search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Lightning"

    கடலூரில் நேற்று இரவு 11 மணிக்கு நகர பகுதியில் லேசான மழை பெய்ய தொடங்கியது. சிறிது நேரத்தில் இடி- மின்னலுடன் பலத்த மழை கொட்டியது.

    கடலூர்:

    கடலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பகலில் வெயில் வாட்டி வதைத்தது. இந்த நிலையில் வடகிழக்கு பருவமழை இன்று தொடங்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. மேலும் 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் பல்வேறு இடங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.

    இந்த நிலையில் நேற்று இரவு 11 மணிக்கு கடலூர் நகர பகுதியில் லேசான மழை பெய்ய தொடங்கியது. சிறிது நேரத்தில் இடி- மின்னலுடன் பலத்த மழை கொட்டியது.

    நள்ளிரவு 2 மணி வரை தொடர்ந்து மழை பெய்தது. இதனால் சாலையில் மழைநீர் ஆறுபோல் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் ஆங்காங்கே மழைநீர் தேங்கி நின்றது. இடியுடன் மழை பெய்ததால் நகரின் சில இடங்களில் மின்தடை ஏற்பட்டது. கடலூர், திருப்பாதிரிப்புலியூர், நெல்லிக்குப்பம், பண்ருட்டி, நெய்வேலி, சிதம்பரம் போன்ற பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.

    திருப்பாதிரிப்புலியூர் தேரடி வீதியில் மழைநீர் செல்ல போதிய வசதி இல்லாததால் மழைநீரும், சாக்கடை நீரும் சேர்ந்து தெப்பக்குளம்போல் தேங்கி நின்றது. இதனால் அந்த பகுதியில் துர் நாற்றம் வீசுகிறது. சேறும்- சகதியுமாக காட்சி அளித்தது.

    கடலூர் நகர் பகுதியில் இன்று காலையும் சாரல் மழை பெய்து கொண்டே இருந்தது.

    சிதம்பரம், குமராட்சி, பரங்கிப்பேட்டை, புவனகிரி, காட்டுமன்னார்கோவில் போன்ற இடங்களில் இன்று காலை முதலே மழை பெய்ய தொடங்கியது. இதனால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகள் பெரிதும் அவதியடைந் தனர். அவர்கள் குடை பிடித்த படியும், மழையில் நனைந்தும் பள்ளி- கல்லூரிக்கு சென்றனர்.

    விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை, களமருதூர், சேந்த நாடு போன்ற பகுதிகளில் இன்று அதிகாலை 4 மணி அளவில் திடீரென்று மழை பெய்ய தொடங்கியது. சுமார் 1 மணி நேரம் பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் ஆறுபோல் ஓடியது.

    அதுபோல மரக்காணம் அதனை சுற்று பகுதிகளிலும் இன்று காலை மழை பெய்தது.

    நாகர்கோவிலில் நேற்று காலையில் இடி மின்னலுடன் 3 மணி நேரம் கனமழை பெய்தது.
    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. நாகர்கோவிலில் நேற்று காலை இடி மின்னலுடன் கனமழை பெய்தது. அதிகாலை 5 மணிக்கு தொடங்கிய மழை நேரம் செல்ல செல்ல அதிகரித்து சுமார் 3 மணி நேரம் கொட்டி தீர்த்தது.

    இடைவிடாது பெய்த கன மழையின் காரணமாக சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் இருசக்கர வாகனங்கள் சென்றவர்கள் தண்ணீரில் சிக்கி தவித்தனர். செம்மாங்குடி ரோடு, மீனாட்சிபுரம் சாலை, கோர்ட்டு ரோடு, கே.பி. ரோடு, மகளிர் கிறிஸ்தவ கல்லூரி சாலை போன்ற பகுதிகளில் சாலைகளில் வெள்ளம் அதிகமாக ஓடியது. அந்த பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் மழை வெள்ளம் புகுந்தது.

    காலையில் பள்ளிக்கு புறப்பட்ட மாணவ–மாணவிகள் கடும் மழையால் பாதிக்கப்பட்டனர். பள்ளி மாணவர்களை ஏற்றி வந்த ஆட்டோக்கள் நடுவழியில் பழுதாகி நின்றதால் மாணவ–மாணவிகள் கடும் அவதிக்கு ஆளானார்கள். ஒரு சிலர் பள்ளி வரை நனைந்தவாறு சென்றனர். 3 மணி நேரத்தில் 26.2 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. இதுபோல், குருந்தன்கோடு, குளச்சல், சிற்றார், பாலமோர் போன்ற பகுதிகளிலும் மழை பெய்தது.

    மழையோர பகுதிகளில் பெய்த மழையால் அணைகளுக்கு மிதமான அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. சிற்றாறு அணைகள் நிரம்புவதை அடுத்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணி மேற்கொண்டுள்ளனர்.

    மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில்:–

    நாகர்கோவில்–26.2, குருந்தன்கோடு–25.6, குளச்சல்–6.4, பேச்சிப்பாறை –1, சிற்றார்1–4, சிற்றார்2–7, மாம்பழத்துறையாறு –3, கன்னிமார்–4.6, பாலமோர் –2.8, ஆணைகிடங்கு –3, அடையாமடை –8, திற்பரப்பு–9.8 மில்லிமீட்டர் மழை பதிவாகியது. நேற்று காலை நிலவரப்படி பேச்சிப்பாறை அணைக்கு 482 கனஅடி தண்ணீர் வந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 657 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. அணையின் நீர்மட்டம் 27 அடியாக உள்ளது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 70.30 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 200 கனஅடி தண்ணீர் வந்தது.
    எடப்பாடி பகுதியில் நேற்று இடி-மின்னலுடன் கனமழை பெய்தது. பல ஏக்கர் கரும்பு பயிர்கள் சரிந்து நாசமானதால் விவசாயிகள் கவலை அடைந்தனர்.
    எடப்பாடி:

    சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் மேட்டூர், சேலம் கோரி மேடு உள்பட பல பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. 2-வது நாளான நேற்று எடப்பாடி, பூலாம்பட்டி உள்பட பல்வேறு பகுதிகளில் இடி மின்னலுடன் விடிய விடிய கனமழை பெய்தது.

    இந்த மழையால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மழையை தொடர்ந்து குளிர்ந்த காற்று வீசியது. 

    பூலாம்பட்டி பகுதியில் பெய்த கன மழையால் சித்தனூர் பகுதியில் பயிரிடப்பட்டிருந்த பல ஏக்கர் கரும்பு பயிர்கள் சரிந்து நாசமானது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்தனர். எடப்பாடி-பூலாம்பட்டி சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால் இன்று காலையும் வாகனங்கள் ஊர்ந்தபடியே சென்றன.

    எடப்பாடி உழவர் சந்தையின் முகப்பு வாசலில் அதிக அளவில் தண்ணீர் தேங்கியதால் பொதுமக்கள், வாகனங்கள் செல்வதில் கடும் சிரமம் ஏற்பட்டது.
    வேலூரில் நேற்று இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    வேலூர்:

    வேலூரில் கோடை காலத்தில் தான் எப்போதும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். அப்போது 110 டிகிரி வரை வெயில் அளவு பதிவாகும்.

    இந்தாண்டு கோடை காலம் முடிந்த பின்னரும் வெயில் சுட்டெரித்து வருகிறது. ஜூலை மாதத்தின் கடைசி வாரத்தில் வெயில் 100 டிகிரியை தொட்டது. அதைத்தொடர்ந்து இந்த மாதத்தின் முதல்வாரம் முதல் தொடர்ந்து சில நாட்கள் 100 டிகிரிக்கு மேல் வெயிலின் அளவு பதிவானது.

    நேற்று காலை 10 மணிக்கேவெயில் வாட்டி எடுத்தது. மதியம் 2 மணியளவில் 99.9 டிகிரி வெயில் அளவு பதிவானது.

    இந்த நிலையில் மாலை 4.30 மணியளவில் வேலூர் பகுதியில் திடீரென கருமேகங்கள் சூழ்ந்தன. தொடர்ந்து வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. 5 மணியளவில் மழை பெய்ய தொடங்கியது. தொடர்ந்து மிதமாக பெய்த மழை சிறிது நேரத்தில் இடி, மின்னலுடன் பெய்தது. இவ்வாறாக சுமார் 1½ மணி நேரம் பலத்த மழை பெய்தது. அதைத்தொடர்ந்து விட்டு, விட்டு மழை பெய்து கொண்டிருந்தது.

    பலத்த மழை காரணமாக புதிய, பழைய பஸ் நிலையங்கள், ஆரணி சாலை, காமராஜர் சிலை அருகே மற்றும் பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கியது. அதனால் வாகன ஓட்டிகள் சிரமத்துக்கு உள்ளாகினர். அதேபோன்று அலுவலக வேலை முடிந்து வீடுகளுக்கு சென்றவர்களும் அவதி அடைந்தனர்.

    பலத்த மழையால் வேலூரில் வெப்பம் தணிந்தது. அதனால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    புதுவையில் நடுக்கடலில் மீன் பிடித்த போது மின்னல் தாக்கியதில் படுகாயமடைந்த 7 மீனவர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
    புதுச்சேரி:

    புதுவை சோலை நகரை சேர்ந்த 7 மீனவர்கள் தேங்காய்திட்டு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த 13-ந் தேதி படகில் மீன்பிடிக்க சென்றனர். கடப்பாக்கம் அருகே அவர்கள் நடுக்கடலில் நேற்று மாலை மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென இடி மின்னலுடன் மழை பெய்தது.

    இதில் படகின் முன்புறம் இடி தாக்கியதில் படகை ஓட்டிய சுதாகர் காது கேட்கும் திறனை இழந்தார். அதோடு இடி தாக்கியதில் சுதாகர் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தார்.

    மேலும் படகில் மீன் பிடித்து கொண்டிருந்த ஜெலந்திரன், அருள், கந்தவேலு, குகன், விஜி, கலியபெருமாள் ஆகியோருக்கு கண் எரிச்சல் மற்றும் உடல் நிலை பாதிப்பு ஏற்பட்டது. இதனால் கடும் போராட்டத்துடன் இவர்கள் தேங்காய்திட்டு துறைமுகத்திற்கு நேற்று இரவு திரும்பினார்கள்.

    அங்கிருந்த மீனவர்கள் பாதிக்கப்பட்ட 7 பேரையும் மீட்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு அனுமதித்தனர்.

    படகில் இருந்த அனைத்து மின்சாதன பொருட்களும் இடி மின்னலால் பழுதாகின. இதன் சேத மதிப்பு ரூ 5 லட்சம் என மதிப்பிடப்பட்டுள்ளது.
    ராசிபுரம் அருகே, மின்னல் தாக்கியதில் 10-க்கும் மேற்பட்டோர் வீடுகளில் டி.வி.க்கள் சேதம் அடைந்தன. மேலும் ஆசிரியர் வீட்டின் தண்ணீர் தொட்டியில் விரிசல் ஏற்பட்டது.
    ராசிபுரம்:

    ராசிபுரம் பகுதியில் நேற்று முன்தினம் இரவு பலத்த இடி, மின்னலுடன் மழை பெய்தது. ராசிபுரம் அருகே உள்ள சில கிராமங்களிலும் மழை பெய்தது. இதன் காரணமாக சில பகுதிகளில் மின்தடையும் ஏற்பட்டது. இந்த நிலையில் இரவு 7.45 மணியளவில் ராசிபுரம் வி.நகர்.-18 பகுதியில் உள்ள ஆசிரியர் செல்வராஜூ என்பவரது வீட்டில் மின்னல் தாக்கியது.

    இதில் அவரது வீட்டின் மீது உள்ள தண்ணீர் தொட்டி ஓடுகள், சிமெண்ட் தளங்கள் வெடித்து சிதறின. தண்ணீர் தொட்டியில் விரிசலும் ஏற்பட்டது. வீட்டில் வைக்கப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமராக்கள், கம்ப்யூட்டர், மின்வாரிய சுவிட்ச் பாக்சுகள், மின்விசிறி, டி.வி. ஆகியவையம் சேதம் அடைந்தன. தண்ணீர் தொட்டி மீது மின்னல் போது தீபிளம்பு காணப்பட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

    அதேபோல் வி.நகர்.-18 பகுதியில் எலக்ட்ரீசியன் நடராஜன், நெசவு தொழில் செய்துவரும் ரவி, திலகராஜ் உள்பட 10-க்கும் மேற்பட்ட வீடுகளில் டி.வி.க்கள் சேதம் அடைந்தன. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். 
    ஜார்கண்ட் மாநிலத்தில் இடி மின்னல் தாக்கியதில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
    ராஞ்சி :

    வட மாநிலங்களில் கடந்த சில தினங்களாகவே பரவலாக மழை பொழிந்து வருகிறது. இதனால், அங்குள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

    இந்நிலையில், ஜார்கண்ட் மாநிலம், சிங்பும் மாவட்டதில் இடி மின்னல் தாக்கியதில் இரண்டு பெண்கள் உள்பட 4 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    கண்டசோல் மற்றும் கர்மதா எனும் கிராமங்களில் மழை பொழிந்துகொண்டிருந்த போது வயல்களில் வேலை பார்த்துகொண்டிருந்த ஒரு பெண் உள்பட இருவர் மின்னல் தாக்கி பலியாகியதாகவும், கட்சிலா எனும் பகுதியில் ஒரு பெண் உள்பட இருவர் இடி தாக்கி பலியாகினதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 
    பீகார் மாநிலம் சரண் மாவட்டத்தில் மின்னலை பார்த்து மணமகன் பயந்ததால் மணமேடையிலேயே மணப்பெண் திருமணத்தை நிறுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    பாட்னா:

    பொதுவாக, வடமாநிலங்களில் சில திருமணங்கள் வினோத காரணங்களுக்காக மேடையிலேயே நின்றுபோகும் நிகழ்வு அவ்வப்போது நடக்கிறது. உதாரணமாக உத்தரப்பிரதேச மாநிலத்தில் மாப்பிள்ளை வீட்டாருக்கு ரசகுல்லா இல்லை என்பதற்காக நிறுத்தப்பட்ட கல்யாணம், ஐஸ் கிரீம் வைக்காததால் ஏற்பட்ட தகராறில் மண்டை உடைப்பு என திருமணம் நிறுத்தப்படுவதற்கான காரணங்கள் நீள்கின்றன.

    இந்த வரிசையில், பீகார் மாநிலம் சரண் மாவட்டத்தில் நடந்த திருமணத்தின்போது மணமேடையில் இருந்த மாப்பிள்ளை மின்னலை பார்த்து பயந்து, வினோதமாக நடந்து கொண்டார். இதனைக் கண்ட மணப்பெண்ணோ மேடையிலேயே மாப்பிள்ளை வேண்டாம் எனக்கூறி திருமணத்தை நிறுத்தியுள்ளார்.

    இதனால் இரு வீட்டாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு, மாப்பிள்ளை வீட்டார் சிலர் மீது வழக்கும் பதியப்பட்டுள்ளது. சில வினாடிகள் தோன்றி மறைந்த மின்னல் மணமகனுக்கு வாழ்நாள் முழுவதும் மறக்க முடியா நினைவாக மாறிவிட்டது. 
    மேற்கு வங்காளம் மாநிலம் கொல்கத்தாவில் கிரிக்கெட் பயிற்சியின் போது திடீரென மின்சாரம் தாக்கி கிரிக்கெட் வீரர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. #Lightning
    கொல்கத்தா:

    மேற்கு வங்காளம் மாநிலம் ஹூக்ளி மாவட்டத்தைச் சேர்ந்த 21 வயது வாலிபர் தேபாபிரதா பால். இவர் கடந்த மாதம் கொல்கத்தாவில் உள்ள விவேகானந்தா பூங்காவில் உள்ள கொல்கத்தா கிரிக்கெட் அகாடாமியில் பயின்று வந்தார்.

    நேற்று வழக்கம்போல் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென ஏற்பட்ட மின்னல் தாக்கி தேபாபிரதா கீழே விழுந்தார். அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது. #Lightning
    உத்தரபிரதேசம் மாநிலத்தில் புழுதிப் புயலுடன் கொட்டித் தீர்த்த கனமழைக்கு கடந்த 24 மணி நேரத்தில் 26 பேர் உயிரிழந்தனர். #lightningstrikesinUP #26killedinduststorms
    லக்னோ:

    உத்தரபிரதேசம் மாநிலத்தின் 11 மாவட்டங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் நேற்றிரவு புழுதிப் புயல் மற்றும் சூறைக்காற்றுடன் கனமழை கொட்டித் தீர்த்தது.

    இதனால், சில மாவட்டங்களில் உள்ள குடியிருப்பு பகுதிகள் வெள்ளக் காடாக காட்சி அளிக்கின்றன. மழை, வெள்ளம் மற்றும் மின்னல் தாக்குதல் சார்ந்த விபத்துகளில் கடந்த 24 மணி நேரத்தில் 26 பேர் உயிரிழந்ததாக அம்மாநில அரசு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

    ஜாவ்ன்பூர் மற்றும் சுல்தான்பூர் மாவட்டங்களில் தலா 5 பேரும், உன்னாவ் மாவட்டத்தில் 4 பேரும், சன்டவுலி மற்றும் பஹ்ராய்ச் மாவட்டங்களில் தலா 3 பேரும், ரேபரேலி மாவட்டத்தில் இருவரும், மிர்சாபூர், சிதாபூர், அமேதி மற்றும் பிரதாப்கர் மாவட்டங்களில் தலா ஒருவரும் மழைசார்ந்த விபத்துகளுக்கு பலியானதாக தெரியவந்துள்ளது.

    இந்த மரணங்கள் தொடர்பாக கவலை தெரிவித்துள்ள முதல் மந்திரி யோகி ஆதித்யாநாத், பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் உடனடியாக நிவாரணப் பணிகளை மேற்கொள்ளுமாறு உயரதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

    மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு அளிக்கப்படும் அரசு நிவாரண நிதி உடனடியாக பாதிக்கப்பட்டவர்களுக்கு சென்று சேருவதை மாவட்ட மாஜிஸ்திரேட்டுகள் உறுதிப்படுத்த வேண்டும். இதில் எவ்வித கால தாமதத்தையும் சகித்துக் கொள்ள முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
    #lightningstrikesinUP #26killedinduststorms
    வேலூரில் பகல் முழுவதும் வெயில் கொளுத்திய நிலையில் மாலையில் கருமேகங்கள் திரண்டு இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது.

    வேலூர்:

    வேலூரில் ‘அக்னி நட்சத்திரம்’ முடிந்த பின்னரும் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வருகிறது. நேற்று காலை 7 மணி முதலே வெயில் சுட்டெரிக்க தொடங்கியது.

    பகல் முழுவதும் வெயில் கொளுத்திய நிலையில் மாலையில் கருமேகங்கள் திரண்டு இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது. சுமார் 1 மணி நேரம் மழை பெய்தது.

    அதன்பின் சில மணி நேரம் ஓய்ந்திருந்த மழை இரவு 10.30 மணி முதல் மீண்டும் பெய்ய தொடங்கியது. நள்ளிரவு 12.30 மணிவரை தொடர்ந்து மழை பெய்தது. பல்வேறு பகுதியில் சாலைகளில் தண்ணீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது.

    புதிய பஸ் நிலையம் கிரீன் சிக்னல் பகுதி, சர்வீஸ்ரோடு, ஆரணி ரோடு, நேதாஜி மைதானம், கோட்டை மைதானம், ஆற்காடு ரோடு கோடையிடி குப்புசாமி பள்ளி மைதானம் போன்ற இடங்களில் மழைநீர் குளம் போல் தேங்கியுள்ளது. வேலூரில் 89.6 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.

    அதேபோல் மாவட்டத்தில் ஆற்காடு குடியாத்தம், மேல் ஆலத்தூர், வாலாஜா, அரக்கோணம் காவேரிப்பாக்கம், சோளிங்கர் பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது.

    திருவண்ணாமலை மாவட்டத்தில் செய்யாறு மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இடி மின்னலுடன் மழை கொட்டியது.

    கோடை மழையால் வெயில் தாக்கம் குறைந்து குளிர்ந்த காற்று வீசியது. பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பெரிய கோவிலில் இடி விழுந்ததால் கோவில் கோபுரத்தில் சேதமடைந்தது என அதிகாரிகள் தெரிவித்தனர். #Thanjavur #BigTemple #LIghtning
    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் பெரிய கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. சமீபத்தில் இந்த கோவிலில் திருடு போன ராஜராஜ சோழன் மற்றும் அம்மன் சிலைகள் ஆகியவற்றை மீட்டு மீண்டும் கோவிலில் வைக்கப்பட்டு துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டனர்.
     
    இந்நிலையில், தஞ்சையில் நேற்று மாலை முதல் கனமழை பெய்தது. இதில், பெரிய கோவிலின் இரண்டாவது நுழைவு வாயிலான கேரளாந்தகன் கோபுரத்தின் இடது புறத்தில் இடி தாக்கியது.

    இடி தாக்கியதில் 90 அடி உயரம் உள்ள அந்த கோபுரத்தின் மேல் பகுதியில் இருந்த யாழி சிற்பம் சேதம் அடைந்தது. சேதம் அடைந்த யாழி சிற்பம் கோபுரத்தின் மேலே விழுந்துவிட்டதால் பக்தர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என அதிகாரிகள் தெரிவித்தனர். #Thanjavur #BigTemple #LIghtning
    ×