search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நிர்வாகி கைது"

    • சாய்ரகு இந்து எழுச்சி பேரவையில் தஞ்சை மாநகர மாவட்ட தலைவராக உள்ளார்.
    • ஆட்டம் பாட்டத்துடன் சாய்ரகு பட்டா கத்தியால் கேக் வெட்டி நிர்வாகிகளுக்கு ஊட்டி மகிழ்ந்தார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை அடுத்த மாரியம்மன் கோவில் பகுதியை சேர்ந்தவர் பஞ்சநாதன் மகன் சாய்ரகு (வயது 39). இவர் இந்து எழுச்சி பேரவையில் தஞ்சை மாநகர மாவட்ட தலைவராக உள்ளார்.

    இந்த நிலையில் நேற்று தனது பிறந்தநாளை தஞ்சை-நாகை சாலையில் உள்ள கட்சி அலுவலகத்தில் நிர்வாகிகளுடன் கொண்டாடினார்.

    அப்போது ஆட்டம் பாட்டத்துடன் சாய்ரகு பட்டா கத்தியால் கேக் வெட்டி நிர்வாகிகளுக்கு ஊட்டி மகிழ்ந்தார். இந்த நிலையில் இது சம்பந்தமான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

    இது குறித்து தகவல் அறிந்த தஞ்சை தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சாய்ரகுவை கைது செய்தனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • கருங்கல்பட்டியை சேர்ந்த 56-வது வார்டு தி.மு.க. செயலாளர் முருகேசன் செவ்வாய்பேட்டை போலீசில் புகார் அளித்தார்.
    • புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    சேலம்:

    தமிழக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பற்றி சமூக வலைதளத்தில் குமரேசன் என்பவர் அவதூறு செய்தி பரப்பி உள்ளனர். இதை பார்த்த தி.மு.க.வினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இதையடுத்து கருங்கல்பட்டியை சேர்ந்த 56-வது வார்டு தி.மு.க. செயலாளர் முருகேசன் செவ்வாய்பேட்டை போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து அவர் யார் என்று விசாரணை நடத்தி வந்தனர்.

    விசாரணையில் அவர் சேலம் தாதகாப்பட்டியை சேர்ந்த குமரேசன் (49) என்பது தெரிய வந்தது. இவர் டவுண் பகுதியில் வாகன உதிரி பாகம் விற்பனை கடை வைத்துள்ளார். மேலும் இவர் நாம் தமிழர் கட்சியில் தெற்கு தொகுதி முன்னாள் துணை தலைவராக இருந்து உள்ளார். இதையடுத்து அவரை போலீசார் போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணைக்கு பிறகு கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாம் தமிழர் கட்சி மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • வங்கி அலுவலர்களை தலா ரூ.2 லட்சம் முதல் ரூ.7 லட்சம் வரை பணம் பெற்றுக்கொண்டு நியமித்ததும் தெரியவந்தது.
    • பொதுமக்களிடம் இருந்து வைப்புத்தொகை, சேமிப்பு தொகை ஆகியவற்றை பெற்றும், அதிக வட்டி தருவதாக கூறி நிரந்தர வைப்புத்தொகைகளை பெற்றும் மோசடி செய்து வந்ததும் தெரியவந்துள்ளது.

    சென்னை:

    சென்னை அம்பத்தூர் லேடான் தெருவில் ஊரக மற்றும் வேளாண்மை விவசாயிகள் கூட்டுறவு வங்கி என்ற பெயரில் கடந்த ஓராண்டாக வங்கி ஒன்று இயங்கி வந்தது. இந்த வங்கியின் கிளைகள் மதுரை, விருதாச்சலம், கள்ளக்குறிச்சி, நாமக்கல், திருவண்ணாமலை, சேலம் உள்பட 8 இடங்களில் இயங்கியது.

    இந்த வங்கியின் தலைவராக சந்திரபோஸ் என்பவர் செயல்பட்டார். அவர் ரிசர்வ் வங்கி அங்கீகாரம் கொடுத்தது போன்று போலி சான்றிதழ் தயாரித்து இந்த வங்கியை தொடங்கியுள்ளார். இதுகுறித்து, ரிசர்வ் வங்கியின் உதவி பொது மேலாளர் சென்னை பெருநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.

    அதன் பேரில், கடந்த 5-ந் தேதி அந்த வங்கியின் தலைவர் சந்திரபோசை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து போலியான பதிவு சான்றிதழ், வங்கி ஆவணங்கள், படிவங்கள், முத்திரைகள் மற்றும் பென்ஸ் சொகுசு கார் ஒன்று பறிமுதல் செய்யப்பட்டது. வங்கி கணக்கில் இருந்த ரூ.56 லட்சத்து 65 ஆயிரத்து 336 முடக்கப்பட்டது.

    வங்கி அலுவலர்களை தலா ரூ.2 லட்சம் முதல் ரூ.7 லட்சம் வரை பணம் பெற்றுக்கொண்டு நியமித்ததும் தெரியவந்தது. மேலும், போலியாக வங்கி கணக்கு புத்தகம், காசோலை, முத்திரைகள் மற்றும் படிவங்கள் பயன்படுத்தியதும், போலியான டெபிட் கார்டுகள் தயாரித்ததும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

    அதேபோல், பொதுமக்களிடம் இருந்து வைப்புத்தொகை, சேமிப்பு தொகை ஆகியவற்றை பெற்றும், அதிக வட்டி தருவதாக கூறி நிரந்தர வைப்புத்தொகைகளை பெற்றும் மோசடி செய்து வந்ததும் தெரியவந்துள்ளது. இந்த வழக்கில் திறமையாக துப்புதுலக்கிய சென்னை மத்திய குற்றப்பிரிவு துணை கமிஷனர் நாகஜோதி மற்றும் அவரது குழுவினரை சென்னை பெருநகர போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் நேற்று நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார்.

    பின்னர், அவர் நிருபர்களிடம் கூறும்போது, "போலியாக தொடங்கப்பட்டுள்ள இந்த வங்கியில் 3 ஆயிரம் பேர் கணக்கு தொடங்கியுள்ளனர். சென்னையில் மட்டும் 1,700 பேர் கணக்கு வைத்துள்ளனர். ரிசர்வ் வங்கி அதிகாரியின் புகாரின் பேரில் நடத்திய விசாரணையில் தான் இந்த மோசடி தெரியவந்தது. வங்கியில் கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர்களிடம் இருந்து இதுவரை எந்த புகாரும் வரவில்லை. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. அதில் முக்கிய தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது" என்றார்.

    ×