என் மலர்
நீங்கள் தேடியது "மழைநீர் கால்வாய் பணி"
- புதிதாக கட்டப்பட்டு உள்ள மழை நீர் கால்வாய்களை இணைக்கும் வகையில் கட்டப்பட்டு வரும் இணைப்பு கால்வாய் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
- மழைநீர் வடிகால் இணைப்பு கால்வாய் பணிகளை விரைந்து முடிக்குமாறு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
சென்னை:
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று இரவு சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வி.பி.ராமன் சாலையில், வருகின்ற பருவமழை காலங்களில் மழைநீர் தேங்காத வகையில், எளிதாக பக்கிங்காம் கால்வாய்க்கு தண்ணீர் செல்லும் வகையில் மழைநீர் வடிகால் கால்வாய் தூர்வாரப்பட்டு உள்ளதை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து வி.பி.ராமன் சாலை, ராயப்பேட்டை நெடுஞ்சாலை மற்றும் மாசிலாமணி சாலைகள் சந்திப்பு பகுதியில், ராயப்பேட்டை நெடுஞ்சாலை மற்றும் மாசிலாமணி சாலைகளில் புதிதாக கட்டப்பட்டு உள்ள மழை நீர் கால்வாய்களை இணைக்கும் வகையில் கட்டப்பட்டு வரும் இணைப்பு கால்வாய் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மழைநீர் வடிகால் இணைப்பு கால்வாய் பணிகளை விரைந்து முடிக்குமாறு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். புதிதாக கட்டப்பட்டு வரும் மழைநீர் கால்வாய்கள் மூலமாக வி.பி.ராமன் சாலை பகுதியில் மழைநீர் எளிதாக பக்கிங்காம் கால்வாய்க்கு சென்று அங்கிருந்து கடலுக்கு சென்று விடும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இந்த ஆய்வில் பெருநகர சென்னை மாநகராட்சி நிலைக்குழுத் தலைவர் (பணிகள்) நே.சிற்றரசு, மாமன்ற உறுப்பினர் கமலா செழியன், சென்னை பெருநகர மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
- 80 சதவீத பணிகள் முடிந்த நிலையில் 20 சதவீத பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
- பொதுமக்கள் தனியார் லாரி மூலம் வரும் தண்ணீரை வாங்கி பயன்படுத்தி வருகிறார்கள்.
கொளத்தூர்:
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மழை நீர் வடிகால்வாய் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனை விரைந்து முடிக்க அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர்.
பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் மழை நீர்கால்வாய் பணி காரணமாக குடிநீர் குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு கழிவு நீர் கலந்து வருகிறது. கால்வாய் பணி இன்னும் முழுமையாக முடியாததால் இந்த பிரச்சினை தொடர்ந்து நீடித்து வருகிறது.
கொளத்தூர் தொகுதியில் சுமார் ரூ.120 கோடி மதிப்பில் 70 கிலோ மீட்டர் தூரத்திற்கு மழை நீர் வடிகால் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் 80 சதவீத பணிகள் முடிந்த நிலையில் 20 சதவீத பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
இதனால் கொளத்தூர் திருமுருகன் நகர், டீச்சர்ஸ் கில்ட் காலனி, வி.வி. நகர் பூம்புகார் நகர், ஜெயராம் நகர், ஜி.கே.எம். காலனி உள்ளிட்ட பகுதிகளில் மழை நீர் வடிகால் பணி நிறைவடையாமல் பள்ளம் தோண்டப்பட்ட நிலையில் உள்ளன. அதில் உள்ள கான்கிரீட் கம்பிகள் வாகன ஓட்டிகளையும், அவ்வழியே செல்பவர்களை அச்சுறுத்தும் வகையில் காணப்படுகிறது.
மேலும் பல இடங்களில் கால்வாய்க்கு தோண்டப்பட்ட பள்ளத்தில் கழிவு நீர் குளம்போல் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. கொளத்தூர் மூகாம்பிகை கோவில் மெயின் ரோட்டில் கட்டப்பட்டு வரும் மழைநீர் வடிகால்வாயில் கழிவுநீர் குளம்போல் தேங்கி காணப்படுகிறது.
பூம்புகார் நகர், வி.வி.நகர் பகுதியில் கால்வாய்க்கு பள்ளம்தோண்டியபோது குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு கழிவு நீர்கலந்தது. இதனால் அப்பகுதியில் குடியிருப்பவர்கள் குடிநீரை பயன்படுத்த முடியாத அளவுக்கு பாதிக்கப்பட்டு உள்ளனர். பொதுமக்கள் தனியார் லாரி மூலம் வரும் தண்ணீரை வாங்கி பயன்படுத்தி வருகிறார்கள்.
மேலும் மழை நீர் வடிகால் பணி முடிந்த பல சாலைகள் சீரமைக்கப்படாமல் குண்டும் குழியுமாக உள்ளதால் வாகனங்களில் செல்வோர் பள்ளத்தில் விழுந்து காயம் அடைந்து வருகிறார்கள்.
எனவே கொளத்தூர் பகுதியில் மழைநீர் வடிகால் பணியை விரைந்து முடித்து தோண்டப்பட்ட இடங்களில் தரமான சாலை அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
இதுகுறித்து பூம்புகார் நகரை சேர்ந்த ஒருவர் கூறும்போது, மழைநீர் கால்வாய்க்காக தோண்டப்பட்ட பள்ளங்கள் கழிவுநீரால் நிரம்பி உள்ளன. குடிநீர் வாரிய அதிகாரிகள் அதனை சீரமைத்தாலும், அது தற்காலிக தீர்வாகவே உள்ளது. மீண்டும் சில நாட்களில் மற்ற தெருக்களில் இதே பிரச்னை ஏற்படுகிறது. கால்வாய் பணி காரணமாக குடிநீர் குழாய், மின்வயர்கள் சேதம் அடைந்து உள்ளன. உடைந்த குடிதண்ணீர் குழாய்களில் கழிவு நீர் கலந்து வருகிறது. கால்வாய் பணி முடியாததால் இதனை சீரமைப்பதிலும் சிரமம் ஏற்படுகிறது. மழைநீர் வடிகால் பணியை உரிய நேரத்தில் முடிக்க வேண்டும். கழிவு நீர் கலந்த குடிநீர் தொட்டியை சுத்தம் செய்ய ரூ.3 ஆயிரம் வரை செலவு செய்ய வேண்டி உள்ளது என்றார்.
- போலீஸ் குடியிருப்பு அருகே கடந்த சில நாட்களாக மழைநீர் வடிகால்வாய் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
- நேற்று மாலை தொழிலாளர்கள் சிலர் ஜே.சி.பி. எந்திரம் மூலம் அப்பகுதியில் மேலும் பள்ளம் தோண்டினர்.
ராயபுரம்:
புதுவண்ணாரப்பேட்டையில் போலீசார் குடியிருப்பு உள்ளது. இந்த குடியிருப்பை சுற்றி சுமார் 7 அடி உயரத்தில் சுவர் அமைக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் போலீஸ் குடியிருப்பு அருகே கடந்த சில நாட்களாக மழைநீர் வடிகால்வாய் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதற்காக போலீஸ் குடியிருப்பு சுற்றுச்சுவர் அருகே நீண்ட தூரத்துக்கு பள்ளம் தோண்டப்பட்டு உள்ளது.
நேற்று மாலை தொழிலாளர்கள் சிலர் ஜே.சி.பி. எந்திரம் மூலம் அப்பகுதியில் மேலும் பள்ளம் தோண்டினர். அப்போது போலீஸ் குடியிருப்பின் சுற்றுச்சுவர் திடீரென பயங்கர சத்தத்துடன் இடிந்து விழுந்தது.
சுமார் 100 மீட்டர் தூரத்துக்கு சுற்றுச்சுவர் இடிந்து தரைமட்டமானது. அந்த இடத்தில் இருந்து சில அடி தூரம் தாண்டி குடியிருப்பு உள்ளதால் பாதிப்பு ஏற்படவில்லை. மேலும் கால்வாய் அமைக்கும் பணியில் அதிக அளவிலான தொழிலாளர்கள் ஈடுபடாததாலும், சுற்றுச்சுவர் அருகே யாரும் இல்லாததாலும் பெரிய அளவில் அசம்பாவிதம் ஏற்படவில்லை. தொடர்ந்து அங்கு கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
- மெட்ரோ ரெயில் பணி நடைபெற்று வருவதால் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
- ஈக்காட்டுதாங்கல் பகுதியில் மழைநீர் கால்வாய் பணிகள் நீண்ட நாட்களாக நடந்து வருகிறது.
சென்னை:
சென்னையில் போக்கு வரத்து நெரிசலை குறைக்க பல்வேறு திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆனாலும் ஒரு சில இடங்களில் காலை மற்றும் மாலை, இரவு நேரங்களில் நெரிசல் ஏற்படுகிறது.
தற்போது ஒரு சில பகுதிகளில் மெட்ரோ ரெயில் பணி நடைபெற்று வருவதால் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. இதனால் ஒரு சில பகுதிகளில் வாகனங்கள் எளிதாக செல்ல முடியாமல் நெரிசல் ஏற்படுகிறது.
மேலும் ஒரு சில இடங்களில் மழை நீர் கால்வாய் பணிகள் நிறைவடையாமல் இருப்பதால் பீக் அவர்சில் நெரிசல் ஏற்படுகிறது.
இந்த நிலையில் கிண்டி கத்திப்பாரா மேம்பாலத்தின் கீழ் பகுதியில் இன்று காலை 9 மணி முதல் 10 மணி வரை கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கத்திபாராவில் இருந்து கோயம்பேடு நோக்கி வாகனங்கள் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு அணிவகுத்து நின்றன. இருசக்கரம் மற்றும் கார்கள் நகராமல் நெரிசலில் சிக்கி வாகன ஓட்டிகள் பாதிக்கப்பட்டனர்.
ஈக்காட்டுதாங்கலில் இருந்து கத்திபாரா பாலம் பகுதி வரை வாகனங்கள் வரிசையில் நின்றன. அலுவலகங்களுக்கு செல்லக் கூடியவர்கள் நெரிசலில் சிக்கி சிரமப்பட்டனர்.
இதுகுறித்து போக்குவரத்து நெரிசலில் சிக்கிய வாகன ஓட்டிகள் கூறும்போது, ஈக்காட்டுதாங்கல் பகுதியில் மழைநீர் கால்வாய் பணிகள் நீண்ட நாட்களாக நடந்து வருகிறது. அதனை விரைவாக முடித்தால் அந்த பகுதியில் நெரிசல் ஏற்படாது. ஒவ்வொரு நாளும் இந்த சாலையை கடந்து செல்வதற்கு மணிகணக்கில் காத்து நிற்க வேண்டிய நிலை உள்ளது என்றனர்.






