search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காரைக்காலில்  மோட்டார் சைக்கிள் திருடிய 2 வாலிபர்களை பொதுமக்கள் விரட்டி பிடித்தனர்
    X

    காரைக்காலில் மோட்டார் சைக்கிள் திருடிய 2 வாலிபர்களை பொதுமக்கள் விரட்டி பிடித்தனர்

    • இளைஞர்கள் சிலர் மைதானத்தில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிந்ததை வேடிக்கை பார்த்து கொண்டிருந்தார்.
    • போலீசார் 2 வாலிபர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்து, கைது செய்தனர்.

    புதுச்சேரி:

    காரைக்காலில் மோட்டார் சைக்கிளை திருடிச்சென்ற 2 வாலிபர்களை, மோட்டார் சைக்கிள் உரிமையாளர் பொதுமக்கள் உதவியுடன் விரட்டி பிடித்து போலீசில் ஒப்படைத்தார். நாகை மாவட்டம் சங்கரன்பந்தல் பகுதியில் வசிப்பவர் கிருஷ்ணமூர்த்தி மகன் ரதிஷ்குமார் (வயது25). இவர் காரைக்காலில் உள்ள தனியார் கூரியர் அலுவலகத்தில் டெலிவரி மேனாக வேலை செய்து வருகிறார். இவர் காரைக்கால் சிங்காரவேலர் சாலை அருகே தனது மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு, அங்கு இளைஞர்கள் சிலர் மைதானத்தில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டி ருந்ததை வேடிக்கை பார்த்து கொண்டிருந்தார்.

    அப்பொழுது 2 மர்ம நபர்கள் ரதிஷ்குமாரின் மோட்டார் சைக்கிள் பூட்டை உடைத்து, கண் இமைக்கும் நேரத்தில் திருடி சென்றனர். இதனை பார்த்த ரதிஷ்குமார் சத்தம் போட்டார். தொடர்ந்து ரிதிஷ் குமார் அங்குள்ள பொது மக்கள் உதவியுடன் மோட்டார் சைக்கிளை திருடி சென்ற 2 வாலிபர்களையும் மடக்கி பிடித்து காரைக்கால் நகர போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். 2 வாலிபர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், அவர்கள் காரைக்கால் அம்மன்கோவில் பத்து, கூடல் வீதியை சேர்ந்த முத்துக்குமார் (26) மற்றும் திரு.பட்டினம் போலகம் பகுதியை சேர்ந்த விக்ரம் மூர்த்தி (36) என்பது தெரியவந்தது. தொடர்ந்து இன்ஸ்பெக்டர் சிவக்குமார் மற்றும் போலீசார் 2 வாலி பர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்து, கைது செய்தனர்.

    Next Story
    ×