search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சத்திரப்பட்டி பகுதியில் தேங்காய் விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கவலை
    X

    சத்திரப்பட்டி பகுதியில் தேங்காய் விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கவலை

    தேங்காய் விளைச்சல் குறைவு மற்றும் விலை வீழ்ச்சியால் ஒட்டன்சத்திரம் மற்றும் தொப்பம்பட்டி பகுதி விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

    சத்திரப்பட்டி:

    திண்டுக்கல் அருகே சத்திரப்பட்டி, விருப்பாட்சி, தா.புதுக்கோட்டை, சிந்தலவாடம்பட்டி, வீரலப்பட்டி, வேலூர்-அன்னப்பட்டி, பெரியகோட்டை, ரெட்டியபட்டி மற்றும் வடகாடு மலைப்பகுதிகள், தொப்பம்பட்டி ஒன்றியத்தில் மஞ்சநாயக்கன்பட்டி, போடுவார்பட்டி, தேவத்தூர், கொத்தயம், 16-புதூர், கள்ளிமந்தையம், அம்மாபட்டி, கரியாம்பட்டி, ஆகிய பகுதிகளில் ஏராளமான தென்னந்தோப்புகள் உள்ளன.

    தற்பொழுது கடுமையான காற்று வீசுவதால் தேங்காய் விளைச்சல் குறைந்துள்ளது. தேங்காய் விளைச்சல் குறைவு மற்றும் விலை வீழ்ச்சியால் ஒட்டன்சத்திரம் மற்றும் தொப்பம்பட்டி பகுதி விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

    கடந்த மாதம் காங்கேயம் தேங்காய் மார்க்கெட்டில் ஒரு டன் தேங்காய் ரூ.31 ஆயிரம் முதல் ரூ.32 ஆயிரம் வரை மொத்த வியாபாரிகளால் கொள்முதல் செய்யப்பட்டது. தற்பொழுது விளைச்சல் குறைந்த போதும் ஒரு டன் தேங்காய் ரூ.21 முதல் ரூ.22 ஆயிரம் வரை மொத்த வியாபாரிகளால் கொள்முதல் செய்யப்படுவதால் தென்னை விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    ஒட்டன்சத்திரம், தொப்பம்பட்டி ஒன்றியங்களிலிருந்து தினமும் ஏராளமான டன் தேங்காய்கள் காங்கேயம், வெள்ளைகோவில் மும்பை உள்பட தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களுக்கு அனுப்பப்படுகிறது.

    Next Story
    ×