search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Motorcycle theft"

    • ஸ்ரீதர் வீட்டின் முன்பு நிறுத்தி வைத்திருந்த மோட்டார் சைக்கிளும் மாயமானது
    • 4 பேரையும் போலீசார் கைது செய்து திருடப்பட்ட 2 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி காமராஜ் நகரைச் சேர்ந்தவர் கருப்பசாமி (வயது29). இவர் தனது மோட்டார் சைக்கிளை வீட்டின் முன்பு நிறுத்தி வைத்திருந்த போது காணாமல்போனது.அதே போன்று அண்ணாநகரை சேர்ந்த ஸ்ரீதர் வீட்டின் முன்பு நிறுத்தி வைத்திருந்த மோட்டார் சைக்கிளும் மாயமானது.

    இது குறித்து அவர்கள் தென்பாகம் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் தூத்துக்குடி சத்யா நகரை சேர்ந்த ரெட்டை வினோத் என்ற வினோத் (25), 3 சென்ட் அந்தோனியார்புரம் பகுதியை சேர்ந்த மகாராஜா (20), அண்ணாநகரை சேர்ந்த பொன்ராஜ் என்ற ராசு (23) கருணாநிதி நகரைச் சேர்ந்த கார்த்திக் (22) ஆகிய 4 பேரும் மோட்டார் சைக்கிளை திருடியது தெரியவந்தது.

    4 பேர் கைது

    இதனையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் கங்கைநாத பாண்டியன் மற்றும் போலீசார் 4 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்த திருடப்பட்ட 2 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர்.கைது செய்யப்ப ட்டர்களில் ரெட்டை வினோத் மீது ஏற்கனவே தென்பாகம் காவல் நிலையத்தில் கொலை முயற்சி, வழிப்பறி உட்பட 10 வழக்குகளும், பொன்ராஜ் மீது கொலை மிரட்டல் உட்பட 2 வழக்குகளும் உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

    • செல்லையா கடந்த 7-ந்தேதி இரவு தனது வீட்டு முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு தூங்க சென்றார்.
    • சந்துரு, அருள் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

    நெல்லை:

    கல்லிடைக்குறிச்சியை சேர்ந்தவர் லெட்சுமணன். இவரது மகன் செல்லையா(வயது 26). இவர் கடந்த 7-ந்தேதி இரவு தனது வீட்டு முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு தூங்க சென்றார். மறுநாள் காலை எழுந்து பார்த்தபோது அவரது மோட்டார் சைக்கிளை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் கல்லிடைக்குறிச்சி போலீசில் புகார் அளித்தார்.

    அதன்பேரில் போலீசார் அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காமிராக்களை ஆய்வு செய்தனர். அதில் 2 பேரின் உருவங்கள் பதிவாகி இருந்தது. அதனை வைத்து போலீசார் நடத்திய விசாரணையில், அவர்கள் அதே பகுதியை சேர்ந்த சந்துரு(22), அருள்(23) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.

    • காளிச்சரன் காரைக்காலில் உள்ள தனியார் மதுபான கடையில் வேலை செய்து வருகிறார்.
    • நண்பர்கள் இருவரும், பல இடத்தில் தேடியும் மோட்டார் சைக்கிள் கிடைக்கவில்லை.

    புதுச்சேரி:

    காரைக்கால் திருநள்ளாறு கைலாசநாதர் நகரைச்சேர்ந்தவர் காளிச்சரன். இவர் காரைக்காலில் உள்ள தனியார் மதுபான கடையில் வேலை செய்து வருகிறார். கடந்த 16.8.22 அன்று, தனது நண்பர் கணேஷ் என்பவர், தனது தாய்க்கு உடல்நிலை சரியில்லை. மருத்துவமனைக்கு கொண்டுசெல்லவேண்டும் என அவரது ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் மதிப்பிலான மோட்டார் சைக்கிளை கடன் கேட்டுள்ளார். காளிச்சரனும் மோட்டார் சைக்கிளை கடன் கொடுத்துள்ளார்.

    மறுநாள் கணேசிடம் மோட்டார் சைக்கிளை கேட்டபோது, தனது தாயுடன் மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் சென்றுவிட்டதாக கூறியுள்ளார். கணேஷ் தஞ்சாவூருக்கு மோட்டார் சைக்கிளுடன் சென்று இருப்பார் என காளிச்சரன் இருந்துவிட்டார். சில நாட்கள் கழித்து, கணேஷ்க்கு போன் போட்டு கேட்டபோது, தான் இன்னும் காரைக்கால் வரவில்லை என கூறியதாக தெரிகிறது. நேற்று முன்தினம் காரைக்கால் வந்த கணேஷ், காளிச்சரனை பார்த்து, 16.8.22 அன்று காரைக்கால் பிரகார வீதியில் உள்ள தனியார் கிளினிக் அருகே மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு தஞ்சாவூர் சென்றதாகவும், வேலை பலுவில் அதை மறந்துவிட்டதாகவும், இன்று வந்து பார்த்தபோது, மோட்டார் சைக்கிளை காணவில்லை என கூறியுள்ளார். 

    தொடர்ந்து, நண்பர்கள் இருவரும், பல இடத்தில் தேடியும் மோட்டார் சைக்கிள் கிடைக்கவில்லை என்பதால், காரைக்கால் நகர காவல்நிலையத்தில் காளிச்சரன் புகார் கொடுத்தார். அதன் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து, பிரகார வீதியில் உள்ள கண்காணிப்பு கேமரா உதவியுடன், மோட்டார் சைக்கிளை திருடிச்சென்ற மர்ம நபரை தேடிவருகின்றனர்.

    • சம்பவத்தன்று இரவு தனது மோட்டார்சைக்கிளை வீட்டின் முன்பு நிறுத்திவிட்டு தூங்க சென்று விட்டார்.
    • மறுநாள் காலை வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிளை காணவில்லை. பல இடங்களில் தேடி பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை.

    பெருந்துறை:

    பெருந்துறையை அடுத்துள்ள விஜயமங்கலம், மேட்டுப்புதூர் பகுதியை சேர்ந்தவர் பிரபு (வயது 25). திருமணம் ஆகாத இவர் தனது தாயுடன் வசித்து வருகிறார்.

    பிரபு அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் ப்ளூ மெட்டல் கம்பெனியில் மேலாளராக பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று இரவு தனது மோட்டார்சைக்கிளை வீட்டின் முன்பு நிறுத்திவிட்டு தூங்க சென்று விட்டார்.

    மறுநாள் காலை வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிளை காணவில்லை. பல இடங்களில் தேடி பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை.

    இதனையடுத்து பிரபு பெருந்துறை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதுதொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ள தனது மகளை பார்ப்பதற்காக பிச்சைக்கனி மொபட்டில் சென்றுள்ளார்.
    • விசாரணையில் மகாலிங்கம் மொபட்டை திருடியது தெரியவந்தது.

    நெல்லை:

    தென்காசியை சேர்ந்த பிச்சைக்கனி என்பவர் நேற்று அங்குள்ள அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ள தனது மகளை பார்ப்பதற்காக மொபட்டில் சென்றுள்ளார். அப்போது மொபட்டை நிறுத்திவிட்டு உள்ளே சென்ற அவர் சிறிது நேரம் கழித்து வெளியே வந்தார். அப்போது அவரது மொபட்டை காணவில்லை.

    இதுதொடர்பாக அவர் அளித்த புகாரின்பேரில் தென்காசி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், கடையம் அருகே உள்ள புங்கம்பட்டி வடக்கு தெருவை சேர்ந்தவர் மகாலிங்கம்(வயது 63) என்பவர் மொபட்டை திருடியது தெரியவந்தது.

    இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். அவர் மீது ஆலங்குளம், கடையம் உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் சுமார் 10-க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள் திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளன.

    • கல்லூரி மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.
    • தஞ்சை மற்றும் கேரளாவைச் சேர்ந்தவர்கள் என்பதும், என்ஜினீயரிங் கல்லூரியில் படித்து வருவதும் தெரியவந்தது.

    கோவை,

    விருதுநகர் அருப்பு க்கோட்டையை சேர்ந்தவர் யோகேஷ்வரன் (வயது 22). இவர் கோவை சூலூர் ரங்கநாதபுரம் பகுதியில் தங்கி பல் மருத்துவராக வேலை செய்து வருகிறார்.

    சம்பவத்தன்று அவர் தனது மோட்டார் சைக்கிளை வீட்டின் முன்பு நிறுத்தி வீட்டிற்குள் சென்றார். சிறிது நேரம் கழித்து வெளியே வந்து பார்த்தபோது அவரது மோட்டார் சைக்கிள் மாயமாகி இருந்தது.

    இதைகண்டு அதிர்ச்சி அடைந்த அவர் அக்கம் பக்கத்தில் தேடி பார்த்தார். ஆனால் கிடைக்கவில்லை. மோட்டார் சைக்கிள் திருட்டு போனது குறித்து யோகேஷ்வரன் சூலூர் போலீசில் புகார் அளித்தார்.

    இதே போன்று சூலூரை சேர்ந்த கூலி தொழிலாளி ஹரி (25) என்பவர் தனது வீட்டின் முன்பு நிறுத்தி இருந்த மோட்டார் சைக்கிள் திருட்டு போனதாக புகார் அளித்தார். இதையடுத்து போலீசார் 2 பேரும் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்தனர்.

    பின்னர் அந்த பகுதிகளில் பொருத்தப்பட்டு இருந்த சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் பதிவாகி இருந்த காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி திருடர்களை தேடி வந்தனர். அப்போது கல்லூரி மாணவர்கள் 2 பேர் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.

    போலீசார் அவர்களை படித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் தஞ்சை மற்றும் கேரளாவைச் சேர்ந்தவர்கள் என்பதும், என்ஜினீயரிங் கல்லூரியில் படித்து வருவதும் தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் 2 பேரையும் கைது செய்தனர். அவர்கள் இதேபோன்று வேறு ஏதாவது சம்பவத்தில் ஈடுபட்டு உள்ளனரா என தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  

    • இளைஞர்கள் சிலர் மைதானத்தில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிந்ததை வேடிக்கை பார்த்து கொண்டிருந்தார்.
    • போலீசார் 2 வாலிபர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்து, கைது செய்தனர்.

    புதுச்சேரி:

    காரைக்காலில் மோட்டார் சைக்கிளை திருடிச்சென்ற 2 வாலிபர்களை, மோட்டார் சைக்கிள் உரிமையாளர் பொதுமக்கள் உதவியுடன் விரட்டி பிடித்து போலீசில் ஒப்படைத்தார். நாகை மாவட்டம் சங்கரன்பந்தல் பகுதியில் வசிப்பவர் கிருஷ்ணமூர்த்தி மகன் ரதிஷ்குமார் (வயது25). இவர் காரைக்காலில் உள்ள தனியார் கூரியர் அலுவலகத்தில் டெலிவரி மேனாக வேலை செய்து வருகிறார். இவர் காரைக்கால் சிங்காரவேலர் சாலை அருகே தனது மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு, அங்கு இளைஞர்கள் சிலர் மைதானத்தில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டி ருந்ததை வேடிக்கை பார்த்து கொண்டிருந்தார்.

    அப்பொழுது 2 மர்ம நபர்கள் ரதிஷ்குமாரின் மோட்டார் சைக்கிள் பூட்டை உடைத்து, கண் இமைக்கும் நேரத்தில் திருடி சென்றனர். இதனை பார்த்த ரதிஷ்குமார் சத்தம் போட்டார். தொடர்ந்து ரிதிஷ் குமார் அங்குள்ள பொது மக்கள் உதவியுடன் மோட்டார் சைக்கிளை திருடி சென்ற 2 வாலிபர்களையும் மடக்கி பிடித்து காரைக்கால் நகர போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். 2 வாலிபர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், அவர்கள் காரைக்கால் அம்மன்கோவில் பத்து, கூடல் வீதியை சேர்ந்த முத்துக்குமார் (26) மற்றும் திரு.பட்டினம் போலகம் பகுதியை சேர்ந்த விக்ரம் மூர்த்தி (36) என்பது தெரியவந்தது. தொடர்ந்து இன்ஸ்பெக்டர் சிவக்குமார் மற்றும் போலீசார் 2 வாலி பர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்து, கைது செய்தனர். 

    • நிலத்திற்கு சென்று வேலை செய்துவிட்டு பின்னர் வீட்டிற்கு செல்வதாக மோட்டார் சைக்கிள் எடுக்க வந்தார்.
    • காரின் பேரில் திருவெண்ணைநல்லூர் சப்-இன்ஸ்பெக்டர் பழனி வழக்கு பதிவு செய்து மாயமான மோட்டார் சைக்கிளை தேடி வருகின்றனர்.

    விழுப்புரம்:

    திருவெண்ணைநல்லூர் அருகே கரடிப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் செல்வகுமார் (வயது 31) இவர் அதே பகுதியில் உள்ள இவரது நிலத்திற்கு தனது மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். அப்போது மோட்டார் சைக்கிளை சாலை ஓரமாக நிறுத்திவிட்டு நிலத்திற்கு சென்று வேலை செய்துவிட்டு பின்னர் வீட்டிற்கு செல்வதாக மோட்டார் சைக்கிள் எடுக்க வந்தார். அப்போது சாலை ஓரமாக நிறுத்தி இருந்த மோட்டார் சைக்கிள் மாயமானது. இதைப் பார்த்து அதிர்ச்சடைந்து இது குறித்து செல்வகுமார் திருவெண்ணைநல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் திருவெண்ணைநல்லூர் சப்-இன்ஸ்பெக்டர் பழனி வழக்கு பதிவு செய்து மாயமான மோட்டார் சைக்கிளை தேடி வருகின்றனர்.

    அதிர்ச்சி அடைந்த ஜீவா சின்னசேலம் போலீஸ் நிலையத்தில் இருசக்கர வாகனத்தையும் செல்போனையும் திருடி சென்ற மர்ம நபரை கண்டுபிடித்து தருமாறு புகார் அளித்தார்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் அருகே உள்ள கனியாமூரிலிருந்து கச்சிராயபாளையம் செல்லும் சாலையில் ஜீவா என்பவர் கே. பி. கே சிக்கன் கடை நடத்தி வருகிறார்.

    நேற்று காலை பெயர் விலாசம் தெரியாத நபர் ஒருவர் 10 கிலோ சிக்கன் வேண்டும் என ஆர்டர் செய்துள்ளார். சிறிது நேரம் கழித்து கடை உரிமையாளர் ஜீவாவிடம் தன்னுடைய வண்டி பெட்ரோல் இல்லாமல் நின்று விட்டதாகவும் தங்கள் மோட்டார் சைக்கிளை கொடுங்கள் பெட்ரோல் வாங்கி வந்து விடுகிறேன் என்று கூறியுள்ளார்.

    மர்ம நபர் கூறியதை நம்பி கடைக்காரர் தனது மோட்டார் சைக்கிளை கொடுத்து ள்ளார். வண்டியை பெற்றுக் கொண்ட மர்ம நபர் பெட்ரோல் வாங்கி கொண்டு சிறிது நேரத்தில் வந்து விடுகிறேன் என்று கூறி சென்றவர் வெகு நேரமாகியும் வரவில்லை.சந்தேகம் அடைந்த கடை உரிமையாளர் ஜீவா காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கலாம் என்று செல்போனை தேடி பார்த்த போது செல்போ னையும் திருடி சென்றது தெரியவந்தது.

    அதிர்ச்சி அடைந்த ஜீவா சின்னசேலம் போலீஸ் நிலையத்தில் இருசக்கர வாகனத்தையும் செல்போனையும் திருடி சென்ற மர்ம நபரை கண்டுபிடித்து தருமாறு புகார் அளித்தார். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிந்து மோட்டார் சைக்கிளையும், செல்போனை திருடி சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

    • 32 மோட்டார் சைக்கிள்கள், மொபட்டுகள் திருட்டு போனதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
    • கோவையில் இருசக்கர வாகனங்களை திருடும் மர்ம கும்பல் ஊடுருவி உள்ளனரா எனவும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை:

    கோவை மாநகரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 33 மோட்டார் சைக்கிள்கள், மொபட்டுகள் திருட்டு போனதாக புகார் வந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் மீண்டும் 32 மோட்டார் சைக்கிள்கள், மொபட்டுகள் திருட்டு போனதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து வாகனங்களின் உரிமையாளர்கள் அந்ததந்த போலீஸ் நிலையங்களில் புகார் தெரிவித்தனர்.

    கோவை பெரியகடை வீதி, ஆர்.எஸ்.புரம், வெரைட்டி ஹால் ரோடு, உக்கடம், காட்டூர், ரேஸ்ேகார்ஸ், சாய்பாபா காலனி, செல்வபுரம், போத்தனூர், குனியமுத்தூர், பீளமேடு, சரவணம்பட்டி உள்பட பகுதிகளில் மோட்டார் சைக்கிள், மொபட் திருட்டு போய்யுள்ளது.

    இதையடுத்து போலீசார் திருட்டு போனதாக தெரிவித்த இடங்களில் உள்ள சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் கோவையில் இருசக்கர வாகனங்களை திருடும் மர்ம கும்பல் ஊடுருவி உள்ளனரா எனவும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை மாநகரில் கடந்த சில நாட்கள் முன்பு 33 மோட்டார் சைக்கிள்கள், மொபட்டுகள் திருட்டு போன நிலையில் நேற்று மீண்டும் 32 வாகனங்கள் திருட்டு போன சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திருட்டை தடுக்க இரவு நேரங்களில் ரோந்து பணிகளை அதிகரிக்க போலீசாருக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    கோவையில் ஒரே மாதத்தில் மோட்டார் சைக்கிள்கள், மொபட்டுகள் திருட்டு போனதாக 65 புகார்கள் பதிவாகி உள்ளது. 

    • திருட்டு நடந்த பகுதியில் இருந்த சி.சி.டி.வி. காமிரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர்.
    • போலீசார் விசாரித்து மோட்டார்சைக்கிள் திருட்டில் ஈடுபட்ட 4 பேரை கைது செய்தனர்.

    காரமடை:

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள சிறுமுகை போலீஸ்நிலையத்தில் இரண்டாம் நிலை காவலராக பணியாற்றி வருபவர் சந்திரசேகர்.

    இவர் கடந்த 2 நாட்களுக்கு முன் பணி முடிந்து தனது மோட்டார்சைக்கிளில் காரமடை தொட்டிபாளையத்தில் உள்ள தனது வீட்டுக்கு சென்றார். வீட்டு முன்பு மோட்டார்சைக்கிளை நிறுத்தி விட்டு தூங்கச் சென்றார். காலையில் எழுந்து பார்த்த போது மோட்டார்ைசக்கிள் காணாமல் போய் இருந்தது. இதுகுறித்து சந்திரசேகர் காரமடை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    அதேநாளில் காரமடை கண்ணார்பாளையம் பாலாஜிநகரைச் சேர்ந்த தனபால் என்பவரது மோட்டார்சைக்கிளும் திருட்டு போனது. இதுகுறித்தும் போலீசில் புகார் செய்யப்பட்டது.

    இதையடுத்து மேட்டுப்பாளையம் துணை போலீஸ் சூப்பிரண்டு பாலமுருகன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு மோட்டார்சைக்கிள் திருடர்களை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. திருட்டு நடந்த பகுதியில் இருந்த சி.சி.டி.வி. காமிரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர்.

    அப்போது மோட்டார்சைக்கிளை திருடிச் செல்லும் காட்சிகள் அதில் பதிவாகி இருந்தன. அதன் அடிப்படையில் போலீசார் விசாரித்து மோட்டார்சைக்கிள் திருட்டில் ஈடுபட்ட 4 பேரை கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் மேட்டுப்பாளையத்தை சேர்ந்த நிசார் முஹம்மது, ஹரிகரன், தமிழ்ச்செல்வன் மற்றும் காரமடை பகுதியை சேர்ந்த நித்திஷ் ஆகி யோர் என்பது தெரிய வந்தது. கைதான 4 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.

    உவரி அருகே மோட்டார் சைக்கிள் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நெல்லை:

    உவரி அருகே உள்ள மேற்கு தோப்புவிளை கிராமத்தை சேர்ந்தவர் பிரைடுவர்க்கீஸ் (வயது 25). இவர் விலைஉயர்ந்த ‘ரேஸ்’ மோட்டார் சைக்கிள் வைத்திருந்தார். இதன் மதிப்பு ரூ 1 லட்சத்து 25 ஆயிரம் ஆகும்.

    சம்பவத்தன்று இரவு தனது வீட்டின் முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு, மறுநாள் காலை பார்த்தபோது மோட்டார் சைக்கிளை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பிரைடு வர்க்கீஸ் உவரி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மோட்டார் சைக்கிளை தேடி வருகிறார்கள்.

    ×