search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கிண்டி கத்திப்பாரா பகுதியில் நெரிசல்: ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு அணிவகுத்து நின்ற வாகனங்கள்
    X

    கிண்டி கத்திப்பாரா பகுதியில் நெரிசல்: ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு அணிவகுத்து நின்ற வாகனங்கள்

    • மெட்ரோ ரெயில் பணி நடைபெற்று வருவதால் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
    • ஈக்காட்டுதாங்கல் பகுதியில் மழைநீர் கால்வாய் பணிகள் நீண்ட நாட்களாக நடந்து வருகிறது.

    சென்னை:

    சென்னையில் போக்கு வரத்து நெரிசலை குறைக்க பல்வேறு திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆனாலும் ஒரு சில இடங்களில் காலை மற்றும் மாலை, இரவு நேரங்களில் நெரிசல் ஏற்படுகிறது.

    தற்போது ஒரு சில பகுதிகளில் மெட்ரோ ரெயில் பணி நடைபெற்று வருவதால் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. இதனால் ஒரு சில பகுதிகளில் வாகனங்கள் எளிதாக செல்ல முடியாமல் நெரிசல் ஏற்படுகிறது.

    மேலும் ஒரு சில இடங்களில் மழை நீர் கால்வாய் பணிகள் நிறைவடையாமல் இருப்பதால் பீக் அவர்சில் நெரிசல் ஏற்படுகிறது.

    இந்த நிலையில் கிண்டி கத்திப்பாரா மேம்பாலத்தின் கீழ் பகுதியில் இன்று காலை 9 மணி முதல் 10 மணி வரை கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கத்திபாராவில் இருந்து கோயம்பேடு நோக்கி வாகனங்கள் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு அணிவகுத்து நின்றன. இருசக்கரம் மற்றும் கார்கள் நகராமல் நெரிசலில் சிக்கி வாகன ஓட்டிகள் பாதிக்கப்பட்டனர்.

    ஈக்காட்டுதாங்கலில் இருந்து கத்திபாரா பாலம் பகுதி வரை வாகனங்கள் வரிசையில் நின்றன. அலுவலகங்களுக்கு செல்லக் கூடியவர்கள் நெரிசலில் சிக்கி சிரமப்பட்டனர்.

    இதுகுறித்து போக்குவரத்து நெரிசலில் சிக்கிய வாகன ஓட்டிகள் கூறும்போது, ஈக்காட்டுதாங்கல் பகுதியில் மழைநீர் கால்வாய் பணிகள் நீண்ட நாட்களாக நடந்து வருகிறது. அதனை விரைவாக முடித்தால் அந்த பகுதியில் நெரிசல் ஏற்படாது. ஒவ்வொரு நாளும் இந்த சாலையை கடந்து செல்வதற்கு மணிகணக்கில் காத்து நிற்க வேண்டிய நிலை உள்ளது என்றனர்.

    Next Story
    ×