இன்று இரவு 12 மணி வரை ரெயில் சேவை நீட்டிப்பு - மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு

சேப்பாக்கத்தில் இன்று நடைபெறும் 5-வது லீக் ஆட்டத்தில் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன.உலக கோப்பை போட்டிக்காக இன்று இரவு 12 மணி வரை சேவை நீட்டிப்பு என மெட்ரோ ரெயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
இன்று இரவு 12 மணி வரை ரெயில் சேவை நீட்டிப்பு - மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு
Published on

சென்னை:

13-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்துவருகிறது.

சென்னை சேப்பாக்கத்தில் இன்று நடைபெறும் 5-வது லீக் ஆட்டத்தில் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள இந்திய அணி, 5 முறை சாம்பியனான ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது.

வலுவான இரு அணிகள் போட்டியிடுவதால் இந்த ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை முன்னிட்டு வேளச்சேரி- சிந்தாதிரிப்பேட்டை இடையே இன்று சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. இதேபோல், வரும் 13, 18, 23, மற்றும் 27 ஆகிய நாட்களிலும் பயணிகள் சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது என தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

இந்நிலையில், சென்னையில் இன்று இரவு 12 மணி வரை மெட்ரோ ரெயில் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது. உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட்டைக் காண்பித்து கட்டணம் இன்றி பயணிக்கலாம் என மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com