search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மொபட் திருட்டு"

    • கண்காணிப்பு கேமரா மூலம் விசாரணை
    • 2 பேருக்கு போலீசார் வலைவீச்சு

    ஜோலார்பேட்டை:

    நாட்டறம்பள்ளி அருகே ஏரிகோடி பகுதியை சேர்ந்தவர் ரவி. ரத்தப்பரிசோதனை நிலையம் வைத்துள்ளார். இவரது மனைவி நந்தினி. இவருக்கு பிறந்தநாள் பரிசாக ரவி மொபட் ஒன்றை வாங்கி கொடுத்துள்ளார்.

    அந்த மொப்பட்டை வீட்டின் வெளியே இரவு நிறுத்தி விட்டு தூங்கச் சென்றனர்.

    பின்னர் அதிகாலை எழுந்து வந்து பார்த்தபோது மொபட் மாயமாகி இருந்தது.

    அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில் 2 மர்ம நபர்கள் வீடுகளை நோட்டமிட்டு வந்தனர்.

    ரவியின் வீட்டின் அருகே வந்து வெளிபக்கமாக வீட்டை தாழிட்டனர், பின்னர் ஜன்னல் வழியாக சாவியை எடுத்து மொபட்டை திருடிச் சென்றுள்ளனர். மர்ம நபர்கள் மொபட்டை திருடிச்செல்லும் காட்சி வைரலாகி வருகிறது.

    இது குறித்து ரவி நாட்டறம்பள்ளி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர். மேலும் அதில் பதிவான காட்சிகள் மூலம் மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    மனைவிக்கு பிறந்தநாள் பரிசாக வாங்கிய மொப்பட்டை மர்ம நபர்கள் திருடி சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • 32 மோட்டார் சைக்கிள்கள், மொபட்டுகள் திருட்டு போனதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
    • கோவையில் இருசக்கர வாகனங்களை திருடும் மர்ம கும்பல் ஊடுருவி உள்ளனரா எனவும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை:

    கோவை மாநகரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 33 மோட்டார் சைக்கிள்கள், மொபட்டுகள் திருட்டு போனதாக புகார் வந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் மீண்டும் 32 மோட்டார் சைக்கிள்கள், மொபட்டுகள் திருட்டு போனதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து வாகனங்களின் உரிமையாளர்கள் அந்ததந்த போலீஸ் நிலையங்களில் புகார் தெரிவித்தனர்.

    கோவை பெரியகடை வீதி, ஆர்.எஸ்.புரம், வெரைட்டி ஹால் ரோடு, உக்கடம், காட்டூர், ரேஸ்ேகார்ஸ், சாய்பாபா காலனி, செல்வபுரம், போத்தனூர், குனியமுத்தூர், பீளமேடு, சரவணம்பட்டி உள்பட பகுதிகளில் மோட்டார் சைக்கிள், மொபட் திருட்டு போய்யுள்ளது.

    இதையடுத்து போலீசார் திருட்டு போனதாக தெரிவித்த இடங்களில் உள்ள சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் கோவையில் இருசக்கர வாகனங்களை திருடும் மர்ம கும்பல் ஊடுருவி உள்ளனரா எனவும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை மாநகரில் கடந்த சில நாட்கள் முன்பு 33 மோட்டார் சைக்கிள்கள், மொபட்டுகள் திருட்டு போன நிலையில் நேற்று மீண்டும் 32 வாகனங்கள் திருட்டு போன சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திருட்டை தடுக்க இரவு நேரங்களில் ரோந்து பணிகளை அதிகரிக்க போலீசாருக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    கோவையில் ஒரே மாதத்தில் மோட்டார் சைக்கிள்கள், மொபட்டுகள் திருட்டு போனதாக 65 புகார்கள் பதிவாகி உள்ளது. 

    ×