search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "MGR"

    • எம்.ஜி.ஆர். நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.
    • நகர, ஒன்றிய நிர்வாகிகள், தொண்டர்கள், மகளிரணியினர் கலந்து கொண்டனர்.

    தேவகோட்டை

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை பஸ் நிலையம் அருகே எம்.ஜி.ஆரின் 35-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவரது படத்திற்கு அ.தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளர் பிஆர். செந்தில்நாதன் முன்னிலையில் நகர் மன்ற தலைவர் சுந்தரலிங்கம் மற்றும் அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினர்.

    இதில் நகர் மன்ற துணைத் தலைவர் ரமேஷ், நகரச் செயலாளர் ராமச்சந்திரன், ஒன்றிய செயலாளர் தசரதன், நகர்மன்ற உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள், தொண்டர்கள், மகளிரணியினர் கலந்து கொண்டனர்.

    • எம்.ஜி.ஆர். படத்துக்கு அ.தி.மு.க.வினர் அஞ்சலி செலுத்தினர்.
    • முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் 35-வது நினைவு தினம்.



    ஓ.பி.எஸ். அணி ஒன்றிய செயலாளர் முத்து முருகன் தலைமையில் எம்.ஜி.ஆர். படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

     ராமநாதபுரம்

    முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் 35-வது நினைவு தினத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் எம்.ஏ. முனியசாமி தலைமை யில் நகர் சார்பில் செயலாளர் பொறியாளர் பால் பாண்டியன் ஏற்பாட்டில் அரண்மனை முன்பு நினைவு தினம் கடைபிடிக்கப்பட்டது. எம்.ஜி.ஆர். படத்துக்கு மலர் தூவி, மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

    எம்.ஜி.ஆர். மன்ற துணைச் செயலாளர் ரத்தினம், மாவட்ட அவைத் தலைவர் சாமிநாதன், அண்ணா தொழிற்சங்க போக்குவரத்து துறை துணைச் செயலாளர் ரத்தினம், ராமநாதபுரம் ஒன்றிய செயலாளர் அசோக் குமார், நகர அவை தலைவர் ராமமூர்த்தி, வட்ட செயலாளர் ராம சேது, சார்பு அணி மாவட்ட செயலாளர்கள் சரவணகுமார் (தகவல் தொழில்நுட்ப பிரிவு), சேது பாலசிங்கம் (பேரவை), ஸ்டாலின் என்ற ஜெயசந்திரன் (இளை ஞரணி), செந்தில்குமார் (மாணவரணி), நகர் துணைச் செயலாளர் ஆரிப்ராஜா, இளைஞரணி துணை செயலாளர் செல்வராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    ராமநாதபுரம் மாவட்ட ஓ.பி.எஸ். அணி செயலாளர் தர்மர் வழிகாட்டுதலின்படி எம்.ஜி.ஆரின் 35-வது நினைவு நாள் ராமநாதபுரம் நகர செயலாளர் பாலசுப்பி ரமணியன் தலைமையில் நடந்தது.

    நகர் இளைஞர் பாசறை செயலாளர் பார்த்தசாரதி, ராமநாதபுரம் ஒன்றிய செயலாளர் முத்து முருகன், கோட்டைசாமி, நிர்வாகிகள் முனிய சாமி, கோவிந்தராஜ், ராஜ்கு மார், செல்வம், சேகர், அறிவழகன், கணேசன், ஸ்ரீபாகன் மணிகண்டன், முத்துகிருஷ்ணன், அழகம்மாள், பிரியா, தொகுதி நிர்வாகி முத்துப் பாண்டி, மாவட்ட விவசாய பிரிவு மாரிமுத்து, மூத்த நிர்வாகி முத்துகிருஷ்ணன் உள்பட பலர் எம்.ஜி.ஆர். படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

    ராமநாதபுரம் தெற்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் ஒன்றிய செயலாளர் வழக்கறிஞர் முத்து முருகன் தலைமையில், ராமநாதபுரம் பாரதி நகரில் எம்.ஜி.ஆர். படத்துக்கு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் மாவட்ட அவைத் தலைவரும், ஒன்றிய முன்னாள் தலைவருமான ராஜேந் திரன், நாரணமங்கலம் ஊராட்சி செயலாளர் சுரேஷ், ராமநாதபுரம் வடக்கு ஒன்றிய செயலாளர் கோட்டைச்சாமி, ராமநாத புரம் நகர் செயலாளர் பாலசுப்பிரமணியன், ஒன்றிய முன்னாள் கவுன்சிலர்கள் கழுகூரணி பூபதி, புத்தேந்தல் கல்யாணி, காருகுடி முத்துராமலிங்கம், சுப்புத்தேவன் வலசை ஊராட்சி செயலாளர் சோம சுந்தரம், தூளிவலசை கிளை செயலாளர் திருமுருகன், சக்கரக்கோட்டை ஊராட்சி உறுப்பினர் நல்லதம்பி உள்பட பலர் எம்.ஜி.ஆர். படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

    • எம்.ஜி.ஆர். படத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டது.
    • எம்.ஜி.ஆரின் 35-வது நினைவு தினம்.



    அ.தி.மு.க. ஓ.பி.எஸ். அணியினர் எம்.ஜி.ஆர். படத்திற்கு மாலை அணிவித்தனர்.

    மேலூர்

    எம்.ஜி.ஆரின் 35-வது நினைவு தினத்தை முன்னிட்டு மேலூர் பஸ் நிலையம் முன்பு அ.தி.மு.க. சார்பில் அவரது படத்திற்கு மாலை அணிவித்து உறுதிமொழி எடுக்கப்பட்டது.

    நகர் இணை செயலாளர் சரவணகுமார் தலைமை தாங்கினார். முன்னாள் சேர்மன் சாகுல் ஹமீது, முன்னாள் நகர் செயலாளர் நாகசுப்பிரமணியன், கச்சிராயன்பட்டி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மாணிக்கம், முன்னாள் கவுன்சிலர் தம்பிதுரை மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    மதுரை வடக்கு மாவட்ட அ.தி.மு.க. ஓ.பி.எஸ். அணி செயலாளர் கே.முருகேசன் தலைமையில் எம்.ஜி.ஆர். படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இதில் மாவட்ட பொருளாளர் துதி திருநாவுக்கரசு, மாவட்ட துணைச் செயலாளர் பூமி நாதன், கொட்டாம்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் ஜீவ சன்மார்க்கம், இணைச் செயலாளர் தன பாக்கியம், பொதுக்குழு உறுப்பினர் சோனியா காந்தி, தொகுதி செயலாளர் மொண்டி, துணைச் செயலாளர் சின்னக் கருப்பன், மேலூர் நகர் செயலாளர் தங்க சாமி, மேலூர் ஒன்றிய செயலாளர்கள் (கிழக்கு) ராகவன், (மேற்கு) ஜெயராமன், (தெற்கு) ராஜன், (வடக்கு) வக்கீல் பிரேம்குமார், கொட்டாம்பட்டி ஒன்றிய செயலாளர் வடக்கு பாரதி, அ.வல்லாள பட்டி பேரூர் செயலாளர் கார்த்திக், கரந்த பாண்டி, அட்டப்பட்டி பாலா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • எம்.ஜி.ஆரின் 35-வது நினைவு நாள் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி காங்கயம் பஸ் நிலையம் அருகே நடைபெற்றது .
    • எம் ஜி .ஆரின் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

    காங்கயம் :

    காங்கயம் நகர அ.தி.மு.க சார்பில் எம்.ஜி.ஆரின் 35-வது நினைவு நாள் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி காங்கயம் பஸ் நிலையம் அருகே நடைபெற்றது . நிகழ்ச்சியில் காங்கயம் அ.தி.மு.க நகர செயலாளர் வெங்கு.ஜி.மணிமாறன் தலைமையில் எம் ஜி .ஆரின் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. தொடர்ந்து எம்.ஜி.ஆரின் ஏழை மக்களுக்கான திட்டங்களையும், அவர் குறித்த நினைவுகளையும் பகிர்ந்து கொண்டனர்.

    இந்த நிகழ்ச்சியில் காங்கயம் அ.தி.மு.க மாவட்ட, நகர நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு எம் ஜி .ஆரின் உருவ படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

    • எம்ஜிஆரின் 35 -வது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் பலரும் மரியாதை செலுத்தி வருகின்றனர்.
    • கமல்ஹாசன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் எம்.ஜி.ஆர். குறித்து பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.

    அ.தி. மு.க. நிறுவனர் முன்னாள் முதல் - அமைச்சர் எம்ஜிஆரின் 35 -வது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் அரசியல் தலைவர்களும் திரைப்பிரபலங்களும் மரியாதை செலுத்தி வருகிறார்கள்.


    எம்.ஜி.ஆர்

    இந்நிலையில், நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,ம் "மேடையில் மாணவராகத் தொடங்கி திரையில் வாத்தியார் ஆனவர். இணையற்ற தலைவராக இன்றுவரை மக்களின் மனதில் நிலைத்திருப்பவர், ஆனந்தஜோதி படத்துக்காக எனக்கு நீச்சல் கற்றுக்கொடுத்து, இன்று அவரது களத்திலேயே நான் நீந்தக் காரணமானவர் எங்கள் எம்ஜிஆர். நினைவுநாளில் வணங்குகிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.



    • பாகூர் தொகுதி அ.தி.மு.க. சார்பில் எம்.ஜி.ஆரின் 35-வது நினைவு தினம் பாகூர் மூலநாதர் சிவன் கோவில் மற்றும் ஏழை மாரியம்மன் கோவில் அருகில் நடைபெற்றது.
    • இதில் தொகுதி தலைவர் கண்ணன், மாநில வக்கீல்கள் பிரிவு துணைத் தலைவர் ராமலிங்கம், வார்டு செயலாளர் கிருஷ்ணகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    புதுச்சேரி:

    பாகூர் தொகுதி அ.தி.மு.க. சார்பில் எம்.ஜி.ஆரின் 35-வது நினைவு தினம் பாகூர் மூலநாதர் சிவன் கோவில் மற்றும் ஏழை மாரியம்மன் கோவில் அருகில் நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சியில் தொகுதி செயலாளர் நடேசன் தலைமை தாங்கி எம்.ஜி.ஆர். உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் தொகுதி தலைவர் கண்ணன், மாநில வக்கீல்கள் பிரிவு துணைத் தலைவர் ராமலிங்கம், வார்டு செயலாளர் கிருஷ்ணகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    தொகுதி நிர்வாகிகள் குணசேகரன், உமாநாத், சிவகுமார், திருவேங்கடம், மாரிமுத்து, ராமச்சந்திரன், காசிநாதன், மாசிலாமணி, ஜெகதீசன், செல்வம், அனந்தராமன், வேலாயுதம், அன்பரசன், குருமூர்த்தி, பரசுராமன் ஆகியோர் கலந்து கொண்டு எம்.ஜி.ஆர். உருவ படத்திற்கு மரியாதை செலுத்தினர்.

    முடிவில் பொதுக்குழு உறுப்பினர் ராஜராஜன் நன்றி கூறினார்.

    • கட்சிக்காக என்ன செய்யப்போற ? கட்சியில தீவிரமாக ஈடுப்படு என்று எம்ஜிஆர் தொடர்ந்து கூறி வந்தார்.
    • நாடகத்திற்காக உழைத்தவர்களுக்கு ரூ.5 லட்சம் கொடுத்ததுபோக, ரூ.30 லட்சம் தேர்தல் நிதிக்காக வழங்கினேன்.

    பழம்பெரும் நடிகை லதா, மாலைமலர் இணையதளத்திற்கு அளித்த சிறப்பு பேட்டி வருமாறு..

    ராமநாதபுரம் ராஜாவின் மகளான நான் சினிமாவுக்குள் நுழைந்தது எனது பாக்கியம் என்றே கூறுவேன். எம்ஜிஆர் இயக்கிய அவருடைய சொந்த படத்தில் நான் அறிமுகமானேன். அந்த காலத்திலேயே வெளிநாட்டில் படப்படிப்பு என்று அடுக்கடுக்கான ஆச்சரியங்கள் என்னை எங்கேயோ கொண்டுபோய்விட்டது. அதே மாதிரி என்னை இதுவரை ராணியாகவே வாழவைத்துள்ளது.

    கட்சிக்காக என்ன செய்யப்போற ? கட்சியில தீவிரமா ஈடுப்படு என்று எம்ஜிஆர் தொடர்ந்து கூறி வந்தார். ஆனால் எனக்கு நடிப்பு மீது ஈடுபாடு இருந்தது. எம்ஜிஆர் தலைமையிலேயே நாட்டிய நாடகம் ஏற்பாடு செய்து தமிழகம் முழுவதும் நடத்தினோம். இதில் 35 லட்சம் கிடைத்தது. நாடகத்திற்காக உழைத்தவர்களுக்கு ரூ.5 லட்சம் கொடுத்ததுபோக, ரூ.30 லட்சம் தேர்தல் நிதிக்காக வழங்கினேன்.

    நான் எல்லோருக்கும் கொடுத்தேன்.. நீ எனக்கு கொடுத்திருக்கிறாய் என்று எம்ஜிஆர் அடிக்கடி சொல்லுவார். அதன்பிறகு தேர்தலில் மாபெரும் வெற்றிப்பெற்றது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி.. என்றார்.

    • முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆரின் 35-ம் ஆண்டு நினைவு தினம் நாளை அனுசரிக்கப்படுகிறது.
    • தூத்துக்குடி டூவிபுரத்தில் இருந்து மவுன அஞ்சலி ஊர்வலம் புறப்படுகிறது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி தெற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் சண்முகநாதன் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-

    அ.தி.மு.க. நிறுவனரும், முன்னாள் முதல்-அமைச்சருமான எம்.ஜி.ஆர். 35-ம் ஆண்டு நினைவு தினம் நாளை (சனிக்கிழமை) அனுசரிக்கப்படுகிறது.

    அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆணைக்கிணங்க நாளை காலை 9 மணிக்கு தூத்துக்குடி தெற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் எனது தலைமையில் தூத்துக்குடி டூவிபுரம் 7-வது தெருவில் உள்ள மாவட்ட அலுவலகத்தின் முன்பு இருந்து மவுன அஞ்சலி ஊர்வலம் புறப்படுகிறது.

    முக்கிய வீதி வழியாக தூத்துக்குடி பழைய மாநகராட்சி அலுவலக வளாகம் சென்று அங்கு அமைந்துள்ள எம்.ஜி.ஆர் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுகிறது.

    நிகழ்ச்சியில் தலைமை கழக நிர்வாகிகள், மாவட்ட, ஒன்றிய, நகர, மாநகரபகுதி, பேரூராட்சி, ஊராட்சி, வட்ட, வார்டு, கிளை கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்ட சார்பு அணிகளின் நிர்வாகிகள், கூட்டுறவு மற்றும் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், மகளிர்கள் பெருந்திரளான அளவில் கலந்து கொண்டு மரியாதை செலுத்திடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

    மேலும், நிர்வாகிகள் மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து இடங்களிலும் அவரவர் பகுதிகளில் எம்.ஜி.ஆர். படத்திற்கு மரியாதை செலுத்த கேட்டு கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    • எம்.ஜி.ஆரின் நினைவு நாள் அன்று அவரது சிலைகளுக்கு மாலை அணிவித்தும், உருவப் படங்களை வைத்து மாலை அணிவித்தும், மலர் அஞ்சலி செலுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
    • ஏற்பாடுகளை சம்பந்தப்பட்ட மாவட்டக் கழகச் செயலாளர்கள் செய்திட வேண்டும்.

    சென்னை:

    அ.தி.மு.க. தலைமை கழகம் என்ற பெயரில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    அ.தி.மு.க. நிறுவனத் தலைவர் எம்.ஜி.ஆர். நம்மை ஆற்றொணாத் துயரத்தில் ஆழ்த்தி விட்டு அமரர் ஆகிய நாள் 24.12.1987. எம்.ஜி.ஆரின் 35-வது ஆண்டு நினைவு நாளான 24-ந்தேதி (சனிக்கிழமை) காலை 10.30 மணிக்கு, சென்னை, மெரினா கடற்கரையில் அமைந்துள்ள அவருடைய நினைவிடத்தில் அ.தி.முக. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்த உள்ளார்.

    தொடர்ந்து, தலைமைக் கழகச்செயலாளர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் மரியாதை செலுத்த உள்ளனர்.

    அதனையடுத்து, எம்.ஜி.ஆரின் நினைவிட நுழைவு வாயில் உட்புறத்தில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

    நிகழ்ச்சியில் கழக சார்பு அணிகளின் நிர்வாகிகளும், மாவட்டக் கழக நிர்வாகிகளும், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மன்றம், புரட்சித் தலைவி அம்மா பேரவை, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி, அண்ணா தொழிற்சங்கம், வழக்கறிஞர் பிரிவு, சிறுபான்மையினர் நலப்பிரிவு, விவசாயப் பிரிவு, மீனவர் பிரிவு, மருத்துவ அணி, இலக்கிய அணி, அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி, இளைஞர் பாசறை, இளம்பெண்கள் பாசறை, தகவல் தொழில்நுட்பப் பிரிவு, வர்த்தக அணி மற்றும்

    கலைப் பிரிவு உட்பட கழகத்தின் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகளும், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் பிரதிநிதிகளும், கழக உடன்பிறப்புகளும் பெருந்திரளாகக் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

    எம்.ஜி.ஆரின் நினைவு நாள் அன்று அவரது சிலைகளுக்கு மாலை அணிவித்தும், உருவப் படங்களை வைத்து மாலை அணிவித்தும், மலர் அஞ்சலி செலுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இதற்கான ஏற்பாடுகளை சம்பந்தப்பட்ட மாவட்டக் கழகச் செயலாளர்கள் செய்திட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தேசிய இயக்கத்தில் இருந்த எம்ஜிஆரை திமுகவிற்கு அழைத்து வந்தவர் கருணாநிதி.
    • அதிமுகவை விட திமுகவில் எம்ஜிஆரின் பங்களிப்பு அதிகம் என மு.க.ஸ்டாலின் பேச்சு

    சென்னை:

    சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள எம்ஜிஆர் ஜானகி கல்லூரி வளாகத்தில், அன்னை ஜானகி எம்ஜிஆர் நூற்றாண்டு துவக்க விழா நடைபெற்றது. விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு, கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலையை திறந்து வைத்தார். அதன்பின்னர் விழா மேடையில், ஜானகி எம்ஜிஆர் சிறப்பு மலர், ஆவணப்பட குறுந்தகடு, பொன்மனச் செம்மல் எம்ஜிஆர் நூல் ஆகியவற்றை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.

    விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

    என் மீது எம்ஜிஆர் அதிக பாசம் கொண்டவர். அதிமுகவை விட திமுகவில் எம்ஜிஆரின் பங்களிப்பு அதிகம். தேசிய இயக்கத்தில் இருந்த எம்ஜிஆரை திமுகவிற்கு அழைத்து வந்தவர் கருணாநிதி. ஜானகி அம்மையார் கேட்டுக்கொண்டதற்கு இணங்க, இந்த கல்லூரிக்கு அனுமதி வழங்கியவர் கருணாநிதி.

    இன்று நூற்றாண்டு விழா காணும் இந்த கல்லூரியை தொடங்கிய ஜானகி அம்மையார், தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக விளங்கியவர். பல கலைகளை முறையாக கற்றவர். கொடை உள்ளம் கொண்டவர். அவரது முதல் படத்திற்கு கதை வசனம் எழுதியது கலைஞர் கருணாநிதி. அவரது கடைசி படத்திற்கும் கதை வசனம் எழுதியது கலைஞர் கருணாநிதிதான். ஜானகி மட்டும்தான் எனது வாரிசு என உயில் எழுதி வைத்தவர் எம்ஜிஆர்.

    இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

    • அ.தி.மு.க. பொதுக்குழு தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கில் பொதுக்குழு செல்லாது என தனி நீதிபதி உத்தரவிட்டார்.
    • நெல்லை மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா தலைமையில் இன்று அ.தி.மு.க.வினர் கொக்கிரகுளத்தில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    நெல்லை:

    அ.தி.மு.க. பொதுக்குழு தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கில் பொதுக்குழு செல்லாது என தனி நீதிபதி உத்தரவிட்டார்.

    ஐகோர்ட்டு உத்தரவு

    இதனை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பினர் ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வெளியானது. அதில் தனி நீதிபதி உத்தரவு ரத்து செய்து அறிவிக்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து பல்வேறு பகுதியில் அ.தி.மு.க.வினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். நெல்லை மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா தலைமையில் இன்று அ.தி.மு.க.வினர் கொக்கிரகுளத்தில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    பின்னர் பட்டாசு வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்ட அவர்கள் அப்பகுதியில் சென்ற பொதுமக்கள் மற்றும் பஸ்களில் சென்ற பயணிகளுக்கு இனிப்பு வழங்கினார்கள்.

    நிகழ்ச்சியில் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் பெரியபெருமாள், பகுதி செயலாளர்கள் சிந்துமுருகன், மேகை சக்திகுமார், ஜெனி, திருத்து சின்னதுரை, சண்முககுமார், டவுன் கூட்டுறவு வங்கித்தலைவர் பால்கண்ணன், பாளை தெற்கு ஒன்றிய செயலாளர் முத்துக்குட்டி பாண்டியன்,

    முன்னாள் அரசு வக்கீல் அன்புஅங்கப்பன், ஜெயலலிதா பேரை செயலாளர் சீனிமுகமதுசேட், பூக்கடை சப்பாணிமுத்து, ஒன்றிய செயலாளர் லெட்சுமண பெருமாள், பாறையடி மணி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 

    • ஜூலை 11ம் தேதி அதிமுக பொதுக்குழு நடைபெறாது என எம்ஜிஆர் பேரன் ராமச்சந்திரன் தெரிவித்தார்
    • இப்போது ஒற்றை தலைமை வேண்டும் என்று சொல்வது ஏன்? என ராமச்சந்திரன் கேள்வி எழுப்பினார்

    சென்னை:

    ஒற்றை தலைமை விவகாரத்தால் அதிமுகவில் ஏற்பட்ட மோதல் உச்சகட்டத்தை எட்டி உள்ளது. கட்சியின் பெரும்பாலான நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக உள்ளனர். ஓ.பி.எஸ். பக்கம் மிக குறைவான ஆதரவாளர்களே உள்ளனர். இந்நிலையில், கட்சியில் ஒற்றை தலைமை என்பதை தவிர்க்க வேண்டும். அப்படியே ஒற்றை தலைமை அவசியம் என்றால் அதில் ஒபிஎஸ்தான் தலைமை ஏற்க வேண்டும் என்று எம்.ஜி.ஆரின் பேரன் ராமச்சந்திரன் கூறியுள்ளார்.

    இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த எம்.ஜி.ஆரின் பேரன் ராமச்சந்திரன் கூறியதாவது:-

    ஜூலை 11ம் தேதி அதிமுக பொதுக்குழு நடைபெறாது. என் ஆதரவும் தொண்டர்களின் ஆதரவும் ஓ.பன்னீர்செல்வத்துக்கே. இதனால் என் பதவி பறிபோனாலும் கவலையில்லை. ஓ.பன்னீர்செல்வத்தை எப்போது வேண்டுமானாலும் சந்திக்க முடியும். எடப்பாடி பழனிசாமியை சாதாரணமாக சந்திக்க முடியாது.

    கட்சி இரண்டாக பிரியக்கூடாது. உடையக்கூடாது என என் தாத்தா (எம்ஜிஆர்) நினைத்தார். அவர் கட்டிக்காத்த இயக்கம் இது. இப்போது ஒற்றை தலைமை வேண்டும் என்று சொல்வது ஏன்? என்று எங்களுக்கு புரியவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×