search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "farmer worry"

    வெயிலின் தாக்கத்தால் நெல்லிக்காய் விளைச்சல் பாதிக்கப்பட்டதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    வடமதுரை:

    திண்டுக்கல் மாவட்டம் விருதலைப்பட்டி, குட்டம், சுக்காம்பட்டி, ரங்கநாதபுரம், கருக்காம் பட்டி, கோடாங்கிபட்டி, சாலையூர் 4 ரோடு, எரியோடு ஆகிய பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் நெல்லிக்காய் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

    மழை இல்லாததாலும் கடுமையான வெயிலின் தாக்கத்தாலும் நெல்லிக்காய் வரத்து குறைந்துள்ளது. இதனால் மார்க்கெட்டில் ரூ.40 முதல் ரூ.60 வரை கிலோவுக்கு விலை உயர்ந்துள்ளது.

    விலை உயர்வு மகிழ்ச்சி அளித்தாலும் மழை குறைந்ததால் ஏக்கருக்கு 200 கிலோ நெல்லிக்காய் எடுத்தாலும் பெரிதாக சேதம் ஏற்பட வில்லை என்பதும் நெல்லிக்காய்கள் வெயிலில் வெம்பி போவதால் சேதம் அடைந்து வருவதாகவும் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    மருத்துவ குணம் கொண்ட பெரிய நெல்லிக்காய்கள் பல்வேறு ஊர்களில் இருந்து விவசாயிகளால் வாங்கி செல்லப்படும்.

    ஆனால் தற்போது நெல்லிக்காய் சாகுபடி செய்த விவசாயிகளுக்கு அதிக நஷ்டம் ஏற்பட்டுள்ளதால் குளிர்பதன கிடங்கி அமைக்கவும், ஒப்பந்த அடிப்படையில் காய்களை வாங்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    தருமபுரியில் தக்காளி வரத்து அதிகரிப்பால் 1 கிலோ ரூ. 9 க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
    தருமபுரி:

    தருமபுரியில் பல பகுதிகளில் தக்காளியை விவசாயிகள் விவசாயம் செய்துள்ளனர். தற்போது மழை காலம் என்பதால் தக்காளி வரத்து அதிகரித்துள்ளது. தருமபுரி நகர் பகுதிகளில் உள்ள சந்தை மற்றும் கடைகளுக்கு பாலக்கோடு, பென்னாகரம், அதகபாடி, காரிமங்கலம், நல்லம்பள்ளி மற்றும் வெளிமாநிலமான ஆந்திராவில் இருந்தும் தக்காளி வருகிறது. எனவே தக்காளியின் வரத்து மிகவும் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக தக்காளியின் விலையில் சரிவு ஏற்பட்டுள்ளது. தக்காளி 1 கிலோ ரூ.9-க்கு விற்பணை செய்யப்படுகிறது.இதனால் விவசாயிகள் மத்தியில் மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

    இது குறித்து விவசாயி ஒருவர் கூறியதாவது:-

    தற்போது மழை நன்றாக பெய்து வருவதால் தக்காளிகளின் வரத்து அதிகரித்துள்ளது. அதனால் விலை மிகவும் குறைந்துள்ளது.  எனவே தக்காளி விவசாயம் செய்யக்கூடிய விவசாயிகளுக்கு தக்காளி விற்பணையில் கிடைக்கக்கூடிய லாபத்தில் குறைவு ஏற்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    எடப்பாடி பகுதியில் நேற்று இடி-மின்னலுடன் கனமழை பெய்தது. பல ஏக்கர் கரும்பு பயிர்கள் சரிந்து நாசமானதால் விவசாயிகள் கவலை அடைந்தனர்.
    எடப்பாடி:

    சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் மேட்டூர், சேலம் கோரி மேடு உள்பட பல பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. 2-வது நாளான நேற்று எடப்பாடி, பூலாம்பட்டி உள்பட பல்வேறு பகுதிகளில் இடி மின்னலுடன் விடிய விடிய கனமழை பெய்தது.

    இந்த மழையால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மழையை தொடர்ந்து குளிர்ந்த காற்று வீசியது. 

    பூலாம்பட்டி பகுதியில் பெய்த கன மழையால் சித்தனூர் பகுதியில் பயிரிடப்பட்டிருந்த பல ஏக்கர் கரும்பு பயிர்கள் சரிந்து நாசமானது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்தனர். எடப்பாடி-பூலாம்பட்டி சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால் இன்று காலையும் வாகனங்கள் ஊர்ந்தபடியே சென்றன.

    எடப்பாடி உழவர் சந்தையின் முகப்பு வாசலில் அதிக அளவில் தண்ணீர் தேங்கியதால் பொதுமக்கள், வாகனங்கள் செல்வதில் கடும் சிரமம் ஏற்பட்டது.
    சாணார்பட்டி பகுதியில் தேங்காய் விலை வீழ்ச்சியடைந்துள்ளதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.

    குள்ளனம்பட்டி:

    திண்டுக்கல் அருகே சாணார்பட்டி, கோபால்பட்டி, செந்துறை, முளையூர், பரளி, மணக்காட்டூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் ஏராளமான ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் தென்னை சாகுபடி செய்து வருகின்றனர்.

    கடந்த 4 வருடங்களாகவே இப்பகுதியில் பருவமழை போதிய அளவு பெய்யவில்லை. இதனால் நிலத்தடி நீர் மட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டு விவசாயிகள் சிரமம் அடைந்து வருகின்றனர். இந்த பகுதி தேங்காய்கள் செழிப்பாக இருப்பதால் பல்வேறு பகுதிகளில் இருந்து வியாபாரிகள் கொள்முதல் செய்கின்றனர்.

    தமிழகத்தின் பிற பகுதிகளுக்கும் கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும் அனுப்பப்பட்டு வருகிறது. தற்போது விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளதால் ஏற்றுமதியும் குறையத் தொடங்கியுள்ளது.

    இது குறித்து மா, புளி தென்னை விவசாய சங்க தலைவர் வேம்பார்பட்டி கண்ணுமுகமது கூறுகையில், இப்பகுதி தேங்காய்களின் தரத்துக்காக வெளியூர்களில் இருந்து அதிக அளவு வியாபாரிகள் வந்து கொள்முதல் செய்தனர்.

    தற்போது வறட்சியின் காரணமாக தென்னை சாகுபடி நிலங்கள் குறைந்து விட்டது. விளைச்சல் குறைவாக இருந்தபோதும் விலையும் கிடைக்காததால் விவசாயிகள் கடும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர். மேலும் தண்ணீர் போதிய அளவு இல்லாததால் தேங்காய்களும் சிறிதாக உள்ளது. வியாபாரிகள் இவற்றை வாங்க தயக்கம் காட்டி வருகின்றனர்.

    எனவே அரசு இப்பகுதி விவசாயிகளுக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்றார்.

    தேங்காய் விளைச்சல் குறைவு மற்றும் விலை வீழ்ச்சியால் ஒட்டன்சத்திரம் மற்றும் தொப்பம்பட்டி பகுதி விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

    சத்திரப்பட்டி:

    திண்டுக்கல் அருகே சத்திரப்பட்டி, விருப்பாட்சி, தா.புதுக்கோட்டை, சிந்தலவாடம்பட்டி, வீரலப்பட்டி, வேலூர்-அன்னப்பட்டி, பெரியகோட்டை, ரெட்டியபட்டி மற்றும் வடகாடு மலைப்பகுதிகள், தொப்பம்பட்டி ஒன்றியத்தில் மஞ்சநாயக்கன்பட்டி, போடுவார்பட்டி, தேவத்தூர், கொத்தயம், 16-புதூர், கள்ளிமந்தையம், அம்மாபட்டி, கரியாம்பட்டி, ஆகிய பகுதிகளில் ஏராளமான தென்னந்தோப்புகள் உள்ளன.

    தற்பொழுது கடுமையான காற்று வீசுவதால் தேங்காய் விளைச்சல் குறைந்துள்ளது. தேங்காய் விளைச்சல் குறைவு மற்றும் விலை வீழ்ச்சியால் ஒட்டன்சத்திரம் மற்றும் தொப்பம்பட்டி பகுதி விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

    கடந்த மாதம் காங்கேயம் தேங்காய் மார்க்கெட்டில் ஒரு டன் தேங்காய் ரூ.31 ஆயிரம் முதல் ரூ.32 ஆயிரம் வரை மொத்த வியாபாரிகளால் கொள்முதல் செய்யப்பட்டது. தற்பொழுது விளைச்சல் குறைந்த போதும் ஒரு டன் தேங்காய் ரூ.21 முதல் ரூ.22 ஆயிரம் வரை மொத்த வியாபாரிகளால் கொள்முதல் செய்யப்படுவதால் தென்னை விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    ஒட்டன்சத்திரம், தொப்பம்பட்டி ஒன்றியங்களிலிருந்து தினமும் ஏராளமான டன் தேங்காய்கள் காங்கேயம், வெள்ளைகோவில் மும்பை உள்பட தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களுக்கு அனுப்பப்படுகிறது.

    ஒட்டன்சத்திரம் பகுதியில் மாங்காய் வரத்து அதிகரிப்பால் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.

    ஒட்டன்சத்திரம்:

    ஒட்டன்சத்திரம் அருகில் உள்ள அம்பிளிக்கை, விருப்பாட்சி, கள்ளி மந்தையம், இடையகோட்டை மற்றும் வடகாடு மலைப்பகுதிகள் ஆகிய பகுதிகளில் ஏராளமான விவசாயிகள் கல்லாமை, நீலா, செந்தூரம் உள்ளிட்ட பல்வேறு மா ரக மரங்களை நடவு செய்துள்ளனர்.

    மா சீசன் மே மாதம் தொடங்கி ஜூலை வரை இருக்கும். இந்தாண்டு கோடை மழை ஓரளவு பெய்ததால் மா விளைச்சல் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக விலை வீழ்ச்சியடைந்துள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

    ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட்டில் ஒரு கிலோ கல்லாமை ரக மாங்காய் ரூ.6-க்கும், செந்தூரம் ரக மாங்காய் ரூ.10-க்கும் மொத்த வியாபாரிகளால் கொள்முதல் செய்யப்படுகிறது.

    இங்கிருந்து கேரளா, தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களுக்கு தினமும் ஏராளமான டன் மாங்காய் ரகங்கள் அனுப்பப்படுகிறது.

    ×