search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Farmer's death"

    • கரையோரத்தில் கால்நடைகளை மேய்ச்சலுக்கு அனுப்ப வேண்டாம் எனவும் பொதுப்பணித்துறையினர் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
    • வேலப்பர் கோவிலை அடுத்துள்ள கூட்டாற்று பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    ஆண்டிபட்டி:

    தேனி மாவட்டத்தில் கடந்த 1 வாரமாக கனமழை பெய்து வருகிறது. இதனால் நீர்நிலைகள் அனைத்தும் வேகமாக நிரம்பி வருகின்றன. தேனி மாவட்டத்துக்கு தற்போது மேலும் 3 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு முதல் இடைவிடாது மழை கொட்டியதால் இன்று தேனி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    பெரியகுளம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் பெய்த கனமழை காரணமாக வராக நதியில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் ஜெயமங்கலம், மேல்மங்கலம், வடுகபட்டி, குள்ளப்புரம் உள்ளிட்ட வராகநதிக்கரையோரம் உள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    கரையோரத்தில் கால்நடைகளை மேய்ச்சலுக்கு அனுப்ப வேண்டாம் எனவும் பொதுப்பணித்துறையினர் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    ஆண்டிபட்டி அருகே உள்ள தெப்பம்பட்டி கிழக்குத் தெருவைச் சேர்ந்தவர் முருகன் (வயது 55). விவசாயி. இவர் தனது தோட்டத்தில் நிலக்கடலை விவசாயம் செய்துள்ளார். நேற்று இரவு தனது தோட்டத்துக்கு காவலுக்கு சென்றார். அப்போது வேலப்பர் கோவிலை அடுத்துள்ள கூட்டாற்று பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    இதில் முருகன் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்க முயன்றும் முடியவில்லை. இது குறித்து ராஜதானி போலீசாருக்கும், தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

    இரவு நேரமானதால் முருகனை மீட்க முடியவில்லை. இன்று காலை தடுப்பணையில் முருகன் உடல் சடலமாக மீட்கப்பட்டது. இதனையடுத்து போலீசார் அவரது உடலை மீட்டு தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து ராஜதானி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • ரவி ஊரணி கிணற்றில் கால் கழுவ சென்றுள்ளார்.
    • திடீரென நிலை தடுமாறிய அவர், கிணற்று நீரில் விழுந்து மூச்சுத் திணறி இறந்தார்.

    விழுப்புரம்:

    திருவெண்ணைநல்லூர் தெற்குவீதியியை சேர்ந்தவர் ரவி (வயது 55). விவசாயி. இவருக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். 3 பேருக்கும் திருமணமாகி சென்னையில் தனித்தனியே வசித்து வருகின்றனர். இவரது மகன் கார்த்திக் (35) வீட்டில் இவரது மனைவி தங்கியுள்ளார். இந்நிலையில் நேற்று தனக்கு சொந்தமான விவசாய நிலத்திற்கு சென்ற ரவி, அருகில் இருந்த ஊரணி கிணற்றில் கால் கழுவ சென்றுள்ளார். அப்போது திடீரென நிலை தடுமாறிய அவர், கிணற்று நீரில் விழுந்து மூச்சுத் திணறி இறந்தார். சிறிது நேரத்தில் தற்செயலாக அங்கு சென்ற கிராம மக்கள் இதனைக் கண்டனர். இது குறித்து திருவெண்ணைநல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருவெண்ணைநல்லூர் சப்-இன்ஸ்பெக்டர் வினோ த்ராஜ் தலைமையிலான போலீசார் ரவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், போலீசார் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அருகே மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்ட விவசாயி சிகிகச்சை பலனின்றி உயிரிழந்தார்.
    ஓசூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் ஒன்றியம் ராயக்கோட்டை அருகே உள்ளது தொட்டதிம்மன அள்ளி. இங்குள்ள நெருப்புகுட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் எல்லப்பா (36). விவசாயி கடந்த 10 நாட்களாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த இவர், ஒசூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். பின்னர் தீவிர சகிச்சைக்காக பெங்களுருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு சிகிகச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்த அதிகாரிகள் குழுவினர் நெருப்புகுட்டை கிராமத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்கள். #tamilnews
    குன்னம் பகுதிகளில் பலத்த மழை பெய்த போது மின்னல் தாக்கியதில் விவசாயி பரிதாமாக இறந்தார். மேலும் பசுமாடு, 12 ஆடுகள் செத்தன.
    குன்னம்:

    பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அடுத்த கூடலூர் கிராமத்தை சேர்ந்தவர் ரத்தினம். இவரது மகன் அறிவழகன் (வயது 40). விவசாயி. இவர் அப்பகுதியில் உள்ள தனது விவசாய நிலத்தில் வேலை பார்த்து கொண்டிருந்தார். அப்போது இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதையடுத்து மழைக்காக அவர் அருகில் உள்ள மரத்தடியில் ஒதுங்கி நின்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக மின்னல் தாக்கியதில் அறிவழகன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த மருவத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அறிவழகன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதேபோல் அணைப்பாடி கிராமத்தை சேர்ந்த தர்மராஜ் என்பவர் தனது ஆடுகளை அப்பகுதியில் மேய்ச்சலுக்கு விட்டிருந்தார். அப்போது மின்னல் தாக்கியதில் 12 ஆடுகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக செத்தது. இதுகுறித்து மருவத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பாடாலூரை சேர்ந்தவர் செல்வராஜ் மனைவி வெள்ளையம்மாள். இவர் நேற்று தனது பசுமாட்டை பாடாலூர் கால்நடை மருத்துவமனை அருகில் உள்ள மரத்தடியில் கட்டியிருந்தார். இந்நிலையில் அப்பகுதியில் மதியம் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. அப்போது மின்னல் தாக்கி சம்பவ இடத்திலேயே பசுமாடு இறந்தது. இதுகுறித்து பாடாலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
    ×