search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "mystery fever"

    குஜிலியம்பாறை அருகே மர்ம காய்ச்சலுக்கு சிறுவன் பரிதாபமாக பலியானான். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    எரியோடு:

    குஜிலியம்பாறை, எரியோடு பகுதிகளில் கோடை வெயில் கொளுத்திய நிலையில் மழையும் பெய்தது. பருவ நிலை மாறி வருவதால் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் பல்வேறு இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர்.

    மேலும் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    குறிப்பாக மர்ம காய்ச்சல் பரவி வருவதால் அப்பகுதியில் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர். ராமகிரியைச் சேர்ந்தவர் மாரிமுத்து. கூலித் தொழிலாளி. இவரது மகன் துர்க்கேஸ் என்ற சீனிவாசன் (வயது 7). அதே பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வந்தான். கடந்த சில நாட்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்த சீனிவாசன் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை.

    இதனைத் தொடர்ந்து மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருந்தபோதும் சிகிச்சை பலனின்றி சீனிவாசன் பரிதாபமாக உயிரிழந்தான்.

    இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    ஆண்டிப்பட்டி அருகே மர்ம காய்ச்சலுக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.

    ஆண்டிப்பட்டி:

    ஆண்டிப்பட்டி தாலுகா வரு‌ஷநாடு அருகே உள்ள கூட்டுரோடு பகுதியைச் சேர்ந்தவர் செல்வம் (வயது 54). இவரது மனைவி அமுதா (45). இவருக்கு கடந்த ஒரு வாரமாக காய்ச்சல் இருந்து வந்தது.

    இதற்காக வரு‌ஷநாடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று வந்தார். ஒரு சில நாட்களில் காய்ச்சல் சற்று குறையவே வீட்டுக்கு திரும்பினார். ஆனால் மீண்டும் அமுதாவுக்கு காய்ச்சல் மற்றும் உடல் வலி ஏற்பட்டது.

    தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். அவருக்கு என்ன காய்ச்சல்? என டாக்டர்கள் தெரிவிக்க வில்லை. இது குறித்து வரு‌ஷநாடு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சென்னிமலை பகுதியில் பரவி வரும் மர்ம காய்ச்சலை கட்டுப்படுத்த மாவட்ட சுகாதாரத் துறையினர் கடந்த 3 நாட்களாக தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.
    சென்னிமலை:

    சென்னிமலை அருகே உள்ள முருங்கத்தொழுவு ஊராட்சிக்குட்பட்ட மேற்கு தலவுமலை, சல்லிமேடு, அம்மன்கோவில், கே.சி., வலசு சுற்றுவட்டார பகுதியில் திடீரென மர்ம காய்ச்சல் பரவி வருகிறது.

    இதில் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். காய்ச்சல் ஏற்பட்டவர்களுக்கு கால் மூட்டுகள் வீங்கி அதிக வலி வருகிறது.

    இதனால் காய்ச்சல் ஏற்பட்டவர்கள் வீட்டில் முடங்கி கிடக்கும் நிலை ஏற்படுகிறது. இந்த பகுதிகளில் பரவி வரும் மர்ம காய்ச்சலை கட்டுப்படுத்த மாவட்ட சுகாதாரத் துறையினர் கடந்த 3 நாட்களாக தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.

    சுற்றுப்புறத்தை தூய்மைப்படுத்தியும் கொசு மருந்தடித்தும் சாக்கடைகளை சுத்தப்படுத்தியும் வருகிறார்கள். இருந்தாலும் காய்ச்சல் அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு பரவி வருகிறது.

    பாதிக்கப்பட்ட பகுதிகளில் சிறப்பு முகாம் அமைத்து சிகிச்சை அளிக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த பகுதியில் வசிக்கும் மக்கள் விவசாயம் மற்றும் நெசவு சார்ந்த கூலித் தொழிலாளர்கள். அவர்கள் காய்ச்சலால் சிகிச்சைக்கு மிகவும் சிரமப்படுகின்றனர்.

    பாதிக்கப்பட்ட மக்கள் சென்னிமலை, அரச்சலூர், நத்தக்கடையூர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் தஞ்சம் அடைகிறார்கள். தனியார் ஆஸ்பத்திரிகளில் காய்ச்சலுக்கு அதிக செலவு செய்வதாலும் வேலைக்கு செல்லாமல் முடக்கி விடுவதாலும் ஏழை கூலிகளும், நடுத்தர விவசாய மக்களும் பொருளாதர ரீதியாக பாதிப்படைகிறார்கள்.

    எனவே மாவட்ட சுகாதாரத்துறை காய்ச்சல் கட்டுப்படும் வரை இந்த பகுதிகளில் சிறப்பு சிகிச்சை முகாம் அமைத்து மக்களுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    கும்மிடிப்பூண்டி பகுதியில் மர்ம காய்ச்சல் பீதி நிலவுகிறது. மேலும் காய்ச்சல் அறிகுறி உள்ள சுமார் 10 பேருக்கு ரத்த மாதிரி பரிசோதனை செய்தனர்.

    கும்மிடிப்பூண்டி:

    கும்மிடிப்பூண்டி பேரூராட்சியில் உள்ள 14 மற்றும் 15-வது வார்டுகளுக்குட்பட்ட மா.பொ.சி. நகர் ஜெய்ஹிந்த் நகர் பகுதியில் வசிக்கும் சிலர் தொடர்ந்து காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

    அவர்கள் கும்மிடிப்பூண்டி கோட்டக்கரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதனால் கும்மிடிப்பூண்டி பகுதியில் மர்ம காய்ச்சல் பீதி நிலவுகிறது.

    இதையடுத்து பேரூராட்சி செயல் அலுவலர் கலாதரன், துப்புரவு மேற்பார்வையாளர் கோபி, வட்டார சுகாதார மேற் பார்வையாளர் முருகதாஸ் ஆகியோர் தலைமையில் கடந்த 2 நாட்களாக பேரூராட்சி பகுதியில் தீவிர துப்புரவு பணி மேற்கொள்ளப்பட்டது.

    மாவட்ட துணை இயக்குனர் டாக்டர் கிருஷ்ணராஜ் உத்தரவின் பேரில் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் கோவிந்தராஜ் தலைமையில் நடமாடும் மருத்து வக்குழுவினர் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    மேலும் காய்ச்சல் அறிகுறி உள்ள சுமார் 10 பேருக்கு ரத்த மாதிரி பரிசோதனை செய்தனர்.

    தொடர் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மா.பொ.சி. நகரைச்சேர்ந்த சதிஷ் சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

    இது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறும் போது, ‘ சிலருக்கு ஏற்பட்ட காய்ச்சல் என்பது சாதாரண காய்ச்சல் தான். அது டெங்கு காய்ச்சல் மற்றும் மர்ம காய்ச்சல் என தவறான தகவல்கள் பரப்பப்பட்டு வருகிறது‘ என்றார்.

    தருமபுரி அரசு மருத்துவமனையில் மர்ம காய்ச்சலுக்கு சிகிச்சை பலனின்றி ஒரு வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது
    தருமபுரி:

    வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அருகே பாய்ச்சல் இதயம் நகரைச் சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மகள் லாவண்யா (வயது1).

    லாவண்யாவுக்கு கடந்த சில நாட்களாக காய்ச்சலால் அவதியடைந்தாக கூறப்படுகிறது.

    உடனே அந்த குழந்தையை சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த குழந்தை லாவண்யா நேற்று மாலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தது. இதுகுறித்து திருப்பத்தூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
    ராமநாதபுரம் அருகே காய்ச்சலால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் கை, கால், மூட்டுகளில் வீக்கம் ஏற்பட்டு வலிப்பதாக தெரிவிக்கின்றனர். தொடர்ந்து காய்ச்சல் பரவி வருவதால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.
    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி ஒன்றியம், பனைக்குளம் கிராமத்தில் 200-க்கும் மேற்பட்ட விவசாய குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

    இப்பகுதியை சேர்ந்த 20-க்கும் மேற்பட்டோர் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை பாதிக்கப்பட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    காய்ச்சலால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் கை, கால், மூட்டுகளில் வீக்கம் ஏற்பட்டு வலிப்பதாக தெரிவிக்கின்றனர். கிராமத்தில் தொடர்ந்து காய்ச்சல் பரவி வருவதால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.

    ராமநாதபுரம் சுகாதாரத்துறை துணை இயக்குனர் குமரகுரு கூறியதாவது:-

    மருத்துவ குழுவினர் பனைக்குளம் கிராமத்தில் சென்று ஆய்வு நடத்தி வருகின்றனர். என்ன காய்ச்சல் என்பது பற்றி ரத்தம் மாதிரி எடுக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. காய்ச்சலுக்கான தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றார்.

    விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே மர்ம காய்ச்சலுக்கு சிகிச்சை பலனின்றி தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.
    உளுந்தூர்பேட்டை:

    விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள சின்னமாரன் ஓடையை சேர்ந்தவர் மைக்கேல் (வயது 53). தொழிலாளி.

    இவர் கடந்த சில நாட்களாக மர்ம காய்ச்சலால் அவதிபட்டு வந்தார். அவருக்கு அங்குள்ள ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை அளித்தும் காய்ச்சல் குண மாகவில்லை.

    இதனால் மைக்கேலை அவரது உறவினர்கள் புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இருப்பினும் சிகிச்சை பலனளிக்காமல் இன்று அதிகாலை மைக்கேல் பரிதாபமாக இறந்தார்.
    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே மர்ம காய்ச்சலுக்கு பள்ளி தலைமையாசிரியை பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    ஆலங்குடி:

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள கொத்தமங்கலத்தை சேர்ந்தவர் துரைராஜ். இவர் குன்றாண்டார்கோவில் உதவி தொடக்ககல்வி அலுவலராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி மலர்விழி (வயது50). இவர் ஆலங்குடி அருகேயுள்ள ஆலங்காடு அரசு தொடக்கப்பள்ளியில் தலைமையாசிரியையாக பணியாற்றி வந்தார்.

    இந்தநிலையில் மலர் விழி மர்மகாய்ச்சலால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து அவர் புதுக்கோட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் காய்ச்சல் குணமாகவில்லை. மேலும் காய்ச்சல் தீவிரம் அடைந்ததால் புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி மலர்விழி பரிதாபமாக இறந்தார்.
    மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்ட தலைமையாசிரியர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

    பேரையூர்:

    திருமங்கலம் காமராஜர் வடபகுதி கற்பகம் நகரைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (வயது 62). அரசு பள்ளியில் தலைமையாசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

    கடந்த 2 வாரமாக இவருக்கு தொடர் காய்ச்சல் இருந்து வந்தது. பல மருத்துவர்களிடம் காண்பித்தும் காய்ச்சல் குறையவில்லை.

    இதையடுத்து ராதாகிருஷ்ணன் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு அவரது நிலைமை மோசமடைந்தது.

    உடனே அவர் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தனி வார்டில் ராதாகிருஷ்ணனுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். ஆனாலும் அதில் பலன் ஏற்படாமல் நேற்று பரிதாபமாக இறந்தார்.

    திருமங்கலம் காமராஜர் பகுதியில் 10-க்கும் மேற்பட்டோர் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒருவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    எனவே திருமங்கலம் சுகாதாரத்துறை அதிகாரிகள் அந்தப்பகுதியில் முகாமிட்டு காய்ச்சல் பரவுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டு மென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    தமிழகத்தில் டெங்கு மற்றும் மர்ம காய்ச்சலுக்கு பலர் பலியாகி உள்ள நிலையில் திருவெறும்பூரில் மர்ம காய்ச்சலுக்கு பள்ளி மாணவன் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    திருவெறும்பூர்:

    திருவெறும்பூர் அருகே உள்ள துவாக்குடி வடக்கு மலை, கருமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் அய்யம்பெருமாள். எலக்ட்ரீசியன். இவரது மகன் சஞ்சய் (வயது 8). இவர் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்தார்.

    இந்நிலையில் கடந்த 7-ந்தேதி சஞ்சய்க்கு மர்ம காய்ச்சல் ஏற்பட்டது. உடனே அவரை அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். ஆனால் குணமாகவில்லை. பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று காலை சஞ்சய் பரிதாபமாக இறந்தார். மர்ம காய்ச்சலுக்கு பள்ளி மாணவன் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    மதுரை மாவட்டம் மேலூர் அருகே மர்ம காய்ச்சலுக்கு கர்ப்பிணி பெண் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    மேலூர்:

    மதுரை மாவட்டத்தில் பலர் டெங்கு மற்றும் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இறந்து வருகின்றனர். மதுரை அரசு ஆஸ்பத்திரியில் நாள் தோறும் காய்ச்சலுக்காக சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

    மதுரை மாவட்டம், மேலூர் அருகே உள்ள தும்பைப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்டது சாலக்கிபட்டி. இந்த ஊரைச் சேர்ந்தவர் ராஜபாண்டி. எலக்ட்ரீசியனான இவருக்கு வீரசிகாமணி (வயது 28) என்ற மனைவியும், 2 பெண் குழந்தைகளும் உள்ளனர்.

    இந்த நிலையில் வீரசிகாமணி மீண்டும் கர்ப்பமானார். கடந்த சில நாட்களாக அவருக்கு தொடர் காய்ச்சல் இருந்து வந்தது. மேலூர் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றும் காய்ச்சல் குணமாகவில்லை.

    இதையடுத்து வீரசிகாமணி மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தனி வார்டில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி வீரசிகாமணி பரிதாபமாக இறந்தார்.

    சாலக்கிபட்டியில் சுகாதார சீர்கேடு நிலவி வருவதால் பலர் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    தற்போது காய்ச்சலால் கர்ப்பிணி பெண் இறந்திருப்பது அந்தப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    எனவே சுகாதாரத்துறையினர் இனியும் காலதாமதம் செய்யாமல் சாலக்கிபட்டியில் மருத்துவ முகாம் நடத்தி காய்ச்சல் பரவுவதை தடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அருகே மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்ட விவசாயி சிகிகச்சை பலனின்றி உயிரிழந்தார்.
    ஓசூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் ஒன்றியம் ராயக்கோட்டை அருகே உள்ளது தொட்டதிம்மன அள்ளி. இங்குள்ள நெருப்புகுட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் எல்லப்பா (36). விவசாயி கடந்த 10 நாட்களாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த இவர், ஒசூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். பின்னர் தீவிர சகிச்சைக்காக பெங்களுருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு சிகிகச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்த அதிகாரிகள் குழுவினர் நெருப்புகுட்டை கிராமத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்கள். #tamilnews
    ×