search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kings XI Punjab"

    ஐ.பி.எல். கிரிக்கெட்டில் கொல்கத்தா அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப்பை வீழ்த்தி 2-வது வெற்றியை பெற்றது.#IPL2019 #KKRvKXIP
    கொல்கத்தா:

    8 அணிகள் இடையிலான 12-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு கொல்கத்தா ஈடன்கார்டனில் அரங்கேறிய 6-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, கிங்ஸ் லெவன் பஞ்சாப்புடன் மோதியது. பஞ்சாப் அணியில் 4 மாற்றமாக நிகோலஸ் பூரன், சாம் குர்ரன், அங்கித் ராஜ்பூத், முஜீப் ரகுமான் நீக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக டேவிட் மில்லர், ஹர்டஸ் வில்ஜோன், வருண் சக்ரவர்த்தி, ஆண்ட்ரூ டை சேர்க்கப்பட்டனர். ‘டாஸ்’ ஜெயித்த பஞ்சாப் கேப்டன் அஸ்வின் முதலில் கொல்கத்தாவை பேட் செய்ய பணித்தார்.

    இதன்படி கொல்கத்தாவின் இன்னிங்சை சுனில் நரினும், கிறிஸ் லின்னும் அதிரடியாக ஆரம்பித்தனர். புதுமுக வீரரான தமிழகத்தை சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்ரவர்த்தியின் முதல் ஓவரில் சுனில் நரின் 3 சிக்சர், ஒரு பவுண்டரி உள்பட 24 ரன்களை திரட்டினார். அந்த ஓவரில் கிறிஸ் லின்னும் ஒரு ரன் எடுத்தார். இதன் மூலம் ரூ.8.4 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்ட வருண் சக்ரவர்த்தி, ஐ.பி.எல்.-ல் அறிமுக ஓவரிலேயே அதிக ரன்களை வாரி வழங்கிய (25 ரன்) பவுலர் என்ற மோசமான சாதனைக்கு சொந்தக்காரர் ஆனார். கிறிஸ் லின் 10 ரன்னிலும், சுனில் நரின் 24 ரன்னிலும் வெளியேறினர்.



    இதன் பின்னர் ராபின் உத்தப்பாவும், நிதிஷ் ராணாவும் இணைந்து அணியின் ஸ்கோரை சீரான வேகத்தில் உயர்த்தினர். 10-வது ஓவருக்கு பிறகு ராணா அடுத்தடுத்து சில சிக்சர்களை பறக்க விட்டார். இதனால் ரன்ரேட் 10 ரன்களுக்கு மேலாக உயர்ந்தது. தொடர்ந்து 2-வது அரைசதத்தை கடந்த நிதிஷ் ராணா 63 ரன்களில் (34 பந்து, 2 பவுண்டரி, 7 சிக்சர்) கேட்ச் ஆனார்.

    அதைத் தொடர்ந்து வந்த ‘அதிரடி புயல்’ ஆந்த்ரே ரஸ்செல் 3 ரன்னில் முகமது ஷமியின் பந்து வீச்சில் கிளன் போல்டு ஆனார். அந்த சமயத்தில் குறிப்பிட்ட உள்வட்டத்திற்குள் 4 பீல்டர்கள் நிற்க வேண்டியது கட்டாயமாகும். ஆனால் 3 பீல்டர் மட்டுமே நின்றதால் அந்த பந்து நோ-பால் என்று அறிவிக்கப்பட்டது. இதனால் அதிர்ஷ்டவசமாக மறுவாழ்வு பெற்ற ரஸ்செல், அதன் பிறகு பஞ்சாப் பந்து வீச்சை பஞ்சராக்கினார். குறிப்பாக முகமது ஷமியின் ஓவரில் ‘ஹாட்ரிக்’ சிக்சர்களை விரட்டியடித்து ரசிகர்களை குதூகலப்படுத்தினார். ஸ்கோரும் ராக்கெட் வேகத்தில் எகிறியதுடன் 200 ரன்களை தாண்டியது. ஆந்த்ரே ரஸ்செல் 48 ரன்களில் (17 பந்து, 3 பவுண்டரி, 5 சிக்சர்) கேட்ச் ஆனார். மறுமுனையில் நேர்த்தியாக ஆடி 24-வது அரைசதத்தை எட்டிய ராபின் உத்தப்பா 67 ரன்களுடன் (50 பந்து, 6 பவுண்டரி, 2 சிக்சர்) கடைசி வரை களத்தில் இருந்தார்.
     


    20 ஓவர் முடிவில் கொல்கத்தா அணி 4 விக்கெட் இழப்புக்கு 218 ரன்கள் குவித்தது. ஈடன்கார்டனில் ஒரு அணியின் அதிகபட்ச ஸ்கோர் இதுதான். கடைசி 4 ஓவர்களில் மட்டும் அந்த அணி 65 ரன்களை சேகரித்தது. பஞ்சாப் தரப்பில் முகமது ஷமி, வருண் சக்ரவர்த்தி, வில்ஜோன், ஆண்ட்ரூ டை தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

    பின்னர் இமாலய இலக்கை நோக்கி ஆடிய பஞ்சாப் அணிக்கு தொடக்கம் திருப்திகரமாக அமையவில்லை. லோகேஷ் ராகுல் ஒரு ரன்னிலும், கிறிஸ் கெய்ல் 20 ரன்னிலும் (2 பவுண்டரி, 2 சிக்சர்), சர்ப்ராஸ் கான் 13 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். இதனால் அந்த அணி 60 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை பறிகொடுத்து தடுமாற்றத்திற்கு உள்ளானது.

    அடுத்து வந்த மயங்க் அகர்வால் (58 ரன்), டேவிட் மில்லர் (59 ரன், நாட்-அவுட்), மன்தீப் சிங் (33 ரன், நாட்-அவுட்) உள்ளிட்டோர் கடுமையாக போராடிய போதிலும் அது அந்த அணியின் தோல்வியின் வித்தியாசத்தை குறைக்க மட்டுமே உதவியது.

    20 ஓவர்களில் பஞ்சாப் அணியால் 4 விக்கெட் இழப்புக்கு 190 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதன் மூலம் கொல்கத்தா அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த அணிக்கு இது 2-வது வெற்றியாகும்.

    ஏற்கனவே தொடக்க ஆட்டத்தில் ஐதராபாத்தை தோற்கடித்து இருந்தது. அதே சமயம் 2-வது லீக்கில் ஆடிய பஞ்சாப் அணிக்கு இது முதலாவது தோல்வியாகும்.
    தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியும் அஸ்வின் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் இன்று மோதுகின்றன. #IPL2019
    கொல்கத்தா:

    ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் 6-வது ‘லீக்’ ஆட்டம் இன்று இரவு 8 மணிக்கு கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் நடக்கிறது.

    இதில் தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட்ரைடர்ஸ்- அஸ்வின் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதுகின்றன.

    இரு அணிகளும் தனது முதல் ஆட்டத்தில் வெற்றி பெற்று இருந்தன. இதனால் 2-வது வெற்றியை பெற போவது யார்? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

    கொல்கத்தா அணி தொடக்க ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத்தையும், கிங்ஸ் லெவன் அணி முதல் ஆட்டத்தில் 14 ரன்னில் ராஜஸ்தான் ராயல்சையும் வீழ்த்தியது.

    கொல்கத்தா- பஞ்சாப் அணிகளில் உள்ள வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் தொடக்க ஆட்டத்தில் அதிரடியை வெளிப்படுத்தினார்கள்.

    கொல்கத்தா அணியில் உள்ள ரசல் ஐதராபாத் அணிக்கு எதிராக 19 பந்தில் 49 ரன் எடுத்தார். மேலும் அந்த அணியில் கிறிஸ்லின், உத்தப்பா, நிதிஷ் ரானா, கேப்டன் தினேஷ் கார்த்திக், சுனில் நரீன் போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர்.

    பஞ்சாப் அணியில் உள்ள கிறிஸ் கெய்ல் ராஜஸ்தானுக்கு எதிராக 47 பந்தில் 79 ரன் எடுத்தார். ராகுல், சர்பிராஸ் போன்ற சிறந்த வீரர்கள் அந்த அணியில் உள்ளனர்.

    இன்றைய ஆட்டத்தில் அதிரடியை வெளிப்படுத்த போவது ரசலா? கெய்லா? என்று எதிர்பார்க்கப்படுகிறது. #IPL2019
    ரகானே தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் அஸ்வின் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் இன்று மோதுகின்றன. #IPL2019 #RajasthanRoyals #KingsXiPunjab
    ஜெய்ப்பூர்:

    12-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி சென்னையில் கடந்த 23-ந்தேதி தொடங்கியது.

    தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரை வீழ்த்தியது.

    நேற்று நடந்த ஆட்டத்தில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் 6 விக்கெட் வித்தியாசத்தில் சன்ரைஸ் ஐதராபாத்தையும், டெல்லி கேப்பிட்டல்ஸ் 37 ரன்னில் மும்பை இந்தியன்சையும் தோற்கடித்தன.

    4-வது ‘லீக்‘ ஆட்டம் ஜெய்ப்பூரில் இன்று இரவு 8 மணிக்கு நடக்கிறது. இதில் ரகானே தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ்- அஸ்வின் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதுகின்றன.

    எந்த அணி வெற்றியுடன் கணக்கை தொடங்க போகிறது என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

    பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஒரு ஆண்டு தடைக்கு பிறகு ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவன் சுமித் விளையாடுகிறார். அவர் தனது சிறப்பான ஆட்டத்தால் ராஜஸ்தானை முன்னேற்றம் அடைய செய்வாரா? என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது.

    கேப்டன் ரகானே, ஆர்ச்சர், பட்லர் போன்ற சிறந்த வீரர்களும் அந்த அணியில் உள்ளனர். பஞ்சாப் அணிக்கு கிறிஸ் கெய்ல், லோகேஷ் ராகுல், ஹென்ரிகலை, டேவிட் மில்லர் போன்ற சிறந்த வீரர்கள் இருக்கிறார்கள்.

    இரு அணிகளும் 17 முறை மோதியுள்ளன. இதில் ராஜஸ்தான் 10 ஆட்டத்திலும், பஞ்சாப் 7 போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளன. #IPL2019 #RajasthanRoyals #KingsXiPunjab
    கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி பந்துவீச்சு பயிற்சியாளரான வெங்கடேஷ் பிரசாத்தை பதவியில் இருந்து அதிரடியாக நீக்கியுள்ளது. #IPL2019 #KXIP
    ஐபிஎல் 2018 சீசனில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி ஆரம்பக் கட்டத்தில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. முதல் 7 ஆட்டத்தில் ஐந்தில் வெற்றி பெற்றது. அதன்பின் தொடர் தோல்வியால் பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேற முடியாமல் ஏமாற்றம் அடைந்தது.

    இதனால் 2019 சீசனில் சிறப்பாக விளையாடும் வகையில் பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறது. அந்த அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த பிராட் ஹாட்ச்-ஐ நீக்கிவிட்டு நியூசிலாந்து தேசிய அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளரான மைக் ஹெசனை பயிற்சியாளரான நியமித்தது.

    ஆலோசகராக இருந்த சேவாக் தனது பதவியில் இருந்து விலகினார். இந்நிலையில் தற்போது பந்துவீச்சு பயிற்சியாளரான வெங்கடேஷ் பிரசாத்தை அதிரடியாக நீக்கிவிட்டு ஸ்ரீதரன் ஸ்ரீராமை பயிற்சியாளராக நியமித்துள்ளது.

    ஸ்ரீராம் இந்திய அணிக்காக 8 ஒருநாள் போட்டியில் விளையாடியுள்ளார். 133 முதல்தர போட்டிகளில் விளையாடியுள்ளார்.
    ஐபிஎல் டி20 லீக்கில் சூதாட்டத்தை சட்டப்பூர்வமாக்க வேண்டும் என்று கிங்ஸ் லெவன் பஞ்சாப் உரிமையாளர் ப்ரீத்தி ஜிந்தா விருப்பம் தெரிவித்துள்ளார். #IPL #KXIP
    இந்திய கிரிக்கெட் வாரியத்தால் தொடங்கப்பட்ட ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் உலகளவில் மிகப்பெரிய வளர்ச்சியை பெற்றுள்ளது. வளர்ச்சி பெற்ற ஐபிஎல் சூதாட்டம் என்ற வார்த்தையால் கடும் போராட்டத்தை சந்திக்க வேண்டியுள்ளது.

    ஐபிஎல் மேட்ச் பிக்சிங் விவகாரத்தில் ஸ்ரீசந்த் உள்பட சில வீரர்கள் தங்கள் கேரியரை இழந்தனர். இந்தியாவில் சூதாட்டம் சட்டப்பூர்வம் ஆக்கப்படாததால் மறைமுகமாக நடைபெற்று வருகிறது. இதில் சில வீரர்கள் தவாறாக வழிநடத்தப்பட வாய்ப்பு உள்ளதால், ஊழல் கண்காணிப்பு பிரிவு ஐபிஎல் தொடர் நடைபெறும்போது மிகவும் விழிப்போடு கண்காணித்து வருகிறது.

    லோதா கமிட்டி பரிந்துரையில் கூட சூதாட்டத்தை சட்டப்பூர்வமாக்கலாம் என்று கூறியிருந்தது. அதை நாடாளுமன்றம்தான் முடிவு செய்ய வேண்டும் என்ற உச்சநீதிமன்றம் கூறிவிட்டது.

    இந்நிலையில் சூதாட்டத்தை சட்டப்பூர்வமாக்க வேண்டும் என்று ஐபிஎல் தொடரில் விளையாடும் அணிகளில் ஒன்றான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் உரிமையாளர்களில் ஒருவரான ப்ரீத்தி ஜிந்தா விருப்பம் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து ப்ரீத்தி ஜிந்தா கூறுகையில் ‘‘அரசு சூதாட்டத்தை சட்டப்பூர்வமாக்கினால் அது சிறப்பானதாக இருக்கும் என்று நான் உணர்கிறேன். ஏனென்றால், வருமானத்திற்கு சிறந்ததாக இருக்கும். இரண்டாவது, அப்படி செய்தால் சூதாட்டம் போன்றவற்றை நிறுத்த முடியும்.



    ஏனென்றால், உங்களால் எத்தனை மக்களை நிறுத்த முடியும்?. அடிக்கடி உண்மை கண்டறியும் சோதனையை ரேண்டம் முறையில் நடத்த வேண்டும் என்று நான் சொல்கிறேன். இதை பிசிசிஐ ஒரு கொள்கையாக எடுத்துக் கொள்ள வேண்டும். இது மிகவும் அற்புதமானது.

    நான் பிடிபட்டு விடுவேன் என்று ரசிகர்கள் பயந்து கொண்டே இருக்க வேண்டும் என்றுதானே நீங்கள் நினைக்கிறீர்கள். அந்த அளவிற்கு போலீசால் மக்களை பயமுறுத்த முடியாது’’ என்றார்.
    ஐ.பி.எல். போட்டியில் பஞ்சாப் அணி லீக் சுற்றை தாண்ட முடியாமல் போனது ஏன் என்பதற்கு கேப்டன் அஸ்வின் விளக்கம் அளித்துள்ளார்.#IPL2018 #kxip #Ashwin
    புனே:

    ஐ.பி.எல். கிரிக்கெட்டில் புனேயில் நேற்று முன்தினம் இரவு நடந்த கடைசி லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப்பை தோற்கடித்தது. இதில் முதலில் பேட் செய்த பஞ்சாப் அணியில் கிறிஸ் கெய்ல் (0), லோகேஷ் ராகுல் (7 ரன்) சோபிக்காத நிலையில் கருண் நாயர் அரைசதம் அடித்து (54 ரன், 3 பவுண்டரி, 5 சிக்சர்) சரிவில் இருந்து காப்பாற்றினார். பஞ்சாப் அணி 19.4 ஓவர்களில் 153 ரன்களில் ஆல்-அவுட் ஆனது.

    அடுத்து களம் இறங்கிய சென்னை அணி 19.1 ஓவர்களில் இலக்கை எட்டிப்பிடித்து 9-வது வெற்றியை ருசித்தது. துணை கேப்டன் சுரேஷ் ரெய்னா 61 ரன்களுடனும், கேப்டன் டோனி 16 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். சென்னை அணியை 100 ரன்களுக்குள் மடக்கினால் மட்டுமே பிளே-ஆப் சுற்று வாய்ப்பு கிடைக்கும் என்ற நிலையில் பஞ்சாப் அணி தோல்வியுடன் (மொத்தம் 6 வெற்றி, 8 தோல்வியுடன் 12 புள்ளி) பரிதாபமாக வெளியேறியது.

    தோல்வி குறித்து பஞ்சாப் கேப்டன் அஸ்வின் கூறியதாவது:-

    இந்த ஆட்டத்தில் எங்களது பேட்டிங் சரியில்லை. ‘பவர்-பிளே’யிலேயே 3 விக்கெட்டுகளை இழந்தது பின்னடைவை ஏற்படுத்தியது. கருண் நாயர் நன்றாக ஆடினாலும் 20 முதல் 30 ரன்கள் குறைவாகவே எடுத்து விட்டோம். ஏப்ரல் மாதத்தில் நாங்கள் ஓரளவு சிறப்பாக விளையாடினோம். ஆனால் மே மாதம் (கடைசி 7 ஆட்டங்களில் 6-ல் தோல்வி) மோசமாக அமைந்து விட்டது.

    இந்த தொடரை எடுத்துக் கொண்டால் தொடக்க கட்ட லீக் ஆட்டங்களில் அபாரமாக ஆடினோம். ஆனால் பிற்பகுதியில் ஒருங்கிணைந்த ஆட்டம் இல்லாமல் போய் விட்டது. தொடக்க வீரர்கள் லோகேஷ் ராகுல், கிறிஸ் கெய்ல் மட்டுமே அணியில் கணிசமான ரன்களை குவித்து இருக்கிறார்கள். மிடில் வரிசை பேட்டிங் எதிர்பார்த்தபடி ‘கிளிக்’ ஆகவில்லை. அது தான் பாதிப்பை ஏற்படுத்தி விட்டது.

    இதே போல் பெங்களூருக்கு எதிரான லீக் ஆட்டத்தில் ஏற்பட்ட மோசமான தோல்வி (88 ரன்னில் சுருண்டது) எங்களது முன்னேற்றத்தை கெடுத்து விட்டது என்று சொல்லலாம். அந்த தோல்வியால் ரன்ரேட் குறைந்ததோடு, வீரர்களின் மனஉறுதியும் வெகுவாக சீர்குலைந்து போனது.

    இவ்வாறு அஸ்வின் கூறினார். #IPL2018 #kxip #Ashwin
    புனேயில் நடைபெற்ற கடைசி லீக் ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீழ்த்தியது. #IPL2018 #VIVOIPL #CSKvKXIP

    புனே:

    ஐபிஎல் தொடரின் 56-வது மற்றும் கடைசி லீக் புனேயில உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற்றது. கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கெதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் எம்எஸ் டோனி டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்தார்.

    அதன்படி கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேஎல் ராகுல், கிறிஸ் கெய்ல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். கிறிஸ் கெய்ல் ரன்ஏதும் எடுக்காமல் லுங்கி நிகிடி பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஆரோன் பிஞ்ச்-ஐ 4 ரன்னில் வெளியேற்றினார் சாஹர். இந்த தொடரில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த கேஎல் ராகுலை 7 ரன்னில் வெளியேற்றினார் லுங்கி நிகிடி.



    இதனால் 16 ரன்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்டுக்களை இழந்து தடுமாறியது கிங்ஸ் லெவன் பஞ்சாப். அதன்பின் 4-வது விக்கெட்டுக்கு மனோஜ் திவாரி உடன், டேவிட் மில்லர் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி ஓரளவிற்கு தாக்குப்பிடித்து விளையாடியது. மனோஜ் திவாரி 30 பந்தில் 35 ரன்களும், டேவிட் மில்லர் 22 பந்தில் 24 ரன்களும் எடுத்தனர்.

    அதன்பின் வந்த கருண் நாயர் அதிரடியாக விளையாடி 26 பந்தில் 54 ரன்கள் சேர்க்க கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 19.4 ஓவரில் 153  ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ்க்கு 154 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் லுங்கி நிகிடி 4 ஓவரில் 10 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.



    இதையடுத்து 154 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக அம்பதி ராயுடு, டு பிளெசிஸ் ஆகியோர் களமிறங்கினர். ராயுடு 1 ரன் மட்டுமே எடுத்திருந்த நிலையில், மோகித் சர்மா வீசிய 2-வது ஓவரில் ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து சுரேஷ் ரெய்னா களமிறங்கினார். 4-வது ஓவரை அன்கித் ராஜ்பூட் வீசினார். அந்த ஓவரின் 3-வது பந்தில் டு பிளெசிஸ் ஆட்டமிழந்தார், தொடர்ந்து வந்த சாம் பில்லிங்ஸ் முதல் பந்திலேயே போல்டானார்.

    இதனால் சென்னை அணி 27 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்தது. அதன்பின் ரெய்னா உடன், ஹர்பஜன் சிங் ஜோடி சேர்ந்தார். 6 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 3 விக்கெட் இழப்பிற்கு 33 ரன்கள் மட்டுமே எடுத்தது. 



    இருவரும் நிதானமாக விளையாடி ரன் சேர்த்தனர். இதனால் 10 ஓவர்களில் சென்னை அணி 57 ரன்கள் எடுத்தது. 11-வது ஓவரை அஷ்வின் வீசினார். அந்த ஓவரின் முதல் பந்தில் ஹர்பஜன் சிங் ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து தீபக் சஹார் களமிறங்கினார்.

    15-வது ஓவரை அஷ்வின் வீசினார். அந்த ஓவரின் சஹார் 2 சிக்ஸர் மற்றும் ஒரு பவுண்டரி அடித்தார். சென்னை அணி 15 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 102 ரன்கள் எடுத்தது. அதிரடியாக விளையாடிய சஹார் 20 பந்தில் 39 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். இதில் 3 சிக்ஸரும், ஒரு பவுண்டரியும் அடங்கும். அவரைத்தொடர்ந்து கேப்டன் டோனி களமிறங்கினார். 



    சென்னை அணியின் வெற்றிக்கு கடைசி 3 ஒவரில் 34 ரன்கள் தேவைப்பட்டது. சிறப்பாக விளையாடிய ரெய்னா 45 பந்தில் அரைசதம் அடித்தார். இறுதியில் சென்னை அணி 19.1 ஒவரில் 159 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் 5 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி பெற்றது. டோனி சிக்ஸர் அடித்து அணியை வெற்றி பெற வைத்தார். பஞ்சாப் அணி பந்துவீச்சில் அக்னித் ராஜ்பூட், அஷ்வின் ஆகியோர் தலா இரண்டு விக்கெட் வீழ்த்தினர். #IPL2018 #VIVOIPL #CSKvKXIP
    புனேயில் நடைபெற்று வரும் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்க்கு 154 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது கிங்ஸ் லெவன் பஞ்சாப். #IPL2018 #CSKvKXIP
    ஐபிஎல் தொடரின் 56-வது மற்றும் கடைசி லீக் புனேயில உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற்று வருகிறது. கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கெதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் எம்எஸ் டோனி டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்தார்.

    அதன்படி கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேஎல் ராகுல், கிறிஸ் கெய்ல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். கிறிஸ் கெய்ல் ரன்ஏதும் எடுக்காமல் லுங்கி நிகிடி பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஆரோன் பிஞ்ச்-ஐ 4 ரன்னில் வெளியேற்றினார் சாஹர். இந்த தொடரில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த கேஎல் ராகுலை 7 ரன்னில் வெளியேற்றினார் லுங்கி நிகிடி.

    இதனால் 16 ரன்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்டுக்களை இழந்து தடுமாறியது கிங்ஸ் லெவன் பஞ்சாப். அதன்பின் 4-வது விக்கெட்டுக்கு மனோஜ் திவாரி உடன், டேவிட் மில்லர் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி ஓரளவிற்கு தாக்குப்பிடித்து விளையாடியது. மனோஜ் திவாரி 30 பந்தில் 35 ரன்களும், டேவிட் மில்லர் 22 பந்தில் 24 ரன்களும் எடுத்தனர்.



    அதன்பின் வந்த கருண் நாயர் அதிரடியாக விளையாடி 26 பந்தில் 54 ரன்கள் சேர்க்க கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 19.4 ஓவரில் 153  ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ்க்கு 154 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் லுங்கி நிகிடி 4 ஓவரில் 10 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.
    பஞ்சாப்புக்கு எதிரான ஆட்டத்தில் பும்ரா பந்து வீச்சு அருமையாக இருந்ததாக மும்பை அணி கேப்டன் ரோகித் சர்மா பாரட்டு தெரிவித்துள்ளார்.#IPL2018 #MIvKXIP #MI #KXIP #RohitSharma
    மும்பை:

    ஐ.பி.எல். கிரிக்கெட்டில் மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நேற்று முன்தினம் இரவு நடந்த முக்கியமான லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 3 ரன் வித்தியாசத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப்பை வீழ்த்தி அடுத்த சுற்று வாய்ப்பை தக்கவைத்துக் கொண்டது. இதில் மும்பை அணி நிர்ணயித்த 187 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 183 ரன்கள் சேர்த்து மயிரிழையில் தோல்வியை தழுவியது. அதிகபட்சமாக தொடக்க ஆட்டக்காரர் லோகேஷ் ராகுல் 94 ரன்கள் எடுத்தார்.

    கடைசிகட்டத்தில் வியப்புக்குரிய வகையில் பந்து வீசிய மும்பை வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா 4 ஓவர்களில் 15 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை சாய்த்ததுடன் ஆட்டநாயகன் விருதையும் பெற்றார்.

    2-வது பேட்டிங் (சேசிங்) செய்கையில் பஞ்சாப் வீரர் லோகேஷ் ராகுல் இந்த சீசனில் இதுவரை 482 ரன்கள் குவித்துள்ளார். ஐ.பி.எல். போட்டியில் ஒரு சீசனில் 2-வது பேட்டிங் செய்த பேட்ஸ்மேன் ஒருவர் எடுத்த அதிகபட்ச ரன் இதுவாகும். இதற்கு முன்பு 2016-ம் ஆண்டில் இந்த வகையில் டேவிட் வார்னர் 468 ரன்கள் எடுத்ததே அதிகபட்சமாக இருந்தது.

    வெற்றிக்கு பிறகு மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா அளித்த பேட்டியில், ‘முக்கியமான இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்று அடுத்த சுற்று வாய்ப்பில் நீடிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அணியின் தேவைக்கு தகுந்தபடி வீரர்கள் செயல்பட்டார்கள். இந்த ஆடுகளத்தின் தன்மையை வைத்து, இது அதிக ரன் குவிக்கும் ஆட்டமாக இருக்கும் என்பதை அறிந்து இருந்தோம். மிடில் ஓவர்களில் எங்களது ஆட்டம் சரியாக அமையவில்லை. நாங்கள் 15 முதல் 20 ரன்கள் அதிகமாக எடுத்து இருக்க வேண்டும். எதிரணியின் வலுவான பேட்டிங் வரிசையை இந்த ஸ்கோரை வைத்து சமாளிப்பது கடினமானது என்பது எங்களுக்கு தெரியும். எங்களது பந்து வீச்சு பாராட்டும் வகையில் இருந்தது. பும்ரா கடந்த 2 வருடங்களாக கடினமாக உழைத்து வருகிறார். அவர் தனது அருமையான பந்து வீச்சின் மூலம் எதிரணியினருக்கு சவாலாக விளங்கியதுடன், ஆட்டம் எங்களுக்கு சாதகமாக முடியவும் வழிவகுத்தார்’ என்றார். #IPL2018 #MIvKXIP #MI #KXIP #RohitSharma
    பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரர் லோகேஷ் ராகுல் இந்த சீசனில் முதல் வீரராக 600 ரன்களை கடந்து ஆரஞ்சு தொப்பியை தன்வசப்படுத்தியுள்ளார். #KingsXIPunjab #KLRahul #VIVOIPL #IPL2018

    மும்பை:

    மும்பையில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் - கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் பலப்பரீட்சை செய்தன. முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 186 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து ஆடிய பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 183 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் மும்பை அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. 

    இப்போட்டியில் பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரர் லோகேஷ் ராகுல் 94 ரன்கள் எடுத்தார். இதன்மூலம் இந்த சீசனில் 13 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 652 ரன்கள் குவித்துள்ளதோடு, ஆரஞ்சு தொப்பியையும் தட்டிச்சென்றார். இந்த சீசனில் 600 ரன்களை கடந்த முதல் வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்தார். ஒரு ஐபிஎல் சீசனில் ராகுல் 600 ரன்கள் எடுத்திருப்பது இதுவே முதல் முறையாகும்.



    மேலும் ஐபிஎல் தொடரின் ஒரு சீசனில் 600 ரன்களை கடந்த நான்காவது இந்திய வீரர் என்ற பெருமையையும் ராகுல் தட்டிச்சென்றார். இந்த சீசனில் இதுவரை ராகுல் ஆறு முறை அரைசதம் அடித்துள்ளார். ராகுல் கடந்த சீசன்களில் விளையாடிய 38 போட்டிகளில் 725 ரன்கள் எடுத்திருந்தார். ஆனால் இந்த முறை 13 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 652 ரன்கள் குவித்துள்ளார். 

    இந்த சீசனில் பேட்டிங்கில் அசத்திவரும் ராகுல் அதிக சிக்ஸர் அடித்த வீரர்கள் பட்டியலில் 32 சிக்ஸர்களுடன் முதலிடத்தில் உள்ளார். அதிக பவுண்டரிகள் அடித்த வீரர்கள் பட்டியலிலும் ராகுல் 65 பவுண்டரிகளுடன் முதல் இடத்தில் உள்ளார். #KingsXIPunjab #KLRahul #VIVOIPL #IPL2018
    வான்கடே மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை 3 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி வீழ்த்தியது. #IPL2018 #MIvKXIP #VIVOIPL

    மும்பை:

    ஐபிஎல் தொடரின் 50-வது லீக் ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இதில் மும்பை இந்தியன்ஸ் - கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. முக்கியமான ஆட்டத்தில் டாஸ் வென்ற கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி பந்து வீச்சு தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 186 ரன்கள் எடுத்தது. குருணால் பாண்டியா 23 பந்தில் 32 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். பொல்லார்டு 23 பந்தில் 5 பவுண்டரி, 3 சிக்சருடன் 50 ரன்கள் எடுத்தார்.



    பஞ்சாப் அணி பந்துவீச்சில் ஆண்ட்ரூ டை 4 விக்கெட் வீழ்த்தினார். இதனால் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு 187 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது மும்பை இந்தியன்ஸ். அதைத்தொடர்ந்து பஞ்சாப் அணி பேட்டிங் செய்தது. 



    பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக லோகேஷ் ராகுல், கிறிஸ் கெயில் ஆகியோர் களமிறங்கினர். இருவரும் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடினர். ஹர்திக் பாண்டியா வீசிய 3-வது ஓவரில் பஞ்சாப் வீரர்கள் ஒரு சிக்ஸர் மற்றும் மூன்று பவுண்டரிகள் உட்பட 19 ரன்கள் கிடைத்தது. 4-வது ஓவரை மிச்செல் மெக்லினெகன் வீசினார். அந்த ஓவரில் கிறிஸ் கெயில் 18 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். 

    அதன்பின் ஆரோன் பிஞ்ச் களமிறங்கினார். அவர் ராகுலுடன் இணைந்து பொறுப்புடன் விளையாடி ரன் சேர்த்தார். சிறப்பாக விளையாடிய ராகுல் 36 பந்தில் அரைசதம் அடித்தார். பிஞ்ச் 35 பந்தில் 46 ரன்கள் எடுத்திருந்த நிலையில் பும்ரா பந்தில் ஆட்டமிழந்தார். 



    அதன்பின் மார்கஸ் ஸ்டாய்னிஸ் களமிறங்கினார். அவர் ஒரு ரன்னில் ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து அக்ஸார் பட்டேல் களமிறங்கினார். பஞ்சாப் அணியின் வெற்றிக்கு 3 ஓவரில் 38 ரன்கள் தேவைப்பட்டது.

    ராகுல் 60 பந்தில் 94 ரன்கள் எடுத்திருந்த நிலையில் பும்ரா பந்தில் ஆட்டமிழந்தார். இதில் 10 பவுண்டரிகளும், 3 சிக்ஸர்களும் அடங்கும். அதன்பின் யுவராஜ் சிங் களமிறங்கினார். கடைசி ஓவரில் பஞ்சாப் அணியின் வெற்றிக்கு 17 ரன்கள் தேவைப்பட்டது. 

    கடைசி ஓவரை மிச்செல் மெக்லினெகன் வீசினார். இறுதியில் பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் எடுத்தது. மும்பை அணி பந்துவீச்சில் பும்ரா 3 விக்கெட்களும், மிச்செல் மெக்லினெகன் 2 விக்கெட்களும் வீழ்த்தினர். 



    இதனால் 3 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றி பெற்று பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெறுவதற்கான வாய்ப்பை தக்கவைத்து கொண்டது. மும்பை அணியின் பும்ரா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். #IPL2018 #MIvKXIP #VIVOIPL
    பஞ்சாப் அணி தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்து மும்பை அணியுடனான இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்று ‘பிளேஆப்’ வாய்ப்பில் நீடிக்குமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.#IPL2018 #MIvKXIP #MI #KXIP
    மும்பை:

    ஐ.பி.எல். போட்டியில் 50-வது ‘லீக்’ ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் இன்று இரவு 8 மணிக்கு நடக்கிறது.

    இதில் ரோகித்சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ்- அஸ்வின் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதுகின்றன.

    பிளேஆப் வாய்ப்பில் நீடிக்க இரு அணிகளும் வெற்றி பெற வேண்டிய நிலையில் உள்ளன. மும்பை அணி 12 ஆட்டத்தில் 5 வெற்றி, 7 தோல்வியுடன் 10 புள்ளிகள் பெற்று 6-வது இடத்தில் உள்ளது.

    அந்த அணி எஞ்சிய 2 ஆட்டத்திலும் வென்றால் மட்டுமே ‘பிளேஆப்’ வாய்ப்பில் நீடிக்க முடியும் அதோடு ரன்ரேட்டையும் அதிகரிக்க வேண்டும். இன்றைய ஆட்டத்தில் தோற்றால் நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் வெளியேற்றப்படும். இந்தூரில் நடந்த ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப்பை வீழ்த்தி இருந்ததால் மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறது.

    மும்பை அணியில் சூர்யகுமார் யாதவ் (473 ரன்), லீவிஸ் (325 ரன்), கேப்டன் ரோகித்சர்மா (267 ரன்), ஹர்த்திக் பாண்ட்யா (224 ரன், 18 விக்கெட்), குர்ணால் பாண்ட்யா (192 ரன், 11 விக்கெட்), மார்க்கண்டே (14 விக்கெட்), பும்ரா (13 விக்கெட்) போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர்.

    தொடக்கத்தில் வெற்றிகளை பெற்று வந்த பஞ்சாப் அணி கடைசி 3 ஆட்டத்தில் தோற்றதால் நிலை குலைந்து போய் இருக்கிறது. அந்த அணி 6 வெற்றி, 6 தோல்வியுடன் 12 புள்ளிகள் பெற்று 5-வது இடத்தில் உள்ளது. தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்து இன்றைய ஆட்டத்தில் வென்று ‘பிளேஆப்’ வாய்ப்பில் நீடிக்குமா? என்று எதிர் பார்க்கப்படுகிறது.

    பந்துவீச்சில் வலிமையாக இருக்கும் அந்த அணி பேட்டிங்கில் சொதப்பி வருகிறது. பெங்களூர் அணிக்கு எதிராக அந்த அணியின் பேட்டிங் மிகவும் மோசமாக இருந்தது. முக்கியமான ஆட்டம் என்பதால் பஞ்சாப் அணி வீரர்கள் அதிரடியாக ஆடுவது அவசியமாகும்.

    ஏற்கனவே ஏற்பட்ட தோல்விக்கு பதிலடி கொடுக்க முழு திறமையை வெளிப்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    லோகேஷ் ராகுல் (558 ரன்), கிறிஸ் கெய்ல் (350 ரன்), கருண்நாயர் (247 ரன்), ஆண்ட்ரூ டை (20 விக்கெட்), முஜிபுர் ரகுமான் (14 விக்கெட்) போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர். இரு அணிகளும் வெற்றிக்காக கடுமையாக போராடுவார்கள் என்பதால் இந்த ஆட்டம் விறு விறுப்பாக இருக்கும்.#IPL2018 #MIvKXIP #MI #KXIP
    ×