விபத்தில் சிக்கிய மணமகள்: மருத்துவமனைக்கே சென்று தாலி கட்டிய மணமகன்

மணமகள் ஆவணி காரை ஓட்டிச் சென்றார்.கார் மரத்தின்மீது மோதி விபத்தில் சிக்கியது.
விபத்தில் சிக்கிய மணமகள்: மருத்துவமனைக்கே சென்று தாலி கட்டிய மணமகன்
Published on

திருவனந்தபுரம்:

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம் தும்போலி அருகே முதலசேரி பகுதியைச் சேர்ந்தவர் ஜெகதீஷ். இவருடைய மகள் ஆவணி (25).

தனியார் பள்ளி ஆசிரியையான இவருக்கும், தும்போலி பகுதியைச் சேர்ந்த என்ஜினீயரிங் கல்லூரி பேராசிரியர் ஷாரோன் (32) என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது. இவர்களது திருமணம் நேற்று ஆலப்புழாவில் உள்ள ஒரு மண்டபத்தில் நடைபெற இருந்தது.

மணமகள் ஆவணி ஒப்பனை செய்வதற்காக அவரது அத்தையுடன் அருகே உள்ள அழகு நிலையத்துக்கு காரில் சென்றார்.

காரை ஆவணி ஓட்டிச் சென்றார். அங்கு செல்லும் வழியில் கார் மரத்தின்மீது மோதி விபத்தில் சிக்கியது. இதில் ஆவணி மற்றும் அவரது அத்தையும் காயமடைந்தனர்.

விபத்தில் படுகாயம் அடைந்த 2 பேரையும் எர்ணாகுளம் அருகே உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர்.

இந்நிலையில், மருத்துவமனைக்குச் சென்ற மணமகன் ஷாரோன் அங்கு மணமகள் ஆவணிக்கு தாலி கட்டினார்.

ஆனாலும், திருமணத்தில் கலந்துகொள்வதற்காக மண்டபத்துக்கு வந்தவர்களுக்கு அங்கிருந்தவர்கள் விருந்து உபசரித்தனர்.

விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மணமகளுக்கு மணமகன் தாலி கட்டிய சம்பவம் அப்பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com