search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Naam thamizhar katchi"

    • கட்சி தொடங்குவது எளிது தொடர்வது என்பது கடினமானது என கூறினார்.
    • விரைவில் 39 தொகுதி வேட்பாளர்களும் அறிவிக்கப்படுவார்கள் என கூறப்படுகிறது.

    சென்னை:

    சென்னை அடுத்த வானகரத்தில் உள்ள திருமண மண்டபத்தில் நாம் தமிழர் கட்சியின் பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக விரிவாக விவாதிக்கப்பட்டது.

    இதனையடுத்து, தென்சென்னை பாராளுமன்ற தொகுதி வேட்பாளராக பேராசிரியர் தமிழ்ச்செல்வி அறிவிக்கப்பட்டுள்ளார். விரைவில் 39 தொகுதி வேட்பாளர்களும் அறிவிக்கப்படுவார்கள் என கூறப்படுகிறது.


    கூட்டத்தில் சீமான் பேசியதாவது:- மாவட்ட நிர்வாகிகள் நியமனத்தில் சிலர் புரிந்து கொள்ளவில்லை. முதல்கட்ட தலைவர்களே இல்லாதபோது இரண்டாம் கட்ட தலைவர் என்பதா? தலைவருக்கு என்ன தகுதி உள்ளது. கட்சி தொடங்குவது எளிது தொடர்வது என்பது கடினமானது என கூறினார்.

    • வாயு கசிவு ஏற்பட்டு பாதிக்கப்பட்ட பகுதிகளை இன்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆய்வு செய்தார்.
    • தொழிற்சாலையின் நுழைவு வாயில் முன்பு 5வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பொதுமக்களை சந்தித்து ஆதரவு அளித்தார்.

    சென்னை:

    சென்னை எண்ணூர் பெரிய குப்பம் பகுதியில் உள்ள தனியார் உர தொழிற்சாலையில் இருந்து கடலுக்கடியில் செல்லும் குழாயில் உடைப்பு ஏற்பட்டு கடந்த 26-ந்தேதி நள்ளிரவில் திடீரென அமோனியம் வாயு வெளியேறியதால் அப்பகுதி மக்கள் பலருக்கு மூச்சுத்திணறல், கண் எரிச்சல் மற்றும் உடல் உபாதைகள் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

    இச்சம்பவத்தை தொடர்ந்து தனியார் உர தொழிற்சாலையை தற்காலிகமாக மூட அரசு உத்தரவிட்டது.

    இந்நிலையில், வாயு கசிவு ஏற்பட்டு பாதிக்கப்பட்ட பகுதிகளை இன்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆய்வு செய்தார். இதன்பின் தொழிற்சாலையின் நுழைவு வாயில் முன்பு 5வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பொதுமக்களை சந்தித்து ஆதரவு அளித்தார்.

    இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பொதுமக்களிடையே பேசிய சீமான், உண்ணாவிரத போராட்டத்தால் எந்த பயனும் இல்லை. நன்றாக சாப்பிட்டு தெம்பாக போராட வேண்டும் என அறிவுரை வழங்கினார்.

    • சீமான் மீது 4 பிரிவுகளின் கீழ் ஈரோடு கருங்கல்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
    • சீமான் வருகையை ஒட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நீதிமன்றம் சுற்றி போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

    ஈரோடு:

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சியின் வேட்பாளருக்கு ஆதரவாக ஓட்டு கேட்டு கடந்த பிப்ரவரி 13-ந்தேதி ஈரோடு திருநகர் காலனியில் பிரசார பொதுக்கூட்டம் நடந்தது.

    இதில் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் பற்றியும், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பற்றியும் பேசிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது.

    அவரது பேச்சுக்கு அரசியல் கட்சியினரும், பல்வேறு அமைப்பினரும் கடும் எதி ர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து சீமான் மீது எஸ்.சி., எஸ்.டி., வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்பட மொத்தம் 4 பிரிவுகளின் கீழ் ஈரோடு கருங்கல்பாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இவ்வழக்கு விசாரணை ஈரோடு மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. கடந்த 29-ம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது சீமான் கோர்ட்டில் நேரில் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி கூறியிருந்தார்.

    ஆனால் அன்று சீமான் கோர்ட்டில் ஆஜராகவில்லை. இதை அடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி மாலதி (பொறுப்பு) இன்று (திங்கட்கிழமை) மீண்டும் ஈரோடு மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் சீமான் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார்.

    அதன்படி இன்று ஈரோடு மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பான விசாரணை வந்தது. இதை அடுத்து இன்று காலை சீமான் கட்சி நிர்வாகிகளுடன் ஈரோடு கோர்ட்டுக்கு வந்து ஆஜரானார்.

    வழக்கை விசாரித்த நீதிபதி மாலதி (பொறுப்பு) வழக்கை வரும் டிசம்பர் மாதம் 20-ம் தேதிக்கு ஒத்திவைத்தார். அன்று மீண்டும் சீமான் கோர்ட்டில் நேரில் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்தார்.

    முன்னதாக சீமான் வருகையை ஒட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நீதிமன்றம் சுற்றி போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

    • ஞானம், சுதாகரை மிரட்டும் தோனியில் அவதூறாக பேசியதால் 2 பேருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது.
    • படுகாயம் அடைந்த 2 பேரும் வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    ஆலங்காயம்:

    திருப்பத்தூர் மாவட்டம், ஆலங்காயம் அடுத்த நிம்மியம்பட்டு ஊராட்சியில் உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது.

    இதில் அதே பகுதியை சேர்ந்த நாம் தமிழர் கட்சியை சேர்ந்த சுதாகர் என்பவர் கோரிக்கை மனு வழங்கினார். அதில் தி.மு.க. பிரமுகர் ஞானம் என்பவர் தன்னுடைய தங்கையின் பெயரில் பணிதள பொறுப்பாளராக வேலை செய்து வருகிறார்.

    கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக அவர் பணிதள பொறுப்பாளராக பணியாற்றி வருகிறார்.

    அவரை மாற்றி, வேறு ஒருவரை புதியதாக நியமிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

    இந்த கோரிக்கை கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றியதாக கூறப்படுகிறது. இதனால் ஞானம் மற்றும் சுதாகர் ஆகிய இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    அப்போது ஞானம், சுதாகரை மிரட்டும் தோனியில் அவதூறாக பேசியதால் 2 பேருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. அப்போது அவர்கள் ஒருவரை, ஒருவர் தாக்கி கொண்டனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதில் படுகாயம் அடைந்த 2 பேரும் வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    மேலும் அவர்கள் தனித்தனியாக ஆலங்காயம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கருங்கல்பட்டியை சேர்ந்த 56-வது வார்டு தி.மு.க. செயலாளர் முருகேசன் செவ்வாய்பேட்டை போலீசில் புகார் அளித்தார்.
    • புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    சேலம்:

    தமிழக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பற்றி சமூக வலைதளத்தில் குமரேசன் என்பவர் அவதூறு செய்தி பரப்பி உள்ளனர். இதை பார்த்த தி.மு.க.வினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இதையடுத்து கருங்கல்பட்டியை சேர்ந்த 56-வது வார்டு தி.மு.க. செயலாளர் முருகேசன் செவ்வாய்பேட்டை போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து அவர் யார் என்று விசாரணை நடத்தி வந்தனர்.

    விசாரணையில் அவர் சேலம் தாதகாப்பட்டியை சேர்ந்த குமரேசன் (49) என்பது தெரிய வந்தது. இவர் டவுண் பகுதியில் வாகன உதிரி பாகம் விற்பனை கடை வைத்துள்ளார். மேலும் இவர் நாம் தமிழர் கட்சியில் தெற்கு தொகுதி முன்னாள் துணை தலைவராக இருந்து உள்ளார். இதையடுத்து அவரை போலீசார் போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணைக்கு பிறகு கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாம் தமிழர் கட்சி மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • நாம் தமிழர் கட்சியில் மாநில பொறுப்பில் உள்ள சாட்டை துரைமுருகன் என்பவர் சாட்டை என்ற பெயரில் யூடியூப் சேனல் நடத்தி வருகிறார்.
    • எந்தவித ஆதாரமும் இல்லாத தவறான கருத்துக்களை முன்வைத்து கமல்ஹாசனின் புகழுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் நாம் தமிழர் கட்சியின் மாநில பொறுப்பாளர் சாட்டை துரைமுருகன் கருத்து தெரிவித்துள்ளார்.

    கோவை:

    நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த சாட்டை துரைமுருகன், நடிகர் கமல்ஹாசன் பற்றி அவதூறு கருத்துக்களை பரப்புவதாக கூறி கோவை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் செய்யப்பட்டு உள்ளது.

    மக்கள் நீதி மய்யம் கட்சியின் கோவை தெற்கு நகர செயலாளர் தாஜூதீன் தலைமையில் அந்த கட்சியினர் கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு கொடுத்துள்ளனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

    நாம் தமிழர் கட்சியில் மாநில பொறுப்பில் உள்ள சாட்டை துரைமுருகன் என்பவர் சாட்டை என்ற பெயரில் யூடியூப் சேனல் நடத்தி வருகிறார். அவர் சமீபத்தில் மக்கள் நீதி மய்யம் பற்றியும், நடிகர் கமல்ஹாசன் பற்றியும் உண்மைக்கு புறம்பான தகவலை யூடியூப்பில் பதிவேற்றம் செய்துள்ளார்.

    அதில் கமல்ஹாசன் கன்னடர். கர்நாடகாவில் உள்ள ஹாசன் என்ற ஊர் தான் அவரின் பூர்வீகம் என்று பொய்யான தகவலை தெரிவித்துள்ளார். எந்தவித ஆதாரமும் இல்லாத தவறான கருத்துக்களை முன்வைத்து கமல்ஹாசனின் புகழுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் நாம் தமிழர் கட்சியின் மாநில பொறுப்பாளர் சாட்டை துரைமுருகன் கருத்து தெரிவித்துள்ளார். எனவே யூடியூப் சேனலில் இருந்து அதனை அகற்றி சட்டம்- ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் வகையில் பேசிய சாட்டை துரைமுருகன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்து உள்ளனர்.

    • சீமான் மீது எஸ்.சி., எஸ்.டி., வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்பட மொத்தம் 4 பிரிவுகளின் கீழ் ஈரோடு கருங்கல்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
    • வழக்கு தொடர்பாக கடந்த செப்டம்பர் மாதம் 11-ந்தேதி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேரில் ஆஜரானார்.

    ஈரோடு:

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சியின் வேட்பாளருக்கு ஆதரவாக ஓட்டு கேட்டு கடந்த பிப்ரவரி 13-ந்தேதி ஈரோடு திருநகர் காலனியில் பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்றது.

    இதில் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் பற்றியும், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பற்றியும் பேசிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது. அவரது பேச்சுக்கு அரசியல் கட்சியினரும், பல்வேறு அமைப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதையடுத்து சீமான் மீது எஸ்.சி., எஸ்.டி., வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்பட மொத்தம் 4 பிரிவுகளின் கீழ் ஈரோடு கருங்கல்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்நிலையில் இவ்வழக்கு விசாரணை ஈரோடு மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக கடந்த செப்டம்பர் மாதம் 11-ந்தேதி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேரில் ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதி இன்று மீண்டும் ஈரோடு முதன்மை நீதிமன்றத்தில் சீமான் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார்.

    அதன்படி இன்று ஈரோடு மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பான விசாரணை வந்தது. சீமான் இன்று ஆஜராவார் என்று எதிர்பார்த்த நிலையில் அவர் இன்று ஆஜராகவில்லை. சீமானுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள இருப்பதால் அவரால் இன்று ஆஜராக முடியவில்லை என அவர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டு இருந்தது.

    மேலும் வழக்கு விசாரணைக்கு தொடர்ந்து ஒத்துழைப்பு தருவதாக சீமான் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி இந்த வழக்கை வரும் 30-ந்தேதிக்கு ஒத்தி வைத்தார். அன்று சீமான் நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தார்.

    • நாம் தமிழர் கட்சி சார்பில் சென்னை எழும்பூரில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • ஆர்ப்பாட்டத்தில் நாம் தமிழர் கட்சியினர் ஏராளமானோர் பங்கேற்றனர்.

    சென்னை:

    காவிரியில் தமிழகத்துக்கு உரிய தண்ணீரை திறந்து விட மத்திய-மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்காததை கண்டித்து நாம் தமிழர் கட்சி சார்பில் சென்னை எழும்பூரில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் மாநில நிர்வாகிகள், மண்டல மற்றும் மாவட்ட நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர். நிர்வாகிகள் அன்பு தென்னரசன், கதிர் ராஜேந்திரன், பாக்கியராஜன், செந்தில்குமார், பாத்திமா பர்கானா, இடும் பவனம் கார்த்தி மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

    மாநில ஒருங்கிணைப்பாளர் இனியன் ஜான், ஸ்ரீபெரும்புதூர் பாராளுமன்ற தொகுதி மண்டல ஒருங்கிணைப்பாளர் ஈரா மகேந்திரன், செங்கல்பட்டு மாவட்ட செயலாளர் நாக நாதன், தலைவர் மகேந்திர வர்மன், பல்லாவரம் சட்டமன்ற தொகுதி செயலாளர் கோபிதேவா, கரு.அருண் குமார், தென்றல் அரசு, பொன்.குமார், பசும்பொன் அன்பரசன், விஸ்வநாத், ஷேக், சொக்கலிங்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    திருவள்ளூர் மத்திய மாவட்ட செயலாளர் சே.நல்லதம்பி தலைமையில் 150-க்கும் மேற்பட்ட நாம் தமிழர் கட்சியினர் திரண்டு வந்து ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். தொகுதி மற்றும் நகர பொறுப்பாளர்களான செல்வமணி, அருண் குமார், அருள் பிரகாசம், ராஜாமணி, ஸ்ரீதர், மணிகண்டன், ஆறுமுகம், சமத்துவ நேயன், புருஷோத்தமன், குமரன், அன்பு, பிச்சை, முத்து, கிருட்டிணமூர்த்தி, பொன்னி சரவணன், சுமதி, சீலாதேவி, வாசுகி, பர்வீன் பானு, ஞானசெல்வி, அமுதினி மற்றும் ஆவடி தொகுதி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நடிகர் விஜய் அரசியலுக்கு வருவது எனக்கு கூடுதல் உற்சாகத்தை தருகிறது.
    • என்னுடைய திரைப்பட துறையில் இருந்து ஒருவர் வருவது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது.

    கும்பகோணம்:

    கும்பகோணத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    நடிகர் விஜய் அரசியலுக்கு வருவது எனக்கு கூடுதல் உற்சாகத்தை தருகிறது. என்னுடைய திரைப்பட துறையில் இருந்து ஒருவர் வருவது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. அதனால் இதை நான் வரவேற்கிறேன். நாட்டில் சிறந்த பிரதமர் என்றால் அது விபிசிங் தான். அவர் 2 ஆண்டுகள் ஆண்டாலும் கூட்டாட்சி தத்துவத்தின் அடிப்படையில் சிறந்த ஆட்சியை தந்தார்.

    வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க., காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணியில் சேருவீர்களா என்ற கேள்விக்கு பா.ஜ.க., காங்கிரசை ஒரே கட்சியாத்தான் பார்க்கிறேன். நான் தனித்து தான் போட்டியிடுகிறேன். காவிரி நதி நீர் பிரச்சனையில் தமிழக முதலமைச்சர் உருவ படங்கள் கர்நாடாகவில் எரிக்கப்பட்டது. அதை கூட்டணி கட்சிகள் கண்டிக்கவில்லை. ஆதனால் நான் அதை வன்மையாக கண்டிக்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சென்னைக்கு வாங்க என்று அழைத்து என்னை அவமானப்படுத்தும் வேலையை ஆரம்பித்தால் சரியாக இருக்காது.
    • ஏதாவது வாலாட்டும் வேலையை செய்தால் கர்நாடகத்துக்கு சீமானை வரவழைத்து திணறடித்து விடுவேன்.

    சென்னை:

    நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி கடந்த 2011-ம் ஆண்டு அளித்த புகார் தொடர்பான வழக்கு வளசரவாக்கம் போலீசில் நிலுவையில் இருந்து வந்தது.

    இந்த நிலையில் அந்த வழக்கை மீண்டும் தூசு தட்டும் வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சீமான் மீது விஜயலட்சுமி மீண்டும் புகார் அளித்திருந்தார்.

    பின்னர் அந்த புகாரை வாபஸ் வாங்கிவிட்டு விஜயலட்சுமி பெங்களூருக்கு சென்றார்.

    இந்த நிலையில் விஜயலட்சுமி, பெங்களூரில் இருந்தபடியே சீமானுக்கு எச்சரிக்கை கொடுக்கும் வகையில் புதிய வீடியோ ஒன்றை நேற்று வெளியிட்டுள்ளார். அதில் கூறி இருப்பதாவது:-

    சீமான் என்னிடம் ரூ.1 கோடி கேட்டு மான நஷ்ட வழக்கு போட்டதில் இருந்து நான் கதறிக்கொண்டிருப்பதாக அவரது ஆதரவு யூடியூப் சேனலில் போட்டுள்ளனர். சீமானுக்கும் நன்றி கிடையாது. சீமான் சார்ந்த யூடியூப் சேனலுக்கும் நன்றி கிடையாது. கடந்த 2008-ல் எனது அக்கா கணவர் குழந்தையை தூக்கிக் கொண்டு சென்றதால் அந்த பிரச்சனையை முடித்து கொடுப்பதற்காகவே சீமானை போய் சந்தித்தேன். எனது அக்காவுக்கு அவர் நன்மை செய்யவில்லை. அக்கா மீதும் கருணை இல்லை. என் மீதும் கருணை கிடையாது. எல்லாவற்றையும் தனக்கு சாதகமாக சீமான் செய்து விட்டார்.

    என்னை தூக்கி பெங்களூரில் போட்டாச்சி. பெங்களூரில் எனது அக்காவை பார்த்துக் கொண்டு எனக்கு ஒரு வாழ்க்கை என்பதை நான்தான் பார்த்துக் கொள்ள வேண்டும்.

    எந்த சீமானும் வரப்போவது இல்லை. நாம் தமிழர் கட்சியினரும் வரப்போவது இல்லை. நான் எல்லாவற்றையும் பெருந்தன்மையாக முடித்து கொடுத்துவிட்டு உங்க முகத்தை கூட இனி பார்க்கக் கூடாது என்கிற எண்ணத்தில் தான் அடுத்தகட்ட வேலைக்கு போயாச்சி. இத்தோடு நீங்கள் எல்லாம் விட்டு விட்டீர்கள் என்றால் ஓ.கே. திரும்பவும் எதையாவது புதிதாக செய்ய வேண்டாம்.

    1 கோடிக்கு மான நஷ்ட வழக்கு போட்டிருக்கோம். சென்னைக்கு வாங்க என்று அழைத்து என்னை அவமானப்படுத்தும் வேலையை ஆரம்பித்தால் சரியாக இருக்காது. ஜகேஷ் என்கிற நடிகருடன் விஜயலட்சுமிக்கு திருமணமாகிவிட்டது என்று சீமான் கூறியுள்ளார். நான் சீமான் மீது ரூ.20 கோடிக்கு பெங்களூரில் மானநஷ்ட வழக்கு போடுவேன். கர்நாடககாரர்கள் இப்படி பேசினால் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள். என் மீது அவதூறு பரப்ப வேண்டும் என்று இப்படி சீமான் பேசியுள்ளார். இதோடு வாயை மூடிட்டு போய் விடுங்கள். என்னிடம் வம்பிழுக்க வேண்டாம். இது தொடர்ந்தால் நான் மட்டுமல்ல ஜகேஷ் சாரையும் மானநஷ்டஈடு வழக்கு போட வைப்பேன். உங்களை தூங்க விடாமல் செய்து விடுவேன்.

    இதற்கு மேல் ஏதாவது வாலாட்டும் வேலையை செய்தால் கர்நாடகத்துக்கு சீமானை வரவழைத்து திணறடித்து விடுவேன். எனவே எல்லாவற்றையும் நிறுத்திக் கொள்ளுங்கள்.

    இவ்வாறு விஜயலட்சுமி கூறியுள்ளார்.

    • விஜயலட்சுமியின் புகார்கள், வாபஸ் பெற்ற விவரங்களை போலீசார் தாக்கல் செய்யவேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.
    • வழக்கு தொடர்பான ஆவணங்களை போலீசுக்கு வழங்கவேண்டும் என்று சீமான் தரப்புக்கு நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.

    சென்னை:

    நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி அளித்த புகாரில் 2011-ம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்ய கோரி சீமான் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு சென்னை ஐகோர்ட்டில் நீதிபதி ஆனந்த வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது.

    விசாரணையின் போது இந்த வழக்கை 11 ஆண்டுகளாக நிலுவையில் வைத்திருந்தது ஏன்? என்று நீதிபதி கேள்வி எழுப்பினார். அதற்கு போலீசார் விளக்கம் அளிக்க வேண்டும். விஜயலட்சுமியின் புகார்கள், வாபஸ் பெற்ற விவரங்களை போலீசார் தாக்கல் செய்யவேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.

    மேலும் வழக்கு தொடர்பான ஆவணங்களை போலீசுக்கு வழங்கவேண்டும் என்று சீமான் தரப்புக்கு நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். பின்னர் இந்த வழக்கை வருகிற 26-ந்தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

    காடுகளிலுள்ள யானைகளின் இருப்புக்கோ, அவை செல்வதற்கான வழித்தடத்துக்கோ வழிவகை செய்யாத தி.மு.க. அரசு, கோவில் யானைகளுக்கு நினைவு மண்டபம் கட்டத்துடிப்பது வெட்கக்கேடானது என சீமான் கூறியுள்ளார்.
    சென்னை:

    நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    சென்னையின் பூர்வீக குடிகளின் வாழ்விடங்களை இடித்துத் தகர்த்து மண்ணின் மக்களை நடுத்தெருவில் நிறுத்திவிட்டு, ரூ.20 கோடி மதிப்பீட்டில் ஆவடியில் பசு மடம் கட்டுகிறது திராவிட மாடல் அரசு. இல்லை! இல்லை! ஆன்மீக திராவிட மாடல் அரசு.

    சிதம்பரம் நடராசர் கோவிலில் தமிழர் மூதாதை நந்தன் உள்நுழைந்த தெற்கு நுழைவாயில் அடைக்கப்பட்டு, இன்றும் தீண்டாமைச்சுவர் இருக்கிறதெனக் கூறி, அதனைத் தகர்த்துவிட்டு, நந்தன் பெயரில் மணிமண்டபம் கட்டக்கோருகிறோம். இறந்துபோன கோவில் யானைகளுக்குக் கோவில்களில் நினைவு மண்டபங்கள் கட்டுகிறது சமூக நீதி அரசு! இல்லை! இல்லை! மனுநீதி அரசு.

    கோவையில் கடந்த 5 ஆண்டு காலத்தில் மட்டும் 79 யானைகள் இறந்துள்ளதென தகவல்கள் தெரிவிக்கின்றன. காடுகளிலுள்ள யானைகளின் இருப்புக்கோ, அவை செல்வதற்கான வழித்தடத்துக்கோ வழிவகை செய்யாத தி.மு.க. அரசு, கோவில் யானைகளுக்கு நினைவு மண்டபம் கட்டத்துடிப்பது வெட்கக்கேடானது.

    அரசின் பெயரில் கடன் வாங்கும் ரூ.90 ஆயிரம் கோடியில்தானே, பசுக்களுக்கு மடமும், யானைகளுக்கு நினைவு மண்டபமும் கட்டுகிறீர்கள்? சிறப்பு! சிறப்போ சிறப்பு! உத்தரப்பிரதேச மாடலையும் மிஞ்சிவிடும் உங்களது ஆன்மீக திராவிட மாடல் ஆட்சி.

    இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
    ×