மோட்டார்சைக்கிள் திருட்டு

சம்பவத்தன்று இரவு தனது மோட்டார்சைக்கிளை வீட்டின் முன்பு நிறுத்திவிட்டு தூங்க சென்று விட்டார்.மறுநாள் காலை வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிளை காணவில்லை. பல இடங்களில் தேடி பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை.
மோட்டார்சைக்கிள் திருட்டு
Published on

பெருந்துறை:

பெருந்துறையை அடுத்துள்ள விஜயமங்கலம், மேட்டுப்புதூர் பகுதியை சேர்ந்தவர் பிரபு (வயது 25). திருமணம் ஆகாத இவர் தனது தாயுடன் வசித்து வருகிறார்.

பிரபு அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் ப்ளூ மெட்டல் கம்பெனியில் மேலாளராக பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று இரவு தனது மோட்டார்சைக்கிளை வீட்டின் முன்பு நிறுத்திவிட்டு தூங்க சென்று விட்டார்.

மறுநாள் காலை வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிளை காணவில்லை. பல இடங்களில் தேடி பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை.

இதனையடுத்து பிரபு பெருந்துறை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதுதொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com