என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆண்டிப்பட்டி அருகே மர்ம காய்ச்சலுக்கு பெண் பலி
    X

    ஆண்டிப்பட்டி அருகே மர்ம காய்ச்சலுக்கு பெண் பலி

    ஆண்டிப்பட்டி அருகே மர்ம காய்ச்சலுக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.

    ஆண்டிப்பட்டி:

    ஆண்டிப்பட்டி தாலுகா வரு‌ஷநாடு அருகே உள்ள கூட்டுரோடு பகுதியைச் சேர்ந்தவர் செல்வம் (வயது 54). இவரது மனைவி அமுதா (45). இவருக்கு கடந்த ஒரு வாரமாக காய்ச்சல் இருந்து வந்தது.

    இதற்காக வரு‌ஷநாடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று வந்தார். ஒரு சில நாட்களில் காய்ச்சல் சற்று குறையவே வீட்டுக்கு திரும்பினார். ஆனால் மீண்டும் அமுதாவுக்கு காய்ச்சல் மற்றும் உடல் வலி ஏற்பட்டது.

    தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். அவருக்கு என்ன காய்ச்சல்? என டாக்டர்கள் தெரிவிக்க வில்லை. இது குறித்து வரு‌ஷநாடு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×