என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Royapettah"

    • புதிதாக கட்டப்பட்டு உள்ள மழை நீர் கால்வாய்களை இணைக்கும் வகையில் கட்டப்பட்டு வரும் இணைப்பு கால்வாய் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
    • மழைநீர் வடிகால் இணைப்பு கால்வாய் பணிகளை விரைந்து முடிக்குமாறு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

    சென்னை:

    துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று இரவு சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வி.பி.ராமன் சாலையில், வருகின்ற பருவமழை காலங்களில் மழைநீர் தேங்காத வகையில், எளிதாக பக்கிங்காம் கால்வாய்க்கு தண்ணீர் செல்லும் வகையில் மழைநீர் வடிகால் கால்வாய் தூர்வாரப்பட்டு உள்ளதை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து வி.பி.ராமன் சாலை, ராயப்பேட்டை நெடுஞ்சாலை மற்றும் மாசிலாமணி சாலைகள் சந்திப்பு பகுதியில், ராயப்பேட்டை நெடுஞ்சாலை மற்றும் மாசிலாமணி சாலைகளில் புதிதாக கட்டப்பட்டு உள்ள மழை நீர் கால்வாய்களை இணைக்கும் வகையில் கட்டப்பட்டு வரும் இணைப்பு கால்வாய் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    மழைநீர் வடிகால் இணைப்பு கால்வாய் பணிகளை விரைந்து முடிக்குமாறு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். புதிதாக கட்டப்பட்டு வரும் மழைநீர் கால்வாய்கள் மூலமாக வி.பி.ராமன் சாலை பகுதியில் மழைநீர் எளிதாக பக்கிங்காம் கால்வாய்க்கு சென்று அங்கிருந்து கடலுக்கு சென்று விடும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

    இந்த ஆய்வில் பெருநகர சென்னை மாநகராட்சி நிலைக்குழுத் தலைவர் (பணிகள்) நே.சிற்றரசு, மாமன்ற உறுப்பினர் கமலா செழியன், சென்னை பெருநகர மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர். 

    ராயப்பேட்டையில் மின்சாரம் தாக்கி வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சென்னை:

    சென்னை ராயப்பேட்டையில் ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் பிளாட்பாரம் அமைக்கும் பணி நடை பெற்று வருகிறது. இதற்காக பள்ளம் தோண்டியதில் மின்சாரம் தாக்கியது. இதில் அங்கு பணியில் ஈடுபட்டிருந்த பவுன்ராஜ் என்ற வாலிபர் தூக்கி வீசப்பட்டு பலியானார்.

    இதுபற்றி அண்ணாசாலை போலீசார் வழக்குப்பதிவு செய்து ஒப்பந்தநிறுவனத்தின் மேற்பார்வையாளர் பாண்டியன் என்பவரை கைது செய்தனர்.

    ராயப்பேட்டையில் ரவுடி சைக்கோ விமலை கைது செய்த போலீசார் விசாரணைக்கு பின்னர் அவனை சிறையில் அடைக்க முடிவு செய்துள்ளனர்.
    சென்னை:

    ராயப்பேட்டை செல்லம்மாள் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் சைக்கோ விமல். அப்பகுதியில் பிரபலமான ரவுடியான இவனை போலீசார் தேடி வந்தனர்.

    கடந்த மாதம் அப்பகுதியை சேர்ந்த வேதகிரி என்பவரிடம் 2 செல்போன்களை பறித்த வழக்கில் ஐஸ்அவுஸ் போலீசார் சைக்கோ விமலை தேடி வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று ராயப்பேட்டை பகுதியில் பதுங்கி இருந்த அவன் போலீசில் சிக்கினான். விசாரணைக்கு பின்னர் விமலை சிறையில் அடைக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.

    கடந்த மாதம் அவனது வீட்டில் பதுங்கி இருந்த சைக்கோ விமலை, கோட்டூர்புரம் போலீஸ் ஏட்டு தியாகராஜன் பிடிக்க சென்றார். அப்போது சட்டையை போட்டுவிட்டு வருவதாக கூறி வீட்டுக்குள் சென்று கத்தியை எடுத்து வந்து சரமாரியாக குத்தினான்.

    இந்த வழக்கில் அப்போது அவன் கைது செய்யப்பட்டான். அதன்பிறகு பல்வேறு குற்ற வழக்குகளில் அவன் ஈடுபட்டு வந்ததும் குறிப்பிடத்தக்கது.



    ×