வை கழட்டி விட அ.தி.மு.க. நிற்கிறது

    ஈரோடு இடைத்தேர்தலில் எனக்கு யாரும் போட்டி கிடையாது. எத்தனை பேர் களமிறங்கினாலும் நாம் தமிழர் கட்சி வெற்றி பெறுவது உறுதி. நான் தனித்து போட்டியிடுவேன் என்று ஒவ்வொரு தேர்தலிலும் கூறி தனித்து போட்டிட்டு வருகிறேன். இது போன்று பா.ஜ.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தனித்து போட்டியிடும் என்று கூற முடியுமா?

    நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் வருகிற 29-ந்தேதி ஈரோட்டில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் அறிவிக்கப்பட உள்ளார். தேர்தல் ஆணையத்தால் ஒரு மாநிலத்தில் ஒரே கட்டமாக கூட தேர்தல் நடத்த முடியவில்லை. ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது எப்படி சாத்தியமாகும். ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது பேச்சுக்காக மட்டுமே தொடர் அமைக்க அது செயல்படுத்த முடியாது.

    தி.மு.க. ஒரு நாடக கூட்டம். மத்திய அரசை, ஆளுநரை எதிர்ப்பது போல் எதிர்க்கும். ஆனால் தனியாக சென்று அவர்கள் காலில் விழும். அவரோடு சேர்ந்து உணவும் அருந்துவார்கள்.

    குடியரசுத்தலைவருக்கு ஆளுநர் குறித்து எழுதிய கடிதத்தில் கூட அவரை மாற்ற வேண்டும் என்று கூறாமல், மாநில அரசின் நலன் கருதி எங்களோடு ஒத்துழைப்பு கொடுக்கச் சொல்லுங்கள் என்று தான் முதல்வர் கடிதம் எழுதினார்.

    2024 ஆம் ஆண்டு நடக்கும் பாராளுமன்றத் தேர்தலில் என்னுடைய ஆட்டத்தை பாருங்கள். தற்போது தமிழகத்தில் சிறிய கட்சிகள் பெரிய கட்சிகளுக்கு அழைப்பு விடுத்து வருகின்றன. இவர்கள் யாரும் தே.மு.தி.க. பக்கம் செல்லப்போவது கிடையாது. மாற்றம் தமிழகத்தில் ஏற்படும் என்று நான் நம்பவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஏற்கனவே குடும்ப அட்டைகள் இருக்கும்போது மக்கள் ID என்ற தனி அடையாளம் எதற்கு?
    • ஆளுநருக்கு வேண்டுமென்றால் தமிழகம் என்பது சரியாக இருக்கும்.

    சென்னை:

    நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    * தமிழ்நாட்டிற்கென தனியான அடையாள அட்டை எதற்காக பயன்படும் என்பதில் தெளிவில்லை.

    * ஏற்கனவே குடும்ப அட்டைகள் இருக்கும்போது மக்கள் ID என்ற தனி அடையாளம் எதற்கு?

    * ஆளுநருக்கு வேண்டுமென்றால் தமிழகம் என்பது சரியாக இருக்கும்.

    * எங்க நாடு தமிழ்நாடு, அவரு பேசுறதை எல்லாம் இந்த காதுல வாங்கி, இந்த காதல விட வேண்டியதுதான்.

    * எங்கள் நாடு தமிழ்நாடு.. விரும்புபவர்கள் இங்கு இருக்கலாம்.

    * தமிழ்நாட்டு முதலமைச்சர் எனக் குறிப்பிடுவது சரியாக இருக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இடைநிலை ஆசிரியர்கள் 15,000 ரூபாய் அளவுக்குக் குறைவான ஊதியம் பெறக்கூடிய அவல நிலை நிலவுகிறது.
    • தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி இடைநிலை ஆசிரியர்கள் சென்னையில் முன்னெடுத்த தொடர் உண்ணாநிலை போராட்டத்தில் கலந்துகொண்டு குரல் கொடுத்தேன்.

    சென்னை:

    நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு அரசுப்பள்ளிகளில் 2009-ம் ஆண்டுக்கு முன்பு நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு ஒரு ஊதியமும், அதன்பிறகு பணி நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு மற்றொரு ஊதியமும் வழங்கப்பட்டு வருகிறது. இதனால், இடைநிலை ஆசிரியர்கள் 15,000 ரூபாய் அளவுக்குக் குறைவான ஊதியம் பெறக்கூடிய அவல நிலை நிலவுகிறது. தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி இடைநிலை ஆசிரியர்கள் சென்னையில் முன்னெடுத்த தொடர் உண்ணாநிலை போராட்டத்தில் கலந்துகொண்டு குரல் கொடுத்தேன்.

    இதனையடுத்து, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜனவரி 1 அன்று போராடிவரும் ஆசிரியர்களின் கோரிக்கைகள் குறித்து ஆய்வு செய்து தகுந்த பரிந்துரைகளை அளிப்பதற்காக நிதித்துறை செயலாளர் தலைமையில் குழு ஒன்று அமைக்கப்படும் என்று அறிவித்துள்ளதோடு, அக்குழு அளிக்கும் பரிந்துரைகளின் அடிப்படையிலேயே கோரிக்கை தொடர்பான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளும் என்றும் அறிவித்துள்ளார். இடைநிலை ஆசிரியப் பெருமக்களின் கோரிக்கையை நிறைவேற்ற குழு அமைத்து காலம் கடத்தாமல், அவர்களது வாழ்வாதார உரிமையை உடனடியாக நிறைவேற்றித்தர வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    காடுகளிலுள்ள யானைகளின் இருப்புக்கோ, அவை செல்வதற்கான வழித்தடத்துக்கோ வழிவகை செய்யாத தி.மு.க. அரசு, கோவில் யானைகளுக்கு நினைவு மண்டபம் கட்டத்துடிப்பது வெட்கக்கேடானது என சீமான் கூறியுள்ளார்.
    சென்னை:

    நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    சென்னையின் பூர்வீக குடிகளின் வாழ்விடங்களை இடித்துத் தகர்த்து மண்ணின் மக்களை நடுத்தெருவில் நிறுத்திவிட்டு, ரூ.20 கோடி மதிப்பீட்டில் ஆவடியில் பசு மடம் கட்டுகிறது திராவிட மாடல் அரசு. இல்லை! இல்லை! ஆன்மீக திராவிட மாடல் அரசு.

    சிதம்பரம் நடராசர் கோவிலில் தமிழர் மூதாதை நந்தன் உள்நுழைந்த தெற்கு நுழைவாயில் அடைக்கப்பட்டு, இன்றும் தீண்டாமைச்சுவர் இருக்கிறதெனக் கூறி, அதனைத் தகர்த்துவிட்டு, நந்தன் பெயரில் மணிமண்டபம் கட்டக்கோருகிறோம். இறந்துபோன கோவில் யானைகளுக்குக் கோவில்களில் நினைவு மண்டபங்கள் கட்டுகிறது சமூக நீதி அரசு! இல்லை! இல்லை! மனுநீதி அரசு.

    கோவையில் கடந்த 5 ஆண்டு காலத்தில் மட்டும் 79 யானைகள் இறந்துள்ளதென தகவல்கள் தெரிவிக்கின்றன. காடுகளிலுள்ள யானைகளின் இருப்புக்கோ, அவை செல்வதற்கான வழித்தடத்துக்கோ வழிவகை செய்யாத தி.மு.க. அரசு, கோவில் யானைகளுக்கு நினைவு மண்டபம் கட்டத்துடிப்பது வெட்கக்கேடானது.

    அரசின் பெயரில் கடன் வாங்கும் ரூ.90 ஆயிரம் கோடியில்தானே, பசுக்களுக்கு மடமும், யானைகளுக்கு நினைவு மண்டபமும் கட்டுகிறீர்கள்? சிறப்பு! சிறப்போ சிறப்பு! உத்தரப்பிரதேச மாடலையும் மிஞ்சிவிடும் உங்களது ஆன்மீக திராவிட மாடல் ஆட்சி.

    இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
    ×