search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மணமகள்"

    • போதையில் இருந்த மணமகன் திருமணத்தை நடத்துவதற்காக வந்திருந்த பாதிரியாரிடமும், மணமகளின் உறவினர்களிடம் தகராறு செய்தார்.
    • இரு வீட்டாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இது குறித்து அங்கிருந்த சிலர் போலீசுக்குத் தகவல் தெரிவித்தனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டம் கோழஞ்சேரி அருகே தடியூர் பகுதியை சேர்ந்த ஒரு வாலிபர் துபாயில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் ஒரு இளம்பெண்ணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இவர்களது திருமணம் அங்குள்ள ஒரு தேவாலயத்தில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    திருமணத்தன்று காரில் இருந்து இறங்கிய மணமகன் மதுபோதையில் தள்ளாடியபடி மணமேடை நோக்கி நடந்து வந்து கொண்டிருந்தார்.

    இதை பார்த்த மணப்பெண் உள்பட அனைவரும் கடும் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் போதையில் இருந்த மணமகன் திருமணத்தை நடத்துவதற்காக வந்திருந்த பாதிரியாரிடமும், மணமகளின் உறவினர்களிடம் தகராறு செய்தார்.

    இதனை நேரில் பார்த்து கொண்டிருந்த மணமகள் அதிர்ச்சியடைந்தார். ஒரு கட்டத்தில் பொறுமையை இழந்த மணமகள் 'தனக்கு இந்த திருமணமே வேண்டாம்' என்று கூறி அங்கிருந்து புறப்பட்டு சென்றார். இதனால் திருமணம் நின்றது.

    இதுதொடர்பாக இரு வீட்டாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இது குறித்து அங்கிருந்த சிலர் போலீசுக்குத் தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து இரு வீட்டாரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது மணமகளின் குடும்பத்தினர், தங்களுக்கு இந்தத் திருமணத்தில் விருப்பமில்லை என்றும் திருமணத்துக்காக பெரும் தொகை செலவு செய்ததால் மணமகனின் உறவினர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும். இல்லையெனில் திருமணத்துக்காக செலவு செய்த தொகையை நஷ்டஈடாக தரவேண்டும் என்றனர்.

    இதை தொடர்ந்து நஷ்ட ஈடாக ரூ.6 லட்சம் கொடுக்க மணமகன் வீட்டார் ஒப்புக்கொண்டனர். இதையடுத்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் திருமணத்துக்காக தயார் செய்திருந்த உணவு அனைத்தும் வீணானது.

    இதற்கிடையே மதுபோதையில் ரகளை செய்ததாக மணமகன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • நேற்று காலையில் மணமகள் கழுத்தில் மணமகன் தாலி கட்டினார்.
    • மணமகளிடம், அவரது பெற்றோர் சமாதானம் பேசினர்.

    போளூர்:

    போளூரில் உள்ள ஒரு வங்கியில் வேலை செய்யும் வாலிபருக்கும், போளூரை அடுத்த ஒரு கிராமத்தில் வசிக்கும் பட்டதாரி இளம் பெண்ணுக்கும் பெரியோர்களால் நிச்சயம் செய்யப்பட்டு நேற்று காலை போளூரில் உள்ள ஒரு கோவிலில் திருமணம் நடைபெற்றது.

    முன்னதாக நேற்று முன்தினம் இரவு மணப்பெண் அழைப்பும் நடந்தது. இந்த நிலையில் நேற்று காலையில் மணமகள் கழுத்தில் மணமகன் தாலி கட்டினார். அடுத்த வினாடியே மணமகள், எனக்கு மணமகனை பிடிக்கவில்லை என்று தாலியை கழற்றி வீசினாா். இதனால் திருமணத்திற்கு வந்தவர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் போளூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயபிரகாஷ் மற்றும் போலீசார் அங்கு சென்று மணமகளிடம் விசாரித்தனர்.

    அப்போது அவர் எனக்கு மணமகனை பிடிக்கவில்லை என்று கூச்சலிட்டவாறு திரும்ப திரும்ப விடாப்பிடியாக கூறினார். அதற்கு, மணமகனை பிடிக்கவில்லை என்றால் முதலிலேயே சொல்லி திருமணத்தை தடுத்து நிறுத்த வேண்டியது தானே. தாலி கட்டிய பிறகு மணமகனை பிடிக்கவில்லை என்றால் என்ன என்று போலீசார் கேட்டனர். அதற்கு மணமகள் வாயை திறக்காமல் மவுனமாக இருந்தார். பின்னர் மணமகளிடம், அவரது பெற்றோர் சமாதானம் பேசினர். ஆனால் அதற்கு அவர் சம்மதிக்கவில்லை. அதைத் தொடர்ந்து மணமகளையும், பெண் வீட்டாரையும் எச்சரித்து போலீசார் அங்கிருந்து அனுப்பினர்.

    பின்னர் உறவினர் ஒருவரின் பெண்ணுடன் மணமகனுக்கு திருமணம் நடைபெற்றது.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • மணமகனின் நண்பர்கள் மேடைக்கு கீழே நாற்காலியில் அமர்ந்தவாறு சில திட்டங்களை தீட்டுவது போன்று காட்சி உள்ளது.
    • சிறிது நேரத்தில் மணமேடைக்கு சென்று மாப்பிள்ளைக்கு மதுபானம் கலந்த குளிர்பானத்தை கொடுக்கிறார்கள்

    திருமணத்தின் போது மணமகனுக்கு அவரது நண்பர்கள் செய்யும் வேடிக்கையான செயல்கள் சமூக வலைதளங்களில் வைரலாவது உண்டு. அந்த வகையில் தற்போது வேகமாக பரவும் வீடியோ ஒன்றில் மணமகனுக்கு அவரது நண்பர்கள் செய்த செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    அதில், மணமக்கள் மேடையில் இருப்பதையும், விருந்தினர்களின் வாழ்த்துக்களை ஏற்றுக் கொள்வதையும் காண முடிகிறது. அப்போது மணமகனின் நண்பர்கள் மேடைக்கு கீழே நாற்காலியில் அமர்ந்தவாறு சில திட்டங்களை தீட்டுவது போன்று காட்சி உள்ளது. பின்னர் அவர்கள் ஒரு குளிர்பானத்தில் மது பானத்தை கலக்கிறார்கள்.

    சிறிது நேரத்தில் மணமேடைக்கு சென்று மாப்பிள்ளைக்கு மதுபானம் கலந்த குளிர்பானத்தை கொடுக்கிறார்கள். அதை குடித்த மணமகன் சிரிக்க தொடங்குகிறார். இதை பார்த்த மணமகளும் விஷயத்தை புரிந்து கொண்டு சிரிப்பது போன்று காட்சிகள் உள்ளன.

    இந்த வீடியோ வேடிக்கையாக இருந்தாலும், சமூக வலைதளங்களில் ஏராளமான கமெண்டுகளை பெற்று வருகிறது. 26 லட்சத்திற்கும் அதிகமான லைக்குகளை குவித்துள்ளது. இப்படிப்பட்ட நண்பர்களிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று ஒரு பயனரும், மாப்பிள்ளையின் ரியாக்ஷன் வேறு லெவல் என ஒருவரும் பதிவிட்டுள்ளனர்.

    • இரண்டு ஆண்டுகள் காதலித்து வந்துள்ளதால் தைரியமாக மணப்பெண் காத்திருந்தார்
    • மணமகன் திருமண ஆடை அணியாமல் தாலி கட்டினார்

    உத்தர பிரதேச மாநிலம் பெரேலி பகுதியில் வசித்து வந்த இருவருக்கு திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டது. இருவரும் சுமார் இரண்டரை ஆண்டுகள் பழகி வந்தனர். இதனால் இருவரும் திருமணம் செய்ய முடிவு செய்தனர். இந்த நிலையில் திடீரென திருமண நாள் அன்று மணமகன் திருமணம் நடக்கும் இடத்தில் இருந்து ஓடிவிட்டார்.

    இதனால், மணமகள் வீட்டார் அதிர்ச்சி அடைந்தனர். ஆனால், இரண்டரை ஆண்டுகள் காதலித்து திருமணம் செய்ய இருந்த மணமகள் கவலைப்படாமல் மணமகனுக்காக காத்திருந்தார்.

    நேரம் செல்ல செல்ல அவருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் போன் செய்து, எங்கு இருக்கிறார்?, திருமணத்திற்கு இன்னும் இரண்டு மணி நேரம் இருக்கும் நிலையில் எங்கு சென்றாய்? என்று கேட்டுள்ளார்.

    திருமணத்திற்கு எனது தாயாரை அழைத்து வர சென்றுள்ளேன் என மணமகன் சமாளித்துள்ளார். ஆனால், மணமகள் அதை நம்பாமல், மணமகனை உறவினர்களுடன் சேர்ந்து தேட ஆரம்பித்துள்ளார். அப்போது பெரேலி நகரின் புறநகரில் உள்ள ஒரு பஸ் நிலையில் பேருந்தில் உட்கார்ந்து இருந்தது கண்டுபிடித்தனர். சுமார் 20 கி.மீ. தூரத்தில் இருக்கும் அந்த பேருந்து நிலையத்தில் இருந்து மணமகனை அழைத்து வந்தனர்.

    பின்னர், ஒரு கோவில் முன் வைத்து திருமணம் நடைபெற்றது. மணமகள் திருமண உடையில் இருந்தாலும், மணமகன் திருமண ஆடை அணியவில்லை.

    திருமணத்திற்கு வந்த நபர்கள், மணமகள் மனம் தளாராமல் ஓடிய மணமகனை பிடித்து திருமணம் செய்த தைரியத்தை வெகுவாக பாராட்டிச் சென்றனர்.

    மணமகனுக்கு சளி பிடித்துள்ளதாகவும், அதனால் திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

    • திருமணத்தின் போது கோவில்களில் சாமி தரிசனம் செய்துவிட்டு மணமகன் மற்றும் மணமகள் அழைப்பு நடைபெறும்.
    • ஆந்திர திருமண மண்டபத்தில் இருதரப்பினர் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது.

    திருப்பதி:

    திருமணத்தின் போது கோவில்களில் சாமி தரிசனம் செய்துவிட்டு மணமகன் மற்றும் மணமகள் அழைப்பு நடைபெறும்.

    ஆனால் தற்போது சினிமா குத்து பாடல்களுக்கு நடனமாடியபடி மணமகன் மற்றும் மணமகளை அழைத்து வருகின்றனர்.

    வரவேற்பு நிகழ்ச்சிகளில் மணமகன் மணப்பெண்களை நடனமாட வைத்து வீடியோ எடுக்கின்றனர்.

    இது போன்ற ஒரு சம்பவத்தால் ஆந்திர திருமண மண்டபத்தில் இருதரப்பினர் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது.

    ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் ராமச்சந்திரபுரத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியம். இவருக்கும் தல்லாகுடி அடுத்த கஜ்ரம் பகுதியை சேர்ந்த பூஜிதாவுக்கும் திருமணம் நேற்று முன்தினம் நடந்தது.

    இரவு மணமக்களின் உறவினர்கள் நண்பர்கள் ஏராளமானோர் திருமண மண்டபத்தில் குவிந்து இருந்தனர்.

    பிரம்மாண்டமாக திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. திருமண வரவேற்பின் போது பாட்டு கச்சேரியுடன் ஆடல் பாடல் நிகழ்ச்சியுடன் திருமண மண்டபம் களை கட்டியது.

    நேற்று காலை மணமகன் மணமகள் கழுத்தில் தாலி கட்டினார். விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

    அப்போது மணமகன் வீட்டார் மணப்பெண்ணை சினிமா பாடலுக்கு ஏற்றவாறு நடனம் ஆட வேண்டும் என தெரிவித்தனர். மணப்பெண் தனக்கு நடனமாட தெரியாது என கூறினார்.

    மணமகள் வீட்டாரும் மணமகளுக்கு நடனமாட தெரியாது என்றனர்.

    இதனால் மணமகன் மணமகள் வீட்டாருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. மணமகன் வீட்டார் மணமகள் மற்றும் அவரது உறவினர்களை அங்கிருந்த சேர்களை தூக்கி வீசி எரிந்து தாக்கினர். இதில் மணமகளின் உறவினர் பெண் ஒருவருக்கு தலை மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. ஒருவருக்கு கை முறிந்தது.

    மேலும் 3 பேர் காயமடைந்தனர். கொடு கொண்ட போலீசார் சம்பவம் இடத்திற்கு வந்து காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    இரு தரப்பை சேர்ந்தவர்களும் ஒருவர் மீது ஒருவர் புகார் கொடுக்க போலீஸ் நிலையம் முன்பு குவிந்தனர்.

    இதனால் அங்கும் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் இருதரப்பினரிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வீடியோவில் மணமகளின் அருகே மணமகன் அமைதியாக ஒன்றும் தெரியாதது போல் அமர்ந்திருக்கிறார்.
    • மணமகள் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் அருகே உள்ள சேலம்பூர் பகுதியை சேர்ந்த மணமகள் ஒருவர் மணமேடையில் அமர்ந்தவாறு வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுடும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன. அந்த வீடியோவில் மணமகளின் அருகே மணமகன் அமைதியாக ஒன்றும் தெரியாதது போல் அமர்ந்திருக்கிறார். ஆனால் மணமகள் தனது கைத்துப்பாக்கியை எடுத்து வானத்தை நோக்கி 4 முறை சுடுகிறார்.

    இந்த சம்பவம் கடந்த 7-ந்தேதி நடந்துள்ளது. துப்பாக்கியால் சுட்ட பிறகு அந்த துப்பாக்கியை மணமகள் தனது அருகில் இருப்பவரிடம் கொடுக்கிறார். இந்த வீடியோக்கள் வைரலானதை தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் இது தொடர்பாக மணமகள் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சமூக அமைப்புகள் மற்றும் தனியார் நிறுவனங்கள் கேரள சாலைகளின் அவலம் பற்றி பல்வேறு வீடியோக்கள் வெளியிட்டு அரசின் கவனத்தை ஈர்க்க முயற்சி செய்தன.
    • சமீபத்தில் வெளியான ஒரு பெண்ணின் திருமண போட்டோ ஷூட் வீடியோ இப்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் உள்ள பெரும்பாலான சாலைகள் குண்டும், குழியுமாக உள்ளது.

    கேரளாவில் பாதயாத்திரை மேற்கொண்டுள்ள ராகுல் காந்தியும், கேரளாவில் உள்ள சாலைகள் மிகவும் மோசமாக இருப்பதாக கூறியிருந்தார்.

    இது தொடர்பாக பல்வேறு சமூக அமைப்புகளும், அரசியல் கட்சிகளும் சாலையை சீரமைக்க கோரி போராட்டங்கள் நடத்தின.

    கேரளாவில் பெய்து வரும் மழை காரணமாகவே சாலைகள் மோசமாக இருப்பதாக அரசு தெரிவித்து இருந்தது. ஆனால் சாலைகளை சீரமைக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என எதிர்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன.

    சமூக அமைப்புகள் மற்றும் தனியார் நிறுவனங்கள் கேரள சாலைகளின் அவலம் பற்றி பல்வேறு வீடியோக்கள் வெளியிட்டு அரசின் கவனத்தை ஈர்க்க முயற்சி செய்தன.

    என்றாலும் சமீபத்தில் வெளியான ஒரு பெண்ணின் திருமண போட்டோ ஷூட் வீடியோ இப்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

    அந்த வீடியோ ஒரு பெண்ணின் திருமண போட்டோ ஷூட் வீடியோவாகும். பொத்தலான சாலையில் திருமண போட்டோ ஷூட் என்ற பெயரில் வெளியான அந்த வீடியோவில் ஒரு மணப்பெண், குண்டும், குழியுமான சாலையில் அழகாக நடந்து வருகிறார்.

    சாலையில் உள்ள பள்ளங்களில் மழை நீரும், சேறும் நிரம்பி இருக்கிறது. அந்த வழியாக செல்லும் யாரும் இதனை கண்டுகொள்ளவில்லை. இதுதான் கேரள சாலைகளின் நிலை என்று அந்த வீடியோ விளக்குகிறது.

    இந்த வீடியோ சமூக வலைதளத்தில் கடந்த 11-ந்தேதி பகிரப்பட்டது. இது வெளியான சில மணி நேரத்திலேயே இணையத்தில் வைரலானது. இதுவரை இந்த வீடியோவை சுமார் 43 லட்சம் பேர் பார்த்துள்ளனர்.

    3 லட்சத்து 70 ஆயிரம் பேர் லைக் கொடுத்துள்ளனர். இந்த வீடியோ மூலம் கேரள சாலைகளின் அவல நிலை சந்தி சிரிப்பதாக பலரும் கருத்து பதிவிட்டு வருகிறார்கள்.

    ×