search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "metro rail"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 4 பெட்டிகளை கொண்ட மெட்ரோ ரெயிலில் பெண்கள் மட்டும் பயணம் செய்ய 2 பெட்டிகள் ஒதுக்கப்பட்டு உள்ளது.
    • போலீஸ் பாதுகாப்பு போதுமான அளவு மெட்ரோ ரெயிலில் இல்லாததால் ஆண்கள் அத்துமீறுவதாக குற்றம் சாட்டுகின்றனர்.

    சென்னை:

    சென்னையில் மெட்ரோ ரெயில் சேவை 2 வழித் தடத்தில் இயக்கப்படுகிறது. தினமும் 2.5 லட்சம் பயணிகள் மெட்ரோ ரெயிலில் பயணம் செய்கின்றனர். குறிப்பாக காலை மற்றும் மாலை நேரங்களில் கூட்ட நெரிசல் ஏற்படுகிறது.

    மெட்ரோ ரெயில் மற்றும் நிலையங்களில் தனியார் பாதுகாப்புக்கு ஊழியர்கள் ஈடுபடுத்தப்படுகிறார்கள். பயணிகளுக்கு பல்வேறு வசதிகளை செய்து வரும் மெட்ரோ ரெயில் நிர்வாகம் பெண்கள் பயணம் செய்யக் கூடிய பெட்டியில் ஆண் பயணிகள் சமீப காலமாக ஆக்கிரமித்து பயணம் செய்வதால் பல்வேறு இடையூறுகள் ஏற்படுகின்றன.

    4 பெட்டிகளை கொண்ட மெட்ரோ ரெயிலில் பெண்கள் மட்டும் பயணம் செய்ய 2 பெட்டிகள் ஒதுக்கப்பட்டு உள்ளது. போலீஸ் பாதுகாப்பு போதுமான அளவு மெட்ரோ ரெயிலில் இல்லாததால் ஆண்கள் அத்துமீறுவதாக குற்றம் சாட்டுகின்றனர். தனியார் பாதுகாப்பு ஊழியர்களை பயணிகள் கண்டு கொள்வதில்லை.

    மெட்ரோ ரெயில்களில் கூடுதலாக தனியார் பாதுகாப்பு ஊழியர்களை நியமிக்க வேண்டும் என்று அதன் ஒப்பந்ததாரர்களிடம் கேட்டுக் கொண்டுள்ளது.

    பெண்கள் பெட்டியில் ஆண் பயணிகள் அமர்ந்து கொண்டு செல்போனில் அதிக சத்தத்துடன் பாடல்களை கேட்பது, பெட்டியில் உணவு அருந்துவது போன்ற செயல்களில் ஈடுபடுவதாக புகார்கள் வந்ததையடுத்து மெட்ரோ ரெயில் நிர்வாகம் போலீஸ் பாதுகாப்பை அதிகப்படுத்த முடிவு செய்துள்ளது. தமிழக அரசிடம் கூடுதலாக போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என கோரி உள்ளது.

    இது குறித்து மெட்ரோ ரெயில் அதிகாரிகள் கூறியதாவது:-

    மெட்ரோ ரெயில்களில் கூட்ட நெரிசல் நேரங்களில் ஆண் பயணிகள் பெண் பயணிகள் பெட்டியில் பயணம் செய்கின்றனர். அதை தடுக்க கூடுதலாக போலீஸ் படை கேட்கப்பட்டுள்ளது. அதேபோல் தனியார் பாதுகாப்பு ஒப்பந்ததாரர்களிடமும் கூடுதல் ஊழியர்களை நியமிக்க கூறியுள்ளோம்.

    புறநகர் மின்சார ரெயில்களில் பாதுகாப்புபடை போலீசார் ஈடுபடுவது போல் கூடுதலாக மாநில போலீஸ் படை வழங்கினால் இதுபோன்ற பிரச்சினைகளை தடுக்க முடியும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    தற்போது பெட்டி மாறி பயணம் செய்யும் ஆண்களுக்கு அபராதம் எதுவும் விதிப்பது இல்லை. பெண்கள் பெட்டியில் ஆண்கள் பயணம் செய்யக் கூடாது என தொடர்ச்சியாக அறிவிப்பு வெளியிட வேண்டும்.

    டெல்லி மெட்ரோ ரெயிலில் பெண்கள் பெட்டியில் ஆண்கள் பயணம் செய்தால் ரூ.250 அபராதம் கடந்த மாதம் முதல் விதிக்கப்படுகிறது. அது போல சென்னை மெட்ரோ ரெயில்களிலும் அமல்படுத்த வேண்டும் என்று பெண் பயணிகள் தரப்பில் வலியுறுத்தப்படுகிறது.

    • மெட்ரோ ரெயில் பணி நடைபெற்று வருவதால் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
    • ஈக்காட்டுதாங்கல் பகுதியில் மழைநீர் கால்வாய் பணிகள் நீண்ட நாட்களாக நடந்து வருகிறது.

    சென்னை:

    சென்னையில் போக்கு வரத்து நெரிசலை குறைக்க பல்வேறு திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆனாலும் ஒரு சில இடங்களில் காலை மற்றும் மாலை, இரவு நேரங்களில் நெரிசல் ஏற்படுகிறது.

    தற்போது ஒரு சில பகுதிகளில் மெட்ரோ ரெயில் பணி நடைபெற்று வருவதால் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. இதனால் ஒரு சில பகுதிகளில் வாகனங்கள் எளிதாக செல்ல முடியாமல் நெரிசல் ஏற்படுகிறது.

    மேலும் ஒரு சில இடங்களில் மழை நீர் கால்வாய் பணிகள் நிறைவடையாமல் இருப்பதால் பீக் அவர்சில் நெரிசல் ஏற்படுகிறது.

    இந்த நிலையில் கிண்டி கத்திப்பாரா மேம்பாலத்தின் கீழ் பகுதியில் இன்று காலை 9 மணி முதல் 10 மணி வரை கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கத்திபாராவில் இருந்து கோயம்பேடு நோக்கி வாகனங்கள் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு அணிவகுத்து நின்றன. இருசக்கரம் மற்றும் கார்கள் நகராமல் நெரிசலில் சிக்கி வாகன ஓட்டிகள் பாதிக்கப்பட்டனர்.

    ஈக்காட்டுதாங்கலில் இருந்து கத்திபாரா பாலம் பகுதி வரை வாகனங்கள் வரிசையில் நின்றன. அலுவலகங்களுக்கு செல்லக் கூடியவர்கள் நெரிசலில் சிக்கி சிரமப்பட்டனர்.

    இதுகுறித்து போக்குவரத்து நெரிசலில் சிக்கிய வாகன ஓட்டிகள் கூறும்போது, ஈக்காட்டுதாங்கல் பகுதியில் மழைநீர் கால்வாய் பணிகள் நீண்ட நாட்களாக நடந்து வருகிறது. அதனை விரைவாக முடித்தால் அந்த பகுதியில் நெரிசல் ஏற்படாது. ஒவ்வொரு நாளும் இந்த சாலையை கடந்து செல்வதற்கு மணிகணக்கில் காத்து நிற்க வேண்டிய நிலை உள்ளது என்றனர்.

    • சேப்பாக்கத்தில் இன்று நடைபெறும் 5-வது லீக் ஆட்டத்தில் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன.
    • உலக கோப்பை போட்டிக்காக இன்று இரவு 12 மணி வரை சேவை நீட்டிப்பு என மெட்ரோ ரெயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

    சென்னை:

    13-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்துவருகிறது.

    சென்னை சேப்பாக்கத்தில் இன்று நடைபெறும் 5-வது லீக் ஆட்டத்தில் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள இந்திய அணி, 5 முறை சாம்பியனான ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது.

    வலுவான இரு அணிகள் போட்டியிடுவதால் இந்த ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.

    உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை முன்னிட்டு வேளச்சேரி- சிந்தாதிரிப்பேட்டை இடையே இன்று சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. இதேபோல், வரும் 13, 18, 23, மற்றும் 27 ஆகிய நாட்களிலும் பயணிகள் சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது என தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

    இந்நிலையில், சென்னையில் இன்று இரவு 12 மணி வரை மெட்ரோ ரெயில் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது. உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட்டைக் காண்பித்து கட்டணம் இன்றி பயணிக்கலாம் என மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.

    • 2028-ம் ஆண்டில் பயணிகளின் எதிர்கால தேவையை பூர்த்தி செய்யும் வகையில் மெட்ரோ ரெயில் சேவையை அதிகரிக்க வேண்டிய நிலை உள்ளது.
    • பல தரப்பு நிதி நிறுவனங்களிடம் இருந்து நிதி பெறப்பட்டு கூடுதல் ரெயில்களை இயக்க அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு உள்ளது.

    சென்னை:

    சென்னையில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படுவதால் நெரிசல் இல்லாமல் குறிப்பிட்ட நேரத்திற்குள் செல்ல முடிகிறது. முதல் கட்ட மெட்ரோ ரெயில்கள் 2 வழித்தடங்களில் இயக்கப்படுகிறது.

    தற்போது சராசரியாக தினமும் 2½ லட்சம் பேர் மெட்ரோ ரெயிலில் பயணம் செய்கின்றனர். அரசு அலுவலகங்கள், ஐ.டி. நிறுவனங்கள் உள்ளிட்ட தனியார் நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள் மெட்ரோ ரெயிலை அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக காலை மற்றும் மாலை நேரங்களில் மெட்ரோ ரெயில்களில் கூட்ட நெரிசல் ஏற்படுகிறது.

    54 கி.மீ. தூரமுள்ள முதல் கட்ட மெட்ரோ ரெயில் சேவையில் 4 பெட்டிகளை கொண்ட 54 ரெயில்கள் பயன்பாட்டில் உள்ளன. கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் நாள் ஒன்றுக்கு சராசரியாக 2 லட்சத்து 48 ஆயிரம் பயணிகள் பயணம் செய்தனர்.

    நாளுக்கு நாள் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் நெரிசல் ஏற்படுகிறது. 2028-ம் ஆண்டில் பயணிகளின் எதிர்கால தேவையை பூர்த்தி செய்யும் வகையில் மெட்ரோ ரெயில் சேவையை அதிகரிக்க வேண்டிய நிலை உள்ளது.

    கூடுதலாக ரெயில்கள் வாங்கி சேவையை அதிக ரித்தால் தான் நெரிசலை குறைக்க முடியும் என ஆய்வு செய்யப்பட்டது.

    அதன் அடிப்படையில் 6 கார்களை கொண்ட 28 ரெயில்களை ரூ.2820 மதிப்பீட்டில் வாங்க திட்ட மிடப்பட்டு உள்ளது. தற்போது 6 பெட்டிகளை கொண்ட 5 ரெயில்களை வாங்க முடிவு செய்துள்ளது.

    இதற்காக ரூ.300 கோடி கடன் வாங்குகிறது. இதற்கான ஆவண பணிகள் தொடங்கி உள்ளன. கடன் வாங்கக்கூடிய டெண்டர் இறுதி செய்யப்பட்டு உள்ளது. 30 ரெயில் பெட்டிகளை வாங்க மெட்ரோ ரெயில் நிர்வாகம் நடவடிக்கையினை மேற் கொண்டு வருகிறது.

    இது குறித்து மெட்ரோ ரெயில் நிர்வாக இயக்குனர் எம்.ஏ.சித்திக் கூறுகையில், தற்போது உள்ள 4 பெட்டிகள் கொண்ட ரெயில்களில் கூடுதல் பெட்டிகளை சேர்க்க முடியாது. ஏன் என்றால் இந்த செயல்முறை தினசரி செயல்பாடுகளை பாதிக்கும். பல தரப்பு நிதி நிறுவனங்களிடம் இருந்து நிதி பெறப்பட்டு கூடுதல் ரெயில்களை இயக்க அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு உள்ளது" என்றார்.

    • இத்திட்டம் 8.9 லட்சம் சதுர மீட்டர் பரப்பளவில் உருவாகிறது
    • கட்டிட பரப்புளவு மட்டுமே 1.8 லட்சம் சதுர மீட்டர் ஆகும்

    இந்தியாவின் தலைநகர் புதுடெல்லியில் உலகிலேயே மிகப்பெரிய சர்வதேச மாநாடு மற்றும் கண்காட்சி மையம் (International Convention And Expo Centre) ஒன்றை இந்திய பிரதமர் நரேந்திர மோடி நாளை திறந்து வைக்கிறார்.

    "யஷோபூமி" என பெயரிடப்பட்டுள்ள இம்மையம் "மைஸ்" எனப்படும் சந்திப்புகள், ஊக்கங்கள், மாநாடுகள் மற்றும் கண்காட்சிகள் (Meetings, Incentives, Conferences, and Exhibitions) ஆகிய நோக்கங்களுக்கான மையமாக 8.9 லட்சம் சதுர மீட்டர் திட்ட மதிப்பீட்டில், 1.8 லட்சம் சதுர மீட்டர் கட்டிடப்பரப்பில் அமையவுள்ளது.

    இதில் அமையவுள்ள மாநாட்டு மையம் 15 மாநாட்டு மையங்களை உள்ளடக்கி மொத்தமாக 73,000 சதுர மீட்டர் பரப்பளவில் கட்டப்படும். இதில் ஒரு முக்கிய கருத்தரங்க மண்டபமும், கலைநிகழ்ச்சிகளுக்கான மிகப்பெரிய அரங்கமும், 13 சந்திப்பு அறைகளும் என சுமார் 11 ஆயிரம் பிரதிநிதிகள் ஒரே நேரத்தில் பங்கேற்கும் வகையில் அமையவுள்ளது.

    மைய கருத்தரங்க மண்டபம் சுமார் 6 ஆயிரம் விருந்தினர்கள் ஒன்றாக அமரும் வகையில் உள்ளது.

    கலைக்கூட அரங்கில் 2500 விருந்தினர்கள் அமரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. பல்வேறு துறை சார்ந்த சந்திப்புக்களை நடத்தும் வகையில் 8 தளங்களில் 13 சந்திப்பு கூடங்கள் அமைக்கப்படுகிறது.

    1.07 லட்சம் சதுர மீட்டர் பரப்பளவில் உலகிலேயே பெரிய கண்காட்சிக்கூடமும் அமையவுள்ளது. மழைநீர் சேகரிப்புக்கான வசதி, மறுசுழற்சி மூலம் கழிவுநீர் சுத்திகரிப்பு, சோலார் மின்சார வசதி என பசுமைவழி சார்ந்த முறைகளில் இயற்கையோடு இணைந்தவழியில் திட்டம் முழுவதும் கையாளப்பட்டுள்ளது.

    புதுடெல்லியின் துவாரகா செக்டார் 21-ல் உள்ள டெல்லி ஏர்போர்ட் மெட்ரோ விரைவு ரெயில் நிலையத்தின் நீட்டிக்கப்பட்ட இணைப்பு வசதியை துவாரகா செக்டார் 25-ல் உருவாக்கப்பட்டுள்ள புது மெட்ரோ ரெயில் நிலையத்தையும் நாளை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். இந்த புதுரெயில் நிலையம் வழியாக யஷோபூமி, டெல்லி விமான நிலைய மெட்ரோவுடன் இணைக்கப்படவுள்ளது.

    மெட்ரோ வழியாக புதுடெல்லியிலிருந்து யஷோபூமிக்கு செல்ல 21 நிமிடங்கள் மட்டுமே ஆகும் என கணக்கிடப்பட்டிருக்கிறது.

    • பயணிகள் வசதிக்காக 6 நிமிடத்திற்கு ஒரு மெட்ரோ ரெயில் இயக்கப்பட உள்ளது.
    • இரவு நேரத்தில் புறப்படும் கடைசி ரெயில் சேவை 10 மணியாக மாற்றப்பட்டுள்ளது.

    சென்னை:

    சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:

    வரும் திங்கட்கிழமை (18-ம் தேதி) விநாயகர் சதுர்த்தி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதனால், சென்னையிலிருந்து முன்கூட்டியே சொந்த ஊருக்குச் செல்லும் பயணிகளின் வசதிக்காக மெட்ரோ ரெயில் சேவையில் இன்று ஒருநாள் மாற்றம் செய்யப்படுகிறது.

    அதன்படி, இரவு நேரத்தில் புறப்படும் கடைசி ரெயில் சேவை 10 மணியாக மாற்றப்பட்டுள்ளது.

    நெரிசல்மிகு நேரங்களில், அதாவது இரவு 8 -10 மணி வரை மெட்ரோ ரெயில் சேவைகள் 9 நிமிடம் என்பதற்கு பதிலாக 6 நிமிட இடைவெளியில் இயக்கப்படும்.

    போக்குவரத்து நெரிசல் மற்றும் சிரமம் இல்லாத பயணத்தை மேற்கொள்ள பயணிகள் மெட்ரோ ரெயில் சேவையை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • கட்டுப்பாட்டை இழந்த கிரேன் பார்த்தியநாதனின் மகன் ஜெரால்டு குடியிருக்கும் வீட்டின் மீது வேகமாக மோதியது.
    • மெட்ரோ ரெயில் பணியில் ஈடுபட்டு வந்த ஊழியர்களிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    போரூர்:

    சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் மெட்ரோ ரெயில் 2-ம் கட்ட பணிகள் தொடங்கப்பட்டு வேகமாக நடந்து வருகிறது.

    மாதவரம் முதல் சிறுசேரி சிப்காட் வரையிலும், கலங்கரைவிளக்கம் முதல் பூந்தமல்லி புறவழிச்சாலை வரையிலும், மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரை என 3 வழித்தடங்களில் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இதற்காக போருர் ஏரி அருகே சாலையின் நடுவே பள்ளம் தோண்டப்பட்டு ராட்சத தூண்கள் அமைக்கும் பணியில் இரவு பகலாக நடந்து வருகிறது.

    இதையொட்டிய அஞ்சுகம் நகரில் வசித்து வருபவர் பார்த்திய நாதன். 2 தளம் கொண்ட இவரது வீட்டின் மாடியில் 3 வீடுகள் உள்ளன. இதில் ஒருவீட்டில் மகன் ஜெரால்டு, அவரது மனைவி அஸ்வினி, மகன் ஷியாம், மகள் யாஷிகா ஆகியோரும், மற்றொரு வீட்டில் 2-வது மகனும், இன்னொரு வீட்டை வாடகைக்கும் விட்டு உள்ளனர். கீழ்தளத்தில் உள்ள வீட்டில் பார்த்தியநாதன் மனைவியுடன் வசித்து வருகிறார்.

    இந்நிலையில் நேற்று இரவு 10 மணியளவில் பார்த்தியநாதன் வீட்டை ஒட்டிய பகுதியில் மெட்ரோ ரெயில் பணி நடைபெற்றது. அப்போது அங்கிருந்து ராட்சத கிரேனை ஊழியர்கள் இயக்க திருப்பினர். இதில் கட்டுப்பாட்டை இழந்த கிரேன் பார்த்தியநாதனின் மகன் ஜெரால்டு குடியிருக்கும் வீட்டின் மீது வேகமாக மோதியது.

    இதில் வீட்டின் தடுப்பு சுவர்கள் மற்றும் மேல்பகுதி ஷீட்டுகள் பயங்கர சத்தத்துடன் உடைந்து விழுந்தன. அந்த நேரத்தில் வீட்டில் இருந்த அஸ்வினி தனது மகன்ஷியாம், மகள் அஸ்வினியை வெளியே உள்ள கழிவறைக்கு அழைத்து சென்று இருந்தார். இதனால் அவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். அஸ்வினியின் கணவரான கார்டிரைவர் ஜெரால்டு வெளியே சென்று இருந்ததால் அவர் வீட்டில் இல்லை. வீட்டின் சுவர்கள் இடிந்து விழுந்ததில் பிரோ, கட்டில், மின்விசிறி உள்ளிட்ட பொருட்கள் சேதம் அடைந்தன.

    கிரேன் மோதியதில் அருகில் இருந்த மற்ற 2 வீடுகள் மற்றும் கீழ்தளத்தில் உள்ள வீடு குலுங்கியது. சுவர்களிலும் விரிசல் விழுந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த வீடுகளில் இருந்த வர்கள்அலறியடித்து வெளியே ஓடிவந்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    கிரேன் பலமாக மோதி இருந்தால் அந்த கட்டிடம் முழுவதும் பலத்த சேதம் அடைந்து இருக்கும். அதிர்ஷ்டவசமாக பெரிய அளவில் அசம்பாவிதம் ஏற்படவில்லை.

    இதுபற்றி அறிந்ததும் அப்பகுதி மக்கள் ஏராளமானோர் அங்கு திரண்டனர்.

    அவர்கள் மெட்ரோ ரெயில் பணியில் ஈடுபட்டு வந்த ஊழியர்களிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் பதட்டமான நிலை ஏற்பட்டது. தகவல் அறிந்ததும் போலீசார் மற்றும் மெட்ரோ பணியில் ஈடுபட்ட அதிகாரிகள் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். இதைத்தொடர்ந்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    விபத்து ஏற்படுத்திய இந்த ராட்சத கிரேன் மெட்ரோ ரெயில் பணியில் துளையிட பயன்படுத்தப்படும் எந்திரம் ஆகும். சுமார் 100 டன் எடை கொண்டது. 200 அடிக்கு மேல் உயரம் செல்லும் வசதி கொண்டது. சாய்வாக இருக்கும் இந்த எந்திரத்தை பயன்படுத்த செங்குத்தாக நிலை நிறுத்த வேண்டும். அப்படி நிலை நிறுத்தும்போது அருகில் இருந்த வீட்டை கவனிக்காமல் கிரேனை இயக்கிய ஆபரேட்டர் கவனக் குறைவாக செயல்பட்டதால் விபத்து ஏற்பட்டு இருப்பது விசாரணையில் தெரிய வந்தது. இதுகுறித்து மெட்ரோ அதிகாரிகள் மற்றும் போரூர் போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • வாகன போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டு உள்ளது.
    • வீடுகளை விட்டு வெளியில் யாரும் வர வேண்டாம் என பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    ஹாங்காங்:

    ஹாங்காங்கில் கடந்த சில நாட்களாக இடைவிடாமல் மழை கொட்டி வருகிறது. இதனால் பல நகரங்கள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளன. ரோடுகள் அனைத்தும் ஆறாக மாறி இடுப்பளவுக்கு மேல் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

    ஒரே நாள் இரவில் 200 மி.மீட்டர் மழை கொட்டி தீர்த்ததால் எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. சீனாவின் குவாங்டாங் கடற்கரையில் பலத்த மழை பெய்தது. ஹாங்காங்கில் மழையால் மெட்ரோ ரெயில் சேவைகள் பாதிக்கப்பட்டு உள்ளன. பல மெட்ரோ ரெயில் நிலையங்கள் தண்ணீரில் மூழ்கி கிடக்கிறது. இந்த தண்ணீரை வெளியேற்றும் பணி நடந்து வருகிறது.

    வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்ததால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் தவித்து வருகின்றனர். வாகன போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டு உள்ளது. பள்ளிகள், வணிக வளாகங்கள் மூடப்பட்டு உள்ளன. ஊழியர்கள் வீட்டில் இருந்த படி பணி செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது.

    140 ஆண்டுகளுக்கு பிறகு ஹாங்காங்கில் இடைவிடாமல் கனமழை பெய்து உள்ளது. இதனால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டு இருக்கிறது. வீடுகளை விட்டு வெளியில் யாரும் வர வேண்டாம் என பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    • புறநகர் பகுதிகளை மெட்ரோ ரெயில் சேவையுடன் இணைக்க மெட்ரோ ரெயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
    • சிறுசேரி-கிளாம்பாக்கம், கோயம்பேடு-ஆவடி மெட்ரோ சேவைக்கான சாத்தியக்கூறு அறிக்கை விரைவில் தமிழக அரசிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.

    சென்னை:

    சென்னையில் இரண்டா வது கட்ட மெட்ரோ ரெயில் பணிகள் 3 வழித் தடங்களில் செயல்படுத்தப்படுகின்றன. 119 கி.மீ. நீளத்திற்கு நடக்கும் இந்த பணிகள் 2028-ம் ஆண்டுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    போக்குவரத்து நெரிசல் இல்லாமல் மெட்ரோ ரெயிலில் பயணம் செய்ய முடிவதால் பொதுமக்கள் நாளுக்கு நாள் அதிகளவில் பயணிக்கின்றனர். மேலும் புறநகர் பகுதிகளை மெட்ரோ ரெயில் சேவையுடன் இணைக்க மெட்ரோ ரெயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

    அதன் அடிப்படையில் சிறுசேரி- கிளாம்பாக்கம், பூந்தமல்லி-பரந்தூர், கோயம்பேடு-ஆவடி ஆகிய பகுதிகளுக்கு மெட்ரோ ரெயில் சேவையை நீட்டிப் பது குறித்து சாத்தியக்கூறு அறிக்கை தயாரிப்பு பணிகள் நடந்து வருகின்றன.

    இதில் சிறுசேரி-கிளாம்பாக்கம், கோயம்பேடு-ஆவடி மெட்ரோ சேவைக்கான சாத்தியக்கூறு அறிக்கை விரைவில் தமிழக அரசிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.

    இதையடுத்து விரிவான திட்ட அறிக்கை தயாரித்து இத்திட்டத்தை செயல்படுத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதுகுறித்து மெட்ரோ ரெயில் அதிகாரிகள் கூறியதாவது:-

    இரண்டாம் கட்ட மெட்ரோ ரெயில் திட்டத்தில் பூந்தமல்லி-பரந்தூர் 50 கி.மீ., கோயம்பேடு-ஆவடிக்கு திருமங்கலம், முகப்பேர் வழியாக 17 கி.மீ., சிறுசேரி-கிளாம்பாக்கம் 26 கி.மீ. என மொத்தம் 93 கி.மீ. தூரத்திற்கு மெட்ரோ ரெயில் நீட்டிப்பு செய்ய சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்கும் பணிகள் நடந்து வருகின்றன. பூந்தமல்லி- பரந்தூர் தடத்தில் சாத்தியக் கூறு பணிகள் தாமதம் ஆகிறது.

    ஆனால் சிறுசேரி-கிளாம் பாக்கம், கோயம்பேடு-ஆவடி இடையே மெட்ரோ ரெயிலுக்கான சாத்தியக் கூறு பணிகள் முடிந்து உள்ளதால் 2 வாரங்களில் அரசிடம் ஒப்படைக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • மெட்ரோ ரெயில் சேவை அமைப்பதற்கான சாத்தியக்கூறு தொடர்பான ஆய்வு நடைபெற்று வந்தது.
    • ஆய்வு அறிக்கையை தமிழக அரசிடம் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் சமர்பித்தது.

    தமிழ்நாட்டில் சென்னையில் முதற்கட்டமாக 54 கிலோமீட்டர் தூரத்திற்கு மெட்ரோ ரெயில் சேவை செயல்பாட்டில் இருந்து வருகிறது. சென்னை தொடர்ந்து தமிழ்நாட்டின் மற்ற நகரங்களிலும் மெட்ரோ ரெயில் சேவையை கொண்டுவருவதற்கான ஆய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி கோவை மற்றும் மதுரை மாவட்டங்களில் மெட்ரோ அமைப்பதற்கான பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன.

    இந்த நிலையில், திருநெல்வேலி, சேலம் மற்றும் திருச்சி ஆகிய நகரங்களில் மெட்ரோ ரெயில் சேவை அமைப்பதற்கான சாத்தியக்கூறு தொடர்பான ஆய்வு பணிகள் நடைபெற்று வந்தது. இதைத் தொடர்ந்து சேலம், திருச்சி மற்றும் திருநெல்வேலி ஆகிய நகரங்களில் மெட்ரோ ரெயில் சேவையை அமைப்பதற்கான சாத்தியக்கூறு ஆய்வு அறிக்கையை தமிழக அரசிடம் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் சமர்பித்து இருக்கிறது.

    அதில், திருநெல்வேலியில் பேட்டை முதல் சங்கனாபுரம் வரை 12.39 கிலோமீட்டர், பாளையம்கோட்டை முதல் பொன்மாக்குடி வரை 12.03 கிலோமீட்டர், சங்கர் நகர் முதல் வசந்த நகர் வரை 14.65 கிலோமீட்டர் தூரத்திற்கு மெட்ரோ ரெயில் பாதை அமைக்க சாத்தியக்கூறு இருப்பதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

    இதேபோன்று, திருச்சி மாநகராட்சியில் சமயபுரம் முதல் வயலூர் வரை 19 கிலோமீட்டர் தூரத்திற்கும் துவாக்குடி முதல் பஞ்சப்பூர் வரை 26 கிலோமீட்டர் தூரத்திற்கு மெட்ரோ ரெயில் வழித்தடம் அமைப்பதற்கான சாத்தியக்கூறு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், சேலம் மாவட்டத்தில் கரபுரநாதர் கோயில் முதல் அம்மாபேட்டை வழியாக அயோத்தியாப்பட்டணம் இரெயில் நிலையம் வரை 17.16 கிலோமீட்டர், கருப்பூர் முதல் சேலம் இரெயில் நிலையம் வழியாக நல்லிகலப்படி வரை 18.03 கிலோமீட்டர் வரை மெட்ரோ ரெயில் பாதை அமைக்க சாத்தியக்கூறு இருப்பதாக சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் தெரிவித்து இருக்கிறது.

    • தினமும் 2.5 லட்சம் பயணிகள் பயணம் செய்கின்றனர்.
    • சில முக்கிய இடங்களுக்கான கட்டணங்கள், ரெயில் சேவையின் நேரம், வழித்தடங்கள் போன்ற விவரங்கள் தெரிவிக்கப்படும்.

    சென்னை:

    சென்னையில் மெட்ரோ ரெயில் சேவை தற்போது அவசியமாகிவிட்டது. தினமும் 2.5 லட்சம் பயணிகள் பயணம் செய்கின்றனர். சென்னையில் வசிப்பவர்கள் மட்டுமல்லாமல் வெளியூரில் இருந்து வருபவர்களும் அதனை அதிகம் பயன்படுத்த தொடங்கிவிட்டனர்.

    ரெயில்கள், பஸ்கள் மூலம் சென்னைக்கு வருவதற்கு அருகில் உள்ள மெட்ரோ ரெயில் நிலையத்திற்கான வழிகளை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

    சென்ட்ரல், எழும்பூர் ரெயில் நிலையங்கள், கோயம்பேடு பேருந்து நிலையம் ஆகியவற்றில் விரைவில் தகவல் பலகைகளை வைக்க மெட்ரோ ரெயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

    இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:- பஸ், ரெயில் மூலம் தினமும் லட்சக்கணக்கான மக்கள் சென்னைக்கு வந்து செல்கிறார்கள். அவர்களில் பலருக்கு மெட்ரோ ரெயில் நிலையத்தின் அருகில் உள்ள இடம் தெரியாது. எனவே இந்த இடங்களில் தகவல் பலகை பொறுத்தப்படும்.

    இந்த பலகையானது பயணிகளுக்கு அருகில் உள்ள மெட்ரோ ரெயில் நிலையத்திற்கு செல்லும் வழிகளை மட்டும் காட்டாமல் நகரத்தில் உள்ள சில முக்கிய இடங்களுக்கான கட்டணங்கள், ரெயில் சேவையின் நேரம், வழித்தடங்கள் போன்ற விவரங்கள் தெரிவிக்கப்படும்.

    அதிகாலை 5 மணி முதல் நள்ளிரவு வரை மெட்ரோ ரெயில் சேவை குறித்து அறிந்து அதற்கேற்றவாறு பயணத்தை திட்டமிட இது உதவியாக இருக்கும். பயணிகள் பஸ், ரெயில் நிலையத்தில் இருந்து வெளியேறுவதற்கு முன்பு மெட்ரோ ரெயில் சேவை, அருகில் உள்ள இடங்கள் குறித்து கொள்ள இது உதவியாக இருக்கும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • மெட்ரோ நிர்வாகம் பலமுறை எச்சரித்த பிறகும் பயணிகள் சிலர் அநாகரீக செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • பிரபஞ்சத்தில் அதிக சண்டை நடக்கும் இடம் என டெல்லி மெட்ரோவை நகைச்சுவையாக குறிப்பிட்டுள்ளார்.

    டெல்லி மெட்ரோ ரெயிலில் பயணிகளின் அத்துமீறல் வீடியோக்கள் தொடர்ந்து சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன. மெட்ரோ நிர்வாகம் பலமுறை எச்சரித்த பிறகும் பயணிகள் சிலர் அநாகரீக செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் தற்போது டுவிட்டரில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், டெல்லி மெட்ரோ ரெயிலுக்குள் இரு பெண்கள் இடையே இருக்கைக்காக கடும் வாக்குவாதம் செய்யும் காட்சிகள் உள்ளன.

    அதில் இரு தரப்பு பெண்களும் கடுமையான வாக்குவாதம் செய்வதை பார்த்த சக பயணிகள் அவர்களை சமாதானபடுத்த முயற்சிப்பதும், அப்போது பெண்கள் மேலும் ஆவேசத்துடன் வாக்குவாதம் செய்யும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன. வீடியோ வைரலாகி வரும் நிலையில் பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்துள்ளனர். அதில் ஒரு பயனர், பிரபஞ்சத்தில் அதிக சண்டை நடக்கும் இடம் என டெல்லி மெட்ரோவை நகைச்சுவையாக குறிப்பிட்டுள்ளார். இதே போன்று பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

    ×