search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Karunanidhi death"

    துயரச்சுமையை தாங்கி வீட்டுக்கு திரும்பும் தொண்டர்கள் பத்திரமாக செல்ல வேண்டும் என இரு கரம் கூப்பி வேண்டுகிறேன் என முக ஸ்டாலின் கட்சி தொண்டர்களை கேட்டுக்கொண்டுள்ளார். #KarunanidhiDeath #MKStalin #DMK
    சென்னை:

    திமுக தலைவராகவும் 5 முறை தமிழக முதல்வராகவும் இருந்த கருணாநிதி நேற்று மாலை மரணமடைந்தார். அவரது உடல் இன்று மாலை 7 மணிக்கு மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா சமாதிக்கு அருகே அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. 

    இந்நிலையில், திமுக செயல்தலைவர் முக ஸ்டாலின் தொண்டர்களுக்கு கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். அதில், துயரச் சுமையை தாங்கியபடி ஊருக்கு செல்லும் தொண்டர்கள் பத்திரமாகவும், அமைதியாகவும் செல்ல வேண்டும் என இரு கரம் கூப்பி வேண்டுகிறேன். உடன்பிறப்புகள் பாதுகாப்பாக சேர்ந்து விட்டார்கள் என்பதை அறிந்த பின்னரே நான் உறங்கச் செல்வேன் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
    மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் உடல் அவரது தலைவர் அண்ணா சமாதிக்கு பின்புறம் முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. #Karunanidhideath #MarinaBeach #Karunanidhi #DMK #RIPKalaignar
    சென்னை:

    திமுக தலைவர் கருணாநிதி வயோதிகம் சார்ந்த உடல்நலக்குறைவால் நேற்று மாலை காலமானார். அவரது உடல் 8 மணியளவில் கோபாலபுரம் இல்லம் கொண்டு செல்லப்பட்டு குடும்ப உறுப்பினர்கள், பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. 

    பின்னர், இன்று அதிகாலை 1 மணிக்கு சிஐடி காலனி வீட்டுக்கு அவரது உடல் கொண்டு செல்லப்பட்டது. அங்கும் குடும்ப உறுப்பினர்கள், தொண்டர்கள் அஞ்சலி செலுத்தினர். பின்னர், அதிகாலை 4 மணிக்கு அரசினர் தோட்டத்தில் உள்ள ராஜாஜி அரங்கில் அவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

    அதிகாலை முதல் தற்போது வரை லட்சக்கணக்கான தொண்டர்கள் அவருக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். பிரதமர் மோடி, மத்திய மந்திரிகள், பல மாநில முதல்வர்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், திரையுலகினர் அவருக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தி கருணாநிதியின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர்.

    இந்நிலையில், 4 மணியளவில் அலங்கரிக்கப்பட்ட ராணுவ வாகனத்தில் கருணாநிதியின் உடல் ஏற்றப்பட்டது. தொண்டர்கள், கட்சி நிர்வாகிகள், போலீசார், பொதுமக்கள் என அனைவருக்கும் மத்தியில் அவரது இறுதி ஊர்வலம் தொடங்கியது. 

    இந்த ஊர்வலம் சிவானந்தா சாலை, அண்னா சாலை, வாலாஜா சாலை வழியாக தொண்டர்களின் கண்ணீருக்கு மத்தியில் அவரது இறுதி ஊர்வலம் வந்தது. சாலையின் இருபுறமும் தொண்டர்கள், பொதுமக்கள் கூடி நின்று ‘கலைஞர் வாழ்க’ என உணர்ச்சிப்பெருக்கில் குரல் எழுப்பினர். தான் பெயரிட்ட காமராஜர் சாலையை வழியே வந்த அவரது உடல் அங்கிருந்து அண்ணா சதுக்கம் கொண்டு வரப்பட்டது.

    அண்ணா சமாதிக்கு அருகில் அவரது உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தப்பட்டது. தேவே கவுடா, பன்வாரிலால் புரோகித், ராகுல் காந்தி, சந்திரபாபு நாயுடு, டெரிக் ஓ பிரையன், நாராயண சாமி, குலாம் நபி ஆசாத், ஜெயக்குமார், பொன் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட தலைவர்கள் மரியாதை செலுத்தினர். 

    பின்னர், 21 துப்பாக்கி குண்டுகள் முழங்க அவருக்கு முழு அரசு மரியாதை அளிக்கப்பட்டது. 

    இதனை அடுத்து, முப்படை அதிகாரிகள் அவர் மீது போர்த்தப்பட்டிருந்த தேசிய கொடியை அகற்றினர். மூவர்ணக்கொடி ஸ்டாலின் வசம் கொடுக்கப்பட்டது.



    கருணாநிதியின் உடலுக்கு அவரது குடும்ப உறுப்பினர்கள் கண்ணீர் மல்க இறுதி அஞ்சலி அளித்தனர். 

    பின்னர், ‘ஓய்வெடுக்காமல் உழைத்தவன் இதோ, ஓய்வு கொண்டிருக்கிறான்’ என எழுதப்பட்ட சந்தனப்பேழையில் அவரது உடல் வைக்கப்பட்டது.

    குடும்ப உறுப்பினர்கள், தொண்டர்கள், பொதுமக்களின் கண்ணீருக்கு மத்தியில் கருணாநிதியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. 
    நேரு பிரதமராக இருந்த 1957-ம் ஆண்டில் தமிழக சட்டசபைக்குள் நுழைந்த கருணாநிதி மறையும் வரை சட்டமன்ற உறுப்பினராக இருந்துள்ளார் என்பது தனிப்பட்ட சிறப்பம்சமாகும். #Karunanidhideath #MarinaBeach #Karunanidhi #DMK #RIPKalaignar
    சென்னை:

    திராவிட முன்னேற்ற கழகம் தொடங்கப்பட்ட பின்னர் முதல் பலப்பரீட்சையாக 1957-ம் ஆண்டு அக்கட்சி சந்தித்த பொதுத்தேர்தலில் கருணாநிதி, குளித்தலை தொகுதியில் போட்டியிட்டு வென்று சட்டசபைக்குள் நுழைந்தார். அப்போது நாட்டின் பிரதமராக நேரு இருந்தார்.

    நேருவுக்கு பிறகு லால் பகதூர் சாஸ்திரி, இந்திரா காந்தி, மொராஜி தேசாய், சரண் சிங், ராஜிவ் காந்தி, விபி சிங், சந்திரசேகர், நரசிம்ம ராவ், தேவே கவுடா, குஜ்ரால், வாஜ்பாய், மன்மோகன்சிங், மோடி என 13 பிரதமர்களையும் பார்த்துள்ள கருணாநிதி திரூவாரூர் சட்டமன்ற உறுப்பினராகவே மறைந்துள்ளார்.

    60 ஆண்டுகள் சட்டமன்ற உறுப்பினராக இருந்த கதாநாயகன் கருணாநிதியை தவிர இந்த சாதனையை யாராலும் செய்திருக்க வாய்ப்பு இல்லை. 
    திமுக தலைவர் கருணாநிதி மரணமடைந்ததை அடுத்து ஈரோடு மாவட்டத்தில் அவரது படத்துக்கு தொண்டர்கள் அஞ்சலி செலுத்தினர்அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டது. #RIPKarunanidhi #Karunanidhi #DMK
    ஈரோடு:

    தி.மு.க.தலைவர் முதுபெரும் தலைவர், முத்தமிழ் அறிஞர் கலைஞர் கருணாநிதி மறைவு தமிழக மக்களுக்கு பேரிடியாக விழுந்துள்ளது.

    கருணாநிதி மறைந்தார் என்ற செய்தியை தமிழர்களால் இன்னும் நம்பமுடியவில்லை.

    சென்னைக்கு சென்று அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த முடியவில்லையே என ஈரோடு மாவட்ட மக்கள், தி.மு.க. தொண்டர்கள், தமிழ்பால் பற்றுள்ளவர்கள் தங்கள் வசிக்கும் ஒவ்வொரு ஊர்களிலும் கருணாநிதி படத்துக்கு மாலை அணிவித்து கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

    ஈரோடு, கோபி, சத்தியமங்கலம், பெருந்துறை, பவானி, அந்தியூர், கவுந்தப்பாடி, அம்மாபேட்டை, ஆப்பக்கூடல், அத்தாணி, பவானிசாகர், புஞ்சை புளியம்பட்டி, தாளவாடி, கொடுமுடி, சிவகிரி, மொடக்குறிச்சி, அரச்சலூர், டி.என்.பாளையம் உள்பட மாவட்டத்தில் உள்ள அனைத்து கடைகளும் கலைஞருக்கு இதய அஞ்சலி செலுத்துவதற்காக அடைக்கப்பட்டன.

    பல கடைகள் முன் வியாபாரிகள் கருணாநிதி படத்துக்கு மாலை அணிவித்து தீபம் ஏற்றி வைத்திருந்ததை காண முடிந்தது.

    அத்தியாவசியமான பொருளான பால் மட்டும் விற்பனை செய்யப்பட்டது. ஈரோடு உள்பட அனைத்து ஊர்களிலும் ரோட்டோரங்களில் வேன் மூலம் பால் விற்பனை செய்து வந்தனர்.மேலும் ஆங்காங்கே ஒன்றிரண்டு டீக்கடைகளும் திறக்கப்பட்டிருந்தன.

    பொது மக்கள் மற்றும் தி.மு.க.தொண்டர்கள் ஆங்காங்கே கூடி நின்று கருணாநிதி பற்றியே பேசிக் கொண்டே இருந்தனர்.

    ஈரோடு உள்பட மாவட்டத்தில் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு கிடந்ததால் கடை வீதிகள் மற்றும் முக்கிய இடங்கள் வெறிச்சோடி போய் கிடந்தன. ஒவ்வொருவர் வீட்டிலும் தங்கள் வீட்டில் ஒரு பெரியவர் காலமானதை போல் நினைத்து பாகுபாடின்றி தி.மு.க.தலைவர் கருணாநிதிக்கு இதய அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். #RIPKarunanidhi #Karunanidhi #DMK
    தி.மு.க. தலைவர் கருணாநிதி உயிரிழந்தார் என்ற செய்தியை டி.வி.யில் பார்த்துக் கொண்டிருந்த திமுக பிரமுகர் மாரடைப்பால் மரணம் அடைந்தார். #karunanidhideath #dmk

    பொள்ளாச்சி:

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி வடக்கு ஒன்றியம் குள்ளக்கா பாளையம் ஊராட்சியை சேர்ந்தவர் கனகராசு (58) நெசவு தொழிலாளி. தி.மு.க. உறுப்பினராக இருந்து வந்தார்.

    தி.மு.க. தலைவர் கருணாநிதி உயிரிழந்தார் என டி.வி.யில் செய்தி பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது, கனகராசுக்கு மாரடைப்பு ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். #karunanidhideath #dmk

    திமுக தலைவர் கருணாநிதி மரணமடைந்ததை அடுத்து விழுப்புரம் மாவட்டத்தில் அவரது படத்துக்கு தொண்டர்கள் மலர் அஞ்சலி செலுத்தினர். பல இடங்களில் திமுக கொடிகள் அரை கம்பத்தில் பறக்கவிடப்பட்டன. #RIPKarunanidhi #Karunanidhi #DMK
    விழுப்புரம்:

    தி.மு.க. தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதி மரணம் அடைந்தார்.

    இதையொட்டி துக்கத்தை அனுசரிக்கும் வகையில் விழுப்புரம் மாவட்டத்தில் விழுப்புரம், திருக்கோவிலூர், திண்டிவனம், உளுந்தூர்பேட்டை, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தி.மு.க. கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டது. சாலையோரங்களில் கருப்பு கொடி ஏற்றப்பட்டது. விழுப்புரம் வண்டிமேடு உள்ளிட்ட நகரின் பல்வேறு இடங்களில் கருணாநிதி உருவப்படம் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது.

    இதற்கு தி.மு.க. தொண்டர்கள், பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். பெண்கள் கதறி அழுதனர். ஏராளமானோர் கருப்பு சட்டை அணிந்திருந்தனர். விழுப்புரம் மாவட்டமே சோகமயமாக காட்சியளித்தது. கருணாநிதிக்கு நேரில் அஞ்சலி செலுத்துவதற்காக விழுப்புரத்தில் இருந்து சென்னைக்கு ஏராளமான தி.மு.க.வினர் வாகனங்களில் சென்றனர்.

    கருணாநிதி மறைவையொட்டி விழுப்புரத்தில் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. பெட்ரோல் பங்குகள் மூடப்பட்டன. பஸ்கள், ஆட்டோக்கள் இயக்கப்படவில்லை. இதனால் புதிய பஸ் நிலையம் ஆட்கள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது. பஸ்கள் இயக்கப்படாததால் விழுப்புரம் ரெயில் நிலையத்தில் வழக்கத்தை விட பயணிகளின் கூட்டம் அலைமோதியது. ரெயில் நிலையத்துக்கு வந்த அனைத்து ரெயில்களும் நிரம்பி வழிந்தது. சிலர் படிக்கட்டில் தொங்கியபடியே சென்றனர். #RIPKarunanidhi #Karunanidhi #DMK
    மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் உடல் அண்ணா சதுக்கத்தை வந்தடைந்துள்ள நிலையில், அவருக்கு இறுதி மரியாதை செலுத்தப்பட உள்ளது. #Karunanidhideath #MarinaBeach #Karunanidhi #DMK #RIPKalaignar
    சென்னை:

    திமுக தலைவர் கருணாநிதி வயோதிகம் சார்ந்த உடல்நலக்குறைவால் நேற்று மாலை காலமானார். அவரது உடல் 8 மணியளவில் கோபாலபுரம் இல்லம் கொண்டு செல்லப்பட்டு குடும்ப உறுப்பினர்கள், பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. 

    பின்னர், இன்று அதிகாலை 1 மணிக்கு சிஐடி காலனி வீட்டுக்கு அவரது உடல் கொண்டு செல்லப்பட்டது. அங்கும் குடும்ப உறுப்பினர்கள், தொண்டர்கள் அஞ்சலி செலுத்தினர். பின்னர், அதிகாலை 4 மணிக்கு அரசினர் தோட்டத்தில் உள்ள ராஜாஜி அரங்கில் அவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

    அதிகாலை முதல் தற்போது வரை லட்சக்கணக்கான தொண்டர்கள் அவருக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். பிரதமர் மோடி, மத்திய மந்திரிகள், பல மாநில முதல்வர்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், திரையுலகினர் அவருக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தி கருணாநிதியின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர்.

    இந்நிலையில், 4 மணியளவில் அலங்கரிக்கப்பட்ட ராணுவ வாகனத்தில் கருணாநிதியின் உடல் ஏற்றப்பட்டது. தொண்டர்கள், கட்சி நிர்வாகிகள், போலீசார், பொதுமக்கள் என அனைவருக்கும் மத்தியில் அவரது இறுதி ஊர்வலம் தொடங்கியது. 

    இந்த ஊர்வலம் சிவானந்தா சாலை, வாலாஜா சாலை வழியாக மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா சதுக்கத்தை வந்தடைந்தது. அங்கு இறுதி மரியாதை செலுத்திய பின்னர், அண்ணா சமாதிக்கு பின்புறம் கருணாநிதியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது. 
    திமுக தலைவர் கருணாநிதி காலமானதையடுத்து, மதுரை கூடல் நகர் வர்த்தக சங்கம் சார்பில் அவரது திருவுருவப்படத்திற்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டது. #RIPKarunanidhi
    சென்னை:

    திமுக தலைவரும் தமிழக முன்னாள் முதல்வருமான கருணாநிதி நேற்று மாலை காலமானார். அவரது உடல் சென்னை ராஜாஜி அரங்கத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள், திரையுலக பிரமுகர்கள் மற்றும் கட்சி தொண்டர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். 

    இதேபோல் தமிழகம் முழுவதிலும் தி.மு.க. மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் கருணாநிதியின் புகைப்படங்கள், பேனர்கள் வைக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது. 

    அவ்வகையில் மதுரை கூடல் நகர் வர்த்தக சங்கம் சார்பில் கருணாநிதிக்கு கண்ணீரஞ்சலி செலுத்தப்பட்டது. சங்கத் தலைவர் இரா.கண்ணன் தலைமையில் சங்க செயலாளர் எட்வின் மற்றும் நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர். #RIPKarunanidhi
    திமுக தலைவர் கருணாநிதிக்கு மெரினாவில் அடக்கம் செய்ய இடம் கொடுக்க தமிழக அரசு மறுத்ததன் எதிரோலியாக 2-வது நாளாக இன்றும் சேலம் மாநகரில் இருந்து வெளியூருக்கு பஸ்கள் இயக்கப்படவில்லை.
    சேலம்:

    தி.மு.க. தலைவர் கருணாநிதி நேற்று மாலை காலமானார். இதையொட்டி தமிழகம் முழுவதும் பஸ் போக்குவரத்து முடங்கியது.

    சேலத்தில் இருந்து வெளியூர் செல்லும் அரசு மற்றும் தனியார் பஸ்கள், ஆம்னி பஸ்களும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. சென்னை மெரீனா பீச்சில் கலைஞரை அடக்கம் செய்ய இடம் கொடுக்க தமிழக அரசு மறுத்ததால் ஆத்திரம் அடைந்த தி.மு.க.தொண்டர்கள் ஆங்காங்கு திரண்டனர்.

    சேலம் பழைய பஸ் நிலையம் அண்ணா சிலை அருகில் மாநகர துணை செயலாளர் பழக்கடை வி.கணேசன் தலைமையில் திரண்ட தி.மு.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதே போல எடப்பாடி, மகுடஞ்சாவடி, மேட்டூர் புதுச்சாம்பள்ளி உள்பட பல பகுதிகளில் சாலை மறியல் போராட்டம் நடந்தது. அவர்களை போலீசார் சமாதானப்படுத்தியதை அடுத்து கலைந்து சென்றனர்.

    திருச்சியில் இருந்து சேலம் நோக்கி நேற்றிரவு வந்த அரசு பஸ்சை கொண்டலாம்பட்டி பட்டர்பிளை மேம்பாலம் அருகே மர்மநபர்கள் கல்வீசி தாக்கினர். இதில் பஸ்சின் முன்பக்க கண்ணாடி உடைந்தது. இது குறித்த புகாரின் பேரில் கொண்டலாம்பட்டி போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    சேலத்தில் இருந்து ஆத்தூருக்கு சென்ற அரசு பஸ் நரசிங்கபுரம் பகுதியில் சென்ற போது மர்ம நபர்கள் திடீரென கல் வீசி தாக்கினர். இதில் அந்த பஸ்சின் முன் பக்க கண்ணாடி உடைந்து நொறுங்கியது.

    இதே போல ஆத்தூர் அருகே உள்ள எடப்பட்டியில் இருந்து ஆத்தூர் நோக்கி வந்த அரசு டவுன் பஸ்சை மர்ம நபர்கள் கல் வீசி தாக்கினர். இதில் பஸ்சின் கண்ணாடி உடைந்தது.ஆத்தூர் பகுதியில் மேலும் 2 பஸ்களின் கண்ணாடிகள் கல் வீசி உடைக்கப்பட்டன. இந்த சம்பவங்கள் குறித்து ஆத்தூர் ஒன்றிய தி.மு.க. செயலாளர் செழியன் உள்பட சிலரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

    தொடர்ந்து மாவட்டம் முழுவதும் பயணிகளை பஸ்சில் இருந்து இறக்கி விட்டு விட்டு பாதுகாப்பான இடங்களுக்கு பஸ்களை எடுத்து சென்றனர். இதனால் நேற்றிரவு வெளியூர் செல்பவர்கள் கடும் அவதிப்பட்டனர்.

    2-வது நாளாக இன்றும் சேலம் மாநகரில் இருந்து வெளியூருக்கு பஸ்கள் இயக்கப்படவில்லை. இதே போல புறநகர் பகுதிகளான ஓமலூர், ஆத்தூர், எடப்பாடி, சங்ககிரி, மேட்டூர், வாழப்பாடி என மாவட்டம் முழுவதும் பஸ்கள் இயங்கவில்லை.

    இதனால் பஸ் நிலையங்கள், சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது. பஸ்கள் ஓடாததால் அவசர தேவைக்கு கூட வெளியூர் செல்ல முடியாமல் பொது மக்கள் தவித்தனர். இதனால் ரெயில்களில் வழக்கத்தை விட கூட்டம் அதிக அளவில் இருந்தது. #RIPKarunanidhi #Karunanidhi #DMK
    கருணாநிதி மரணம் அடைந்ததை கேட்ட அதிர்ச்சியில் திமுக மேடை பாடகர் உள்பட திமுக தொண்டர்கள் 3 பேர் உயிரிழந்துள்ளனர். #RIPKarunanidhi #Karunanidhi #DMK
    குத்தாலம்:

    தி.மு.க தலைவர் கருணாநிதி நேற்று மாலை 6.10 மணிக்கு காலமானார். இந்த செய்தியை அறிந்து நாகை மாவட்டத்தில் 3 தி.மு.க தொண்டர்கள் மரணம் அடைந்தனர்.

    நாகை மாவட்டம் குத்தாலம் அருகே உள்ள நெய்குப்பை தெற்கு தெருவைச் சேர்ந்தவர் தங்கவேலு. இவரது மகன் சுப்பிரமணியன் (வயது 68). தி.மு.க ஒன்றிய பிரதிநிதி ஆவார். இவர் நேற்று இரவு அவரது வீட்டில் டி.வி பார்த்து கொண்டிருந்தார். அப்போது கருணாநிதி மறைந்த செய்தி வந்தது. உடனே அதிர்ச்சி அடைந்த அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே இறந்தார்.

    இதேபோல் பெரம்பூர் மேலத்தெருவைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 64). தி.மு.க மேடை பாடகர் ஆவார்.

    இவரும் நேற்று தி.மு.க தலைவர் கருணாநிதி இறந்த செய்தி அறிந்து அவரது வீட்டில் மயங்கி விழுந்தார். அவரை அப்பகுதியில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் இறந்து விட்டதாக கூறினர்.

    மயிலாடுதுறை அருகே கொற்கை அம்பேத்கார் நகரைச் சேர்ந்தவர் கொஞ்சான். இவரது மகன் நாகராஜ். தி.மு.க தொண்டர் ஆவார். இவர் நேற்று மாலையில் டி.வி பார்த்து கொண்டிருந்தார். அப்போது கருணாநிதி மறைந்த செய்தி வந்தது. இதை கேட்ட நாகராஜிக்கு மாரடைப்பு ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே இறந்தார். #RIPKarunanidhi #Karunanidhi #DMK
    திருக்குவளையில் கருணாநிதியின் படத்தை கையில் ஏந்தி ஏராளமான ஆண்கள், பெண்கள் மற்றும் தி.மு.க. தொண்டர்கள் அஞ்சலி செலுத்தினர். #RIPKarunanidhi #Karunanidhi #DMK
    நாகப்பட்டினம்:

    தி.மு.க. தலைவர் கருணாநிதியின் சொந்த ஊர் நாகை மாவட்டம் திருக்குவளை ஆகும். இந்த ஊரில் கடந்த 1924-ம் ஆண்டு ஜூன் 3-ந் தேதி கருணாநிதி பிறந்தார்.

    நேற்று மாலை கருணாநிதி மரணம் அடைந்த தகவல் வெளியானதும் அவரசு சொந்த ஊரான திருக்குவளை சோகத்தில் மூழ்கியது.

    திருக்குவளையில் கருணாநிதியின் படத்தை கையில் ஏந்தி ஏராளமான ஆண்கள், பெண்கள் மற்றும் தி.மு.க. தொண்டர்கள் அஞ்சலி செலுத்தினர்.

    திருக்குவளையில் உள்ள கருணாநிதியின் பிறந்த வீடு தற்போது நூலகமாக மாற்றி பராமரிக்கப்பட்டு வருகிறது. இன்று காலை ஏராளமான பெண்கள் நூலகம் முன்பு திரண்டு கும்மியடித்து ஒப்பாரி வைத்து பாடினர்.

    மேலும் ஏராளமான தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் வந்திருந்து கருணாநிதியின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.  #RIPKarunanidhi #Karunanidhi #DMK
    ராஜாஜி அரங்கத்தில் வைக்கப்பட்டுள்ள திமுக தலைவர் கருணாநிதி உடலுக்கு பலரும் அஞ்சலி செலுத்தி வரும் நிலையில், கருணாநிதி மறைவுக்கு நடிகர் விக்ரம் இரங்கல் தெரிவித்துள்ளார். #Karunanidhi #RIPKarunanidhi #கருணாநிதி #RIPkalaingar
    சென்னை:

    காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த திமுக தலைவர் கருணாநிதி நேற்று மாலை காலமானார். அவரது மறைவுக்கு ஜனாதிபதி, பிரதமர் உள்பட அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    ராஜாஜி அரங்கில் வைக்கப்பட்டுள்ள கருணாநிதியின் பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ஆளுநர் பன்வாரி லால் பிரோகித், கர்நாடக முதல்வர் குமாரசாமி, கேரள முதல்வர் பினராயி விஜயன், தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜித், சூர்யா உள்ளிட்ட பலரும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். 

    இதற்கிடையே நடிகர் விக்ரம் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளதாவது, 

    தமிழின தலைவர், முத்தமிழ் அறிஞர், இந்தியாவின் மூத்த அரசியல் தலைவர், ஐந்துமுறை தமிழக முதல்வர் என பன்முக ஆளுமைக் கொண்ட டாக்டர் கலைஞர் ஐயா அவர்கள் மறைந்த செய்தி கேட்டு மிகவும் அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன். 



    தற்போது வெளியூரில் இருப்பதால் நேரில் வந்து அஞ்சலி செலுத்த முடியாத சூழலில் இருக்கிறேன். அவருடைய பிரிவால் வாடும் அவருடைய குடும்பத்தினருக்கும், கோடிக்கணக்கான தமிழர்களுக்கும் என்னுடைய ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன். என்று குறிப்பிட்டுள்ளார். #Karunanidhi #RIPKarunanidhi #கருணாநிதி #RIPkalaingar #Vikram

    ×