search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "headmaster death"

    மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்ட தலைமையாசிரியர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

    பேரையூர்:

    திருமங்கலம் காமராஜர் வடபகுதி கற்பகம் நகரைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (வயது 62). அரசு பள்ளியில் தலைமையாசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

    கடந்த 2 வாரமாக இவருக்கு தொடர் காய்ச்சல் இருந்து வந்தது. பல மருத்துவர்களிடம் காண்பித்தும் காய்ச்சல் குறையவில்லை.

    இதையடுத்து ராதாகிருஷ்ணன் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு அவரது நிலைமை மோசமடைந்தது.

    உடனே அவர் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தனி வார்டில் ராதாகிருஷ்ணனுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். ஆனாலும் அதில் பலன் ஏற்படாமல் நேற்று பரிதாபமாக இறந்தார்.

    திருமங்கலம் காமராஜர் பகுதியில் 10-க்கும் மேற்பட்டோர் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒருவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    எனவே திருமங்கலம் சுகாதாரத்துறை அதிகாரிகள் அந்தப்பகுதியில் முகாமிட்டு காய்ச்சல் பரவுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டு மென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    கோவை துடியலூர் அருகே மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் தலைமை ஆசிரியர் பரிதாபமாக உயிரிழந்தார்.

    கோவை துடியலூர் அருகே உள்ள பழனி கவுண்டன் புதூர் ராமகிருஷ்ணா நகரில் வசித்து வருபவர் பகத் சிங் (58). இவர் இடிகரை அரசு உயர்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராக வேலை பார்த்து வந்தார்.நேற்று இரவு பகத் சிங் வீட்டிற்கு தேவையான மளிகை பொருட்களை வாங்க மோட்டார் சைக்கிளில் சென்றார். 

    அப்போது எதிரே 2 வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் அதி வேகமாக வந்தனர். அவர்கள் வந்த மோட்டார் சைக்கிள் பகத் சிங் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் அவர் தூக்கி வீசப்பட்டார். பலத்த காயம் அடைந்த பகத் சிங்கை அக்கம் பக்கத்தினர் மீட்டு அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் இன்றி இன்று காலை பரிதாபமாக இறந்தார்.

    பகத்சிங் மீது மோதிய மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர்கள் தப்பி சென்று விட்டனர். அவர்களை துடியலூர் போலீசார் தேடி வருகிறார்கள்.

    ×